Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 50 நாள் ஆட்சியில் சீரழித்து விட்டார் மகிந்த – சஜித் 50 நாள் அரசியல் நெருக்கடியின் போது, பிரதமராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வறிய மக்களுக்காக வீடுகளை அமைப்பதற்கு, வீடமைப்பு அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட 2600 மில்லியன் ரூபா இந்தக் காலகட்டத்தில் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இணைந்து பணியாற்ற வேண்டும். 2015இல், இரண்டு பேரும் இணைந்து பணியாற்றுவதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். இது இரட்டை அதிகாரம். யா…

  2. வவுனியாவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் உடைகளை விற்பனை செய்யும் பகுதிகயுளுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று வவுனியா நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார். வவுனியாவில் உள்ள ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பகுதிக்கு பெண் ஊழியர்களை நியமிக்கவேண்டும் என்று சிலர் வேண்டுகோள் முன்வைத்திருந்தனர். அதற்கமைவாக கலாசாரத்தை பெணிப்பாதுகாப்பதற்கும்,பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தவிர்த்துகொள்வதற்கும் ஆடை விற்பனை நிலையங்களில் பெண்களின் ஆடைகளை விற்பனை செய்யும் பிரிவுக்கு பெண் ஊழியர்களை நியமிப்பதே சிறந்தது. …

  3. யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்… December 24, 2018 யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து உள்ளது, எனவே நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவ கூடிய இடங்களை அழித்து தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கோரியுள்ளார். அதேவேளை இந்த ஆண்டு ஆயிரத்து 448 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்ச…

  4. அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம் Report us Sujitha Sri 25 minutes ago தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது. இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்…

  5. மீண்டும் நிராகரித்தால் நீதிமன்றை நாடுவேன் - பொன்சேகா (ஆர்.யசி) அமைச்சர் நியமனங்களை பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும். மாறாக ஜனாதிபதி அமைச்சரவை நியமனத்தில் தன்னிச்சையாக தீர்மானம் எடுக்க முடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, மீண்டும் எமது பெயர்களை பரிந்துரைக்கவுள்ளோம் ஜனாதிபதி நிராகரித்தால் நீதிமன்றம் நாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி தொடர்ச்சியாகவே ஐக்கிய தேசிய கட்சியை பழிவாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே செயற்பட்டு வருகின்றார். அவர் கடந்து வந்த பாதையை மறந்து யார் அவருக்கு இந்த ஆசனத்தை உருவாக்கிக் கொடுத்தது என்ற நன்றியை மறந்து இன்று சுயநலமாக செயற…

  6. (ஆர்.யசி) மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதை விடவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதே இப்போது எமக்கு பலமாக உள்ளது எனத் தெரிவித்த பாராளுமன்றம் உறுப்பினர் டிலான் பெரேரா, மைத்திரி -மஹிந்த கூட்டணியே அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்ற நிலையில் தேர்தல் குறித்தும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ரணில் விக்கிரமசிங்க தீர்த்து வைக்க மாட்டார். அவருக்கு சாதாரண மக்களின் நிலைமைகள் என்னவென்பது தெரியாது. அதேபோ…

  7. நத்தார் தினமான இன்று உலகமே குதுகலிக்கும் இந்த நாளில் அசரவைக்கும் உணவு உண்டு ஆபரணம், அழங்காரமான உடையணிந்து ஆடம்பரமான இந்நாளில்சாதரண உணவு கூட இல்லாமல் பலர் பாதைகளில் படுத்துரங்கும் நிலையும் உண்டு. அன்றாடம் நாம் கடந்து போகும் பாதைகளில் பத்தோடு பாதினொன்றாக கடந்து போகும் பல்வேறு கதாப் பாத்திரங்கள் எம்மிடையே உள்ளனர்.. அவர்கள் எல்லோருமே எமது வாழ்வில் தாக்கத்தை செலுத்துவதில்லை.எல்லாம் கடந்து போகும் என்பது போல் கடந்து போகின்றோம். அதில் எப்போதும் நாம் பாரமுகமாக கடந்து போகின்றவர்களில் வீதிகளில் அமர்ந்து யாசகம் கேட்பவர்களும் அடங்குவர். வீதிகளில் யாசகம் கேட்பவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள…

