Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 17 APR, 2025 | 06:56 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் மற்றும் அந்த கொடூரமான செயலிற்கு உதவியவர்கள் யார் என்பதை கண்டறிவது அவசரமான விடயம் என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குறித்த தனது விசேட செய்தியில் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இதனை தெரிவித்துள்ளது. 2025ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஆறு வருடங்களாகின்றது என தெரிவித்துள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணைகளை உறுதி செய்வதற்காக அரசாங்கம் சில சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை விசாரணையின் இறுதி நோக்…

  2. 17 APR, 2025 | 07:03 PM பார்வைக் குறைபாடுடையவர்களை வலுவூட்டும் வகையில் நான்கு நாள் செயன்முறை பயிற்சியொன்று இடம்பெற்றது. இந்த உள்ளகப் பயிற்சிகள் குருதெனிய கல்வி வள மத்திய நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டன. பிறவியிலே முழு அளவில் பார்வைக்குறைபாடு உடையவர்களும், இடைப்பட்ட காலத்தில் பார்க்கும் திறனை இழந்தவர்களுக்கும் இந்த பயிற்சி வழங்கப்பட்டது. கண்டி புகையிரத நியைத்தில் புகையிரத மேடைகளைப் பயன்படுத்தல், கண்டி வாவிக்கரையில் நடத்தல் மற்றும் கண்டி நகர நடைபாதைகளில் பயணித்தல் போன்ற விடயங்களை பிரதானமாகக் கொண்டு இந்த செயன்முறைப் பயிற்சி வழங்கப்பட்டது. மத்திய மாகாண சபை நலன்புரி மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவைகள் திணைக்களம் பார்வையற்றவர்களை வலுவூட்டும் வகையில் இப்பயிற்சியை வழங்கியது. …

  3. “மன்னார்-ராமேஸ்வரம் இடையே படகு சேவை “ மன்னார் மற்றும் இராமேஸ்வரம் இடையே படகு சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியாழக்கிழமை (17) அன்று தெரிவித்தார். மன்னார் பஜார் பகுதியில் வியாழக்கிழமை (17) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி …

  4. 17 APR, 2025 | 01:28 PM தமிழ்க் கட்சிகள் எல்லாமே உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுவருகின்றன. ஜே.வி.பியை மாத்திரம் அல்ல; தென்னிலங்கைக் கட்சிகள் எதையுமே நாம் ஆதரிக்க முடியாது. தென்னிலங்கைக் கட்சிகளை நிராகரிக்கும் அதேசமயம் எதற்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் எமக்கு நிதானம் தேவை. தமிழ்த் தேசிய அரசியலை வியாபாரப் பண்டமாக்கி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தமிழ் அரசியற் கட்சிகளையும் மக்கள் அடியோடு நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வலி வடக்கு பிரதேச சபைக்கு சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்…

  5. Published By: VISHNU 17 APR, 2025 | 09:14 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம், இலங்கை கிரிக்கெட் அணியில் தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளடங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிக்கிறோம்; அண்மையில் பிரதான கிரிக்கெட் வீரர் ஒருவர் என்னை சந்தித்தார். அவர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார். அவர் தான் சனத் ஜயசூரிய, …

  6. 17 Apr, 2025 | 12:23 PM ( எம்.நியூட்டன்) காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக வலிவடக்கு காணிகள் விடுவிப்புக்கான அமையம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் வசாவிளான் சந்தியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது . ஊடகவியலாளர் சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னதாக அங்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் ஊடக சந்திப்புக்கு வந்திருந்தவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இது உயர் பாதுகாப்பு வலயம் எனவும் இங்கு கூட்டம் கூட முடியாது எனவும் ஊடக சந்திப்பு ஏற்பாட்டாளர்களுடன் ப…

  7. யாழ் செல்லும் ஜனாதிபதியிடம் வலி.வடக்கு மக்கள் விடுத்துள்ள கோரிக்கை! adminApril 16, 2025 யாழ்ப்பாணம் , வலி வடக்கு பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுவிக்கப்பட்ட விவசாய காணிகளுக்கு கட்டுப்பாடுகள் இன்றி சுதந்திரமாக சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட அக்காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமை (17.04.25) ஜனாதிபதி வருகை தரும் போது, யாழ் மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி விவசாய காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து , எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் அப்போத…

  8. மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் adminApril 16, 2025 போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து நடத்திய வடக்கு மாகாண சித…

  9. VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு! பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் திரவ பால் மற்றும் தயிர் மீதான VAT வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் அந்தத் திகதியில் அமலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித்…

  10. புத்தாண்டின் இரு நாட்களில் 412 பேர் வைத்தியாசலையில் அனுமதி! புத்தாண்டின் இரண்டு நாட்களில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார். அவர்களில் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இந்த நோயாளிகளில் 80 பேர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்த விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலானவை வீடுகளில் பதிவாகியுள்ளன. அந்த விபத்துகளில் காயமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 110 ஆகும். மேலதிகமாக வீதி விப…

  11. 12 APR, 2025 | 01:30 PM கிளிநொச்சியில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜிடம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார். சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சனிக்கிழமை (12) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் கிளிநொச்…

