ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143294 topics in this forum
-
தமிழர்கள் ஆளப்படுகின்ற இனம் என்று சொல்லப்படும்வரை தீர்வு கிடைக்காது: சிவாஜிலிங்கம் ”நாங்கள் ஆளுகின்ற இனம், தமிழர்கள் சிறுபான்மை இனத்தவர்கள். அவர்கள் ஆளப்படுகின்ற இனம் என சொல்லப்படுகின்ற வரையில், தமிழர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்காது” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தமிழ்த்தேசிய இனம் எழுந்து நின்றால் மாத்திரமே தங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற, ஊடகவியலாளர் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கூறினார். இதுவரை கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைத்தா…
-
- 0 replies
- 213 views
-
-
மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை மக்கள் ஆர்ப்பாட்டம் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட மேல்கொத்லை நீர்தேக்க கரையோரத்தை அண்மித்த வணிகசேகரபுர வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களே இன்று ஆர்ப்பாட்டதில் ஈடுட்டனர். குறித்த வணிகசேரபுர பகுதியில் பல தடவைகள் மண்சரவுகள் ஏற்படுள்ளது. மேற்படி குடியிருப்பு பகுதியை அண்மித்து செல்லும் மேல்கொத்மலை நீர்தேக்க கரையோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மாத்திரமே பாதுகாப்பு மதில் அமைக்கப்படுள்ளது. பாதுகாப்பு மதில் அமைக்கப்பாடாத பகுதிக்கு பாதுகாப்பு மதில் அமைக்குமாறு மேல் கொத்மலை நீர்தேக்க …
-
- 0 replies
- 310 views
-
-
முள்ளியவளையில் துப்பரவுப்பணிகள் ஆரம்பம் முல்லைத்தீவு - முள்ளியவளை, மாவீரர் துயிலுமில்ல காணியில் துப்பரவுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளது. இன்று மக்கள் பலர் ஒன்றுகூடி முள்ளியவளை துயிலுமில்லப் பகுதியில் துப்பரவுப் பணிகளை மேற்கொண்டனர். இவர்களுடன் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் மற்றும் கரை துறைப்பற்று பிதேசசபை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/42837
-
- 0 replies
- 463 views
-
-
லெப்.கேணல் கலன பிரியங்கர லங்காமித்ர அமுனுபுரவை திருப்பி அனுப்பியது ஐக்கியநாடுகள் சபை… October 20, 2018 1 Min Read ஐக்கிய நாடுகள் அமைதிக்காக்கும் படையணியிலிருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ள இராணுவ அதிகாரி எவ்வகையிலும் போர் குற்றங்களில் ஈடுப்படவில்லை என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ அதிகாரி திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி போர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளனவர் என்பதாலேயே திருப்பி அனுப்பியதாக ஐ.நா பொதுச்செயளாலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஐ.நா அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றிய லெப்.கேணல் கலன பிரியங்…
-
- 0 replies
- 495 views
-
-
30 வருட போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை அறிய சிங்கள மக்கள் முயற்சியுங்கள்.. October 20, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. மன்னார் மாவட்டத்தில் அடிக்கடி மத சின்னங்கள் இனம் தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டும் உடைக்கப்படும் வருகின்ற நிலையில் மத தலைவர்களிடமும் மக்களிடமும் ஒற்றுமை இல்லாத பட்சத்தில் மத நல்லிணக்கமானது சிதைவடைய கூடிய வாய்ப்பே காணப்படுகின்றது என மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்தார். கரிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடை முறை படுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வ மத செயற்பாடுகளின் ஒரு பகுதியான பல்வேறுபட்ட மத மற்றும் இனத்தை பிரதி நித்துவப்படுத்தும் மக்கள் மத்தியில் நல்ல…
-
- 0 replies
- 319 views
-
-
விக்கியின் எதிர்காலஅரசியல் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பும் மாபெரும் ஒன்றுகூடலும்.. October 20, 2018 1 Min Read தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல். தமிழ்மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்தமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சிலதீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்று கூடல 24-10-2018 (புதன்கிழமை) அன்றுகால…
-
- 0 replies
- 271 views
-
-
வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கிராம ஆலயங்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் நிதி ஒதுக்கீடு : October 20, 2018 1 Min Read குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா நகர சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) பொதுக் குழு உறுப்பினருமான திருமதி லக்ஸ்சனா நாகராஜனினால் ஆலயங்களுக்கான நிதி உதவிகள் நேற்று (19) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ‘கம்பெரலிய வேலைத்திட்டம் 2018’ நிதி ஒதுக்கீட்டில் வவுனியா நகர சபை உறுப்பினர் திருமதி லக்ஸ்சனா ந…
-
- 0 replies
- 336 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே. அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’ இவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் சிரேஸ்ட சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ். கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நால்வரும் நேற்று வரை விளக்கமறியல…
