ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143303 topics in this forum
-
இரணைதீவில் மீளக்குடியமர அனுமதி – 8 ஏக்கர் காணிகளை விடுவிக்க கடற்படை மறுப்பு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைதீவில், 8 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்க மறுப்புத் தெரிவித்துள்ள சிறிலங்கா கடற்படை, ஏனைய பகுதிகளில் பொதுமக்கள் மீளக் குடியமர அனுமதி அளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம்பெயர்ந்து, முழங்காவில் பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள், தம்மை மீளக்குடியமர அனுமதிக்கக் கோரி ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர். எனினும் சிறிலங்கா அரசதரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், கடந்தவாரம், இரணைதீவுக்குச் சென்று, அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்து போராட்டத்தை தொடர்ந்தனர். அத்துடன், தமது காணிகளைத் துப்புரவு செய்து தாமாகவே மீளக்குடியேறும் ந…
-
- 0 replies
- 242 views
-
-
மூன்று ஆண்டுகளில் 32,000 இலங்கையர்கள், இரட்டைக் குடியுரிமையை பெற்றுள்ளனர்…. வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள 400 இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிகழ்வு நாளை (16.05.18) பத்தரமுல்லவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இடம்பெற உள்ளது. உள்ளநாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி. நாவின்னவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என். ரணசிங்க கூறினார். கடந்த 03 ஆண்டுகளில் வௌிநாடுகளில் உள்ள சுமார் 32,000 இலங்கையர்கள் இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் கூறினார். …
-
- 0 replies
- 356 views
-
-
இரணைதீவு மக்களுக்கு வெற்றி – மீள்குடியேற்றத்திற்கு அனுமதி! கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார். மக்களின் தொடர் அழுத்தம்! – இரணைதீவில் கொழும்பு உயர்மட்டக் குழு கிளிநொச்சி – இரணைதீவில் நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, கொழும்பிலிருந்து சென்ற உயர்மட…
-
- 1 reply
- 567 views
-
-
இந்திய அமைதிப்படையின் நினைவுத் தூபிக்கு இந்திய இராணுவப் பிரதானி அஞ்சலி இலங்கை இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஏழு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பதவி நிலை பிரதானி பிபின் ராவத் இந்திய அமைதிப் படை வீரர்களுக்காக பத்தரமுல்லையில் அமைக்கப்பட்ட இராணுவ நினைவு தூபிக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். இலங்கை இராணுவ சம்பிரதாய முறைப்படியான மாரியாதையுடன் நினைவு தூபிக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடி யுத்தத்தில் தமது உயிர்களை இழந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். இந் நிகழ்வில் பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன, இலங்கையில் உள்ள…
-
- 1 reply
- 396 views
-
-
வடகிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் சம்பந்தன் ஏன் குரல் எழுப்பாமல் இருக்கிறார்? எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்கிறார் பஷில் (நமது நிருபர்) எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முழுநாட்டுக்குமான எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எந்தவிதமான செயற்பாட்டையும் முன்னெடுக்காமல் இருக்கின்றார். அதேபோன்று வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் கவனத்தில் எடுக்காமல் இருக்கின்றமை கவலையளிக்கின்றது. எனவே சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ…
-
- 2 replies
- 496 views
-
-
உரித்துக்களை எடுத்துரைக்கச் சென்ற வடமாகாண முதல்வர்,இரணைதீவு மக்களின் கேள்விகளை அடுத்து தனக்கு காணி அதிகாரம் இல்லை என ஒப்புதல் தமது காணிகளை மீளப் பிடித்துக்கொண்ட இரணைதீவுமக்களுக்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நிரந்தரமாக குடியேறுவதற்கான அனைத்துஉரிமைகளும் இருப்பதாக கூறிய வட மாகாண முதலமைச்சர் தனக்கு காணி அதிகாரம் இல்லை என்பதைமக்களின் கேள்விகளை அடுத்து பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கின்றார். 26 வருடங்களாக்கு முன்னர் தங்களைவிரட்டியடித்த ஸ்ரீலங்கா கடற்படையினருக்கு இரணைதீவில் மூன்று ஏக்கர் காணிகள் மாத்திரம்போதுமானது என்ற உண்மையை வட மாகாண சபை, ஆட்சி முடிவடைவதற்கு ஒருசில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையிலேயே அறிந்துகொண்டதாகவும்வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னே…
