ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142751 topics in this forum
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்…
-
- 4 replies
- 383 views
-
-
8 Feb, 2025 | 04:40 PM யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள நிலையில் குறித்த முச்சக்கரவண்டியானது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரிய சேதங்கள் இல்லாது தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், குறித்த சந்தியில் நாளாந்தம் தொடர்ச்சியாக வாகனங்கள் மோதி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது, ஆகையினால் குறித்த சந்தியில் வீதிச் சமிக்ஞை விளக்கு பொருத்தப்பட வேண்டுமென தொடர்ச்சியாக அப…
-
- 1 reply
- 332 views
-
-
சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் February 26, 2025 06. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளது. எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இந்த அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ’33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு நாளில் அவர் விதைக்கப்பட்ட இடத்தில் அவர் குடும்பத்தாரால் உருவாக்கப்பட்டு தாயாரால் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள ஆலயத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்’ என்று குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 32 ஆண்டுகள் சிறையில் இருந்த …
-
- 2 replies
- 311 views
-
-
27 Feb, 2025 | 05:00 PM (எம்.மனோசித்ரா) சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனா அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். எனது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு தினமும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வைத்தியர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் சிறை…
-
-
- 1 reply
- 221 views
-
-
கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் கிளிநொச்சியில் கடல் நீரை நன்னீராக்கும் நிலையத்தை பார்வையிட்டார் வடக்கு ஆளுநர் 28 Feb, 2025 | 06:23 PM யாழ்ப்பாணம் - கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர். அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்…
-
- 0 replies
- 124 views
-
-
28 Feb, 2025 | 05:02 PM (நமது நிருபர்) தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாகச் செயற்படுவதற்கு ஒன்றிணையுமாறு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பின…
-
- 0 replies
- 123 views
-
-
28 FEB, 2025 | 03:21 PM மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும் என்றும், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியை அதிகரித்து அனைத்து இலங்கையர்களுக்கும் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தை வழங்குவதே எமது நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். வலுசக்தி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள ஐந்தாண்டு மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அபிவிருத்தித் திட்டமான "பசுமை வலுசக்தித் துறையை விரைவுபடுத்தும் திட்டம் 2025-2030" அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (27) கொழும்பு சினமன…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
ரணிலின் அரசியல் நகர்வுகள் – அநுர அரசுக்கு ஆபத்தா? February 28, 2025 11:10 am முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுவரும் சில அரசியல் நகர்வுகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளையே பின்பற்றி வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தில் ரணில் அரசாங்கம் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளையே அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. அதற்கு ஏற்றால்போல் சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாடுகளில் இருந்து விலகி செயல்பட முடியாதென அநுர அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவி…
-
-
- 2 replies
- 394 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் எச்சரிக்கையை கார்டினல் புறக்கணித்தார்: ஞானசார தேரர் குற்றச்சாட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம் ரஞ்சித்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் அது காதில் விழவில்லை என்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார், அரசாங்க புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தனர் என்று கூறினார். “தாக்குதலுக்கு முன்பே நாங்கள் கார்டினலை அணுகி அவருடன் நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி, சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து எச்சரித்தோம். இருப்பினும், அவர…
-
- 1 reply
- 204 views
-
-
சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் - சிறிதரன் எம்.பி சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வார்த்தைக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு சிறிதரன் உரையாற்றியிருந்தார். 4 விடங்களை முன்வைத்து நீதியமைச்சரிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் வினவியிருந்தார். 1. தற்போது எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்? 2. இந்த தமிழ் அரசியல் கைதிகள் எந்தெந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? 3. இவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள்? 4. மனிதாபிமான அடிப்படையிலோ,ஜனாதிபதியின் பொது மன்…
-
- 1 reply
- 162 views
-
-
Published By: DIGITAL DESK 3 28 FEB, 2025 | 09:29 AM 1,400 பில்லியன் ரூபா மூலதன ஒதுக்கீட்டை அடுத்த 08 மாதங்களில் கிராமிய மட்டத்திலான பயனுள்ள திட்டங்களுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்க அதிபர்களுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதால் நாட்டின் பொருளாதாரத்தை 3% - 4% ஆக அதிகரிக்க முடியுமெனவும், பொருளாதாரத்தை கிராமத்தை நோக்கி நகர்த்தும் போது தற்போது உள்ள பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்தவும், புதிய வாய்ப்புக்களை அறிந்துகொள்வதற்குமான அவசியத்தையும் ஜனாதிபதி தௌிவுபடுத்தினார். மேலும் அரச சேவை தொடர்…
-
- 0 replies
