Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விபத்தில் 4 விமானப்படை வீரர்கள் பலி இன்று (31) அதிகாலை 03.55 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு விமானப்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். வரகாபொல பகுதியில் ஓட்டோ மற்றும் கொள்கலன் வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓட்டோ சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வரகாபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வபததல-4-வமனபபட-வரரகள-பல/150-243240

  2. பாடப் புத்தகங்களில் பாலியல் கல்வி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ´ஹதே அபே பொத´ என்ற சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி தொடர்பான விடயத்தை ஆராய்ந்து பதில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வி அமைச்சுடனும் சுகாதார அமைச்சுடனும் கலந்துரையாடி எடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலேயே அனில் ஜசிங்க இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன தலையிட்டு 7ஆம் தர மாணவர்களுக்கு விநியோகித்த பாட புத்தகங்களில் பிள்ளைகள…

  3. கைதின்போது அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் தஞ்சம் கோரும் கலாசாரம் மாற்றமடைய வேண்டும் - ரோஹித Published by J Anojan on 2019-12-30 15:06:50 (இராஜதுரை ஹஷான்) கைதுசெய்யப்படும் சூழ்நிலை தோற்றம் பெறும் போது அரசியல்வாதிகள் வைத்தியசாலையில் நோயாளியை போன்று அனுமதிக்கப்பட்டு கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ளும் முறையற்ற கலாச்சாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என சக்திவலு இராஜாங்க அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். வெள்ளைவேன் சாரதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டவர்கள் தண்டனை சட்டக்…

    • 7 replies
    • 506 views
  4. கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு இருக்கின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அந்த புரிந்துணர்வும் விட்டுக்கொடுப்பும் இருக்கும் என நான் எதிர்பார்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும், முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இன்று 30.12.2019 இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசியதாவது, இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்தில் போட்டியிட வேண்டுமா…

  5. விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம் சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளார். அதிபர் செயலகத்தில் இன்று தகவல் மற்றும் ஊடக தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “குடிமக்கள் தொடர்பான, தேவையான அனைத்து தரவுகளையும் திரட்டுவது செலவுமிக்கதாக இருந்தாலும், நேரத்தை மிச்சப்படுத்தும். பல்வேறு திணைக்களங்களில் சேமிக்கப்படுவதற்குப் பதிலாக, ஒரே இடத்தில் அவற்றை சேகரித்து வைத்திர…

    • 2 replies
    • 863 views
  6. வட மாகாண ஆளுநராக, சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸ், இன்று(30) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முன்னதாக, வட மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தாக தகவல் வெளியாகியிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த 18 மாலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்தின்படி திருமதி சார்ள்ஸ் விரைவில் வட மாகாண ஆளுநராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்பட்டது. எனினும், எதிர்வரும் 02ஆம் திக…

    • 4 replies
    • 934 views
  7. புதிய அரசாங்கமும் நாடக கலையை ஆரம்பித்துள்ளது! ஜே.வி.பி Ovihh எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் மீண்டும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியலில் கடந்த 71 ஆண்டுகளாக நடந்தவை தற்போது மாற்றமின்றி நடந்து வருகிறது. மாறி, மாறி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தாலும் அனைத்தும் ஒரே அரசாங்கமே. திருடர்களால் திருடர்களை பிடிக்க முடியாது. திருடர்களை பிடிக்க போவதாக கூறுவது தேர்தல் கோஷம் மாத்திரமே. தேர…

  8. பண்டாரவளை, ஊவஹைலண்டஸ் தோட்டம், எல்லவெல பிரிவு தோட்ட மக்கள் மீது கிராமத்தினை சேர்ந்த இனவாதிகளினால் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஸ்தலத்திற்கு இன்று முற்பகல் நேரடி விஜயம் செய்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நேற்று இரவு ஊவா ஹைலண்டஸ் தோட்டத்தினைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தாக்கியது மட்டுமல்லாது அடாவடித்தனமாக தோட்டத்திற்குள் உள்நுழைந்து தகாத இனவாதமிக்க வார்த்தைகளை பிரயோகித்து தோட்டத் தொழிலாளர்களையும் பெண்களையும் தாக்கியதுடன் ஏனையவர்களை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி மிகவும் மனம் வருந்திய நிலையில் என்…

    • 2 replies
    • 887 views
  9. காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் இன்று போராட்டம் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, கிளிநொச்சியில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று காலை இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.போராட்டத்தில் கலந்துகொள்பவர்களுக்காக வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் காலை 7 மணி முதல் பேருந்து சேவை ஆரம்பமாகியது. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அந்தந்த பேருந்து சேவைக்குரிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.இந்த போராட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலிர…

