ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வடக்கில் காணி அபகரிப்பு வர்த்தமானி வாபஸ். வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக 2025 மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு எண் 2430 வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, இந்த வர்த்தமானிக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். வடக்கில் …
-
-
- 12 replies
- 838 views
- 1 follower
-
-
வீதி விபத்துக்களில் 1,062 பேர் உயிரிழப்பு! இந்த ஆண்டு பதிவான வீதி விபத்துக்களில் மொத்தம் 1,062 பேர் உயிரிழந்துள்ளனர். 2025 முதல் மே 25 ஆம் திகதி நிலவரப்படி பதிவான 1,062 வீதி விபத்துக்களின் மூலமாக இந்த இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதேநேரம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவான 2,064 வீதி விபத்துகளில் சுமாமர் 7,000 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் பல பகுதிகளில் இருந்து பதிவான வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1433399
-
- 0 replies
- 169 views
-
-
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:18 AM குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக பொதுமக்களுடனான கலந்துரையாடலானது திங்கட்கிழமை (26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.virake…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
Published By: VISHNU 27 MAY, 2025 | 04:02 AM யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார். இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சிக்குன்குனியா May 27, 2025 9:58 am நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் விரிவான நுளம்பு கட்டுப்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். வாரத்திற்கு ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி, தங்கள் வீடுகள், அலுவலக வளாகங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர் சிறப்பு வேண்டுகோளையும் விடுத்தார். சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு, நுளம்புகள் இனப்பெருக்கம் …
-
- 0 replies
- 192 views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுப்புடன் பேசமுன்வர வேண்டும் : கருணா அம்மான் kugenMay 27, 2025 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின் ஆதரவு இல்லாமல் தனித் தமிழ் உறுப்பினர்களாக ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருக்கின்றது. கட்சிக் கொள்கைகளுக்கு அப்பால் மக்களை முன்நிறுத்தியே தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கட்சிகளின் கொள்கைகளும் தமிழ் மக்களின் நலனை நோக்காகக் கொண்டே அமைகின்றன என முன்னாள் பிரதியமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் இணைத்தலைவருமான கருணா அம்மான் (வி…
-
- 0 replies
- 171 views
-
-
மன்னாரில் இந்திய - இலங்கை அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு Published By: VISHNU 27 MAY, 2025 | 04:27 AM இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 24 வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை 4.45 மணி அளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகிய உதவித்திட்டங்கள் மூலம் ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட குறித்த வீடுகள் திங்கட்கிழமை (26) மாலை வைபவ ரீதியாக த…
-
- 1 reply
- 256 views
- 1 follower
-
-
வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் - சுமந்திரன் Published By: VISHNU 27 MAY, 2025 | 04:41 AM (நா.தனுஜா) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 ஆம் …
-
- 0 replies
- 156 views
-
-
26 MAY, 2025 | 06:54 PM ஏறாவூரில் அதிகளவு அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபதாரம் செலுத்துமாறு திங்கட்கிழமை (26) ஏறாவூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடை ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உப்பினை பொது சுகாதர பரிசோதகர்கள் கைப்பற்றி பகுப்பாய்வுக்கு அனுப்பியதில் அதிகளவான அயடீன் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த உப்பை விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் ஏறாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்ததனர். இந்நிலையில், கடை உரிமையாளருக்கு அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் உப்பு தயாரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொது சுகாதார பரிசோகருக்கு நீதிமன்றம…
-
- 2 replies
- 256 views
- 1 follower
-
-
26 MAY, 2025 | 04:05 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் மருத்துவ முகாமும் மர நடுகை வேலைத்திட்டமும் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. கல்லூரி பழைய மாணவரும் வைத்தியருமான சசிகரனின் ஒழுங்கமைப்பில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த நிகள்வு நடைபெற்றது. இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொற்றா நோய்கள் மற்றும் வீதி விபத்து தொடர்பாக விழிப்புணர்வு கருத்தரங்கு இடம்பெற்றது. தொற்றா நோய்கள் தொடர்பான கருத்தமர்வை வைத்தியர் சிவரஞ்சனியும், வீதி விபத்துகள் தொடர்பான கருத்தமர்வை குழந்தை சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் சயந்தனும் மேற்…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
இந்த வருடம் அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள மலையக மாணவர்களில் 60 பேருக்கு நம்பிக்கை கல்வி நிதியம் (Good Hope Education Fund) மூலம் நிதி உதவி வழங்கப்படவுள்ளதென நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் த.தனராஜ் தெரிவித்தார். இந்த நிதி வழங்கும் நிகழ்வு ஜூன் முதலாம் திகதி அட்டன் வெப்ஸ்டர் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் (Webster International School) நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் திரு மு. நித்தியானந்தன் கலந்துகொள்கிறார். 1960-களில் பட்டயக் கணக்காளர்களான பி. கந்தசாமி, எஸ். சொக்கலிங்கம் மற்றும் கே. வீரையா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிதியம், 1983 ஆம் ஆண்டு செயலிழந்து பின்னர் 2010 ஆம் ஆண்டில் இது மீண்டும் செயற்பாட்டுக்கு வந…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 26 MAY, 2025 | 03:31 PM இலங்கையிலுள்ள சிறுவர் மற்றும் இளைஞர் சமூகத்தினரின் உள ஆரோக்கியம் மற்றும் சமூக நலன்களுக்கு, சர்வதேச லயன்ஸ் கழகம் ஆதரவு வழங்கும் என சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் பெப்ரிசியோ ஒலிவேரா ( Fabrício Oliveira) தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் திங்கட்கிழமை (26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பெப்ரிசியோ ஒலிவேரா மேற்கண்டவாறு இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்கள், பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயல்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்கள் மற்றும் கல்வ…
