Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மனோ தலைமையிலான கூட்டணி ரணிலுக்கு ஆதரவு : டக்ளஸ் மஹிந்தவுக்கு அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வழங்கஉள்ளதாக சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 ஆசனங்கள் இருக்கின்ற நிலையில் தமது ஆதரவை தொடர்ந்து பிரதமர் ரணிலுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தனது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/43322

    • 0 replies
    • 274 views
  2. இலங்கைப் பிரதமராக பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷவை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் மேலும் பல பொலிஸ் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக்காலமாக பொலிஸ் மா அதிபரின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்துவந்த மஹிந்த ராஜபக்ஷ, இன்று நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், புதிய…

  3. புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேச சமூகம் தனது ஆதரவை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச சமூகம் வேறு ஒரு நபரிற்கும் அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்க முயன்றது இதன் காரணமாக என்ன நடைபெற்றது என்பதை அது பார்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச சமூகம் நிலைமை மோசமடைவதற்கு அனுமதிக்க கூடாது மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவை வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் தற்போது நாட்டை பாதுகாப்பதற்காகவும் அபிவிருத்தி செய்வதற்காகவும் புதிய அரசாங்கத்தை அமைப்போம் புதிய அமைச்சர்களை நியமிப்போம் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச மக்கள் விரும்பியதை அவர்களிற்கு வழங்குவோம்…

  4. நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களுக்காகவே மகிந்தவை பிரதமராக்கினேன் : October 27, 2018 நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் அரச வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தின் அடிப்படையிலேயே மகிந்தவை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானியில் இவ்விடயம் கூறப்பட்டுள்ளது. நாட்டில் இன்று இரண்டு விசேட வர்த்தமானிகள் வெளியிடப்படுள்ளன. ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட வர்த்தமானியில், மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல…

  5. இலங்கையில் மாற்றத்தை எதிர்பார்த்து நல்லாட்சியை ஏற்படுத்த வாக்களித்த மக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏமாற்றிவிட்டாரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள நிலையில், அதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”எனது தந்தையை கொலைசெய்தவர்களுடன் இன்று ஆட்சியாளர்கள் கைகோர்த்துவிட்டனர். தான் தோற்றிருந்தால் இன்று புதைகுழியில் இருந்திருப்பேன் என அன்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று மஹிந்தவுடன் சிரித்த முகத்துடன் கைகோர்த்துக்கொண்டுள்ளார். ஜனாத…

  6. மஹிந்த பிரதமரானாலும் பொறுப்பு கூறலில் இருந்து விடுபட முடியாது – அமெரிக்கா! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகளை செயற்படுத்த இலங்கை தவற கூடாது என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டுவிட்டர் பதிவில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் சூழ்நிலை தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறையின் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம் இதனை தெரிவித்துள்ளது. மேலும், பொறுப்பு கூறலையும் நல்லிணக்கத்தையும…

  7. ரணில் விக்கிரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற மறுத்தால் அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதியால் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்கவிற்கு எந்த வித அதிகாhரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க வெளியேற மறுத்தால் மக்கள் ஆதரவை திரட்டி அலரிமாளிகைக்குள் நுழைந்து அவரை வெளியேற்றுவோம் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெகலிய ரம்புக்வெலவும் ரணில் விக்கிரமசிங்க கௌரவாமாக வெளியேறாவிட்டால் நாங்கள் வெளியேற்றுவோம் என தெரிவித்துள்ளார். http://www.vi…

  8. சிறிலங்காவில் கூட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கொழும்பில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அரசாங்கம் ஊடக நிறுவனங்களைச் சுற்றி சிறிலங்கா இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐரிஎன் என அழைக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் பணியாளர்கள் சிலர், ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஐரிஎன் செய்தி அறைக்குள் நுழைந்த ஒரு குழுவினர் அங்கிருந்த ஊடகப் பணியார்களைத் தாக்கியுள்ளனர். இதையடுத்தே, அரச ஊடக நிறுவனங்களுக்கு இராணுவ, பாதுகாப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, புதிய பிரதமராக பதவியேற்…

  9. மஹிந்தவின் குற்றங்களுக்கு மைத்திரி சன்மானம் – விமர்சிக்கும் ரஞ்சன் பணத்திற்கும் அற்ப சலுகைகளுக்கும் விலைபோகும் உறுப்பினர்களே மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றங்கள், கொலைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவந்த நிலையில் மஹிந்தவுக்கு பிரதமர் பதவியை மைத்திரி …