  12. 16 APR, 2025 | 04:20 PM மரம் இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. ஆனால் மனிதன் இல்லாவிட்டால் மரங்கள் சிறப்பாக வாழும். மரம் நடுகையின் அவசியத்தை தற்போதைய காலநிலை எமக்கு உணர்த்தியிருக்கின்றது. இதை தன்னார்வமாக முன்னெடுக்கம் கிறீன் லேயர் சுற்றுச்சூழல் அமைப்புக்கு எமது மாகாண மக்கள் சார்பில் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிறீன் லேயர் அமைப்பின் ஏற்பாட்டில் பத்தாயிரம் நெல்லிக் கன்றுகளை நடுகை செய்யும் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கோப்பாய் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்றது. நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் முக்கிய அங்கத்தினுள் ஒன்றாக மரம் நட…

  13. 16 APR, 2025 | 04:26 PM மக்களினுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் பன்னாட்டு கம்பனிகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த அரசும் செயல்படுவது வேதனைக்குரிய விடயம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் குறித்து புதன்கிழமை (16) ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், மன்னார் தீவுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மற்றும் கனிம மண் அகழ்வு திட்டங்களை நிறுத்துமாறு கோரி பல வருடங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக இந்தத் திட்டங்களை நிறுத்துவதாக ஜே.வி.பி யின் சட்டத்தரணிகள் குழு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக எம்மைச் சந்தித்து வாக்குறுதி அளித்திருந்தன. ஆனால், இத…

  14. Published By: VISHNU 16 APR, 2025 | 06:16 PM யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி கீரிமலை சடையம்மா மடம் ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்துநிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்டகாலமாக சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இன்றும் விடுவிக்கப்படாமல் உள்ளன. தாங்கள் இவற்றை விடுவிப்பதில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்போடு ஜனாதிபதியிடம் வேண்டுகிறோம். மேலும் பொதுமக்களின் காணிகளில் வடக்கு கிழக்கில் படையினர் தொடர்ந்து த…

  15. போராட்டங்களை கையாள என்பிபிக்கு பயங்கரவாத தடைச்சட்டம் தேவைப்படுகிறது! [Wednesday 2025-04-16 07:00] http://seithy.com/siteadmin/upload/suresh-premachandran-051124-seithy.jpg தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். என்.பி.பி. ஜே.வி.பி இரண்டும் ஒன்றுதான் அதில் எந்த மாற்றமும் இல்லை. கொள்கை ஒன்றுதான். சர்வதேசத்தின் உதவிக்கான வேறு வேறு தோற்றப்பாட்டை காடுகின்றனரே தவிர வேறெந்த விடயமும் இல்லை. கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் தமி…

  16. யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்! யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு …

  17. யாழ்ப்பாணத்தில் (Jaffna) கடற்கரைப் பகுதி ஒன்றில் வைத்து ரி 56 ரக துப்பாக்கியொன்று காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று (15) இரவு குறித்த துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக காவல்துறையினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன…

  18. 16 APR, 2025 | 09:30 AM அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கூறியதை வரவேற்றிருக்கும் தேசிய சமாதானப் பேரவை மாகாண சபை முறையைப் பலப்படுத்துவதற்கு ஆளுநர்களின் அதிகாரங்களை குறைத்து மக்களினால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை அளிப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இது தொடர்பில் 'பொருளாதாரத்தை பாதுகாக்கவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் அவசரமான சீர்திருத்தங்கள் தேவை' என்ற தலைப்பில் பேரவ…

  19. 15 APR, 2025 | 01:12 PM யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று திங்கட்கிழமை (14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த 65 வயதுடைய வயோதிபரே உயிரிழந்துள்ளார். வயோதிபர் கடந்த 11ஆம் திகதி தனது வீட்டுக்கு அருகில் சைக்கிளை நிறுத்தி வைத்து வீதியோரமாக நின்று தனது நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துள்ளார். இதன்போது வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வயோதிபர் மீது மோதியுள்ளது. விபத்தில் வயோதிபரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வயோதிபர…

  20. Published By: VISHNU 15 APR, 2025 | 08:58 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக முரண்பாடற்ற தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். இந்த சட்டத்துக்கு எதிராகவே நாங்கள் செயற்பட்டோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கும், நடைமுறை…

  21. 15 APR, 2025 | 04:02 PM (எம். ஆர்.எம். வசீம்) பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் உண்மையாகவே செயல்படுத்துவதாக இருந்தால், கொலை குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என முன்னணி சோசலிச கட்சியின் கல்விப் பொதுச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் பட்டலந்த விசாரணை அறிக்கை பூரணமான அறிக்கையல்ல. அது 280 பக்கங்களைக் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையாகும். சாட்சி அறிக்கைகள் உடன் மொத்த…

  22. 15 APR, 2025 | 03:58 PM யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் பராமரிப்புக்குரிய பொறுப்பை இந்திய அரசாங்கம் 5 ஆண்டுகளுக்கு ஏற்றிருந்த நிலையில் அதில் 4 ஆண்டுகள் வரையில் நிறைவுபெற்றுள்ளதாகவும் எதிர்காலத்தில் யாழ். மாநகர சபை அதனைக் கொண்டு நடத்துவதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுப்பதற்காகவும் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் குறிப்பிட்டார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. கல…

  23. 15 APR, 2025 | 04:46 PM மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று செவ்வாய்க்கிழமை (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது, தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவ…

  24. 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் - வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி 14 APR, 2025 | 06:25 AM 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும் என தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த…

  25. Published By: DIGITAL DESK 2 14 APR, 2025 | 03:23 PM நாடளாவிய ரீதியில் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. விஸ்வாவசு வருடம் சித்திரை முதல் நாள், இன்று திங்கட்கிழமை (14) அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது. இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் இன்று (14) விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.