-
- 0 replies
- 146 views
- 1 follower
-
-
வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (23) மாலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை - வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த மாணவி தனது கல்லூரி விடுதியினுள் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன உளைச்சலுக்குள்ளாகி மாணவி உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் என மாணவியின் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். மாணவி உயிரை மாய்த்துக்கொண்டமைக்கான காரணத்தை கண்டறிய கல்வி அமைச்சினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு…
-
- 0 replies
- 180 views
-
-
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கும், பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நாடாளுமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இரு அமைச்சுகளினதும் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்டோரும் பங்கேற்றிருந…
-
- 0 replies
- 182 views
-
-
26 May, 2025 | 06:53 PM யாழ். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் பெண் ஒருவரிடம் 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை கனடா வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறி மோசடி செய்த மற்றொரு பெண் நேற்று கைது செய்யப்பட்டார். 2023ஆம் ஆண்டு, கட்டைக்காடு பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரிடம், அவரது கணவரை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டார். பின்னர் தொடர்பை துண்டித்ததையடுத்து தாம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உணர்ந்த பாதிக்கப்பட்ட பெண், பண பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தால் பயணத்தடை விதிக்கப்பட்டதுடன் பிடிய…
-
- 0 replies
- 143 views
-
-
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு May 26, 2025 2:57 pm இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்…
-
- 3 replies
- 303 views
-
-
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடி கட்சிக்குள் சஜித்துக்கு எதிராக போர்க் கொடி!; தொகுதி அமைப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக இராஜினாமா உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வரும் நிலையில் கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவபொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ள தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, இறத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்ப…
-
- 0 replies
- 148 views
-
-
கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுவதற்காக ஹக்கீமும் அதாவுல்லாவும் பொது இணக்கப்பாடு! May 26, 2025 மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லாவை களமிறக்குவதற்கு தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணங்கியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவை முதலமைச்சர் வேட்ப…
-
- 1 reply
- 250 views
-
-
யாழில் பெருந்தொகை பணம் மோசடி! யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடை சேர்ந்த ரமேஷ் பிரேமா என்னும் குடும்ப பெண்ணிடம் அவரது கணவரை கனடா அனுப்புவதாக கூறி பெண் ஒருவர் 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை 2023ம் ஆண்டு பெற்றுள்ளார். அதன் பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதுடன் தாம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த குடும்ப பெண் காசு பரிமாற்றம் செய்யப்பட்டமைக்கான அனைத்து ஆதாரங்களுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததன் பிரகாரம், 2024ஆம் ஆண்டு சந்தேக நபருக்கு கிளிநொச்சி நீதிமன்றம் பயணத்தடை வித…
-
- 0 replies
- 218 views
-
-
இலங்கையில் சிக்குன்குனியா – பிரித்தானியா பயண எச்சரிக்கை இலங்கையில் சிக்குன்குனியா நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரித்தானியா அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, இலங்கை செல்லும் பிரித்தானிய பிரஜைகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. மே 23ஆம் திகதி தனது பயண எச்சரிக்கையை புதுப்பித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் பதிவாகாத அளவில் இலங்கையில் தற்போது குறிப்பிடத்தக்க அளவில் சிக்குன்குனியா நோய் பரவல் அதிகரி…
-
- 0 replies
- 184 views
-
-
ACTC – ITAK பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகளுக்கு DTNA ஆதரவு! adminMay 26, 2025 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகள் பெரும்பான்மை பெற்ற இடங்களில் அக்கட்சிகள் ஆட்சி அமைக்கவே ஆதரவு என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் வவுனியாவில் நேற்று (25.05.25) இடம்பெற்ற பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இடம்பெற்றது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைகள் தொடர்பாக ஆராய்நதோம். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் கட்சிகள் ஆட்சியமைக்க வேண்டும் என்று…
-
- 1 reply
- 261 views
- 1 follower
-
-
26 MAY, 2025 | 10:44 AM வவுனியா ஓமந்தை பகுதியில் திங்கட்கிழமை (26) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மாவே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். தனது தனிப்பட்ட விஜயமாக வட இந்தியா இமயமலை சாரலுக்கு வழிபாட்டிற்காக சென்று கட்டுநாயக்கா ஊடாக வருகை தந்து யாழ்ப்பாணத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்த வேளை டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். விபத்தின் போது காரில் பயணித்த கணவன் உயிரிழந்துள்ளதுடன் மனைவி, மகன் மற்றும் மாமனார் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந…
-
-
- 10 replies
- 734 views
- 1 follower
-
-
Published By: VISHNU 25 MAY, 2025 | 11:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை இன் ‘ஆசிய விஞ்ஞானி; - 100 பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல், ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக, இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள், அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும். வ…
-
- 4 replies
- 368 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 10:30 AM வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவ…
-
- 4 replies
- 346 views
- 1 follower
-
-
தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை! உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1433137
-
- 0 replies
- 157 views
-