ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்! வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வரை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1432875
-
- 0 replies
- 145 views
-
-
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்…
-
-
- 5 replies
- 324 views
-
-
இந்த அரசாங்கம் எமக்கு என்ன செய்துச்சு? | கூர்மையான கேள்வியுடன் சத்தியலிங்கம் அவர்கள் ஜே வி பியும் இனவாதம் பேசி நாட்டை ஆட்சி செய்தால் நாடு ஒரு போதும் முன்னேறாது.
-
- 0 replies
- 180 views
-
-
22 MAY, 2025 | 05:13 PM யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்றைய தினம் (22) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் புதிய நீரிணைப்புக்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கு அமைய, இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட தேவைப்பாடுடைய பயனாளிகளுக்கும் புதிய இலவச நீரிணைப்புக்கள் வழங்குவதற்காக பிரதேச செயலாளர்களுடன் இத்தேவைப்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களால் ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில், முதற்கட்டமாக தெல்லிப்…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 04:55 PM வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன் இரத்துச் செய்ய மற்றும் குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகள் விடுதலை, தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றி காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்பி தென்னாபிரிக்க தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். தென்னாபிரிக்க தூதுவருக்கும் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தலைவரும் பாராளுமன…
-
- 0 replies
- 149 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 22 MAY, 2025 | 04:23 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) எம்மை சிறைக்கு அனுப்பினால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடையாது. எம்மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தின் ஊடாக தீர்த்துக் கொள்கிறோம். ராஜபக்ஷக்களையும், கடந்த அரசாங்கங்களையும் விமர்சித்துக் கொண்டிருக்காமல் சமூக கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் ம…
-
- 0 replies
- 174 views
- 1 follower
-
-
Published By: VISHNU 16 MAY, 2025 | 03:18 AM இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார். புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்…
-
-
- 8 replies
- 421 views
- 1 follower
-
-
22 MAY, 2025 | 03:51 PM நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. 180 வகையான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவு தெரிவித்துள்ளது. மருத்துவமனை கட்டமைப்பில் மேலும் 50 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இவற்றில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள், இன்சுலின், இதய நோய் மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது. இவ்வாறான பின்புலத்தில், இது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எழுப்பிய கேள்விகளுக்கு இன்னும் தீர்வுகள் முன்வைக்கப்படவும் இல்லை, பதில்கள் வழங்கப்படவுமில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். விசேட கூற்றொன்றை முன்வைத்து …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி …
-
- 1 reply
- 165 views
-
-
22 MAY, 2025 | 03:21 PM இலங்கையில் இனிமேலும் பிரபாகரன் உப்பு என்று எதுவும் இல்லை என அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுடனான கடும் வாக்குவாதத்தின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கு உப்பை தெற்கிற்கு விநியோகிப்பதற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆனையிறவு உப்பு தொழிற்சாலையில் தொழிலாளர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தினார் என சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று எதுவும் இல்லை. இலங்கையின் உப்பே உள்ளது. அந்த நாட்களில் நீங்கள் பிரபாகரன் உப்பை வைத்திருந்திருக்கலாம். ஆனால் அவ்வாறான இன்று அவ்வாறான உப்பு எதுவுமில்லை. நாங்கள் நாட்டை ஐக்கியப்படுத்திவிட்டோம் என …
-
- 1 reply
- 241 views
- 1 follower
-
-
22 MAY, 2025 | 01:48 PM (எம்.நியூட்டன்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அந்தச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படவுள்ளது என்றும், அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டம் தொடர்பில் பொதுமக்கள் தமது அபிப்பிராயங்களை முன்வைக்கலாம் என்றும் அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக விவாதிப்பதற்காக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை (20) ஒன்றுகூடி கலந்துரையாடி இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தது. அதன்படி, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், அரசா…
-
- 0 replies
- 123 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 22 MAY, 2025 | 01:22 PM சிலாபம் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர், உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பாலியல் தொந்தரவு செய்திகளை அனுப்பியதாகக் கூறி குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதி அளித்த முறையான புகாரைத் தொடர்ந்தும், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரிலும், 62 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (21) காவலில் வைக்கப்பட்டார். பொலிஸாரின் தகவலின் படி, இந்தச் செய்திகள் நீதிபதிக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தியதால், விரிவான விசாரணை நடத்தப்பட்டது. “சட்டமன்ற வழக்கறிஞரால் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு சமூக ஊடகங்கள் வழியாக பல பொருத்தமற்ற செய்திகள் அனுப்பப்பட்டன. முறைப்பாட்டை தொடர்ந்து…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை May 19, 2025 2:08 pm “தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்…
-
-
- 10 replies
- 572 views
- 1 follower
-
-
முன்னாள் சுகாதார அமைச்சரின் மகன் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள மூன்று முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார். அத்துடன் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிடவும் நீதவ…
-
- 2 replies
- 175 views
-
-
18 MAY, 2025 | 07:20 AM முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (18.05.2025) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனினால், நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய…
-
-
- 30 replies
- 1.2k views