-
- 2 replies
- 493 views
-
-
இலங்கை கலாசாரத்திற்கேற்ற ஆடையை அணியவும் என்ற அறிவித்தல் பலகை, சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டு வைரலாகியது. கடற்கரையோரத்தில் அணிய வேண்டிய ஆடை குறித்து தென் இலங்கையின் ஹபராதுவ பிரதேசத்தில் சமூகப் போலீஸ் பிரிவினால் அறிவித்தல் வைக்கப்பட்டிருந்தது. எனினும், அறிவித்தல் பலகையை உடன் அகற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ''தற்போதே இதுகுறித்து எனக்கு அறியக்கிடைத்தது. உடனடியாக அதனை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளேன்,'' என்று அரச நிர்வாக, சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பி.பி.சி இடம் தெரிவித்தார். ''இலங்கையின் கலாசாரத்திற்கு ஏற்ற ஆடை அணியவும்'' என்று ஹபராதுவ பிரதேசத்தில் போலீசாரின் சமூகப் பிரிவால் வைக்கப்பட்ட அறிவித்தல் பலகை கூறுகிறது. ''ப…
-
- 16 replies
- 1.4k views
-
-
மாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருகிறது: சென்னையில் டி.எம்.சுவாமிநாதன் இலங்கையின் வடக்கு பகுதியில் 28 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், மாங்குளம் தொழில்பூங்காவாக மாறி வருவதாகவும், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் சுவாமிநாதன் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்படி கூறியுள்ளார். இதன்போது மேலும் பேசிய அவர், இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் ஒற்றுமையாகவே உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இலங்கையில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்திய…
-
- 1 reply
- 410 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. புத்தளத்திலிருந்து சென்று யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் இளைஞரும் அவரது சகாவும் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் பாவனையால் நண்பர்களாகினர். குடு பாவனைக்காக வழிப்பறியில் ஈடுப்பட்டனர் என காவற்துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், கொக்குவில், கோண்டாவில் பகுதிகளில் அண்மைய நாள்களில் வழிப்பறி கொள்ளைகள் இடம்பெற்றன. வீதியால் சென்ற பெண்களிடம் நகைகள் மற்றும் கைப்பைகள் பறிக்கப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கோப்பாய் காவல் நி…
-
- 2 replies
- 582 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுதங்களையே பலர் பயன்படுத்தி வருகின்றனர் – அம்பலப்படுத்தினார் கோட்டா விடுதலைப் புலி இயக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட ஆயுதங்களைப் பலர் பெற்றுக் கொண்டுள்ளதுடன், அந்த ஆயுதங்களையே, பாதாள உலகக் குழுவினர் பயன்படுத்தி வருவதாகவும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் மீண்டும் விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ நினைவு நூதனசாலை நிர்மாணத்தில், 33 மில்லியன் ரூபாய் முறைக்கேடு செய்யப்பட்டமை உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்றைய வழக்கு விசாரணை இட…
-
- 2 replies
- 407 views
-
-
போர்க்குற்றச் சந்தேக நபராக இனம்கண்ட சிறிலங்கா தளபதியை திருப்பி அனுப்புகிறது ஐ.நா மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படைப்பிரின் கட்டளை அதிகாரி ஒரு போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா உள்நாட்டுப் போரில், போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரேவை, உடனடியாக திருப்பி அழைக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், சிறிலங்கா அரசாங்கத்திடம், கோரியுள்ளார் எனவும் அவர் கூறினார். “அவரது மனித உரிமை பதிவ…
-
- 1 reply
- 416 views
-
-
சிறிதரன் அவர்களின் பாராளுமன்ற பேச்சு
-
- 3 replies
- 595 views
-
-
தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் செய்யமாட்டேன்: சி.வி எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நான் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றேன் என பலரும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தமிழ் மக்களுடைய உரிமைகளையே முதலில் உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் அபிவிருத்திப் பணிகளை சிறந்த முறையில் மேற்…
-
- 3 replies
- 597 views
-
-
றோ’ மீது சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியது உண்மையே – என்.ராம் தம்மைக் கொலை செய்ய ‘றோ’ சதித் திட்டம் தீட்டியதாக அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கூறியதாக தாம் வெளியிட்ட செய்தி உண்மையானதே என்று ‘தி ஹிந்து’ நாளிதழின், ஆசிரியர் என்.ராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ ‘தி ஹிந்து’ உண்மையைச் சொல்லும், தனது பணியை செய்துள்ளது. இந்த அறிக்கையை வெளியிட முன்னர், எமது சிறிலங்கா செய்தியாளர் இந்த செய்தியை வெளியிட முன்னர், தாம் அறிந்த தகவலை பல சுதந்திரமான வட்டாரங்களில் உறுதிப்படுத்தியிருந்தார்.’ அவர்கள் முட்டாள…
-
- 1 reply
- 490 views
-
-
யுத்த பாதிப்புக்களை சிங்கள மக்கள் உணர வேண்டும்: அருட்பணி செ.அன்ரன் அடிகளார் கடந்த 30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையை பெரும்பான்மை இன மக்கள் அறிந்து செயற்படும்போதே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமென மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தெரிவித்துள்ளார். கறிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்தினால் நடைமுறைபடுத்தப்படுத்தப்பட்டு வரும் சர்வ மத செயற்பாடுகளின் ஒரு பகுதியான பல்வேறுபட்ட மதம் மற்றும் இனத்தை பிரதிநித்துவப்படுத்தி, மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, அவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு நேற்று (வெள்ளி கிழமை) வட்டக்கண்டல…