  10. மஹிந்த பிரதமராக நியமனம் – கூட்டமைப்பின் முடிவு என்ன? இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் நாளைய தினம் உத்தியோகப்பூர்வமான முடிவை அறிவிப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, இதனை தெரிவித்துள்ளார். இதே வேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸ் இது தொடர்பில் ஆராய தற்போது அவசரமாக கூடியுள்ளது. http://athavannews.com/மஹிந்த-பிரதமராக-நியமனம்/

  11. கலவரத்தால் முடங்கியது அரச தொலைக்காட்சி சேவை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி சேவை நாடளாவிய ரீதியில் முடங்கியுள்ளது. நாட்டின் அரசியலில் இன்று ஏற்பட்ட பிரதமர் மாற்றத்தையடுத்து குறித்த கலவரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு முன்னாள் ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல விஜயம் மேற்கொண்டதையடுத்து கலவரம் அமைதி நிலைக்கு சென்றுள்ளது. http://www.virakesari.lk/article/43299

  12. சர்வதேசத்தில் பேசுபொருளாக மாறியுள்ள இலங்கை அரசியல்! இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத மாற்றமானது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இலங்கை அரசியல் மாற்றம் பிரதான தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இலங்கையின் பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையில், இலங்கையுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நாடுகள் மற்றும் இலங்கை தொடர்பாக கரிசனை கொண்டுள்ள நாடுகள் இவ்விடயத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பிரதமர…

  13. மஹிந்த பிரதமரானது அரசியலமைப்பிற்கு முரணானது – ஐ.தே.க. திட்டவட்டம்! மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணான விடயம் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்துள்ளார். இதையடுத்து இது சட்டவிரோதமான செயற்பாடு என்றும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். http://athavannews.com/மஹிந்த-பிரதமரானது-அரசியல/ அரசியலமைப்பை சுட்டிக்காட்டி ரணில், மைத்திரிக்கு கடிதம்! 19 ஆவது அரசியலமைப்பின் 42 இலக்கம் 4 ஆம்…

  14. தேசிய தொலைக்காட்சி வளாகத்தில் மோதல் – இரு அமைச்சர்கள் மீதும் தாக்குதல்? தேசிய தொலைக்காட்சி வளாகத்திற்கு சென்ற அமைச்சர்கள் இருவர் மீது அங்குள்ள ஊழியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், அவர்களின் வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து இரண்டு அமைச்சர்களும் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதனை அடுத்து தலைநகரில் உள்ள பிரதான அரச அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளா…

  15. சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சி உதயம்! வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சி உதயமாகியுள்ளது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. இந்நிலையில், முதலமைச்சரின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. குறிப்பாக, அவர் தலைமையில் இயங்கிவந்த தமிழ் மக்கள் பேரவை அரசியல் செயற்பாடுகளுக்கு அப்பாற்பட்டதென்றும், மாகாண ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின்னர் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள்…

    • 26 replies
    • 3.4k views
  16. விக்கி தலமையிலான மாகாண அணி ஆட்டமிழப்பு – ஆளுநர் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்.. October 25, 2018 வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே தொடர்ச்சியாக கூட்டி வருகின்றார் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு இன்று (25)பிற்பகல் ஒரு மணியளவில் விஜயம் செய்த ஆளுனர் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்த பணிகள் முடிவடையாத பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட…

    • 5 replies
    • 796 views
  17. நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் கூறுங்கள்: தலதா நீதிபொறிமுறைக்கு அப்பால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காரணிகள் இருந்தால் தமிழ் அரசியல்வாதிகள் எமக்கு கூறலாம். அது சாத்தியமென்றால் கைதிகளை விடுதலை செய்ய முழுமையான ஆதரவை வழங்குகின்றோமென நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்தேசிய கூட்டமைப்பு நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “பாரதூரமான மனித படுகொலைகள் செய்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கொலை செய்தவர்கள் …

  18. விக்னேஸ்வரனின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் – மஹிந்த சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சியின் அரசியல் தலைவிதியை மக்களே நிர்ணயிக்க வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதேநேரம், இனவாதக் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் கூட்டணி அமைத்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில், இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், விக்னேஸ்வரன் என்பவர் ஒரு இனவாதி என எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். நாம், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தான் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோமே தவிர அவருடன் அல்ல. இந்நிலையில், ஒரே கட்சியாக இருந்தவர்கள் பிர…