- 140 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 FEB, 2025 | 01:46 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2016 ஆம் ஆண்டு காலம் முதல் பெரும்பாலான விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றில் 14 ஆணைக்குழுக்கள் பிரதானவையாக காணப்படுகின்றன. இவற்றுக்காக 5301 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 144 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாற…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 07:12 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பூகோள பயங்கரவாதம் மற்றும் பூகோள நவீன சவால்கள் ஆகியவற்றை எதிர்க்கொள்ளும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் கோட்பாடுகளுக்கு அமைவாகவே பயங்கரவாதத்துடன் தொடர்புடைய புதிய சட்டம் இயற்றப்படும். அடுத்த தேர்தல் வரை இது இழுபறியில் இருக்காது வெகுவிரைவில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும். வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில்…
-
- 0 replies
- 198 views
- 1 follower
-
-
2025 இல் இலங்கையின் ஏற்றுமதி வலுவான ஆரம்பத்தில்! 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.334 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டின் நம்பிக்கைக்குரிய தொடக்கத்தைக் குறிக்கிறது. அதேநேரம் இது 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் 10.3% அதிகரிப்பைப் பிரதிபலிக்கிறது. ஜனவரி 2025 இல் பொருட்கள் ஏற்றுமதி செயல்திறன் ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் இருந்தது, இது ஜனவரி 2024 உடன் ஒப்பிடும்போது 3.51% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிக்கின்றது. ஆடை மற்றும் ஜவுளி, தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வைரங்கள், இரத்தினங்கள் மற்றும் நகைகள், மசாலா பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் ஏற்ற…
-
- 0 replies
- 259 views
-
-
SJB-UNP ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை விரைவில்! ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த கூட்டம் முதலில் பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும், அன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, எதிர்வரும் சில நாட்களில் கூட்டம் தொடர்பான திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்…
-
- 5 replies
- 562 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 27 FEB, 2025 | 10:10 AM நாடளாவிய ரீதியில் தாதியர் சேவையிலுள்ளவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தவகையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று வியாழக்கிழமை (27) அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துடன், போராட்டத்தால் வைத…
-
- 3 replies
- 226 views
- 1 follower
-
-
முன்னாள் சபாநாயகர்கள் உட்பட பல அதிகாரிகள் தங்கள் பதவிக் காலத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் எரிபொருள் தொடர்பான பல செலவு அறிக்கைகளை சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) நாடாளுமன்றில் இன்று வெளியிட்டார். அதன்படி, 2024 நவம்பர் வரை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 70 ஊழியர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். சபாநாயகரின் வாகன செலவு 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 24 ஆம் திகதி வரை, முன்னாள் சபாநாயகர் 9 வாகனங்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த 9 மாத காலத்தில் மட்டும் எரிபொருளுக்காக ரூ.3.34 மில்லியன் செலவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன், முன்னாள் துணை சபாநாயகர் 9 மாதங்களில் 6 வாகனங்களைப் பயன்படுத்தியுள்ளார் என்றும், எரிபொருளுக்காக 1.35 மில்லியன் …
-
- 0 replies
- 193 views
- 1 follower
-
-
தேங்காய் விலை ரூ. 250 தொட்டது! யாழ்ப்பாணத்தில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை 250 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வெள்ளை ஈயின் தாக்கம் காரணமாகவும், காலநிலை மாறுதல்கள் காரணமாகவும் தேங்காயின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதையடுத்தே தற்போது ஒரு தேங்காயின் விலை 250 ரூபாவைத் தொட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
-
-
- 13 replies
- 831 views
- 2 followers
-
-
26 Feb, 2025 | 05:36 PM எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று புதன்கிழமை (26) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி, தமிழ் தேசிய கட்சியின் தலைவர் நா.சிறீகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் வேந்தன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் வி.மணிவண்ணன், சமத்துவக் கட்சியின் தலைவர் மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ் அரசுக் கூட்டமைப்பின் சார்பில் நாவலன், பா.க…
-
- 2 replies
- 318 views
-
-
Published By: VISHNU 27 FEB, 2025 | 03:47 AM (நா.தனுஜா) இலங்கையில் மோதலினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதாகவும், தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் செவ்வாய்கிழமை (25) இலங்கை சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க…
-
- 1 reply
- 230 views
- 1 follower
-
-
வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி பூஜைகள் அமைதியாக இடம்பெற்றது நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றது. அந்தவகையில் புதன்கிழமை (26) மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றது. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை ஆலயத்தில் மாலை 6மணிவரை மாத்திரமே பூஜைகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளிற்கு சென்றிருந்தனர். இதேவேளை புதன்கிழமை (26) காலை முதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிசார் கடமையில் ஈடு…
-
- 6 replies
- 361 views
-
-
Published By: VISHNU 27 FEB, 2025 | 03:52 AM (நா.தனுஜா) அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜய…
-
- 0 replies
- 133 views
- 1 follower
-
-
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார் February 24, 2025 5:27 pm வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார். இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார். வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போரா…
-
- 5 replies
- 433 views
-
-
ஏலத்தில் விடப்படவுள்ள அரச வாகனங்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு! அதிக பராமரிப்பு செலவுகளைக் கொண்ட அமைச்சுகளுக்குச் சொந்தமான வாகனங்களை அடுத்த மார்ச் மாதத்தில் ஏலத்தில் விடத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது பொது சேவை செலவுகளைக் குறைக்க அனைத்து அரசு அலுவலகங்களையும் அரசு கட்டிடங்களுக்குள் கொண்டு வருவதன் அவசியம், பயன்படுத்தப்படாத அலுவலக உபகரணங்களை அகற்றுதல், மூடப்பட வேண்டிய, ஒன்றிணைக்கப்பட வேண்டிய மற்றும் தனியார் உரிமைக்கு மாற்றப்பட வேண்டிய நிறுவனங்களை அடையாளம் கண்டு,…
-
- 1 reply
- 285 views
-