-
- 1 reply
- 230 views
-
-
சிறிலங்காவில் இந்திய இராணுவம் அமைத்துள்ள தொலைத்தொடர்பு ஆய்வகம் சிறிலங்காவில் தொலைத்தொடர்பு ஆய்வகம் (communication laboratory) ஒன்றை இந்திய இராணுவம் நிறுவியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் பாடசாலையிலேயே இந்த தொலைத்தொடர்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞைப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காகவே, இந்திய இராணுவம் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது. சிறிலங்காவில் நான்கு நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இந்த தொலைத்தொடர்பு ஆய்வகத்தை திறந்து வைக்கவுள்ளார். http://www.puthinappalakai.net/2018/05/14/news/30870
-
- 1 reply
- 332 views
-
-
மோதலில் பயணிக்கும் தேசிய அரசாங்கம் பிரதமரை நீக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என்கிறார் எஸ்.பி.திசாநாயக்க (ஆர்.யசி) தேசிய அரசாங்கத்தில் பிரதமருடன் இணக்கப்பாட்டுடன் ஜனாதிபதி செயற்பட முடியாத நிலைமை உள்ளது. ரணிலை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். எனினும் அதிகாரம் இல்லாமையே அதற்கு தடை யாக அமைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியின் பாரா ளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்கம் முடிவுக்கு வரும் நிலையில் மீண்டும் பலமான அரசாங்கத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்…
-
- 0 replies
- 263 views
-
-
கோத்தாவின் வெற்றிக்கு சிறுபான்மையினரின் ஆதரவு அவசியமற்றது (இராஜதுரை ஹஷான்) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாராயின் சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவு மாத்திரம் போதுமானது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவையில்லை என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தவைர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இவர்களின் தீர்மானத்திற்கு எமது இயக்கத்தின் உறுப்பினர்கள் பூரண ஆத…
-
- 0 replies
- 341 views
-
-
2020 ஜனாதிபதிபத்தேர்தல் பல நெருக்கடிகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் - பொதுபலசேனா (இரஜதுரை ஹஷான்) நாட்டில் தற்போதுள்ள பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியிலான நெருக்கடிகளுக்கான தீர்வை எதிர்வரும் 2020 ஆம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலே பெற்றுக் கொடுக்கும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் மற்றும் சமூக ரீதியில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடனே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தேசிய அரசாங்கத்தின் சில அடிமட்டக் குறைப்பாடுகள் காரணமாக அவர்களின் கொள்கைத் திட்டங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேசிய அரசாங்கத்தின் மீது விர…
-
- 0 replies
- 193 views
-
-
அதிபர் வேட்பாளர் யார்? – அறிவிக்கத் தயங்கும் மகிந்த அடுத்த அதிபர் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுவது பற்றி, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தம்முடன் இதுவரை கலந்துரையாடவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த அதிபர் தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளர் தொடர்பாக, மகிந்த ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “கூட்டு எதிரணியின் அதிபர் வேட்பாளரின் பெயரை இப்போது வெளியிட வேண்டியதில்லை. கோத்தாபய ராஜபக்ச ஒரு பிரபலமான வேட்பாளராக இருப்பார் என்று பேசப்பட்டாலும், அதுபற்றி அவர் என்னுடன் கலந்துரையாடவில்லை. அரசாங்கம் தேர்தலை அறிவித்த பின்னரே, நாங்கள் எமது வேட்…
-
- 0 replies
- 201 views
-
-
நாளை மறுநாள் சிறிலங்கா அதிபருக்கு மற்றொரு ‘சோதனை’ கூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா என்று, தீர்மானிக்கும் வாக்கெடுப்பு ஒன்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும், 17ஆம் நாள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்திலேயே, கூட்டு அரசாங்கத்தில் நீடிப்பதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் எனக் கோரும் முன்மொழிவு ஒன்றை கட்சியின் மூத்த துணைத் தலைவரான ஜோன் செனிவிரத்ன சமர்ப்பிக்கவுள்ளார். இதன் அடிப்படையிலேயே வாக்கெடுப்பு நடத்த…
