Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 19 JUN, 2025 | 09:36 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப் பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பூதன்வயலில் இருந்து மதவளசிங்கன் குளம் செல்லும் வீதியில் பிரதான பாலம் ஒன்று மிக நீண்ட காலமாக சீர் செய்யப்பட வேண்டிய தேவையில் காணப்பட்டுள்ளது. குறித்த பாலத்தினை அமைத்து தருமாறு மக்கள் தொடர்ச்சியாக விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதி அமைப்பினருடன் கலந்துரையாடாமல் திடீரென பால வேலைக்காக பாதையை முற்றுமுழுதாக வெட்டி பாலம் அமைக்கின்ற பணிகள் செய்யப்பட்டு இருக்கின்ற நிலையில் அருகிலே மாற்றுப் பாதை ஒன்றை அமைக்காமல் மக்களுடைய போக்குவரத்து முற்றாக தடைப்படக்கூடிய வகையில் மோட்டார் சைக்கிள் மட்டும் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதையை…

  2. Editorial / 2025 ஜூன் 19 , பி.ப. 02:58 - 0 - 35 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மேலும் இரண்டு மகள்களான சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அமலி நயனிகா ரம்புக்வெல்ல ஆகியோரும் அமலியின் கணவரும் பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வின் கூற்றுப்படி, ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அறிவிக்கப்படாத சொத்துக்கள் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.இதில் ரூ. 40 மில்லியன் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், ரூ. 20.5 மில்லியன் மதிப்புள்ள பென்ஸ் கார் மற்றும் ஏற்கனவே ந…

  3. முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, ஹரிசன், விஜித் விஜிதமுனி டி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் 110 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கால்நடை இறக்குமதி ஊழலில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பதி இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் யாரும் தப்பிக்க மாட்டார்கள் என்று அவர் கூறினார். "அவர்களில் யாருக்கும் எந்த கருணையும் காட்டப்படாது" என்று அவர் கூறினார். பால் கறப்பதற்காக பசுக்களை இறக்குமதி செய்வது என்ற போர்வையில் வயதான பசுக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள…

    • 2 replies
    • 217 views
  4. தெல்லிப்பழைப் பிரதேசத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளைப் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளாக சீரமைத்துத்தருமாறு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த அதிகாரிகள், தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜே/213 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள செல்லத்துரை வீதியில் சமிக்ஞை விளக்கு மாத்திரம் காணப்படுகின்றது. சுமார் 500 முதல் 550 பயணிகள் வரை இந்த வீதியைப் பயன்படுத்துகிறார்கள். ஜே/227 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கோயில்குளம் வீதியில் 1000 முதல் 1500 பயணிகள் வரை வீதியைப் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் புகையிரதக்கடவைக்கு சமிக்ஞையும் பாதுகாப்புக் கடவையும் இல்லை. ஜே /234 கிராம அலுவலர் பிரிவி…

  5. வலி. மேற்கு பிரதேசசபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தனும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாரும் போட்டியிட்ட நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாருக்கு அளிக்கவேண்டிய வாக்கினை ச.ஜெயந்தனுக்கு அளித்துள்ளார். பின்னர் அந்த வாக்கினை மாற்றுமாறு அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார். தவ…

    • 1 reply
    • 160 views
  6. வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்றையதினம் நடைபெற்றது. அந்த வகையில் சண்முகநாதன் ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளர் மற்றும் புதிய தவிசாளர் ச.ஜெயந்தன் ஆகியோர் இணைந்து, வலி. மேற்கு பிரதேச சபையின் வளாகத்தில் உள்ள முன்னாள் எதிர்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். அமிர்தலிங்கத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

  7. 19 JUN, 2025 | 04:01 PM பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்த கடற்படையின் உதவியைப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்கில் காணிகளை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைகள் போன்ற பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். அதன்படி, நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி வழங்கினார். இதன்போது ஜனாதிபதி தெரிவிக்கையில், என்னால் இந்த கூட்டத்தில் முன்கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளாவன : கிழக்…