  8. வெள்ள நிவாரணம் மறுக்கப்பட்டுள்ள இரத்தினபுரம் முதிய தம்பதியினர்! December 25, 2018 1 Min Read அண்மையில் கிளிநொச்சியில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்கள் அரச திணைக்களங்களாலும், சுயாதீன அமைப்புகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த இலட்சுமணன் தம்பதியினருக்கு எந்த நிவாரணப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. வெள்ளப் பெருக்கின்போது, இராணுவத்தினால் மீட்கப்பட்ட 83 வயதான இலட்சுமணனும், அவரது மனைவி 82 வயதான கன்னியம்மாவும் உறவினர் ஒருவரது வீட்டில் தங்கியிருந…

  9. தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் – சுகிர்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் எதிர்வரும் தைப்பொங்கலுக்கு முன்னதாக காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு இவ்வாறு காணிகளை விடுவிப்பதன் மூலமாக மீள்குடியேற்றம் முழுமையடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி விடுவிப்புத் தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்கள…

  10. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல பகுதிகளிலுமிருந்து நிவாரணம் – வடக்கு ஆளுநர் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து உதவிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநரின் ஊடக சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவோர் கொழும்பில் உள்ள அலுவலகத்திலும், கிளிநொச்சியில் உள்ள ஆளுநர் விடுதியிலும் வழங்க முடியுமென அவர் இதன்போது குறிப்…

  11. தமிழ் மக்களை பணயம் வைக்காதீர்கள்… December 25, 2018 தமிழ் மக்களையும் அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பணயம் வைத்து அரசியல் நடத்தாதீர்கள். தமிழ் மக்கள் நலனுக்காக உங்கள் அரசியல் லாபங்கள் அனைத்தையும் தியாகம் செய்யுங்கள் என தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அரசியல் கட்சிகளிடமும் யாழ்ப்பாண ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு ஆயரால் அனுப்பிவைக்கப்பட்ட கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது, 2018ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழா உலகம் முழுவதிலும் இன மத நிற மொழி வேறுபாடின்றி கொண்டாடப்படும் வேளை பாலக இயேசுவின் அன்பும் அருளும் …

  12. தெற்கு மக்களின் ஆதரவை பெற்றவரால்தான் தமிழருக்கு அதிகார பகிர்வை வழங்க முடியும் : December 25, 2018 தமிழ் மக்களுக்கான அரசியல் அதிகார பகிர்வை தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் தலைவரினால் மாத்திரமே வழங்க முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தெற்கு மக்களின் ஆதரவை பெற்ற ஒருவரினால் மாத்திரமே முடியுமென்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றில், இரண்டு பெரும்பா…

  13. தங்காலை துப்பாக்கிச்சூடு : 4 பேர் பலி, 5 பேர் காயம், விசேட விசாரணை ஆரம்பம் தங்காலை, குடாவெல்ல மீன்பிடித்துறைமுக பகுதியில் இன்று (25) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தனிப்பட்ட பிரச்சினை இதற்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதுவரை சம்பந்தப்பட்ட எவரும்…

  14. கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மைத்திரி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில், தேர்தல் கூட்டு தொடர்பாக கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த திட்டத்துக்கு தொகுதி அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென எழுந்து வெளியே போனார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் கூட்டமும், முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சிறில…

  15. மைத்திரிக்கு எதிராக சந்திரிகாவின் புதிய திட்டம் ஆரம்பம் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி – ஜனாதிபதி பதவியில் அமர்த்தியதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு பெரும்பங்குண்டு. மகிந்த ராஜபக்சவை கனவில்கூட எதிர்ப்பதற்கு அஞ்சிய நிலையில், அவர் பயணிக்கும் வழி தவறென தெரிந்தும் அதை சுட்டிக்காட்ட – தட்டிக்கேட்க கட்சிக்குள் எவருமே முன்வரவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் மகிந்தவுக்கு எதிரான அரசியல் காய் நகர்த்தல்களை மறைமுகமாக முன்னெடுத்தார் சந்திரிக்கா. சுதந்திரக்கட்சியில் அதிருப்தி நிலையில் இருந்த உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சு நடத்தி, சிவில் அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த பொது…