-
- 0 replies
- 268 views
-
-
சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் ராவத் நேற்று, கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்புத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றார். நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்த ஜெனரல் ராவத், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்…
-
- 0 replies
- 104 views
-
-
லசந்த படுகொலை – புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை சமர்ப்பிப்பு சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர், படுகொலை தொடர்பான புதிய தகவல்களுடன் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை நேற்று கல்கிசை நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான, மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் பிரசன்ன நாணயக்கார மற்றும் கல்கிசை காவல் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி திஸ்ஸ சுகதபால ஆகியோரை எதிர்வரும் 25ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார். http://www.puthinap…
-
- 0 replies
- 165 views
-
-
சிறிலங்காவுக்கு 1 பில்லியன் டொலர் கடன் வழங்க சீன அரசு அனுமதி சிறிலங்காவின் மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீன அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்த, சீனத் தூதுவர் செங் ஷியுவான், இந்த தகவலை தெரிவித்துள்ளார். சீனாவின் இந்தக் கடன், எக்சிம் வங்கி ஊடாக வழங்கப்படவுள்ளது. சிறிலங்கா தரப்பு நிர்வாக மற்றும் சட்ட நடைமுறைகளை விரைவாக முன்னெடுக்குமாறும், சீனத் தூதுவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம், மற்றும் கொழும்பு துறைமுக நகரத் திட்டம் குறித்த…
-
- 0 replies
- 124 views
-
-
சிறிலங்கா – இந்திய இராணுவத் தளபதிகள் சந்தித்துப் பேச்சு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், இன்று காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் நேற்று பிற்பகல் தனி விமானத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன், மேஜர் ஜெனரல் பிரிதி சிங், பிரிகேடியர் முகேஸ் அகர்வால், உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினரும் சிறிலங்கா வந்துள்ளனர். இன்று காலை சிறிலங்கா இராணுவத் தலைமையகத்துக்கு சென்ற இந்திய இராணுவத் தளபதிக்கு, சிறிலங்கா படையினரின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டத…
-
- 0 replies
- 169 views
-
-
அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி? வடமாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு இந்தமுறை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடக் கூடுமெனத் தெரியவருகின்றது. மேலும் கடந்த தேர்தலைப்போலன்றி இம்முறை கடுமையான போட்டி நிலவுமெனவும் எதிர்வு கூறப்படுகிறது. கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா முதலமைச்சர் வேட்பாளராகப்…
-
- 0 replies
- 504 views
-
-
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை நிராகரித்தார் விக்னேஸ்வரன்? சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வந்த போதும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதனை நிராகரித்து விட்டார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராகும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், வடக்கு மாகாண மக்களுக்கு பணியாற்றவே தாம் விரும்புவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு அவர் கூறியிருக்கிறார் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம், எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அவருக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற ஆசனத்தை வழங்க க…
-
- 1 reply
- 507 views
-
-
வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி, இரணைதீவுக்குப் பயணித்துள்ளனர். அங்கு தங்கியிருக்கும் மக்களின் குடிதண்ணீர் விநியோகத்துக்காக ஓர் இரு சக்கர உழவு இயந்திரத்தையும் மக்களுக்காக அவர்கய் வழங்கி வைக்கவுள்ளனர் . இரணை தீவுப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விட…
-
- 2 replies
