Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சட்டவிரோத மணல் அகழ்வு – நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர் May 30, 2025 11:47 am கிளிநொச்சி மாவட்டத்தின் குஞ்சுப்பரந்தன் முதல் குடமுருட்டி வரையான கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இடங்களை கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சென்று பார்வையிட்டார். கிளிநொச்சி, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பகுதிக்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொது மக்கள் மற்றும் பொது அமைப்புகளால் அமைச்சருக்கு முறைபாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் பெருமளவான வயல் நிலங்கள், நீர்ப்பாசன கட்டுமானங்கள் என்பன சேதமடைந்து வருகின்றன எனவும் அவர்கள் …

  2. Published By: DIGITAL DESK 3 30 MAY, 2025 | 09:30 AM வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தைப் (TINs) பதிவு செய்யும் முறையை இலகுவாக்குவதற்ககாக கியூஆர் குறியீடு ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஆர்.பி.ஜி.எச். பெர்னாண்டோ தெரிவித்தார். இந்த கியூஆர் குறியீட்டை பயன்படுத்தி ஏற்கனவே TIN இலக்கத்தை பதிவு செய்தவர்களும் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ள முடியும். எவ்வாறு இல்லை எனில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தொடர்பு கொள்வதன் மூலம் அதை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். வரி நிர்வாகம் மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, 1 கோடிக்கும் அதிகமான TIN இலக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக…

  3. உயிர்நீத்த கடற்படை வீரர்களை நினைவு கூர்ந்து மரக்கன்றுகள் நடுகை யாழ்ப்பாணம் - மண்டைதீவில் கடற்படையினரால் மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. இந்நிகழ்வு வேலுசுமன கடற்படை முகாம் கட்டளை அதிகாரியின் ஏற்பாட்டில் இன்று (29) காலை இடம்பெற்றது. மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன் இவ்வாறு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இதன்போது முந்திரி செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. குறித்த நிகழ்வில் மண்டைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மதகுருமார் மற்றும் கடற்படையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmb99dzvp014iqpbs9xde6d2x

  4. சீன, போலந்து அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்! adminMay 30, 2025 இலங்கைக்கு சென்றுள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ(Wang Wentao) , இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். தற்போது இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் செயல்படுத்தும் வெளிப்படையான வேலைத்திட்டம் காரணமாக சீன முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்த அமைச்சர், 100க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடனான இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேலும் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். சவாலா…

  5. வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணியிலேயே வைக்கப்பட்டதாக அறிகிறேன். அந்த காலகட்டத்திலே…

    • 1 reply
    • 262 views
  6. Published By: DIGITAL DESK 2 29 MAY, 2025 | 04:33 PM எமக்கு உடனடியாக உதவிகளைச் செய்யும், எமக்கு மிகவேண்டப்பட்ட நாடாக இந்தியா இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மனிதாபிமான உதவிகளை வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: "முல்லைத்தீவில் நான் மாவட்டச் செயலராக பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. இங்கு உள்ள கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எனக்கு நன்றாக தெரியும். போருக்குப் பிறகு சட்டவிரோத மீன்பிடி உங்கள் வாழ்வை பாதித்தது. இன்று இந்திய அரசு மற்றும் மக்களிடமிருந்து பெறுமதியான வலைகளும், குளிர்சாதன பெட்டிகளும் கிடைக…

  7. 29 MAY, 2025 | 04:31 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தின் இணைந்த முகாமைத்துவ குழுக் கூட்டம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. 2023.08.23ஆம் திகதி இணைந்த முகாமைத்துவக் கூட்டம் இறுதியாக நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தை மீண்டும் கூட்டுவதற்கான கோரிக்கையை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்திருந்தார். அதற்கு அமைய, நேற்று இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர், வட மாகாண ஆளுநர் நா.வேதநாயன், யாழ். மாநகர சபையின் ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.டிலானி, கலாசார ஊக்குவிப்பு பணிப்பாளர் பிரசாட் ரணசிங்க ஆகியோர் இந்தக…

  8. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 04:52 PM (எம்.மனோசித்ரா) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுப் பெற்றுக்கொள்வதற்கு வருகைத்தரும் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொதுமக்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவையை 24 மணி நேரமும் மேற்கொள்ளும் பணி 2025.02.18 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதோடு அது இன்றுடன் (30) நிறைவடைகிறது. எனவே ஜூன் 2ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பி.ப 2.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். அன்றைய தினம் முதல் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டி…

  9. ’எம்.ஏ. சுமந்திரன் - கஜேந்திரகுமார் நாளை பேச்சு’ உள்ளூராட்சி சபைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது என்று தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் தெரிவித்தார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்க இடையில் நாளை வெள்ளி…

