ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142741 topics in this forum
-
09 JUN, 2025 | 04:25 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம், இணுவில் - காரைக்கால் பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று திங்கட்கிழமை (9) நடைபெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்பகுதியில் ஆலயங்கள் உள்ளதோடு, மக்களின் குடிமனைகள் அதிகரித்து, சன நெரிசல் மிக்க பகுதியாக உள்ள நிலையில், குப்பைகளும் கழிவுகளும் அதிகமாக காணப்படுகிறது. அப்பகுதியில் நல்லூர் பிரதேச சபையால் கழிவகற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும் எத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததால் பிரதேசவாசிகள் அசௌகரியங்களையும் சிக்கல்களையும்…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
09 Jun, 2025 | 05:30 PM வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தமக்கான சமூக மரியாதையையும் அங்கீகாரத்தையும் வலியுறுத்தி நடைபவனியொன்றை இன்று (9) முன்னெடுத்தனர். தமக்கான சுயமரியாதையுடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, மூன்றாம் பாலினத்தவர்கள் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. இதன்போது பேரணியினர் தமக்கான அங்கீகாரமும் சமூக மரியாதையும் கிடைக்க வேண்டும் என தெரிவித்து, பதாதைகளை தாங்கிச் சென்றதோடு, வானவில் நிறங்கள் பொருந்திய கொடிகளையும் கொண்டுசென்றனர். இந்த நடைபவனியில் மூன்றாம் பாலினத்தவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. வவுனியாவில் மூன்றா…
-
- 0 replies
- 213 views
-
-
09 Jun, 2025 | 05:10 PM கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’ என்ற கொள்கலன் கப்பல், கொழும்பிலிருந்து மும்பையின் நவா ஷேவாவுக்கு செல்லும் வழியில், கேரளாவின் பேப்பூர் கடற்கரை அருகே அரபிக் கடலில் வைத்து இன்று திங்கட்கிழமை (9) தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. கப்பலில் ஏற்பட்ட பல வெடிப்புகளைத் தொடர்ந்து தீப்பற்றியதால், 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்கலன் கப்பலில் ஆபத்தான 4 பொருட்கள் உட்பட வேறு பொருட்கள் இருந்துள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களில் 18 பேர் கடலில் குதித்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட…
-
- 0 replies
- 144 views
-
-
உயர் நீதிமன்றம் தனக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, சதொச ஊடாக 14,000 கரம் போர்ட்களையும் 11 ஆயிரம் டாம் போர்ட்களையும் கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது. இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட வழக்கு விசாரணையில் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கடூழிய சிறைத் தண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறைய…
-
- 0 replies
- 138 views
-
-
”யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும்”- எம்.ஏ.சுமந்திரன் யாழில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்றையதினம் (8) நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், ஏனைய கட்சிகள் போன்று ஒரு சந்திப்புக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவருக்கும் தெரிந்த பின்பு மறுக்கும் அல்லது சந்திப்புகளை பிற்போடும் செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்குள் நடைபெறுவதில்லை. ச…
-
-
- 1 reply
- 222 views
-
-
09 JUN, 2025 | 11:44 AM இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (விசாரணைப்பிரிவு) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ். மொஹான்லால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.எஸ்.கே பண்டார அம்பாறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/216991
-
- 0 replies
- 114 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:33 PM தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்த…
-
-
- 49 replies
- 3.2k views
- 2 followers
-
-
சட்டரீதியாக விலகிய இராணுவத்தினரை காவற்துறையில் இணைக்க முடிவு! adminJune 9, 2025 இராணுவத்தில் பணியாற்றிவிட்டு சட்டரீதியாக விலகியுள்ள 45 வயதுக்கு குறைவான 10,000 பேரை காவற்துறை சேவையில் இணைத்துக்கொள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தம்புத்தேகம காவற்துறை அத்தியட்சகர் அலுவலகத்தைத் திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வௌியிடும் போது, இவர்களை 5 வருட காலத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கருத்து வௌியிட்ட அமைச்சர், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகக்கூடிய அபாயத்தில் இருக்கும் சுமார் 7,880 சிறுவர்கள் அடைய…