- 460 views
-
-
காலில் விலங்கிட்ட கைதி, யாழ்.போதனா வைத்திய சாலையில் – காவலரை தேடும் நோயாளிகள்.. காலில் விலங்கிட்ட நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் கைதி ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்.போதனா வைத்திய சாலையில் விடுதி இலக்கம் 08இல் காய்ச்சல் காரணமாக குறித்த நபர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சிகிச்சை பெற்று வரும் கைதியை சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மனிதாபிமானமற்ற முறையில் கட்டிலுடன் விலங்கிட்டு உள்ளார். அதனால் குறித்த நபர் காலில் விலங்கு மாட்டப்பட்ட நிலையிலையே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அது குறித்து குறித்த விடுதியில் சிகிச்சை பெற்று வரும் நபரொருவர் தெரிவிக்கையில் , விட…
-
- 2 replies
- 556 views
-
-
வரலாற்றைக் காப்போம்!! போர் முடிந்து 9 ஆண்டுகள் நிறைவடையும் இந்தவேளையிலும் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடும்படலமும் அவற்றைத் தோண்டியெடுக்கும் பணிகளும் வெகு தீவிரமாக நடந்து வருகின்றன. அடிக்கடி ஆயுதங்களைத் தேடி தோண்டும் படலமும் நடக்கிறது. ஒருபுறத்தில் ஆயுதங்களைத் தேடும் படலம் நடந்துகொண்டிருக்கையில் மறுபுறத்தில் புலிகள் புதைத்து வைத்தனர் என்று நம்பப்படும் தங்கத்தைத் தேடும் படலமும் மும்முரமாக நடக்கிறது. புலிகள் புதைத்து வைத்தனர் என்று கூறப்படும் பெரும் தொகையான தங்கப் புதையலை மீட்பதற்காக நடத்தப்பட்ட உத்தியோகபூர்வமான பல தேடுதல் நடவடிக்கைகள் இறுதியில்…
-
- 0 replies
- 392 views
-
-
தமிழீழ விடுதலை புலிகள் இயக்க மாவீரர்களில் ஒருவரான கரிகாலன் என்று அழைக்கப்படும் பாலமுரளியின் உடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுகின்ற வகையில் அவரின் மனைவி சர்மிளாதேவிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியால் சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது. கரிகாலனின் விதவை மனைவி சர்மிளாதேவி அவரின் குழந்தையுடன் மூளாய், காளி கோவிலடியில் மிகுந்த வறுமையில் வாழ்கின்றார். இவரின் கஷ்ட நிலை குறித்து அறிந்த ஜனநாயக போராளிகள் நேரில் சென்று விசாரித்து ஆறுதல் சொன்னார்கள். இவர் தையல் வேலைகளில் கை தேர்ந்தவராக இருப்பதால் இவரின் வாழ்வாதார மேம்பாட்டு சுய தொழில் முயற்சிக்காக தையல் இயந்திரம் ஒன்றை வழங்கி வைக்குமாறு ஜனநாயக போராளிகளிடம் இவர் கோரிக்கை விடுத்தார். இவரிடம…
-
- 2 replies
- 741 views
-
-
ஸ்ரீலங்காவிற்கு ஆலோசணை வழங்க 'வெள்ளையர்களுக்கு' அருகதை இல்லை: அமைச்சர் மனோ கணேசன் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு சர்வதேசத்தின் தலையீடு அவசியமற்றது என்று தெரிவித்துள்ள ஸ்ரீலங்காவின் தேசிய நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசன்இ யுத்தக் குற்ற விசாரணைகள் உட்பட போரின் போது நிகழ்ந்த பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமது அரசாங்கத்திற்கு கூறுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு அருகதை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா அரச தலைவரின் பொறுப்பில் இதுவரை இருந்த தேசிய நல்லிணக்க அமைச்சின் கடமைகளை இன்றைய தினம் சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் சர்வதேச நாடுகளை வெள்ளையர்கள்…
-
- 5 replies
- 588 views
-
-
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாத நிலையில், குறித்த கொடுப்பனவுகளை வழங்க கோரி வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியர்கள் இன்று திங்கட்கிழமை (14) ஒரு நாள் அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அடையாள பணிப்பகிஸ்கரிப்பில் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றுகின்ற வைத்தியர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்திய…
-
- 0 replies
- 498 views
-
-
தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சியில் வாள் முனையில் கொள்ளை தென்மராட்சி அறுகுவெளிப் பகுதியில் வாள் முனையில் கொள்ளைச் சம்பவம் ஒன்று நள்ளிரவுப் பொழுதில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் உட்புகுந்த கொள்ளையர்கள் நால்வர் குழந்தையின் கழுத்தில் வாள் வைத்து அச்சுறுத்தியுள்ளனர். தாலிக்கொடி, காப்பு உள்ளிட்ட 10 பவுண் நகைகள், 2 இலட்சத்து, 30 ஆயிரம் ரூபா பணம் மற்ற…
-
- 1 reply
- 409 views
-