-
- 1 reply
- 374 views
-
-
போர்க்காலத்திலும்- காடுகளைப் பாதுகாத்தவர் பிரபாகரன்- மைத்திரி புகழாராம்!! பதிவேற்றிய காலம்: Oct 14, 2018 வடக்கில் போர் நடந்தாலும் காடுகளை அழியவிடாது பாதுகாத்தவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன புகழாரம் சூட்டியுள்ளார். கம்பஹா மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இலங்கையிலேயே வடக்கில்தான் வன அடர்த்தி வீதம் அதிகமாக உள்ளது. அங்குதான் 30ஆண்டுகளாகப் போர் நடந்தது. போர் நடந்தாலும் அங்குள்ள காடுகள் அழியாமல் பிரபாகரன் பாதுகாத்தார். பிள்ளைகளின் பிறந்…
-
- 11 replies
- 1.4k views
- 1 follower
-
-
நாலக்கவிடம் ஒன்பது மணிநேரத்துக்கும் அதிகமாக விசாரணை Share கொலைச் சதி விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க குற்றப் புலனாய்வுப் பிரிவின் 09 மணி நேரத்துக்கும் அதிகமான விசாரணைகளின் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்றைய தினம் இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசேட வாக்குமூலம் நேற்று மாலை ஆறு மணி ஆகும் போது நிறுத்தப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளுக்காக இன்று குற்றப்புலனாய்வு பிரிவின் மனித படுகொலைகள் குறித்த விசாரணை அறையில் ஆஜராகுமாறு தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 195 views
-
-
60 ஆண்டுகாலம் சிங்கள ஆட்சியாளர்களுடன் தீபாவளி கொண்டாடிய தமிழ் தலைவர் இரா.சம்பந்தன்.!
-
- 2 replies
- 581 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாத்திரம் வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதா? – கூட்டமைப்பு வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பது என்பது தனித்து, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்துடன் மாத்திரம் தொடர்புபட்டது அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு, அதிகாரப் பகிர்வு, காணாமல் போனோர் பிரச்சினை, அபிவிருத்தி போன்ற பிரச்சினைகளுடன், அரசியல் கைதிகளின் பிரச்சினையும் ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதாகவும் அவர் குறிப்…
-
- 0 replies
- 279 views
-
-
முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முப்படையினர் வசமுள்ள விவசாய காணிகளை மீள கையளிப்பது தொடர்பில் ஆராய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனை தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என கடந்த வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின் போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதற்கமையவே இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 500 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊட…
-
- 0 replies
- 256 views
-
-
நுண் கடன் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பு – சிறிதரன் வடக்கு கிழக்கில் எழுந்துள்ள நுண் கடன் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபித்துள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்த விடயத்தை கூறியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட சிவில் வலய அமைப்பின் பிரதிநிதிகள் நுண்கடன் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்றை இன்று(வெள்ளிக்கிழமை) சிறிதரனிடம் கையளித்தனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திற்கு சென்ற சிவில் வலய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த மனுவை கையளித்துள்ளனர். நுண் கடன் பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி உரிய தீர்வை …
-
- 0 replies
- 221 views
-
-
விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு! வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவினை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மேன்முறையீட்டு மனு, ஈவா வனசுந்தர, பிரசன்ன ஜயவர்தன மற்றும் எல்.ரீ.பீ.தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பா.டெனிஸ்வரனினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவருக்கு அமைச்சு பதவியை எந்தவித இடையூறும் இன்றி முன்னெட…
-
- 0 replies
- 213 views
-
-
கல்முனை மேயர் இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்படுகின்றார் – பா.அரியநேத்திரன் கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள விநாயகர் ஆலயத்தை அகற்றகோரி நீதிமன்றத்தில் கல்முனை மேயர் முறையிட்டுள்ளமை தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனரீதியான முறுகல் நிலையை தோற்றுவிக்கும் செயற்பாடு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். கல்முனையிலுள்ள இந்து ஆலயத்தை அகற்ற முதல்வர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தொடர்பாக இன்று(வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஏற்கனவே கட்டப்பட்ட விநாயகர் ஆலயத்தை இடிக்குமாறு முறையிடுவது தமது தாயை அழிப்பதற்கு சமனாகவே இந்துமக்கள் கருதுவார்கள். தமது…
-
- 0 replies
- 321 views
-