- 1 follower
-
-
காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயம்! adminMay 21, 2025 காங்கேசன்துறையில் 351 ஏக்கரில் கைத்தொழில் வலயமாக பிரேரிக்கப்பட்ட பகுதியில் எதிர்கால முதலீடு மற்றும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் அபிவிருத்தி தொடர்பாகவும், அதற்கான தொழில் வாய்ப்புக்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பாகவும் உலக வங்கியின் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் விளக்கமளித்துள்ளார். உலக வங்கி குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக் கலந்துரையாடலில், விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் போன்ற துறைகளின் தற்போதைய நிலவரங்களும், வாழ்வாதாரத் துறைகளுக்கா தேவைப்பாடுகளும் உள்ளூர் உற்பத்திகளுக்கா…
-
- 0 replies
- 310 views
-
-
காணிகள் சுவீகரிப்பு – வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகளை அழைத்தார் ஹரிணி! adminMay 22, 2025 வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் சுவீகரிப்பு தொடர்பில், மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில், பாராளுமன்றத்தில், வெள்ளிக்கிழமை (23) அன்று முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலே இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் (28.03.2025) திகதியிடப்பட்டு, 2,430 இலக்கமிடப்பட்டுப் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்த…
-
- 0 replies
- 334 views
-
-
வட்டி விகிதங்களை குறைத்த மத்திய வங்கி! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (21) நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வட்டி வீததத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளாக குறைத்து 7.75 சதவீதத்தில் பேண தீர்மானித்துள்ளது. இதன் மூலம் பணவியல் கொள்கை CBSL மேலும் தளர்த்தியது. தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் உள்நாட்டு மற்றும் பூகோள பொருளாதாரப் போக்குகளை கவனமாக பரிசீலித்த பின்னரே நாணயக் கொள்கை சபை இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறுகிறது. நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் படிப்படியாக 5 சதவீத இலக்கை அடைவதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதாரத்தை அதன் அதிகபட்ச கொள்ளளவை அடைவதற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி …
-
- 0 replies
- 229 views
-
-
சயனைட் குப்பிகளை அணிந்து மண்ணுக்காக இந்த நாட்டிலே ஒரு இனம் போராடியது - ரிஷாட் ஆவேசப் பேச்சு மன்னார் புத்தளம் பாதை மூடப்பட்டதை ஏற்க முடியாது.சபாநாயகர் பொம்மை போல இருக்கின்றார். 25 வருடங்களில் இப்படி ஒரு சபாநாயகரை கண்டதில்லை.
-
-
- 3 replies
- 411 views
- 1 follower
-
-
Published By: VISHNU 22 MAY, 2025 | 01:58 AM கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார். இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த சிறிதரன், இச்சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு தமிழ்மக்கள் சார்பில் தனது நன்றியை வெள…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-
-
21 MAY, 2025 | 04:50 PM அனுமதிக்கு மேலாக 300 படகுகளும் இலஞ்சம் வாங்கியே வடமராட்சி கிழக்கு கடலில் கடலட்டை பிடிப்பதற்காக தரித்து விடப்பட்டுள்ளன என வர்ணகுலசிங்கம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (21) வட மாகாண கடற்றொழில் இணையத்தின் பிரதிநிதி நாகராசா வர்ணகுலசிங்கம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவர் கருத்துத் தெரிவிக்கும்போது, யாழ். மாவட்டத்தில் குறிப்பாக வடமராட்சி பகுதிகளில் கடலட்டை பிடிக்க அனுமதி வழங்கக் கூடாது என நாம் குரல் குடுத்து வரும் நிலையில் 310 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடலட்டை பிடிப்பதற்காக 310 படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் 600 வரையான படகுகள் கடலட்டை பிடியில் ஈடுபட்டுள்ளன. ஊழலற்ற கட்சி, அரசு என கூறிக்கொண்ட…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
Published By: VISHNU 19 MAY, 2025 | 07:48 PM "பெற்றோர்களே, இந்த தாய் நாட்டின் போரை முடிவுக்குக் கொண்டுவர உங்கள் பிள்ளைகள், மனைவிமார், உங்கள் கணவரைத் தியாகம் செய்தீர்கள்" நீங்கள் சிறந்த தாய்மார்கள். நீங்கள் சிறந்த மனைவிமார். ஆனால் அதன் இறுதி முடிவு என்னவாக இருக்க வேண்டும்? உங்கள் குழந்தை, உங்கள் கணவர், உங்கள் நண்பர், உங்கள் உறவினருக்கு நீங்கள் செய்யக்கூடிய மிக உயர்ந்த நீதி, இந்த நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதாகும். இந்த நினைவிடத்திற்கு முன், நாம் நின்று அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்துவது என்பது, மீண்டும் ஒரு மோதல் ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம், அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்கத் தயார் என்ற உறுதிமொழியை எடுப்பதாக…
-
-
- 3 replies
- 305 views
- 1 follower
-
-
21 MAY, 2025 | 04:49 PM மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற உலக சுகாதார மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ இதன் காரணமாக இலங்கையின் சுகாதார துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2022 முதல் 2025 முதல் ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். 726 மருத்துவர்கள், 116 மருத்துவ அதிகாரிகள், 2800 மருத்துவ தாதிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ள அமைச்சர், எங்கள் சுகாதார பணியாளர்களை உருவாக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிட்ட பின்னர் நாங்கள் தற்போது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எ…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 07 MAR, 2024 | 03:49 PM எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்கள் அமைக்கும் நடவடிக்கைகள் மக்களின் எதிர்ப்பையும் மீறி ரகசியமாக இடம்பெற்று வருகின்றது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வியாழக்கிழமை (7) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வரு…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
பிரம்டன் நினைவகம் குறித்து கனடாவுடன் இராஜதந்திர பேச்சு! http://seithy.com/siteadmin/upload/aruna-Jayasekara-01025-seithy.jpg கனடா, பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் கனடாவின் மத்திய அரசுடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் பாரிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு’’ என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘‘2025.05.10 ஆம் திகதியன்று கடனாவில் பிரம்டன் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின…
-
- 1 reply
- 333 views
-