  8. ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இலங்கை பராமரிப்பாளர் காயம்! இஸ்ரேலில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அருகில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கைப் பெண் பராமரிப்பாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். டெல் அவிவில் உள்ள பீர்ஷெபா மருத்துவமனையில் தனது நோயாளிக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவமனைக்கு அருகில் ஏவுகணைத் தாக்குதலின் போது பராமரிப்பாளர் காயமடைந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த விடயத்தில் உதவ தூதரகத்திலிருந்து ஒரு குழு அனுப்பப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஈரானுடனான அதன் 7 நாள் மைல்கல்லை எட்டியபோது, தெஹ்ரான் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் டெல் அவிவ் மீது சுமார் 25 ஏவுகணைகளை சரமாரி…

  9. ஜனவரி முதல் 73,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு! வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் 73,400க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. இந்த வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள். அவற்றின் எண்ணிக்கை 58,947 என DMT ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு மேலதிகமாக, 7,500 கார்கள் மற்றும் 1,666 முச்சக்கர வண்டிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1436265

  10. தாக்குதலுக்குள்ளான கொழும்பு மாநகர சபை உறுப்பினரை நேரில் சென்று பார்த்த சஜித்! தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் உலுவதுகே சந்தமாலியின் உடல்நிலை குறித்து விசாரிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார். ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சந்தமாலி, ஜூன் 16 அன்று கொழும்பின் புதிய மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான சிறப்பு மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் அவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்கு…

  11. மனைவியுடன் ஐஸ் விற்பனை; பருத்தித்துறையில் சிக்கிய நபர் இளைஞர்கள் குறிவைப்பு பருத்தித்துறையைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு மனைவி மற்றும் அறிமுகமானவர்களின் உதவியுடன் ஐஸ் மற்றும் கேரளக்கஞ்சா ஆகிய போதைப் பொருள்களைப் பெருமளவில் விநியோகித்து வந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவர் பொலிஸாரால் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறைப் பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் ஊழல் சோதனைப் பிரிவால் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பருத்தித்துறை, கட்கோவளத்தில் வசிக்கும் 29 வயது சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து சுமார் 12 கிராம் 40 மில்லிகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன. குறித்த இளைஞர் சமூகத்தை …

  12. காரைநகர் பிரதேச சபை சுயேச்சை குழுவிடம்! adminJune 19, 2025 காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினர் கிருஷ்ணன் கோவிந்தராசா ஏகமனதாக தெரிவாகியுள்ளார். காரைநகர் பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 11 உறுப்பினர்களைக் கொண்ட காரைநகர் பிரதேச சபையில் தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழு ஆகிய 5 தரப்பும் தலா இரண்டு ஆசனங்களையும், தமிழ் அரசுக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற தவிசாளர் தெரிவி…

  13. வலி. வடக்கு தவிசாளராக சுகிர்தன்! adminJune 19, 2025 வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவாகியுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு நேற்றையதினம் புதன்கிழமை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. 35 ஆசனங்களைக் கொண்ட வலி வடக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி 11 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 9 ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 06 ஆசனங்களையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 03 ஆசனங்களையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் கூட்டணி ஒரு ஆசனத்தையும் வென்றது. இந்நிலையில்…

  14. சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்! பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றுவரும் விசாரணைக்கு அமைவாக, கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க இன்று (18) உத்தரவிட்டார். அதன்படி, சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்…

      • Like
    • 2 replies
    • 248 views
  15. 18 JUN, 2025 | 11:53 AM சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடினர். மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாதென்றும் அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்திக் கூறினார். நாட்டை அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழ…

  16. 18 JUN, 2025 | 09:49 AM யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் சேதமடைந்துள்ளது. வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியள…

  17. 18 Jun, 2025 | 04:32 PM முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் இணைந்து, அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அரசியல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படுகிறது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (17) உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது: உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாங்கள் யாருடனும் கூட்டு சேரவில்லை. எங்களுக்கான ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அரங்கேற்றிய தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு - அந்த அழிவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் நரித்தனமான அர…