  10. 29 May, 2025 | 04:57 PM கதிர்காமத்தை நோக்கிய பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ள குழுவினர், மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்கு நேற்று வருகைதந்து, அங்கு தங்கியிருந்து, இன்று (29) காலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு, பின்னர், பாதயாத்திரையினை தொடர்ந்தனர். வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய ஆடிவேல் விழாவினை முன்னிட்டு யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி ஆரம்பமான இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரையானது மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தினை நேற்று (28) மாலை சென்றடைந்தது. மே மாதம் 1ஆம் திகதி தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து சிங்கராஜா ஜெயராஜா வேல்சாமி தலைமையில் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது. வடக்கு, கிழக்க…

  11. 29 May, 2025 | 02:28 PM பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் புதிய சட்டம் அவசியமில்லை என சிவில் சமூக பிரதிநிதிகள் அவரிடம் விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் சிவில் சமூக பிரதிநிதிகள் இன்று நீதியமைச்சரை சந்தித்தனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து ஆராயும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட சமர்ப்பிப்பில் கையொப்பமிட்ட பிரதிநிதிகள் குழுஇ இன்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவைச் சந்தித்துஇ பயங்கரவாதத்…

  12. வடக்கு ரயில் சேவைகள் ஒரு மாதம் இடைநிறுத்தம்! 00] http://seithy.com/siteadmin/upload/train-021124-seithy.jpg மாகோவிலிருந்து அநுராதபுரம் வரையிலான பிரதான புகையிரத மார்க்கத்தில் ஐந்து பாலங்களில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறவுள்ளதால், மீண்டும் ஒரு மாத காலத்திற்கு வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலங்கள் அகற்றப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐந்து பாலங்கள் ஏற்கனவே நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்திய கடன் உதவியுடன் ஐந்து பாலங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, சுமார் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும். பொசன் பௌர்ணமி தினத்துக்கு பின்ன…

  13. 29 May, 2025 | 03:08 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 'சந்திரன் கிராமம்' வீடுகள் கையளிப்பு நிகழ்வானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் புதன்கிழமை (28) கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பில் நடைபெற்றது. குறித்த சந்திரன் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கையளிப்பு நிகழ்வில் இந்நிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நகர அபிவிருத்தி, நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் வட…

  14. 29 May, 2025 | 04:32 PM நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக புதன்கிழமை (28) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்ட வேலைகளை திறந்து வைத்தார். இதில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கொக்குத்தொடுவாயில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் விநியோக நிலையத்தினை திறந்துவைத்ததுடன் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தினை சம்பிரதாயபூர்வமாக மக்களிடம் வழங்கி வைத்தார். குறித்த குடிநீர் திட்ட வேலைத்திட்டமானது 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தது. இந்தக் குடிநீர்த் திட்டமானது கொக்கிளாய், கருநாட்டுக்கேணி, கொக்…

  15. Published By: RAJEEBAN 29 MAY, 2025 | 02:21 PM பயங்கரவாத தடைச்சட்டத்தை எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக நீக்கவேண்டும், மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என 240க்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சட்டத்தரணிகளும் மதகுருமாரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். நீதியமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். சிவில் சமூக அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன. பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாற்றீடாக புதிய சட்டம் எதனையும் கொண்டுவரக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள இவர்கள், ஐந்து பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர். நீதியமைச்சருக்கான கடிதத்தில் தெரிவ…

  16. யாழ். போதனா வைத்தியசாலைக்கு 208 பெரும்பான்மையின தாதியர்கள் புதிதாக நியமனம் 28 MAY, 2025 | 03:54 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக இரண்டு தாதிய பரிபாலர்களும் 268 தாதிய உத்தியோகத்தர்களும் புதன்கிழமை (28) நியமனம் வழங்கப்பட்டுள்ளன. தாதிய பதிபாலர்களுக்கான வெற்றிடங்கள் ஐந்து இருக்கின்ற போதும் இரண்டு நியமனங்களே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே சேவையில் உள்ள தாதிய உத்தியோகத்தர்களில் 168 பேர் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலையில், புதிதாக வருகை தந்தவர்களில் 60 பேர் தமிழ் மொழி சார்ந்தவர்களாகவும் ஏனைய அனைவரும் சகோதர மொழி பேசுபவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு நியமனம் பெற்று வந்த 268 புதிய தாதிய உத்தியோகத…

  17. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 01:21 PM தபாலக ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (29) பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நீர்கொழும்பு பிரதான தபால் நிலையம் மூடப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை. முதியோர் கொடுப்பனவை பெறுவதற்காக வருகை தந்த பல முதியவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காணக்கூடியதாக இருந்தது. இருவரது குரல் பதிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை நகரில் உள்ள உப தபாலகங்கள் வழமை போன்று திறக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. https://www.virakesari.lk/article/215978

  18. யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல் May 29, 2025 10:57 am யாழ். மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. யாழ். மாவட்டத்தை சகல வழிகளிலும் கட்டியெழுப்புவதற்கான மேற்படி வேலைத்திட்டத்துக்கு ‘மீண்டெழும் அலைகள்‘ பெயர் சூட்டப்பட்டுள்ளது. தூரநோக்கை அடிப்படையாக கொண்டு செயற்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2025 மற்றும் 2035 காலப்பகுதியை மையப்படுத்தியதாகவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில…

