ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142741 topics in this forum
-
Published By: VISHNU 06 JUN, 2025 | 09:53 PM இந்திய அரசின் நிதியுதவியுடன் ஊர்காவற்துறையில் கடற்றொழிலாளர்களுக்கு 30 மீன்பிடி வலைகளும் 150 பேருக்கான உலர் உணவு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை (6) மாலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது யாழ் இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, ஊர்காவற்துறை பிரதேச செயலாளர், ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய துணை தூதர் சாய் முரளி, ஊர்காவற்துறை என்பது யாழ்ப்பாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க, பண்பாட்டு செழுமை வாய்ந்த பகுதியென்…
-
- 1 reply
- 172 views
- 1 follower
-
-
06 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நுகர்வோரை பாதிக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உப்பை விலை அதிகரித்து விற்பனை செய்ய முற்பட்டால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே எம்.பியினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் உப்புக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை போக்குவதற்காக உப்பு இறக்குமதிக்கு சந்தையை திறந்துவிட்டோம். அதற்கு இருந்த வரையறையை நீக்கி இருந்தோம். என்ற…
-
- 0 replies
- 154 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 04:27 PM நாடளாவிய ரீதியில் தென் மேற்கு பருவமழை இம்மாதம் (ஜூன்) 10 ஆம் திகதி முதல் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் தென் மேற்கு பகுதியில் 10 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்புகளில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வு கூறல்கள் மற்றும் எச்சரிக்கைகள் தொடர்பில் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். https://www.vi…
-
- 0 replies
- 162 views
- 1 follower
-
-
06 JUN, 2025 | 04:29 PM எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களை சுட்டுப் பிடிக்குமாறு யாழ்ப்பாணம் மீனவ சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ஆவேசமாக கடற்படையினரிடம் கோரிக்கை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 60 நாட்களும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி எமது வாழ்வாதாரமான கடற்றொழிலை நாங்கள் சிறப்பாக செய்து வந்தோம். வருமானமும் திருப்திகரமாக இருந்தது. இந்திய மீனவர்கள் மீண்டும் 16ஆம் திகதி எமது கடற்பரப்புக்குள் வரப்போகின்றார்கள். அவர்களது அட்டூழியங்களால் இதுவரை காலமும் எமது யாழ்ப்பாண மீனவர்கள் பல்வேறு விதமான போராட்டங்களை முன…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 JUN, 2025 | 01:33 PM கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இலவச பகல் உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இந்தியாவின் அக்ஷய பத்ரா அறக்கட்டளையுடன் பாத்ஃபைண்டர் அறக்கட்டளை உத்தியோகபூர்வமாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட அக்ஷய பத்ரா அறக்கட்டளையானது பாடசாலைகளில் இலவச உணவு வழங்கும் உலகின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் 3 முக்கிய நகரங்களில் செயல்படும் இந்த அறக்கட்டளையானது, தற்போது 23,581 பாடசாலைகளில் நாளாந்தம் 2.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு போசாக்கான பகல் உணவை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தினூடாக 78 மத…
-
- 0 replies
- 215 views
- 1 follower
-
-
Published By: VISHNU 05 JUN, 2025 | 07:53 PM உலக சுற்றாடல் தினமான வியாழக்கிழமை (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka செயலகம் ஆகியவை இணைந்து செயல்படுத்தியுள்ளன. இந்த குப்பைத் தொட்டிகள் உக்கும் பொருட்கள் மற்றும் பொலிதீனை தனித்தனியாக இடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், சிபெட்கோ முதல் கட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 150 பீப்பாய்களை விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் தேவைக்கேற்ப குப்பை மற்றும் பொலிதீனை இடக்கூடிய பீப்பாய்களை வழங்க அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. Clean Sri Lanka செயல…
-
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
குருந்தூர்மலை விவசாயிகள் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை! June 6, 2025 தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக இரண்டு தமிழ் விவசாயிகள் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் நிரூபிக்கத் தவறியதால், நீதிமன்றம் அவர்களை விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை காவல்துறையினரால் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க முடியவில்லை என்ற அடிப்படையில், மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சாமித்தம்பி ஏகாம்பரம் மற்றும் ஸ்ரீரத்தினம் கஜரூபன் ஆகியோரை முல்லைத்தீவு நீதிபதி டி.பிரதீபன் (ஜூலை 5) விடுவித்து விடுதலை செய்தார். குருந்தூர்மலையில் உள்ள தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாக விவசாயிகள் மீது தேரர் ஒருவர் அளித்த முறைப்…
