Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்றுடன் நிறைவு! உள்ளூராட்சிமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடையவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இன்று நடைபெற்ற இறுதி அரசியல் பிரச்சாரக் கூட்டங்களின் காணொளி காட்சிகள் மற்றும் விபரங்களை நாளை தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரச்சாரம் செய்ய முடியும் எனவும் அறிக்…

  2. 03 MAY, 2025 | 07:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வெளிநாடுகளுக்கு சென்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிராக பேசியதோ செயல்பட்டதோ கிடையாது. இதனை மக்கள் அறிவர். சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் அரசியல் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமையே ஏற்படும். மின் கட்டண அதிகரிப்பு நாணய நிதிய நிபந்தனைகளில் முக்கியமான தொன்றாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நான்காவது தவணை கொடுப்பணவை விடுவிக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசாங்கம் பெரும் ந…

  3. 03 MAY, 2025 | 07:20 PM இந்நாட்டின் முன்னாள் போராளிகள் கனவு கண்டிருப்பார்கள். அது புலிகளாக இருக்கலாம், ஈ.பி.டி.பி.யாக இருக்கலாம், ஈ.பி.ஆர்.எல்.எப். ஆக இருக்கலாம். தமிழ் மக்கள் நிம்மதியாக, தன்மானத்துடன் வாழ வேண்டும் என்பது அவர்களின் கனவு. அந்த கனவை தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளால் நிறைவேற்ற முடியுமா? போராளிகளின் அர்ப்பணிப்புக்கு அவர்களால் அருகில்கூட வரமுடியாது. அவர்கள் கனவு கண்டிருந்தாலும் கூட அந்த கனவை நனவாக்குவதற்குரிய வேலையை நாம் செய்கின்றோம். இயக்கங்கள் மீது உண்மையான பற்றுள்ளவர்கள் தேசிய மக்கள் சக்தியையே ஆரத்தழுவிக்கொள்ள வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். சனிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விசேட …

  4. 03 MAY, 2025 | 07:25 PM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜம்மு - காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த பதற்றங்களின் எதிரொலியாக இலங்கையிலும் இருநாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர கருத்து மோதல்கள் மோலோங்கியுள்ளன. இலங்கையை பொறுத்த வரையில் இரு நாடுகளுடனுமே சிறந்த உறவுகளை கொண்டுள்ளது. ஆனால் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றங்களும் ஏற்பட கூடிய ஆயுத ரீதியிலான மோதல்களும், இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புவிசார் அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளாக உள்ளது. மறுபுறம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள…

  5. 02 MAY, 2025 | 05:10 PM தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் நாம் நிச்சயமாக அவர்களுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டுக்கு வந்து இணைந்து பயணிப்போம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அல்வாய் மாலுசந்தி மைக்கேல் விளையாட்டுக்கழக மைதானத்தில் தமிழ்த் தேசிய பேரவை வியாழக்கிழமை (01) இரவு நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார். இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் தமிழ் மக்கள் மிகத் தெளிவாக - ஆணித்தரமாக தங்கள் வ…

  6. 03 MAY, 2025 | 07:32 PM “உழலை ஒழிக்கிறோம்” என நண்பர் அனுர கூறுவதை, நான் வரவேற்கிறேன். இது எனது கொள்கையும் ஆகும். ஆனால், இதை மட்டும் சொல்லி, நாள்தோறும் புது, புது பொய்களையும் சொல்லி, இனியும் நாட்டை நடத்த முடியாது. நாட்டின் முதல் முக்கியத்துவம் பொருளாதாரத்துக்கு வழங்கப்பட்டே ஆகவேண்டும். இல்லா விட்டால் வர்த்தகம், தொழிற்துறை கடுமையாக பாதிக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்குளியில் வெள்ளிக்கிழமை (02) நிகழ்ந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்து ஆடும். பண புழக்கம் கணிசமாக குறையும். இந்திய பொருளாரத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி, விசேட வர்த்தக சலுகைகளை கோரி பெற…

  7. 03 MAY, 2025 | 07:31 PM தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும். அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பளித்தால் வடக்கு கிழக்கில் நாம் தனித்துவத்தையும் சுயமரியாதையும் இழந்தவர்களாகி விடுவோம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் சனிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்கள் தமிழர்களாகவே தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக தமிழர் தாயகத்தில் வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள். அதுவே எமக்கான வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் தார்மீக உரிமையும் ஆகும். கடந்த 70 ஆண்டுகள…

  8. Published By: DIGITAL DESK 2 03 MAY, 2025 | 05:04 PM சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு முன்பாக இன்று சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும், தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நீதி கோரியும் ஊடகவியலாளர்கள் கோசங்களை எழுப்பினர். https://www.virakesari.lk/article/213594