  19. கொழும்பு கொள்கலன் முனையம் இந்தியாவுக்குக் கிடையாது – சிறிலங்கா அதிபர் விடாப்பிடி கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு விட்டுக் கொடுப்பதில்லை என்பதில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடாப்பிடியான நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் சிறிலங்கா அதிபரின் இந்த நிலைப்பாட்டை, சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க, தெளிவுபடுத்தினார். “கொழும்பு கிழக்கு கொள்கலன் இறங்குதுறையை, சிறிலங்கா துறைமுக அதிகார சபையே வைத்திருக்கும். கடந்த ஆண்டு, இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுஸ்மா சுவராஜூக்கும், சிறிலங்காவின் அனைத்துலக வணிக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுக்கும் இடையில் செய்…

    • 0 replies
    • 385 views
  20. புதிய அரசமைப்பு வரைவு நவம்பர் 7 இல் வருகின்றது வழி­ந­டத்­தல் குழு நேற்று உறுதி செய்­தது பதிவேற்றிய காலம்: Oct 26, 2018 புதிய அர­ச­மைப்­புக்­கான நிபு­ணர்­க­ளின் வரைவு அடுத்த மாதம் 7ஆம் திகதி அர­சி­யல் நிர்­ணய சபை­யா­கக் கூட­வுள்ள நாடா­ளு­மன்­றில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் நேற்­றைய கூட்­டத்­தில் நீண்ட வாதப் பிர­தி­வா­தங்­க­ளின் பின்­னர் இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 7 ஆம் திகதி நாடா­ளு­மன்­றம் வழ­மைக்கு மாறாக காலை 9 மணிக்கு அர­சி­யல் நிர்­ணய சபை­யா­கக் கூடும். அப்­போது தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, புதிய அர­ச­மைப்­புக்­கான வரைவை முன்­வைத்து உரை­யாற்­று­வார். இதன் பின்­னர், அந்த வரைவு நாடா­ளு­மன்ற உறுப்…

  21. லெப்.கேணல் அமுனுபுரவை ஐ.நாவே தெரிவு செய்தது – சிறிலங்கா இராணுவம் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் 200 சிறிலங்கா இராணுவத்தினரின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றும், லெப்.கேணல் கலன அமுனுபுரவை, ஐ.நாவின் கோரிக்கையை ஏற்று திருப்பி அழைத்துக் கொள்வதாக, சிறிலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. போர்க்குற்றங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், லெப்.கேணல் கலன அமுனுபுரவை உடனடியாகத் திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா செயலகம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியிருந்தது. “ஐ.நாவின் ஆலோசனைக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து, மனித உரிமை ஆய்வுக்குட்படுத்தும்…

    • 0 replies
    • 273 views
  22. ''22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்'' பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாவினை வழங்கக் கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால், 22 பெருந்தோட்டக் கம்பனிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் இது விடயத்தில் தலையீடு செய்து பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டுமென்று ஊவா மாகாண சபை உறுப்பினர் எம். சச்சிதானந்தன் குறிப்பிட்டார். ஊவா மாகாண சபை அமர்வில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கை பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அத்துடன் ஊவா மாகாணசபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்ப…

  23. மன்னார் மனித புதைகுழி ; அடையாளமிடப்பட்டன 197 எலும்புக்கூடுகள் மன்னார் ச.தொ.ச விற்பனை நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித புதைகுழி அகழ்வுப் பணியில் இதுவரை 197 எலும்புக்கூடுகள் அடையாளமிடப்பட்டுள்ளதுடன் மழை பெய்கின்றபோதும் இவ் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த மார்ச் மாதம் மன்னார் நகர் நுழை வாயில் பகுதியில் ச.தொ.ச விற்பனை நிலையம் ஒன்று அமைக்கும் நோக்குடன் அதற்கான கட்டுமானப்பணி வேலைகள் நடைபெற்ற வேளையில் அங்கு அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இவ் கட்டுமானப்பணிகள் இடைநிறுத்தப்பட்ட நிலையில் இன்று வரை வெள்ளிக்கிழமை வரை 95 வது நாட்களாக இவ் மனித எச்சங்கள் நோக்கிய அகழ்வுப் பணி நடைபெற்று வரு…

  24. அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்புரவு பணிக்கு பயன்படுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி. தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அமைச்சா் மனோ கணேசன் சென்றிருந்தாா். இதற்காக பாடசாலை மாணவா்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த வேளையிலும…

  25. கருணா, கே.பி.க்கு சுகபோகம்..! அரசியல் கைதிகளுக்கு தொடர்ந்தும் சிறை – நாடாளுமன்றில் கூட்டமைப்பு! கருணா மற்றும் கே.பி. போன்றவர்கள் அமைச்சு பதவியிலும் அரசின் பாதுகாப்பிலும் இருக்கலாம் என்றால், ஏன் சிறு சிறு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யபடவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.