Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்! நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அவராலேயே மீளப்பெற்றுக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இந்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக் கொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ ஜனாதிபதிக்கே சட்ட ரீதியான அதிகாரம் கிடை…

  2. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க மாட்டிறைச்சி சம்பந்தமான உணவுகள் உட்கொள்வோர் உள்ளமையினால் சபை­யால் நிறை­வேற்­றப்­பட்ட ”மாடு வெட்டத் தடை” தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்து தடையை நீக்­கு­மாறு கோரி நல்­லூர் பிர­தேச செய­ல­ர் பிரிவுக்­கு உட்பட்ட 80, குடும்பங்களைச் சேர்ந்தோர் சபை­யி­டம் தமது கையொப்­பங்­கள் அடங்­கிய கோரிக்கையை கைய­ளித்­துள்­ள­னர். கடந்த செப்­ரெம்­பர் மாதம் நடை­பெற்ற மாதாந்த அமர்­வில் நல்­லூர் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­யில் மாட்­டி­றைச்­சிக்­குத் தடை விதிக்­கக்­கோரி உறுப்­பி­னர் மது­சு­தன் கொண்டு வந்…

  3. சிறிலங்கா அரசியல்வாதிகள், குடும்பத்தினருக்கு எதிராக அனைத்துலக தடை தற்போதைய அரசியல் நெருக்கடிகள் நீடித்தால் சிறிலங்கா மீது தடைகளை விதிப்பது குறித்து சில நாடுகள் சிந்தித்து வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் வேறு வடிவிலான உதவிகள் நிறுத்தப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது, சில நாடுகள், வேறு விதமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியலமைப்பு மீறல்களுக்கு நேரடிப் பொறுப்பாக இருக்கும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மீது சில நாடுகள் தடைகளை விதிக்கக் கூடும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. http:/…

  4. மகிந்தவின் தரப்பில் இரகசியப் பேச்சு நடத்தியவர்கள் – அம்பலமானது விபரம் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன், இரகசியப் பேச்சுக்களை நடத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி குழுவினர் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன. நான்கு பேர் கொண்ட, அரச தரப்புக் குழுவே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த இரகசிய சந்திப்பை நடத்தியிருந்தது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர் மகிந்த சமரசிங்க, அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த மற்றும், கூட்டு எதிரணியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக இருந்த தரிந்து பாலசூரிய ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ரொரிங்டன் அவென்யூவில் உள்ள கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனின் இல்லத்தில் இந்தச் …

  5. சபாநாயகர் மீது நாடாளுமன்றத்துக்குள் அமிலம் வீச சதித்திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 16ஆம் நாள் நடந்த குழப்பங்களின் போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மீது அமிலம் (அசிட்) வீசுவதற்கு சதித்திட்டம் தீட்டப்படமை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாக, நாடாளுமன்ற உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக சபாநாயகர் தகவல் வெளியிட்டதை அடுத்து, நாடாளுமன்றத்துக்குள் அவர் நுழையும் போது மேலதிகமாக காவல்துறையினரின் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய போது, விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால், கருத்து வெளியிட விரும்பவில்லை என்று கூறியுள்ளார். கடந்த 16ஆம் நாள், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்க 5 நிமிடங்கள் முன்னதா…

  6. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்! மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 26ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள்,வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆட்சி மாற்றம் பற்றி இலங்கை தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது, எனினும், எந்தவொரு நாடும், வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை அரசாங்கத்துக்கு அதிர்…

  7. யாழ். பல்கலையில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் மும்முரம்! மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) ஆரம்பமாகியது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தம…

  8. அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் பொலிஸார் கைது செய்து தாக்குதல் நடத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் அடையாள அட்டை கொண்டு செல்லாத இளைஞனையும் அவரது மைத்துனரையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தலை கீழாக கட்டித்தூக்கி அடித்து சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கபட்டவர்கள் தெரிவிக்கையில் , கடந்த 19 ஆம் திகதி இரவு 10.45 மணியளவில் நானும் எனது மைத்துனரும் முச்சக்கர வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த போது , வீட்டுக்கு அருகாமையில் வீதி சோதனை நடவடிக்கையில…

  9. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், பிரதமர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்ட 122 நாடாளுமன்ற உறுப்பினர்களினதும், சத்தியக்கடதாசி இணைக்கப்பட்டு இந்த மனு நேற்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சட்டத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி, தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/11/24/news/34800

  10. பேரம் பேசுவதற்கு நாமல் வீடு தேடி வந்தார்: உண்மைமையை வெளியிட்ட சித்தார்த்தன் தென்னிலங்கை அரசியல் பிரச்சினையில் தன்னிடமும் அரசியல் ரீதியில் பேரம் பேசப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குறிப்பிட்டார். நாடாளுமுன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது இல்லத்திற்கு வந்து, வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார். ஆதவனின் ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார். மேலும், நாமலுடனான சந்திப்பு அரசியல் ரீதியான பேரம் பேசலாகவே அமைந்ததாகவும், பணத்தை மையப்படுத்தி அவர் தன்னிடம் பேரம் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.…

  11. ஜனாதிபதியின் சதித்திட்டங்களுக்கு துணை போகப்போவதில்லை - மனோ ஏதிர்காலத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கான சக்தி ஐ. தே.மு.விற்கு உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்தில் பொது தேர்தலுக்கு பதிலாக ஜனாதிபதி தேர்தலே நடத்தப்பட வேண்டும். முடிந்தால் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். ஏதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் 122 க்கு அதிகமான பெரும்பான்மையினை நிரூபிப்போம். நிரூபிப்பதற்கான சக்தி ஐக்கிய தேசிய முன்னணிக்கு உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எந்த சதித்திட்டங்களுக்கும் துணை போகப் போவதில்லை. அஞ்சப் போவதுமில்லை. எதுவானாலும் சந்திக்க தயாராகவ…