-
- 0 replies
- 158 views
-
-
வட்டுவாகல் பாலம் சீரமைப்பு ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும்! பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலத்துக்குரிய நிர்மாணப் பணிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றுக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- நந்திக்கடல், வட்டுவாகல் பாலத்தின் மாதிரித்திட்டம் இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என்ற சுபச்செய்தியை வெளியிடுகின்றேன். மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளும் உரிய வகையில் ஆரம்பமாகவுள்ளது - என்றார். முல்லைத்தீவு, வட்டுவாகல் பாலம் நிர்மாணிப்பதற்கு 2025 …
-
- 0 replies
- 138 views
-
-
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு! தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் பொலிஸாரின் சு…
-
- 0 replies
- 272 views
-
-
யுத்த காலத்தில் மீட்கப்பட்ட நகைகளை வடக்கின் அபிவிருத்திக்காக பயன்படுத்த முடிவு! யுத்தக் காலத்தில் விடுதலைப் புலிகளின் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் மக்களிடம் மீளக் கையளிக்க முடியாத நகைகளை வடக்கின் அபிவிருத்திக்கான நிதியத்திற்காக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் இன்று சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். மீட்கப்பட்ட தங்க நகைகளை ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இவ்வேளையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதிய…
-
- 0 replies
- 140 views
-
-
சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் வடக்கு கடல் மாசடைகிறது adminJune 6, 2025 சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை தரும் விடயம் என வட மாகாண கடல் தொழில் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். சுற்றுச்சூழல் தினம் என்பதால் நிலத்திலே காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் பொலித்தீன் அகற்றும் பணி யாழ் மாவட்டத்திலும் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் கடலிலே காணப்படும் சட்ட விரோத கடல் அட்டைப் பண்ணைகள் மற…
-
- 0 replies
- 147 views
-
-
Published By: VISHNU 05 JUN, 2025 | 09:55 PM யாழ்ப்பாணம் தையிட்டி பிரச்சினைக்கு ஒரு தரப்பினர் இனவாதம் என்ற உருவமளிக்க முயற்சிக்கின்றர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு தரப்பினரிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் மற்றும் பொதுப்படுத்தப்பட்ட யோசனைகளை உள்ளடக்கிய வகையில் நீதியமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். அறிக்கையின் உள்ளடக்க யோசனைகளை செயற்படுத்த நீதியமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் தலைவர் ரொஹான் பிரனாந்துவினால் கைச்சாத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் தையிட்டி பக…
-
- 0 replies
- 128 views
- 1 follower
-
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன் சார்ந்து பரிசீலிக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே டக்ளஸ் இதனைத் குறிப்பிட்டார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்துக்கு வருகை தந்த சிவஞானம், வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கோரிக்கை மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்…
-
-
- 5 replies
- 402 views
- 2 followers
-
-
05 Jun, 2025 | 12:17 PM ஈ.பி.டி.பி. உடனோ அல்லது பேரினவாத சக்திகளோடு புதிய கட்டமைப்பின் அனுமதியின்றி யாராவது பேசவோ செயற்படவோ முனைந்தால் அவர்கள் தாமாகவே வெளியேறலாம் அல்லது விலக்கப்படுவார்கள் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய பேரவை சுயாதீனமாகவும் இயங்கும். நாற்காலிகளை அலங்கரிப்பது நோக்கமல்ல. சித்தார்த்தன் டக்ளஸை அணுகியது எம்முடன் கூட்டில் உள்ள எவருக்கும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.டி.பி. உடனோ பேரினவாத சக்திகளோடு பேச முற்படுபவர்கள் தாமாக வெளியேறலாம் அல்லது புதிய கட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் - கஜேந்திரகுமார் | Virakesari.lk
-
- 1 reply
- 268 views
-
-
Published By: VISHNU 05 JUN, 2025 | 08:59 PM கிளிநொச்சி மாவட்ட பொதுச் மருத்துவமனையில் புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடம் கிளிநொச்சி மாவட்ட நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் வியாழக் கிழமை (5) அளுநர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டியமைக்கப்பட்ட புதிய மகப்பேறு வைத்தியசாலை வளாகம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில், கடந்த ஒரு வருடமாக முழுமையாக கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், மனிதவள பற்றாக்குறை, குறிப்பாக செவிலியர்கள் (Nurses) பற்றாக்குறை காரணமாக இப்போதுவரை இயக்கப்படாமல் இருக்கிறது. மிகவும் அவசியமான ஒரு மருத்துவமனையாக கட்டி முடிக்கப்பட்டு…