  19. (எம்.மனோசித்ரா) நாட்டில் அனைவரும் அமைதிக்காகவே யுத்தத்தில் ஈடுபட்டதாக தேசிய போர் வீரர் தினத்தன்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்த கருத்துடன் என்னால் உடன்பட முடியாது. பிரபாகரன் அமைதிக்காகவா போராடினார்? வடக்கு, கிழக்கில் முகாம்கள் அகற்றப்படுகின்றன என்றால் அதன் ஊடாக எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தம் நிறைவடைந்தமை தொடர்பில் எமக்கு பெரு மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வாறில்லை எனில் இன்று இந்த நாடு இந்தளவிற்கும் எஞ்சியிருக்காது. நிச்சயம் பிளவு ஏற்பட்டிருக்கும். எவ்வாறிரு…

  20. விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இலங்கையர் கைது! கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தின் பணிப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான தென்னாப்பிரிக்கப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 49 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். நேற்று துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குப் பயணித்த விமானத்தில் சந்தேக நபர் அதிக அளவில் மதுபோதையில் இருந்ததாகவும், விமானப் பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட…

  21. தெற்குக் கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பான விபரம் வெளியானது! தெற்குகடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளில்778கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளை கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது இலங்கை கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு போதைப்பொருள் கடத்தல் படகுகளும் கைப்பற்றப்பட்டிருந்தது. இதன்போது படகில் இருந்து 11 மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் இதேவேளை கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களுடன் இரண்டு படகுகள் இன்று காலை திக்கோவிட்ட துறைம…

  22. தென் மாகாணத்தில் விசேட மோட்டார் சைக்கிள் படை! சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் (SDIG) கித்சிரி ஜெயலத் தலைமையில் ஒரு சிறப்பு மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்தப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டு தப்பி ஓடும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான நடவடிக்கைகளை இந்தப் பிரிவு நோக்கமாகக் கொண்டுள்ளது. உயர்மட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் தலைமறைவாக இருந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் வெளி…

  23. Published By: DIGITAL DESK 3 29 MAY, 2025 | 11:16 AM எமது நாட்டில் மாத்திரம் தினமும் 520 மில்லியன் ரூபாய் சிகரெட் பாவனைக்காக செலவிடப்படுகின்றது. அத்தோடு, கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கு புகைத்தலினால் கிடைத்த வரி வருமானம் ரூபா பில்லியன் 92.9 ஆகும். ஆனால் அதே ஆண்டு அரசாங்கத்திற்கு புகைத்தலினால் ஏற்பட்ட சுகாதார செலவீனங்கள் ரூபா பில்லியன் 214 ஆகும். இது எமது நாட்டின் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்படுகின்ற பாரிய பொருளாதார நட்டமாகும் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் இதனை தெரிவித்துள்ளது. எமது நாட்டில், …

  24. தனித்தமிழர் வாழும் கல்லாற்றில் புத்தர் சிலையா ? வி.ரி.சகாதேவராஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ் மக்கள் முழுமையாக வாழ்கின்ற கல்லாற்றில் புத்தர் சிலை தொடர்ந்து நிலை கொண்டிருப்பது முறையாகுமா? தேவையா? அது இன சௌஜன்யத்தை, நல்லிணக்கத்தை பாதிக்கும். எனவே அச்சிலை அகற்றப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா தெரிவித்தார். கல்லாற்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்... பெரிய கல்லாறு பாலத்தின் அருகே பிரதான வீதியில் இராணுவ சூழல் இருந்த காலகட்டத்தில் இந்த புத்தர் சிலை ஒரு தனியார் காணியில் வைக்கப்பட்டிருக்கின்றது . சின்னவத்தை பிரதேச பிக்கு ஒருவரினால் இந்த சிலை அடாத்தாக அந்த காணி…

  25. 28 May, 2025 | 04:18 PM சர்வதேச தொழிலாளர் தாபனம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தினதும் நோர்வே அரசாங்கத்தினதும் பங்காண்மையுடன் GROW வடக்கில் புதிய கருத்திட்டத்தினை ஆரம்பிக்கின்றது. பணிபுரிவதற்காக மீள் எழுச்சி தன்மைமிக்க வாய்ப்புக்களை உருவாக்கல் (Generating Resilient Opportunities for Work) - இது, இலங்கையின் வட மாகாணத்தில் வாழும் விளிம்புநிலைச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் காலநிலை மீள் எழுச்சி தன்மையினையும் சமூக வலுவூட்டலையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைமாற்றமிக்க 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் முன்னெடுக்கப்படுகின்றது. 75,000 இற்கும் மேற்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களையும் 21,000 இற்கு மேற்பட்ட அங்கவீனமானவர்களையும் கொண்டுள்ள வட மாகாணம் பல வருட மோதலைத்…

    • 1 reply
    • 211 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.