  10. குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற யுவதி சடலமாக கண்டெடுப்பு வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வீட்டிற்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாதநிலையில் அவரை தேடியுள்ளனர். இதனையடுத்து சந்தேகம் கொண்ட அவர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றினுள் தேடுதல் நடத்தியுள்ளனர். இதன்போதே குறித்த யுவதி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் சுலக்சனபிரியா (வயது -19) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வவ…

  11. நாட்டைக் காட்டிகொடுக்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் வந்ததில்லையெனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ, சிங்கள பௌத்தர்களுக்கு தான் ஒருபோதும் துரோகம் செய்யவில்லை’ என்றார். அநுராதபுரத்தில் நேற்று (29)நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்துரைத்த அவர், தான் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை மீது, சர்வதேச அழுத்தங்கள் பெருமளவில் காணப்பட்டன. அந்தத் தருணங்களில் தான் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். இவ்வாறிருக்க, 69இலட்சம் பேர், பொருள்களின் விலை குறையும் என்ற நம்பிக்கையில் புதிய ஆட்சியை உருவாக்கியயுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அரச அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு 4 வருடங்க…

    • 0 replies
    • 388 views
  12. பிரபாகரன்கூட தேசிய கீதத்தை பிரிக்க நினைக்கவில்லை- ஆனந்த தேரர் நாட்டை துண்டாக பிரிக்க முயற்சித்த பிரபாகரனின் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கவில்லை என நாராஹென்பிடிய அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கதோர் விடயமாகும். நாட்டை இரண்டாகப் பிரிக்க முயற்சித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் கூட எமது தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை. …

    • 2 replies
    • 775 views
  13. பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்த…

    • 7 replies
    • 1.1k views
  14. -க.அகரன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மீது, நேற்று (29) இரவு, தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவரது பாதுகாவலர் காயமடைந்த நிலையில், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா - பாவக்குளம் பகுதியில், மக்கள் சந்திப்புகளை முடித்து வவுனியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த மஸ்தான் எம்.பி, பாவக்குளம் கிராமப் பகுதியில் ஒருவரை இறக்குவதற்காக வாகனத்தை நிறுத்திய போது, அப்பகுதியில் நின்ற சிலர், வாள்களால் வெட்டித் தாக்க முயற்சித்துள்ளனர். இதன்போது சுதாகரித்துக்கொண்ட பாதுகாவலர்கள், குறித்த தாக்குதல் முயற்சியைத் தடுக்க முற்பட்ட போது, பாதுகாவலர் ஒருவரின் கை காயமடைந்துள்ளது. இந்நிலையில், எம்.பியைத் தாக்க முற்பட்டவர்கள் தப்…

    • 0 replies
    • 319 views
  15. எதிர்கட்சி தலைவருக்குரிய வாகனம் மற்றும் வீடு இப்போதும் இரா.சம்மந்தனிடம்..! முழிக்கிறார் சஜித்.. எதிர்கட்சி தலைவராக இருந்தபோது கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் பெற்றுக் கொண்ட வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றை மீள கையளிக்காத நிலையில், சஜித் பிறேமதாஸவுக்கு எதிர்கட்சி தலைவருக்கான வரப்பிரசாதங்கள் கொடுக்கப்படவில்லை. சிங்கள இணையத்தளமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த ஆட்சி காலத்தில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார்.அப்போது KX-2330 மற்றும் KO-6339 ஆகிய இலக்கதகடுகளைக் கொண்ட இரண்டு வாகனங்கள் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்தன. மேலும், கொழும்பு 07, மஹாகமசேகர மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் அவருக…

  16. முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூன்று மணி நேரத்திற்கும் மேல் விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளனர். கடந்த 21/4 இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணையை முன்னெடுத்திருந்தனர். https://www.virakesari.lk/article/72110

    • 0 replies
    • 380 views
  17. சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் இன்று மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் ஊழியர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.அதற்கமைய அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பனிஸ்ட பிரான்சிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய கடந்த 16 ஆம் திகதி நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னி லையான குறித்த பெண் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட வைத்திய நிபுணரிடம…

  18. கடந்த அரசாங்கத்தின் இலவச வீசா நடைமுறையை தொடர தீர்மானம் கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட இலவச வீசா நடைமுறை, அடுத்த ஆண்டுடன் காலாவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலவச வீசா நடைமுறை குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரசன்ன ரணதுங்க மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதற்காக இலவச வீசா நடைமுறையை 48 நாடுகளுக்கு விஸ்தரிக்க கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த இலவச வீசா நடைமுறையால் 4 பில்லியன் ரூபாய் இல…