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும். புதிய விமானம் பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும். இலங்கையை …
-
-
- 7 replies
- 579 views
- 1 follower
-
-
05 Jun, 2025 | 01:26 PM நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் அடங்கும். 2050 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக அதிகரிக்கலாம் என உலக வங்கியின் 'ஆபத்திலிருந்து மீள் எழுச்சி தன்மைக்கு தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டில் சுமார் 90 சதவீத மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவ…
-
- 0 replies
- 190 views
-
-
போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி, போலி ஆவணம் தயாரித்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவருக்குச் சொந்தமான பங்குகளை விற்பனை செய்து 21 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் ஜயசிங்க ஆகியோர், கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி…
-
- 0 replies
- 146 views
-
-
05 Jun, 2025 | 01:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்களென நான்கு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த பதிவு கம்பனிகள் சட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஏனைய சட்டவிரோத நிறுவனங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்போமென புத்தசாசன, சமய மற்றும் கலாாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எம்,பி. கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தனது கேள்வியில்…
-
- 0 replies
- 142 views
-
-
05 Jun, 2025 | 03:31 PM பாணந்துறையிலிருந்து மருதானைக்கு இன்று வியாழக்கிழமை (5) காலை, புறப்பட்ட ரயில் எண் 328, தானியங்கி ஒளி சமிக்ஞை 171 ஐ நெருங்கியபோது, ரயில் செல்வதற்கான பச்சை சமிக்ஞை காட்டப்பட்ட போதும் எதிரில் அதே தண்டவாளத்தில் ரயில் (S-11 சிவப்பு ரயில்) ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில் சாரதியில் சாதுரியத்தால் பாரிய விபத்தொன்று தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான சமிக்ஞைகளை பொருத்துமாறு கோரி ரயில் சாரதிகள் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக ரயில்வே தொழிற்சங்க செயலாளர் தெரிவித்தார். பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான சமிக்ஞை கோளாறு குறித்த தகவல் கிடைத்துள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சிக்கலை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தல்கள் பிறப்…
-
- 0 replies
- 216 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் வியாழக்கிழமை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார். பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தோ்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத்தி…
-
- 0 replies
- 212 views
-
-
குச்சவெளி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவிப்பு குச்சவெளி பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மீன்பிடிக் கப்பலை சோதனையிடச் சென்ற கடற்படைக் கப்பலைத் தாக்க பல படகுகளைக் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு முயன்றபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மீனவரும், தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கடற்படை வீரர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான மற்றும் முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் படகுகளைக் கைப்பற்ற கடற்படை தொடர்ந்து…
-
- 1 reply
- 199 views
-
-
வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய ஆணையை முன்னணி, சுயநல அரசியல் லாபங்களை மட்டுமே மையப்படுத்தி, சுமந்திரன் எதிர்ப்பு அரசியலாக மாற்றுவது தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பாரிய துரோகம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி இடையிலான புதிய கூட்டு குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெற்கில் அனைத்து தேசிய கட்சிகளும் இணைந்து இந்த பித்தலாட்ட அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்டு நிற்கும் போது, தமிழ் தேசியக் கட்சிகள் மட்டும் ஏன் ஓர் அணியில் சேர்ந்து செயல்பட முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிவித்துள…
-
- 1 reply
- 218 views
-
-
00]சங்கு - சைக்கிள் சந்திப்பு! http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தன…
-
- 5 replies
- 610 views
- 2 followers
-
-
நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல் யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு
-
- 0 replies
- 229 views
-