  12. ஜனாதிபதியின் அற்ப ஆசையே நாட்டின் நெருக்கடிக்குக் காரணம் ; ரவூப் ஹகீம் .ஜனாதிபதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்கவும் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகும் அற்ப ஆசையிலேயே நாட்டில் இவ்வாறான நெருக்கடி நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்தியுள்ளதாக ரவூப் ஹகீம் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், மேலும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்…

  13. https://www.madawalaenews.com/2018/11/cctv.html மாத்தறை எலவில்ல பிரதேசத்தில் மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 19 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பகல் 01.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேசத்தில் உள்ள பின்னேர வகுப்பு ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மாணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். திஹகொட, மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் …

    • 0 replies
    • 589 views
  14. November 24, 2018 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனின் டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாக புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் குழு ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டம் மற்றும் அரசியல் செயற்பாடுகளுக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தை கருணா பயன்படுத்தி வந்தமை காரணமாக அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியிருப்பதாகவும் அத் தரப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் சா…

  15. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று(24) முற்பகல் 11.30 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனினும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. http://globaltamilnews.net/2018/104421/

  16. மாவீரர் நினைவு தின நிகழ்வு குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வெளியீடு யாழில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது. என குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/45117

  17. November 24, 2018 பிரதமராக பதவி ஏற்றதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகள் குறித்து கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஸ, சற்று பொறுத்திருந்தால் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தினை அவருக்கே மீண்டும் கையள…

  18. ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.66 ரூபாவாக பதிவாகியுள்ளது.(ஸ) http://www.dailyceylon.com/172616

    • 3 replies
    • 1.3k views
  19. தாஜூதீன் படுகொலை விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர் யார்? போட்டுடைத்தார் ராஜித “அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்கான மக்களின் நீதிக் குரல் என்ற போராட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று கண்டி நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டே பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய ராஜித சேனாரத்ன, “ரணிலுடனான அசாத்தியமான அரசியலில் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய புத்தகமொன்றை எழுதப் போவதாக தெ…

  20. அரசியல் யுத்தத்தில் மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார்!- ஜனாதிபதி தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எது நடந்தாலும், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்க தான் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே நான் இருக்கிறேன் என்பதனைத் தெளிவாக அவர்களுக்கு கூறிக்…

  21. -பாறுக் ஷிஹான்-புத்தளத்தில் குப்பை கொட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், குப்பைக்கு எதிராக 56 நாட்களைக்கடந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை(23) பிற்பகல் யாழ். நகரிலுள்ள பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, யாழ்.கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஆகியன இணைந்து குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தினர்.குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி.கா. செந்திவேல், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய …

    • 0 replies
    • 433 views
  22. பாறுக் ஷிஹான் - அபிவிருத்தி திட்டங்களில் அக்கறையின்றி வெறும் பேச்சு அரசியலையே செய்து வருகிறார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மீது அவரது அரசியல் எதிராளிகள் குற்றம்சுமத்தி வரும் நிலையில், அவர்களிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஸ்வரன். தனது வாராந்த கேள்வி பதிலில் இது குறித்து விரிவாக பதிலளித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு அனுப்பி வைத்த கேள்வி பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது. கேள்வி – பொருளாதார அபிவிருத்தியில் உங்களுக்கு நாட்டமில்லை. வெறுமனே அரசியல் ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். வெறும் பேச்சு மட்டுமே. காரியம் எதுவும் சாதிக்கவில்லை என்று உங்கள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது பற்றி உங்களின் கருத்து? பதில் – இந்தக் கேள்வியைக் கேட்டமை…

    • 0 replies
    • 1.4k views
  23. ஐ.தே.மு.-யின் ஜனநாயக போராட்டம் கண்டியில்!- ரணில் பங்கேற்பு ‘நீதிக்கான குரல்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் பாரிய ஜனநாயகப் போராட்டமொன்று இடம்பெற்றது. கண்டியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் ஐ.தே.க. தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கலந்துக் கொண்டார். ஜனநாயகத்தை பாதுகாப்போம், மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்போம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கோஷமெழுப்பியவாறு இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டிருந்தனர். இன்று காலை மல்வத்து மகாவிகாரை மற்றும் அஸ்கிரிய மகாவிகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட முன்னாள் பிரதமர், மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற…

  24. ‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’: ஜனாதிபதியின் நூல் வெளியீடு விரைவில் ‘ரணிலுடன் வெற்றியளிக்காத அரசியல் பயணம்’ எனும் நூலை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பிலும் தம் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மைதானத்தில் தனியே இருந்து விளையாடியதைப் போல நாடாளுமன்றத்தில் முழுநாளும் இருந்தனர். நாடாளுமன்றத்தில் இருக்காத என்னை அவர்களின் உரைகளின் ஊடாக விளைய…

  25. மஹிந்தவின் ஆட்சியால் அச்சத்தில் மக்கள்: மங்கள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி, மக்களிடத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் ஆட்சியென முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் சர்ச்சை தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த இலங்கையை 10 வருடங்கள் ஆட்சி செய்த காலத்தில் அவர் அச்சத்தின் குறியீடாகவே திகழ்ந்தார். மேலும் கடந்த மூன்று வாரங்களில் நாடு முழுவதும் மீண்டும் அச்ச உணர்வை மஹிந்த ஏற்படுத்தியுள்ளார். இதேவேளை நாடாளுமன்ற அமர்வில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் மிகவும் தவறான முறையில் செயற்பட்டதை அனைத்து மக்களும் அவதானித்திருப்பார்கள். இந்நிலையில் நாட்டின் பிரதமர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.