ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142740 topics in this forum
-
04 JUN, 2025 | 09:59 AM இலங்கையின் கடல்சார் பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்க, அவுஸ்திரேலிய அரசாங்கம் உயர் செயல்திறனுடைய ஒரு Stabicraft ரக ரோந்துப் படகை வழங்கியுள்ளதுடன் 12 மில்லியன் ரூபா பெறுமதியான உயர் தர கண்காணிப்பு ட்ரோன்கள், கடல் கண்காணிப்பு உபகரணங்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது. கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அவுஸ்திரேலியாவும் இலங்கையும் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பானது, பல்வேறு வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பிராந்திய கடல்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ‘Disi Rela’ கூட்டு கடல்சார் பாதுகாப்புத் திட்டத்தின் அடுத்த கட்ட அறிமுகத்தின் மூலம் ஒரு வலுவான புதிய அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த வருடத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, விரிவாக்கப்ப…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகை தரக்கூடாது – காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தல் June 4, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இம்மாத இறுதியில் நாட்டுக்கு வருகைதரவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக அவர் இலங்கைக்கு வருகைதர அனுமதிக்கவேண்டாம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முடிவுக்கு வரவிருக்கும் பின்னணியில், தற்போது நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி மு…
-
- 0 replies
- 234 views
-
-
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான (Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும் அவசியமாகியுள்ளது. அதன் ஒரு அங்கமாக, வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியம் தொடர்பாக செயலாற்றும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
03 JUN, 2025 | 05:00 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கடந்த அரசாங்கத்தினால் ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டத்தில் 23 பாடசாலைகளே தேசிய பாடசாலைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறன. ஏனைய பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு அதுதொடர்பில் மீளாாய்வு செய்தே நடவடிக்கை எடுக்க வேண்டி இருகிறது என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ராேஹித்த அபேகுணவர்த்தன கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ரோஹித்த எம்.பி தனது கேள்வியின்போது, கடந்த அரசாங்க காலத்தில் மாகாணசபைக்கு கீழ் இருந்த ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
03 JUN, 2025 | 05:31 PM (எம்.மனோசித்ரா) இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் ஹேமபால இலங்கை வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆவார். அந்த நியமனத்திற்கு முன்பு, அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். மின்சார சபையின் தலைவராக பணியாற்றிய டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் இராஜிநாமா உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சியம்பலாபிட்டிய கடந்த மே 11ஆம் திகதி அன்று இலங்கை மின்சாரசபையின் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார். அவர் கடந்த ஆண்டு செப்ட…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
03 JUN, 2025 | 04:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஆனையிறவு உப்பள தொழிற்சாலையின் ஒருசில சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு ' ஆனையிறவு உப்பு' என்ற நாமத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா 27/2 இன் கீழ் கடந்த அமர்வின் போது முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பின் நாமம் ( பெயர்) ரஜ உப்பு என்று குறிப்பிடப்படுகி…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
இலங்கையில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடைபவனி வியாழக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நடைபவனி ஏற்பாட்டாளர் சேவ் ஏ லைஃப் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் சுதர்சிகா தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள், கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும். ஆனாலும் ஆபத்து என…
-
- 0 replies
- 246 views
-
-
03 Jun, 2025 | 03:19 PM வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இலங்கைக் கடற் பரப்புக்குள் எல்லைத் தாண்டியதும், சட்டவிரோதமானதுமான இந்திய இழுவை மடி வலைப் படகுகளின் தொழில் செயற்பாடுகள் காரணமாக எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களும், கடல் வளமும் பாரியளவில் பாதிக்கப்பட்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இத்தகைய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நாமும் பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தும், அவை முழுமை பெறவில்லை. தற்போது மீனினங்களின் இனப் பெருக்கக் காலம் என்பதால் இந்த…
-
- 0 replies
- 212 views
-
-
03 Jun, 2025 | 04:31 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் மூன்றாம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்…
-
- 0 replies
- 142 views
-
-
கிருஷாந்தி குமாரசாமி கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஐந்து குற்றவாளிகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக மேல்முறையீடு செய்ய செவ்வாய்க்கிழமை (03) மறுத்துவிட்டது. நீதியரசர்கள் குமுதினி விக்ரமசிங்க, அச்சலா வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு மனுவை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ஷ உள்ளிட்ட மனுதாரர்கள், தாங்கள் பல ஆண்டுகளாக மரண தண்டனையில் இருப்பதால் நிவாரணம் கோரினர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண…
-
- 0 replies
- 159 views
-
-
03 JUN, 2025 | 04:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு இம்மாதம் முதலாம் திகதி நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்தமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாக காணப்படுகின்றது. அதில் மூவர் பாடசாலை மாணவர்கள். எனவே பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்தவருடத்தில் இதுவரையான காலப்பகு…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:53 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான பயணத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழல் மற்றும் மோசடியை ஒழிக்க தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் ரிச்சர்ட் மார்ல்ஸை (Richard Marles) தெளிவு…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 03 JUN, 2025 | 03:33 PM தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும் அவரை கொலைசெய்து காட்டுப்பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார் குறித்த நபரை உடனடியாக கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் உடல் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்த…
-
-
- 49 replies
- 3.2k views
- 2 followers
-
-