  9. 03 MAY, 2025 | 03:30 PM எதிர்வரும் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை பிற்பகல் 04.00 மணிக்கு பின்னர் ஊடகங்களில் வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்களிக்கும் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் கிடைத்தால் அதனை பிற்பகல் 04.00 மணிக்கு முன்னர் ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளத…

  10. 500 தமிழ் பொலிஸார் சேவையில் இணைக்க நடவடிக்கை May 3, 2025 11:36 am 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ளும் ஆலோசனைகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பொலிஸ் துறையில் 10ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இதுகுறித்து பொலிஸ் திணைக்களத்துடன், நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பிரகாரம் 10ஆயிரம் பொலிஸாரை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இவ்வாண்டு 2ஆயிரம் பொலிஸார் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இதில் 500 தமிழ் பொலிஸாரை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். https://oruvan.com/action-to-induct-500-tamil…

  11. வடக்கு காணி சுவீகரிப்பின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி - ஈ.பி.டி.பி. ஸ்ரீகாந்த் எச்சரிக்கை Published By: Vishnu 02 May, 2025 | 09:38 PM உள்ளூராட்சி மன்றங்கள் வடக்கு கிழக்கில் தேசிய மக்கள் சக்தியிடம் செல்லுமாயின் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு சமாதி கட்டப்படும் அபாயம் இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான காணிகளை அபகரிப்பதற்கான வர்த்தமானி வெளியிட்டப்பட்டு இருக்கின்றமை தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளிப்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக உரிமை கோரப்படாத காணிக்ளை சவீகரிப்பதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ள…

  12. சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை ; நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன் - சிறிதரன் 03 May, 2025 | 09:21 AM சிங்கள பேரினவாதம் ஒரு காலமும் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை. நாங்கள் அவர்களுடன் சேர்ந்து பயணிப்பதால் என்ன பலன். நாங்கள் நாங்களாக இருக்கும் வரைக்கும், நாங்கள் பலமான ஒரு சக்தியாக இருக்கும் வரைக்கும் நாங்கள் ஒற்றுமையாகவும் பலமாகவும் இருக்கின்றோம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் வரைக்கும் தான் எங்களுக்கு விடிவு சாத்தியமாக இருக்கும் என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மன்னார் அடம்பனில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பு வெள்ளி…

  13. யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01.05.2025 இரவு 9 .40 மணியளவில் இயற்கை எய்தினார். கொழும்பில் வைத்திய சிகிச்சை பெற சென்ற அவர், கொழும்பு வெள்ளவத்தை கம்பன் கழகத்தில் தங்கி இருந்த நிலையில் இயற்கை எய்தியதாக தெரிய வருகிறது. சுவாமிகளின் திருவுடல் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஆதீனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அன்று ( 02.05.2025) மாலை பூரணத்துவ சாந்தி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரியவருகிறது. நல்லை ஆதீனத்தைத் தோற்றுவித்த முதலாவது குருமுதல்வர், ஶ்ரீலஶ்ரீ சுவாமிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் 11-04-1981 இல் பூரணத்துவம் பெற்றதன் பின்னதாக, நல்லை ஆதீனத்தின் குருமுதல்வராக வீற்றிருந்…

  14. வாக்கு வேட்டைக்காக சில தமிழ் அரசியல் வாதிகள் இனவாதத்தைக் கையில் எடுத்துள்ளனர்! வாக்கு வேட்டைக்காக வடக்கிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் ராஜபக்சக்களின் சகோதரர்களாக மாறி இனவாதத்தை கையிலெடுத்துள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ் சாட்டியுள்ளார். யாழ். வேலணை பகுதியில் நேற்று (02) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது வடக்கிலும், தெற்கிலும் மக்களை பிரித்தாளும் இனவாதத்தை தோற்கடித்து, முன்னோக்கிச் செல்ல தேசிய மக்கள் சக்திக்கு இம்முறையும் தமிழ் மக்கள் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார். ” அத்துடன் இன ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான் இந்நாட்டை முன்னோக…

  15. மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் - யாழில் சுவரொட்டிகள் Vhg மே 02, 2025 அன்பான வாக்காளர்களே! மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும். இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.' என குறிப்பிடப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'யாழ்ப்பாணம் கல்விச் சமூகம்' என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பில் பலரும் பல்வேறு சந்தேகங்களை வெளிப்படுத்தி வருவதோடு, சமூக ஊடகங்களிலும் அதிகம் பரவி வருகிறது. https://www.battinatham.com/2025/05/blog-post_2.html

      • Like
      • Haha
    • 7 replies
    • 619 views
  16. Published By: VISHNU 02 MAY, 2025 | 07:45 PM வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம் மற்றும் அமைதியான வாழ்க்கை நிலைமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு தேசிய தேவையாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பில் உள்ள காலி முகத்திடல் ஹோட்டலில் ஏப்ரல் 2 ஆம் திகதி நகர அபிவிருத்தி, நிர்மாணத் துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை திட்டத்தின் நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு மற்றும் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியில் பங்காளிகளாக உள்ள அ…