  19. ஜனா­தி­ப­தியின் திட்­டத்தை சீர்­கு­லைப்­ப­வர்கள் விரைவில் கைதுசெய்­யப்­ப­டு­வார்கள் - வியா­ழேந்­திரன் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டு அண்­மையில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்­றத்­தினால் நிதி­யொ­துக்­கீ­டுகள் தடைப்­பட்­டதன் கார­ண­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டுள்ள அனைத்து மக்கள் நல பணி­க­ளை­யும் ­தொ­டர்ந்து மேற்­கொள்­வ­தற்­கான நிதி ஒதுக்­கப்­ப­டு­மென பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ உறு­தி­ய­ளித்­துள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், மாவட்ட அபி­வி­ருத்தி குழ­த்த­லை­வ­ரு­மான எஸ். வியா­ழேந்­திரன் தெரி­வித்தார். தற்­போதைய ஜனா­தி­ப­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள ஒரு இலட்சம் இளைஞர் யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்கும் உன்­னத தி…

  20. ராஜித பிணையில் விடுதலை வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அவரை 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அவருக்கான வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று அவர் சாட்சியமளிக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/ராஜித-பிணையில்-விடுதலை/

  21. 4.8 பில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இலங்கை! 2020ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் கடந்த 27ஆம் திகதி நடந்த ஆண்டு நாணயக் கொள்கை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை மத்திய வங்கியின் மூத்த பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டார். திருப்பிச் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களுக்காக, இலங்கை அரசாங்கம் நிதியைத் திரட்டுவதற்கு முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். http://athavannews.com/4-8-பில்லியன்-டொலர்-கடனைத்-த/

  22. நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை கடந்த 26ம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நெடுந்தீவு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டு பிடிக்க முடியவில்லை.இதனால் நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மர்ம…

    • 2 replies
    • 760 views
  23. இது ஆரம்பம் மட்டுமே – எச்சரிக்கிறார் சரத் பொன்சேகா! “ஐ.தே.கட்சிக்குள் இருக்கும் சிலர், கட்சியினதோ அல்லது நாட்டினதோ எதிர்காலம் பற்றி அக்கறை கொள்ளாது கட்சிக்குள் தமது இருப்பையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்வதிலேயே அக்கறைப் படுகிறார்கள். கட்சி மறு சீரமைக்கப்படுவதோ அல்லது தலைமைப் பீடம் மாறுவதயோ அவர்கள் எதிர்க்கிறார்கள். தங்கள் நன்மையை அட்டும் முன்வைத்து கட்சியை இப்படியே தொடர்ந்தும் வைத்துக்கொள்ள முனைகிறார்கள்” என சரத் பொன்சேகாதெரிவித்தார். ஹொரணவில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது அவர் இப்படித் தெரிவித்தார். தலைமைப் பதவி விடயத்தில் ஐ.தே.கட்சியில் ஒரு பாரிய அபிப்பிராய பேதம் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையை…

    • 2 replies
    • 1.3k views
  24. சிவாஜிலிங்கம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு Dec 26, 20190 தமிழினப் படுகொலை வாரமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை வருடாவருடம் முன்னெடுத்து வந்தமை தொடர்பில் நாளை பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் கொழும்பு நன்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதாக விடுக்கப்பட்ட அழைப்புக் கடிதம் இன்று சிவாஜிலிங்கத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பயங்கரவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். http://www.samakalam.com/செய்திகள்/சிவாஜிலிங்கம்-தமிழினப்-ப/

    • 10 replies
    • 1.3k views
  25. ‘வெள்ளை வான்’ சம்பந்தமாக என்னிடமும் ஆதாரங்கள் உள்ளன – விக்கிரமபாகு கருணாரட்ண டிசம்பர் 28, 2019 மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் பிரபலமான வெள்ளை வான் கடத்தல் தொடர்பாக தன்னிடமும் ஆதாரங்கள் உள்ளதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர் விக்கிரமாகு கருணாரட்ண கூறியுள்ளார். கொழும்பு பிரிவின் முன்னாள் டி.ஐ.ஜி.யும் பின்னர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனெரல் ஆகப் பதவி மாற்றப்பட்ட புஜித் ஜயசுந்தர அவர்கள் வெள்ளை வான் பயங்கரவாதம் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டதாலேயே குருநாகலைக்கு சடுதியாக இடம் மாற்றப்பட்டார் என டாக்டர் கருணாரத்ன மேலும் தெரிவித்தார். நீண்ட காலத்துக்கு முன்னர் தமிழர் ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது சகோதரி கேட்டுக்கொண்டதையடுத்து தா…

    • 2 replies
    • 964 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.