Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. “தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை” November 7, 2018 தமிழ் அரசியல் கைதிகளை, கட்டம் கட்டமாக விடுவிக்கவே, நல்லாட்சி அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதில், தான் ஒருபோதும் முட்டுக்கட்டையாக இருக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, அரசியல் கைதிகளில் சிலரை விடுவிப்பதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்றும் மாறாக, நீதிக்கு உட்பட்டு, அவர்களைக் கட்டம் கட்டமாக விடுவிக்க நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் கூறினார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், சட்டவிரோதமானதும் நெறிமுறையற்ற வகையிலும் செயற்பட்டு, இலங்கையின் அரசமைப்பை ந…

  2. கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் புதிய பணிப்பாளர் கடமைகளை பொறுப்பேற்றார்… November 7, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… கிளிநெச்சி மாவட்ட சைவத்தியசாலையில் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்ட வைத்திய கலாநிதி தங்கராஜா காண்டீபன் இன்று (07.11.2017)உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் நீண்ட கால இடைவெளியின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலையில் கடமையேற்ற நிரந்தரப் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணம் புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரான வைத்திய கலாநிதி த. காண்டீபன் தமது மருத்துவக் கல்வியை யாழ்ப்பாண மருத்துவபீடத்திலும், மருத்துவ முதுமாணிக் கற்கை நெறியினை கொழும்பு மருத்துவபீடத்திலும் பூர்த்திசெய்துள்ளார். இவர் அரச வைத்த…

  3. இந்தியாவுடனான பேச்சுக்களில் இழுபறி கார்வண்ணன்Nov 07, 2018 | 3:18 by in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற ஆட்சிக் கவிழ்ப்பினால், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம் தொடர்பாக, இந்தியாவுடன் நடத்தப்படவிருந்த பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது. கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக 2017 ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது. மலிக் சமரவிக்ரமவுக்கும் சுஸ்மா சுவராஜூக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் விரும்பிய போதும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சரான மகிந்த சமரசிங்கவும் அதனை எதிர்த்தனர்.…

  4. நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு மகா சங்கத்தினர் பேரணி கி.தவசீலன்Nov 07, 2018 by in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர். கொழும்பு நகர மண்டபத்தில் நேற்று பிற்பகல் கூடிய பௌத்த பிக்குகள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்குத தீர்வு காணுமாறும் தீர்மானம் நிறைவேற்றினர். மகா சங்கத்தின் இந்த தீர்மானம், ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக பதவிக்குக்…

  5. மட்டக்களப்பில் சீரற்ற காலநிலை: 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழை காரணமாக 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்களிலுள்ள 656 பேர் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். வாகரை, கோறளைப்பற்று, கோறளைப்பற்று மத்தி ஆகிய 3 செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் பாடசாலையில் தஞ்சமடைந்தவர்களுக்கு பிரதேச செயலாளர் ஊடாக சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கிரான் பிரதேசத்திலுள்ள மக்களை மீட்க மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்ப…

  6. " எங்களுடைய உப்பை தின்று வந்து எங்களுடைய கட்சியில் உள்ள ஒருவரை திருடிய ஜனாதிபதியாகிய '' நீ '' உனக்கு நாங்கள் எப்படி ஆதரவு கொடுக்க போகிறோம். எங்களுடை ய மக்களை கூறு போடுவதற்கா உன்னை நாங்கள் கொண்டு வந்தோம்? கபடகாரனாக நீ மாறியிருக்கின்றாய். இது உன்னுடைய அழிவுக்கு ஆரம்பம். " என ஜனாதிபதியை ஒருமையில் விழித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் வவுனியாவில் உரையாற்றி உள்ளார். நன்றி முகநூல் நண்பா.

    • 7 replies
    • 1.5k views
  7. புதிய நாடாளுமன்ற அமர்வு: இன்று கட்சி தலைவர்கள் கூட்டம் புதிய நாடாளுமன்ற அமர்வு தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. நாடாளுமன்றின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் கடந்த மாதம் 27ஆம் திகதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முடிவுறுத்தப்பட்டது. மூன்றாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி நடத்தப்படுமென வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்தல், ஆசன ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே கட்சித் தலைவர்கள் இன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். இதேவேளை, புதிய அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை தி…

  8. கூட்டமைப்பிற்கு எமது உறுப்பினர் கட்டுப்பட மாட்டார் – சுரேஷ். கூட்டமைப்பின் முடிவுகளுக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கட்டுப்பட்டு செயற்படமாட்டார் என்று அந்தக் கட்சியின் தலைவரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை, கூட்டமைப்பின் முடிவு கட்டுப்பட்டுத்தாது, எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். நிலைமைகளை அவதானிக்கும். நிலைமைகள் எப்படிப் போகின்றன என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் ப…