  17. 02 MAY, 2025 | 04:32 PM ஓய்வூதியம் பெற்றவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு கோரி இன்று வெள்ளிக்கிழமை (2) முற்பகல் 10.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 2020 - 2024 ஆண்டுக்கான ஓய்வூதியம் பெற்றோரின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வேண்டும் என இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். '2020 - 2024 ஓய்வூதிய ஒன்றியம்' குழுவினர் ஏற்பாடு செய்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தில் 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்றோருக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படவில்லை எனவும் இதேவேளை, 2025ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெறுவோருக்கு 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபா வரை…

  18. 02 MAY, 2025 | 03:05 PM எமது மக்களுக்காக இதுவரை ஏதோ ஒரு வழியில் உழைத்த எமது தமிழ் தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகளுக்கு வாக்களித்து, அவர்களின் கரங்களுக்கு கொடுப்பது அவசியம் என வடக்கு - கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (2) யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் குறித்த சங்க பிரதிநிதிகள் ஊடக சந்திப்பொன்றை நடத்தியபோதே சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி என்பது எமக்கான அதிகாரங்களைக் கொண்ட ஒரு கட்டமைப்பு. இதை எமது தமிழ் தேசியத்தில் இருக்கும் ஒரு தரப்பினரே ஆளுகை செய்ய வேண்டும். தமிழ் தேசியத்தின் வலிமையை இம்…

  19. 01 MAY, 2025 | 01:24 PM இந்தியாவின் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெற்றுவரும் நிலையில், பயண கட்டணத்தை குறைத்துள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயண…

  20. பொலிஸ் பாதுகாப்பு கோரும் தேசபந்து தென்னகோன்! தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை நேற்று (01) எழுத்து மூலம் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றவியல் கும்பல் தலைவரான கஞ்சிபாணி இம்ரான், பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை கொலை செய்வதாக மிரட்டியதாக அண்மைய நாட்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தகைய சூழலில்தான், தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்…

  21. யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு! யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15 ஏக்கர் நிலங்களும், திக்கம் பகுதியில் 5 ஏக்கர் காணி நிலமுமாக சுமார் 40 ஏக்கர் காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேலதிக அரச அதிபர் (காணி) ஸ்ரீமோகன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், பருத்தித்துறை பிரதேச …

  22. மே தினம்: அனைத்து முக்கிய கட்சிகளினதும் பேரணி விபரம்! 2025 மே 1 இன்று இலங்கை, சர்வதேச தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான பேரணிகள் மற்றும் நிகழ்வுகளுடன் நினைவுகூருகிறது. குறிப்பாக கொழும்பில் குறைந்தது 15 நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், இலங்கை பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை அமுல்படுத்தியுள்ளனர். முக்கிய மே தின பேரணிகள் இங்கே: கொழும்பு தேசிய மக்கள் சக்தி (NPP): தேசிய மக்கள் சக்தி அதன் முக்கிய பேரணியை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடத்துகிறது. இந்த இடத்தில் அரசியல் கூட்டங்கள் மீதான முந்தைய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர…

  23. வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு! 2025 ஏப்ரல் 29 முதல் அமலுக்கு வரும் வகையில் வாகன இறக்குமதி மீதான மேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி அமைச்சகம் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிறப்பித்த இந்த உத்தரவு, முந்தைய கட்டுப்பாடுகள் காரணமாக துறைமுகங்களில் சிக்கித் தவித்த பல வகையான வாகனங்களை அகற்றுவதற்கு வழி வகுக்கும். இந்த நிலையில் புதிய வர்த்தமானி அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்தஇலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, கடந்த ஒன்றரை முதல் இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் அனுமதிக்க முடியவில்லை. புதிய வர்த்தமானியின் மூலம்,…

  24. இலங்கையில் தமிழ் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இடதுசாரி பாரம்பரிய கட்சியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஜேவிபி நாட்டின் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை மதித்து நடப்பதற்கும் இந்த மே தினம் வழிகோலட்டும் என்று மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். மே தினததிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு இலங்கையில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களுக்கும் சர்வதேச பாட்டாளி வர்க்க தோழர்களுக்கும் உலகின் …

  25. ரணில் விக்ரமசிங்கவின் நீண்டகால பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றிய தலைமை ஆய்வாளர் அசோக ஆரியவன்ச, காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்திற்கு தேசிய பொலிஸ் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. தலைமை ஆய்வாளர் ஆரியவன்ச, ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவில் 23 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதில் 15 ஆண்டுகள் அவரது பிரதான தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். Athavan Newsரணில் விக்ரமசி…

    • 2 replies
    • 270 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.