03 JUN, 2025 | 04:30 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்துக்குள் குழப்பத்தை ஏற்பட்டுத்துவதற்காக எதிராளிகளால் திட்டமிட்டு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அந்த செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. அதேவேளை பிரதமர் ஹரிணியை மாற்றும் எண்ணமும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சரவையில் மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும். அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பிலோ அமைச்சர் பதவியில…
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடை நீக்கப்படவுள்ளது! adminJune 3, 2025 யுத்தக்காலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்ததாவது, இதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு குடிவரவு மற்றும் குடியகல…
-
- 0 replies
- 209 views
-
-
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான போக்குவரத்திற்காக புதிய ஏர்பஸ் A330-200 wide-body விமானம் நாளைய தினம் இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிரான்ஸின் தலைநகரிலிருந்து வரும் இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்கவில் மீது குறைந்த உயரத்தில் பறக்கும் இதன்போது பாரிய விமானத்தை பார்வையிட மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விமானம் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை, சுமார் 1,500 அடி உயரத்தில் கொழும்பு கடற்கரையோரம், துறைமுக நகரத்தின் தெற்கு முனையிலிருந்து மொரட்டுவ வரை பறக்கும். புதிய விமானம் பின்னர் அது கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்து, தரையிறங்குவதற்கு முன்பு விமான நிலையத்திற்கு மேல் குறைந்த உயரத்தில் மீண்டும் பறக்கும். இலங்கையை …
-
-
- 7 replies
- 579 views
- 1 follower
-
-
Published By: VISHNU 02 JUN, 2025 | 09:06 PM (நா.தனுஜா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதான பங்காளிக்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி வலிந்து காணாமலாக்கப்படல்களால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட தரப்பாக இருந்தும்கூட, இவ்விவகாரத்தில் அரசாங்கம் அக்கறையின்றி செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காணாமல்போனோர் குடும்ப ஒன்றியம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக்கொடுப்பனவாக தலா 200,000 இலட்சம் ரூபாவையை வழங்குவதற்கும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்பதாக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவேண்டும் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 05:35 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் தன்னியல்பான நாடு திரும்பல் திட்டத்தின்கீழ் மீள நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படவோ, தண்டனை விதிப்புக்கு உட்படுத்தப்படவோ மாட்டார்கள் எனவும் கொள்கை ரீதியான மாற்றமே அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மாறாக இதுகுறித்த சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதுடைய நபரொருவர் பலாலி விமானநிலையத்திலிருந்து குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் குற்றப்புலனாய்வுப்ப…
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 05:28 PM (எம்.மனோசித்ரா) உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், நமது நாட்டில் எவ்வித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அன்று எரிபொருளால் கிடைத்த இலாபம் தேசிய மக்கள் சக்தி கூறியதைப் போன்று கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் சென்றது உண்மையெனில், இன்று அது யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார். கொழும்பில் திங்கட்கிழமை (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சுமத்தி…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 06:01 PM வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு மற்றும் இந்து ஆலயங்கள் மீதான அடக்குமுறையினைக் கண்டித்து திங்கட்கிழமை (02) மாலை 5.30 மணிக்கு திருகோணமலை சிவன் கோவிலடி முன்றலில் சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பது இந்த நாட்டின் சாபக்கேடு. நீண்டகாலமாக சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் தமிழர்களின் காணி அபகரிப்பு, சைவத் தமிழரின் தலங்களை அழித்தல், நாடு முழுவதும் இருக்கும் தமிழர் தொல்லியல் சின்னங்களை அழித்தல் மற்றும் உருமாற்றம் செய்தல், இந்துக்களின் கோயில்களின் வழிபாடுகளைத் சட்டத்திற்கு முரணான வகையில் தடுத்தல், ஆலயங்களுக்குச் சொந்தம…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
02 JUN, 2025 | 03:34 PM இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. KAMOSHIDA Naoaki Chargé d' Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்ட…
-
- 0 replies
- 137 views
- 1 follower
-
-
ஆதரவாளரை சந்திப்புக்கு அழைத்து விட்டு படம் பார்க்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்! http://seithy.com/siteadmin/upload/suthan-020625-seithy.jpg தேசிய மக்கள் சக்தியும் ஏனைய கட்சிகளை போன்றுதான் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் பொன்.சுதன் தெரிவித்துள்ளார். நேற்று சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி அவற் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “இது தொடர்பாக நான் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் பலருடன்,அமைச்சர் சந்திரசேகரனுடன் கலந்துரையாடினேன். நேற்று முன்தினம் பிற்பகல் 02.00 அமைச்சர் தன்னை சந்திப்பதற்கான அனுமதியை எனக்கு வழங்கியிருந்தார். தேசிய மக்கள் சக்தியின் யாழ் அலுவலகத்திற்கு வாருங்கள்,அங்கு நாம் மேற்…
-
- 4 replies
- 395 views
-
-
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணையில் திருப்தியில்லை! 00] http://seithy.com/siteadmin/upload/easter-attack-111124-seithy.jpg ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்து திருப்தி தெரிவித்த தேசிய கத்தோலிக்க திருச்சபை தகவல் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த, பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து திருச்சபை மகிழ்ச்சியடையவில்லை என்று தெரிவித்தார். "நாங்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கொண்டுவருவது, மற்றவர்கள் மீது வழக்குத் தொடரப்படுவதைப் போலவே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்," என்…
-
- 0 replies
- 187 views
-
-
02 JUN, 2025 | 03:38 PM டேவிட் பிரிஸ் ஏவியேஷன் (DP Aviation) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையான மக்கள் போக்குவரத்துக்கான பயணங்களை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்களுக்கு அமைவாக உள்ளூர் விமான சேவையினை விருத்தி செய்யும் நோக்கில் டேவிட் பிரிஸ் ஏவியேஷன் நிறுவனமானது இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையினை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின் மேற்பார்வையின் கீழ் விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இன்றையதினம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை மேற்கொண்டுள்ளது. குறித்த விமானமானது இ…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
00]சங்கு - சைக்கிள் சந்திப்பு! http://seithy.com/siteadmin/upload/DTNA-020625-seithy.jpeg தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது. நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தன…
-
- 5 replies
- 610 views
- 2 followers
-