  9. அரசியல் நெருக்கடியை தீர்க்க பொதுத் தேர்தலுக்கு செல்லவும்: சரத் என் சில்வா நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு செல்லவேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஜனாதிபதிக்கு வலியுத்தியுள்ளார். அரசியல் ரீதியாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்தீரத்தன்மைகளுக்கு மத்தியிலேயே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, ”அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 70ஆவது உறுப்புரையின் பிரகாரம் நான்கரை வருடங்களுக்கு பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும். ஆனால், நிறைவேற்று அதிகாரத்தின் ஊடாக ஜனாதிபதியால் அதற்கு முன்னரே நாடாளுமன்றைக் கலைக்கும் அதிகாரம் வ…

  10. கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் பதவி விலகத் தயார்: வியாழேந்திரன் சவால்! தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்தால் நானும் நடுநிலைமை வகிக்கத்தயார் என கிழக்குப் பிராந்திய அபிவிருத்திப் பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எந்தவிதமான தீர்வுகளையும் பெற்றுக்கொள்ளவில்லை. எனவே தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றும்…

  11. கட்சி மாறு­தல் என்­பது சாதா­ரண விட­யம். அதற்­காக யாருக்­கா­வது சன்­மா­னங்­கள் வழங்­கப்­ப­டு­மாக இருந்­தால் அதனை இலஞ்­ச­மாக கரு­த­மு­டி­யாது. அப்­ப­டி­யா­னால் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­டு­வ­தும் இலஞ்­மா­கவே கரு­தப்­ப­ட­வேண்­டும் என்று தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­தார். சோச­லிச மக்­கள் முன்­னணி கொழும்­பில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். கட்சி தாவு­தற்கு பெரு­ம­ளவு பணம் வழங்­கப்­ப­டு­வ­தாக ஆதா­ரங்­க­ளு­டன் ஐக்­கிய தேசி­யக் கட்சி தக­வல் வெளி­யிட்­டி­ருந்…

  12. மகிந்தவின் பக்கம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் வருவார்கள் : கருணா அம்மான் November 3, 2018 நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் இவ்வாறு குறிப்பிட்டுச் சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறாயின் இன்னமும் இருவர் மகிந்த அணியின் பக்கம் தாவ உள்ளனரா என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பி…

    • 22 replies
    • 2.6k views
  13. தமிழர்களுக்குரிய தீர்வு தள்ளிப்போனமைக்கான காரணத்தை வெளியிட்டார் ஜனாதிபதி முன்னாள் பிரதமரினால்தான் தமிழர்களுக்கான திர்வு வழங்குவது தள்ளிப்போனது என்றும் அதனால்தான் பிரதமரை மாற்றி புதிய சபையுடன் நாட்டுக்குத் தேவையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க எத்தனிக்கிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிதத்தார். அத்தோடு அரசியல் கைதிகளுக்கு எதிர்வரும் நாட்களில் நல்லதொரு முடிவை கொடுக்கவும் தான் நடவடிக்கை மேற்கொண்டுவருதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தேசிய தீபாவளிப் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். அந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையி…

    • 3 replies
    • 1.7k views
  14. November 6, 2018 Add Comment Share This! ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்கு தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூம் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாகவிருப்பதாகவும் அதில்…

    • 3 replies
    • 525 views
  15. தமிழர்களுக்கு சர்வதேச சமூசம் நீதியை பெற்று தர வேண்டும் – விக்னேஸ்வரன்! இலங்கை தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர சர்வதேச சமூசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஜெனிவா மனித உரிமைகள் சபை கூட்டத் தொடரில் போர்க்குற்ற விசாரணைக்கான முன்மொழிவு தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு நெருக்கடி நிலை தொடர்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன முரண்பாட்டுக்கான தீர்வு தொடர்பில் சிங்கள ஆட்சியாளர்களின் மனோநிலையை உலக்கு எடுத்தியம்ப வேண்டும். ஒற்றையாட்சி அடிப்படையிலான இலங்கை அரசியல்…

  16. விலைபோன வியாழேந்திரனை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை - யோகேஸ்வரன் அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக விலைபோன வியாழேந்திரன் எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். அற்ப சலுகைகளைப் பெறுவதற்காகவே, வியாழேந்திரன் எம்.பி, புதிய அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ள வியாழேந்திரனின் முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், …