-
- 0 replies
- 152 views
-
-
சமல் ராஜபக்ச எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் – அரச ஊடகம் தகவல் June 8, 2025 10:13 am மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபாய ராஜபக்ச அரசாங்கங்களின் போது சபாநாயகராகவும், சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசு நடத்தும் சிலுமின செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 மே ஒன்பதாம் திகதி நடந்த கலவரத்தில் திஸ்ஸமஹாராம, மாகம பகுதியில் உள்ள தனது சொத்து சேதமடைந்ததாகக் கூறி அரசாங்கத்திடம் இருந்து 15.2 மில்லியன் ரூபா இழப்பீடு பெற்ற விவகாரத்தில், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணைகளில் அந்த சொத்து அவருக்கு சொந்தமானது இல்லை எனவும், அங்கு வசிப்பிட கட்டமைப்பு எதுவும் இல்லை எனவும், வெறுமனே ஒரு நெல் சேமிப…
-
- 2 replies
- 261 views
-
-
08 JUN, 2025 | 12:25 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன. முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்களால் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கு தடையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் விடுவிக்கப்பட்ட 300 கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக பாராளுமன்…
-
-
- 4 replies
- 389 views
- 1 follower
-
-
மண்டைதீவில் கண்டல் தாவரங்களை நாட்டிய அமைச்சர்கள் adminJune 8, 2025 உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் கண்டல் தாவரங்கள் நடுகை நிகழ்வு கடற்றொழில் அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன் போது, பொலித்தின் மற்றும் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, இராமலிங்கம் சந்திரசேகரர், யாழ் . மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://globaltam…
-
-
- 3 replies
- 330 views
-
-
08 JUN, 2025 | 12:27 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னரான தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வுகள் என்ன? - சுமந்திரனிடம் கேட்டறிந்தார் இந்திய உயர்ஸ்தானிகர் 08 Jun, 2025 | 10:13 AM (நா.தனுஜா) வட, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தாம் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தமிழ்த்தேசிய கட்சிகளின் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (06) மாலை 4 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய உய…
-
-
- 3 replies
- 175 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 08 JUN, 2025 | 10:11 AM யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார். அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறு…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
07 JUN, 2025 | 05:43 PM சாவகச்சேரியில் கருங்கற்களுக்குள் தேக்கு மர குற்றிகளை மறைத்து ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி சனிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். ஒட்டுசுட்டான் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மர குற்றிகளை கொண்டு சென்ற போது சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தேக்கு மர குற்றிகள் 15 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/216878
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
07 JUN, 2025 | 10:32 PM (எம்.மனோசித்ரா) 'கடன் மற்றும் மூலதனம் குறித்த உரையாடல் : மதிப்பீடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்' என்ற தொனிப்பொருளில் வெள்ளிக்கிழமை (06) கொழும்பிலுள்ள ரத்னதீபா ஹோட்டலில் விசேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்ஜா, பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷண சூரியப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர். சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையம், இந்திய அரசாங்கம், என்.எஸ்.ஈ. சர்வதேச பரிமாற்றம், கேர்எட்ஜ் குளோபல் ஆகியவை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இந்தோ - இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை சபை, டி.டபிள்யு க்ரோப் (பிரைவேட் லிமி…
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
பிரதமர் ஹரிணியின் கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்! இலங்கையின் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய 1,000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் மாகாணங்களுக்கு வழங்கப்படாது என கூறியது தவறானது என முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தவறான கருத்துகளை கூறிவருகிறார், இது மிகவும் முக்கியமான ஒரு விடயம் மாகாண சபைக்கு உரித்தான விடயம்.ஹரிணி அமரசூரிய கூறிய கருத்தை பகிரங்கமாக வாபஸ் பெற வேண்டும் என தெரிவ…