  16. வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களோ மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில், 11,688 குடும்பங்களைச் சேர்ந்த , 38,534 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில், 6,520 குடும்பங்களைச் சேர்ந்த 20,737 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில், 4257 குடும்பங்களைச் சேர்ந்த 12,642 பேரும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 455 பேரும், மன்னார் மாவட்டத்தில் 85 பேரு…

  17. மகிந்தவுடன் இணைந்து போட்டி – மைத்திரியின் அறிவிப்பினால் கட்சிக்குள் எதிர்ப்பு வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்தே, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளது என்றும், இதற்கு இடையூறு ஏற்படுத்தும், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நேற்று சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஐதேக அரசாங்கத்தில் இணைந்து அதனைப் பலப்படுத்த முனையும், அமைப்ப…

  18. கூட்டமைப்பு எம்.பிக்கள் மூவரின் பதவிகளை பறிப்போம் – மகிந்த அணி சூளுரை இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை, தகுதியிழப்புச் செய்யக் கோரி, சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எச்சரித்துள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோகித அபேகுணவர்த்தன கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டார். “இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. ஆனால் அதனை இரகசியமாக வைத்திருக்கிறோம்…

  19. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருமாறு சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு வட. மாகாணத்தில் பெய்து வரும் தொடர் அடைமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வட.மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வட.மாகாணத்தில் பெய்துள்ள தொடர் அடைமழை காரணமாக குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து தற்காலிக தங்குமிடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு புலம்பெயர் தமிழ் மக்களும், கொ…

  20. புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து அதனைச் சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குளத்தினது வான்பாயும் பகுதி உடைப்பெடுத்ததை உடனடியாக அவதானித்து புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டதால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதுடன், பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்…

  21. யாழில் சிறந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கிவைப்பு யாழ்ப்பாணத்தில் சிறந்த பொலிஸ் சேவையாற்றியவர்களுக்கான ஊக்குவிப்புத்தொகை இன்று (திங்கட்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கௌரவிக்கும் வகையில் இந்த ஊக்குவிப்புத்தொகை வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதன்போது சிறந்த சேவையாற்றிய 20 பொலிஸாருக்கு 1 இலட்சத்து 33 ஆயிரம் ரூபாய் வழங்கிவைக்கப்பட்டதாக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பாலித பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் நான்காவது முறையாக பொலிஸாரின் சிறந்த சேவையைக் கௌரவித்து ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் மாத்திரம் சுமார் 8 இலட்சம் ரூபாய்க்கு அதிக…

  22. தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்: சீ.வி.கே. தமிழ் மக்களின் வரலாற்றை கண்டுகொள்ளாமல் அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயற்படும் திணைக்களங்கள் தமது நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென வட.மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். தொல்லியல் திணைக்களம், மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம், வனவள திணைக்களம் ஆகியன வடக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இவற்றினை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேருக்கும் இன்று (திங்கட்கிழமை) கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கோரிக்கைக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்…

  23. ஜனவரியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தால் மாபெரும் பேரணி எதிர்வரும் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்னதாக இன்று வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வலிந்து காணமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உ.சரஸ்வதி தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி மாபெரும் கூட்டமும், பேரணியும் நடாத்தவுள்ளோம். இப்பேரணினை நடத்த அரச சார்பற்ற அமைப்புக்கள், சகல அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், மக்கள், ஊடகங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், என எல்லோரும் எம்முடன் இணைந்து நீண்ட காலமாக காணாமல் போன எம் உறவுகளை தொலைத்து விட்டு தேடும் முயற்சிக்கு எல்லோரும் முன் வந்துள்ளோம். என…

  24. யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலையில் இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் தாலிக்கொடியை மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவரால் அறுத்துச்செல்லப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் இன்று மதியம் 1.30 மணிக்கு மீசாலை கிழக்கு சிற்றம்பலம் வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கர்ப்பிணிப் பெண் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற திருடர்கள் கர்ப்பிணிப் பெண்ணை உதைந்து விழுத்தி விட்டு தாலிக்கொடியினை அபகரித்து சென்றுள்ளனர். இதன்போது குறித்த பெண் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். …

  25. MGRன 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது…. December 24, 2018 தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 31வது ஆண்டு நினைவு தினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பனும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் காட்டி அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் சமூக சேவையாளர் மா.கருணாமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.