  17. புதிய பிரதமர் மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை - ஸ்ரீநேசன் நான் கொள்கைக்கும், நீதிக்கும் தலை வணங்குபவன். ஒரு போதும் மாற்றுக் கட்சிக்கு தாவமாட்டடேன். கட்சியின் முடிவுக்கு மாறாகவும் நடக்கப்போவதில்லை. கட்சி மாறுவதென்பது செல்வாக்கை விலைபேசி விற்பதற்குச் சமனானது. நான் மகிந்தவை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினா் ஸ்ரீநேசன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அரசியல் நிலவரமானது ஆள்பிடிக்கும் படல்ததில் மிக மம்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மைப் பாராளுமன்ற உறுப்பினராக எனது மக்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் நீண்டகாலம் கல…

  18. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு நுழைவு சீட்டு விற்றமை தொடர்பில் இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால் திரையரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் திரைக்கு வந்த சர்கார் திரைப்படம் யாழில். உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் யாழ்.வடமராட்சி பகுதியில் உள்ள திரையரங்கிலும் சர்கார் திரையிடப்பட்டது. அதன் போது குறித்த திரையரங்கில் 500 ரூபாய்க்கான நுழைவு சீட்டை 700 ரூபாய்க்கு திரையரங்க ஊழியர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.அதனால் அங்கு படம் பார்க்க சென்ற இளைஞர்கள் …

  19. இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் மஹிந்தவை நம்பலாம்: சித்தார்த்தன் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பெற்றுத்தருவார் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழீழ விடுதலைக் கழகத்தின் மத்தியகுழுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களிற்கான தீர்வு மற்றும் இனப்பிரச்சனைக்கான தீர்வினைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தருவார் என நம்புகின்றோம். இவற்றிற்கான தீர்வினை மஹிந்த அரசு எழுத்திலே தரவேண்…

  20. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று செவ்வாய் கிழமை மாலை ஏழு இருபது மணிக்கு இடம்பெற்ற வீதி விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தென்னிலங்கையிலிருந்து யாழ் நோக்கி சென்றுக்கொண்டிருந்த எரிபொருள்தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த உருந்துருளியும் விபத்துக்குள்ளாகியதில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர். விபத்தின் போது ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் மற்றொருவர் வைத்தியசாலைக் கொண்டு சென்ற போது இறந்துள்ளார். இந்த விபத்தில் இறந்த ஒருவர் …

  21. ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பஹா நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ண (Gampaha District for the United People’s Freedom Alliance in the Parliament of Sri Lanka,) ஐக்கியதேசியக் கட்சியின் பக்கம் சென்றுள்ளார். MY3 – MR அணியின் முதலாவது விக்கட் வீழ்த்தப்பட்டது – ரணிலின் பக்கமானார் மனுஷ(சன்) http://globaltamilnews.net/2018/102251/

  22. இந்தியாவுக்கும் எனக்கும் சண்டையை மூட்டிவிட முயன்றார் ரணில் – சிறிலங்கா அதிபர் குற்றச்சாட்டு தனக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சித்தார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று, மைத்திரி- மகிந்த அணிகள் இணைந்து நடத்திய ‘ஜன மகிமய’ என்ற பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”புதிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் இந்தியா தொடர்பாகப் பேசப்பட்டதாக, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்கள் சிலர் ஊடகங்களைத் தவறாக வழிநடத்தும் தகவல்களை கசிய விட்டனர். அதன் விளைவாக, என்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால் இந்தியாவின்…

    • 2 replies
    • 1.4k views
  23. மகிந்தவுக்கு பெரும்பான்மை இல்லை என்கிறார் மனோ கணேசன்

    • 3 replies
    • 776 views
  24. November 6, 2018 Add Comment Share This! யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும் கிளிநொச்சியில் பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 170 பேருக்குமான இழப்பீட்டுக் காசோலைகள் 2 மணிக்கும் திட்டமிட்டபடி…

  25. குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக பல்வோறு பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தாழ் நில பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளது. மன்னாரின் தாழ் நில பிரதேசங்களான சாந்திபுரம் , ஜிம்றோன் நகர், எமில் நகர் , உப்புக்குளம் ,எழுத்தூர் ,இருதயபுரம் போன்ற பிரதேசங்களே மேற்படி நீரில் முழ்கியுள்ளது. வீடுகள் ,வீதிகள் ,மைதானங்கள் போன்றவற்றில் அதிகளவில் நீர் சூழ்ந்துள்ளதால் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் . பாடசாலை மாணவர்கள் காலண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.