-
- 0 replies
- 153 views
-
-
யாழ்ப்பாணத்தில் 10, வன்னியில் 4 சபைகளில் ஆட்சியமைக்க சைக்கிள்- சங்கு கூட்டணி திட்டம்! வடக்கில் கூட்டணியாக யாழ்ப்பாணத்தில் 10 சபைகளிலும், வன்னியில் 4 சபைகளிலும் ஆட்சியமைக்க முடியும் என எதிர்பார்ப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசிய பேரவையின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டிணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துப் பேச்ச…
-
- 0 replies
- 140 views
-
-
கைதிகள் விடுதலையில் சர்ச்சை : ஜனாதிபதி செயலகம் அறிக்கை வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்ற கைதி விடுவிக்கப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி செயலகம் அவதானம் செலுத்தியுள்ளது. அரசியலமைப்பின் பிரிவு 34 (1) இன் படி, கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. அதன்படி, சிறைச்சாலை அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளின் பட்டியல் நீதி அமைச்சுக்கு அனுப்பப்படும். இந்தப் பட்டியல் நீதி அமைச்சினால் சோதனைக…
-
- 0 replies
- 138 views
-
-
07 JUN, 2025 | 02:05 PM எதிர்காலத்தில் இங்கு முதலீட்டாளர்கள் ஊடாக தொழில்வாய்ப்புக்கள் உருவாக்கப்படும்போது அதில் பங்கெடுக்கும் வகையில் எம்மை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். 'பி.எல்.சி. கம்பஸின்' (BLC Campus) இணைவு விழா (Fusion Fest) வலம்புரி ஹோட்டலில் சனிக்கிழமை (07) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், நிறுவனத்தின் விரிவுரையாளர்களுக்கான கௌரவத்தை வழங்கி வைத்தார். ஆளுநர் தனது உரையில், நாங்கள் கல்வி கற்கின்ற காலத்தில் வாய்ப்புக்கள் மிகக் குறைவு. எங்களுக்கு அப்போதிருந்த தெரிவு அரசாங்கத்தின் பல்கலைக்கழகம் மட்டுமே. ஆனால் இன்று அப்படியல்ல. இங்கு பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுகின்றன. …
-
- 0 replies
- 116 views
- 1 follower
-
-
ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Published By: RAJEEBAN 06 JUN, 2025 | 01:41 PM ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்று தமிழரசுக்கட்சி இந்த கூட்டு முயற்சிக்கு வரவேண்டும்என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டு முயற்சிக்கு வருவதன் ஊடாக தமிழரசுகட்சிக்கு தேவைப்படுகின்ற சபைகளின் பதவிகளை நாங்கள் உறுதிப்படுத்த தயார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலு…
-
-
- 2 replies
- 423 views
- 1 follower
-
-
07 JUN, 2025 | 10:07 AM யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார். மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார். இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்…
-
- 0 replies
- 147 views
- 1 follower
-
-
மாவையைப் படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு June 7, 2025 10:26 am “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை.சோ.சேனாதிராஜாவைப் படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா.” – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சோ.சேனா…
-
- 0 replies
- 158 views
-
-
யாழ். பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக முன்னாள் மாவட்ட செயலர் மகேசன் நியமனம்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினராக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளரும், முன்னாள் யாழ். மாவட்ட செயலருமான கணபதிப்பிள்ளை மகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் செயற்படும் வகையில் புதிதாக நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களில் கலாநிதி ஏ.எம்.பி.என். அபேசிங்கவின் பதவி வறிதாக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது இடத்துக்கு கணபதிப்பிள்ளை மகேசனை நியமிப்பதற்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. உடனடியாகச் செயற்படும் வகையில் எதிர்வரும் 2028 மார்ச் நான்காம் திகதி வரையான காலப்பகுதிக்கு இந்த நி…
-
- 0 replies
- 126 views
-
-
ரி.எம்.வி.பியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் CID விசாரணை! adminJune 6, 2025 வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை காவல் நிலையத்திற்கு அழைத்து கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில், அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ள சம்ப…
-
- 0 replies
- 125 views
-