  18. 18 Jun, 2025 | 05:13 PM உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு கூடுதலான ஆசனங்கள் உள்ள சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு யாராக இருந்தாலும் ஆதரவு வழங்க வேண்டியது அவர்களின் தார்மீக கடமை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று புதன்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு எந்த சபைகளில் அதிகூடிய ஆசனங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதோ, அந்த சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு ஏனைய கட்சிகள் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாங்கள் கூறி இருந்தோம். இதனை ஒரு கோட்பாடாக நாங்க…

  19. 18 Jun, 2025 | 05:35 PM திருகோணமலை - மூதூர் 3ம் கட்டை மலையில் புத்தர் சிலை விவகாரத்தால் கைதான இளைஞனுக்கு இன்று புதன்கிழமை (18) பிணை வழங்கப்பட்டது. மூதூர் 3ம் கட்டை மலையில் விகாராதிபதியினால் அ.ரமேஷ் என்பவருகெதிராக மூதூர் பொலிஸில் செய்த முறைப்பாடு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மூதூர் நீதான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். குறித்த ரமேஷ் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி துஷ்யந்தன் மற்றும் சட்டத்தரணி முகுந்தன் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். இதன்போது சட்டத்தரணி துஷ்யந்தன் குறித்த காணிக்கு அரசினால் வழங்கப்பட்ட ஒப்பம் இருக்கிறது. பலாத்காரமாக 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் படையினர் முகாம் அமைத்து அதில் சிறிய புத்தர் சிலை வைத்து வழிபட்டனர். பின் அவர்கள் அங்கிருந்து 2020…

      • Like
    • 1 reply
    • 220 views
  20. 18 Jun, 2025 | 05:42 PM மட்டக்களப்பு வாவியில் நீர்த்தாவரங்கள் அதிகமாக வளர்ந்து காணப்படுவதால் முதலைகள் பெருகிவிட்டதாகவும், இவற்றால் மீனவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் இந்த சூழ்நிலையில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மீனவர்கள் அச்சத்தோடு தெரிவித்துள்ளனர். இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் பெருகிவரும் ஆற்றுவாழை எனப்படும் நீர்த்தாவரங்களால் முதலைகளின் பெருக்கமடைந்துள்ளன. அத்துடன் வாவி அழிவடைந்து வருவதாலும் மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த வாவியில் மீன்கள் பாடல் இசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என மட்டக்களப்பு வாவி அழைக்கப்படுகிறது. இந்த வாவியில் சுமார் 15 ஆயி…

  21. வடக்கு ஆளுநர் தலைமையில் முக்கிய அமைச்சுக்களின் திட்ட முன்னேற்றங்களை மதிப்பீடு செய்யும் மாதாந்த கூட்டம் 18 Jun, 2025 | 06:09 PM நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (18) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நேரகாலத்துடன் செலவு செய்த…

  22. 18 JUN, 2025 | 02:54 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திற்கு ஒருங்கிணைந்த விமான சேவைகள், தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சுற்றுலாத்துறை ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைத்தார். வடமாகாணத்தின் உல்லாசப் பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடன், யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சு ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, புதன்கிழமை (18) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பரிந்துரைகளை முன்வைத்தார். கொழும்பில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில், வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத…

  23. யாழ். மேயர் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கிற்கு விஜயம் Published By: DIGITAL DESK 3 18 JUN, 2025 | 02:30 PM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் வடக்கிற்கான வியத்தை மேற்கொண்டுள்ளார். இவ்வாரம் யாழில் தங்கியிருக்கும் பிரித்தானியத் தூதுவர் அன்றூ பற்றிக், புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாநகர சபை மேயர், உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில் முனைவோர், சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது நல்லிணக்கம், கல்வி, மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217825

  24. காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இருந்து எரிபொருள் விநியோகப் பணி ஆரம்பம்! காங்சேன்துறையிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக களஞ்சியசாலையின் திருத்தப் பணிகள் யாவும் நிறைவுபெற்று, கடந்த 08ஆம் திகதி புதிய எரிபொருள் களஞ்சியசாலை அங்குரார்பண நிகழ்வு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றிருந்தது. இதையடுத்து, குறித்த களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள்கள் பரீட்சார்த்தமாக யாழ். மாவட்ட எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என தெரிவிக்கப…

  25. 18 JUN, 2025 | 09:29 AM நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி அடுத்த மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது. மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.