Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.! Vhg பிப்ரவரி 13, 2026 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில், இந்திய இழுவைமடிப் படகு கடற்றொழிலாளர்களால் நயினாதீவு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைம…

  2. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விழா தடையின்றி நடத்த வேண்டும் ; ப.சத்தியலிங்கம் கோரிக்கை 13 Feb, 2026 | 11:50 AM வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன் குறித்த ஆலயத்திற்கான காணி மற்றும் பாதை விடுவிப்பு தொடர்பில் தன்னால் வடக்கு மாகாண ஆளுனருக்கும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ஆளுநரால் பிரதேச செயலாளரி…

  3. வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்! Published By: Digital Desk 1 13 Feb, 2026 | 10:14 AM மட்டக்களப்பு - வாழைச்சேனை நகரில், இன்று வியாழக்கிழமை (13) காலை இரண்டு காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 68 வயதுடையவர் எனவும், உணவு விற்பனை செய்து கொண்டிருந்தபோது காட்டு யானையால் தாக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மற்றையவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/238536

  4. மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு! வடக்கு கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmlkh8qbg0004356nypr1i1a3

  5. 🍎 தர்சானந்திற்கெதிராக யாழ். மாநகர சபை முன் போராட்டம் adminFebruary 13, 2026 யாழ்ப்பாண நகரப்பகுதியில் அப்பிள் வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் இன்று (பெப்ரவரி 13, 2026, வெள்ளிக்கிழமை) யாழ். மாநகர சபை முன்பாகக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மாநகர சபையினால் தங்களுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானம் ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ப. தர்சானந்தினால், நகரில் உள்ள அப்பிள் கடைகளின் ஒழுங்கமைப்பு அல்லது கட்டுப்பாடு தொடர்பாக முன்மொழியப்பட்ட ஒரு பிரேரணையே இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. உறுப்பினர் தர்சானந்தின் பிரேரணை தமது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என வியாபாரிகள் கவலை தெரிவித்த…

  6. முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண காலமானார் Feb 13, 2026 - 08:56 AM இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர், இன்று (13) காலை கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் தமது 91 வது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmlkbs1k30006356n0rxx4bvb

  7. திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு 13 Feb, 2026 | 09:33 AM (இராஜதுரை ஹஷான்) இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார். கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்…

  8. உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள் Feb 12, 2026 - 10:12 PM கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ச்சியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு காணாமல் போன அல்லது திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளின் ஊடாக சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எடு…

  9. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர் 13 Feb, 2026 | 09:25 AM (இராஜதுரை ஹஷான்) எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பெலியத்த றுஹூணு விஜயபா தேசிய பாடசாலைக்கு வியாழக்கிழமை (13) விஜயம் செய்த பிரதமர், முதலாம் தரத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புதிய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்…

  10. கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க 12 Feb, 2026 | 02:56 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ப…

  11. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம் Feb 12, 2026 - 06:15 PM உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு…

  12. கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்! Feb 12, 2026 - 01:04 PM கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlj576880005356nzo74yx4g

  13. வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம் வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட…

    • 3 replies
    • 296 views
  14. ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது! போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்…

  15. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா 11 Feb, 2026 | 07:01 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏ…

  16. இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு 11 Feb, 2026 | 03:22 PM (எம்.மனோசித்ரா) மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன. இது தொடர்ப…

  17. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை 11 Feb, 2026 | 06:43 PM (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர…

  18. வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்! Feb 12, 2026 - 07:48 AM வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார். இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகள…

  19. குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..! 11 Feb, 2026 | 05:18 PM மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் . நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர். இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள். குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியை…

  20. “நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல் 11 Feb, 2026 | 03:30 PM “நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார். “இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள்…

  21. நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்! 11 Feb, 2026 | 01:43 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், " ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தி…

  22. பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர் 11 Feb, 2026 | 02:46 PM ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார். அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழ…

  23. முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது. அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர். விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செ…

  24. கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம் 10 Feb, 2026 | 04:56 PM (எம்.மனோசித்ரா) கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையி…

  25. பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன! Feb 11, 2026 - 09:36 AM மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.