Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 5 யானைகள் உயிரிழப்பு! கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் பரிதாபகரமாக ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி இயக்கப்படவிருந்த புலத்திசை ரயில் சேவையையயும் இரத்து செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்…

  2. கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல் – அதிபர்கள் மீதான தாக்குதலுக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்! adminFebruary 20, 2025 கல்விச் சமூகம் எதிர்நோக்கிவரும் பாரிய அச்சுறுத்தல்களை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன், கல்விச் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் தொழிற்சங்க செயற்பாடுகளை மேற்கொள்வோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் ஆ. தீபன் திலீபன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை பாடசாலை அதிபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஓய்வு பெற்ற அதிபர் உயிரிழந்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் குற…

  3. Published By: RAJEEBAN 20 FEB, 2025 | 11:02 AM சில துப்பாக்கி பிரயோகங்களில் ஈடுபட்ட நபர் அல்லது சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டாலும் மூன்று நான்கு மாதங்களின் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர், அதன் பின்னர் அவர்கள் மீண்டும்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். daily mirror இலங்கையில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்ற நிலையில், 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் காரணமாக 6வயது சிறுமி 9 வயது சிறுவன் உட்பட 11 உயிர்கள் பலிகொல்லப்பட்டுள்ள நிலையில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய அழுத்தத்தின் கீழ் அதிகாரிகள் உள்ளனர். ஆறுவயது சிறுமி, 9 வயது சிறுவன் பாதாள உலகத்தை சேர்ந்த கனேமுல்ல ச…

  4. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் …

  5. யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நேற்று மாலை யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும், குறித்த மயானத்தின் நிர்வாக உறுப்பினருமான கிருபாகரனினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டது. யாழ். செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் அண்மையில் அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மண்டையோடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டுக்கமைவாக பொலிஸார் குறித்த விடயத்தை யாழ…

  6. வேளாண்மை அறுவடையின் பின்னர் யானைக் கூட்டம் புதிதாக முளைக்கின்ற புல் இனங்களை உண்பதற்காக நாடி வருகின்றன. அம்பாறை மாவட்டத்தில் திடீரென சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு காலை முதல் மாலை வருகை தந்துள்ளன. இதன்போது குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன், கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது. இன்று சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி வருகை தந்திருந்தன. தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன், இவ்வாறு வயல்வெளிகளை நோக்கி வருகை தந்துள்ள ய…

  7. 19 Feb, 2025 | 05:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ். நூலகம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியதை போன்று தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக மக்கள் விடுதலை முன்னணி மன்னிப்புக் கோர வேண்டும். 75 ஆண்டுகால சாபத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி பொறுப்புக் கூற வேண்டும். 75 ஆண்டு கால அரசாங்கத்தை சாபம் என்று இனியும் குறிப்பிட்டு மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தாதீர்கள். சாயம் வெளுத்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான இரண்டா…

  8. 19 Feb, 2025 | 08:24 PM கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்திற்கு, நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரையானது மக்களது காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட நிலையில், அந்த விகாரைகயை அகற்றுமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தையிட்டி போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைப்பு! | Virakesari.lk

  9. 19 Feb, 2025 | 05:46 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களில் ஈடுபடும் அல்லது ஒழுங்கமைக்கும் தரப்பில் பலர் இலங்கையில் இல்லை. பாதுகாப்பு தரப்பின் ஒருசில அதிகாரிகள் பாதாள குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளார்கள். கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற அமர்வின்போது கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிரணியின் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் ச…

  10. 19 Feb, 2025 | 08:32 PM யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை மூவர் மீது மோசமான தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. குடும்ப தகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH - 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி, கற்களால் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது. வாகனத்தில் வருகை தந்த தாக்குதல் கும்பல் வானத்திற்குள் வாள்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அடி காயங்களுக்குள்ளான மூவரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசா…

  11. Published By: DIGITAL DESK 7 19 FEB, 2025 | 04:45 PM (எம்.மனோசித்ரா) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர், அன்றைய தினத்திலிருந்து 52 - 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். பெப்ரல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம், சட்டமாக அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டதன் பின்னர் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெறும். குறித்த சட்ட மூலத்த…

  12. துப்பாக்கிச் சூட்டில் தந்தை, மகள் உயிரிழப்பு; மகன் படுகாயம்! மீத்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆணொருவரும், அவரது ஆறு வயது மகளும் உயிரழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மகன் மற்றும் மகளுடன் மோட்டார் சைக்களில் பயணித்த கல்பொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபர் மீது அடையாளம் தெரியாத குழுவினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், மோட்டார் சைக்கிளின் சாரதியான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகனும், மகளும் முறையே எம்பிலிப்பிட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டனர். இதன்போது, ஆறு வயது மகள் த…

  13. 2025 வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஆசிரியர்கள் அதிருப்தி editorenglishFebruary 19, 2025 2025 ஆம் ஆண்டு செலவுத் திட்டத்தில் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை அரசாங்கம் தீர்க்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இன்று குற்றம் சாட்டினார். ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், 2025 வரவு செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள சம்பளப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியளித்ததாகக் கூறினார். சுபோதினி குழு அறிக்கையின்படி மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு சம்பள முரண்பாடுகளைச் சரிசெய்ய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய அதேவேளையில், அரசு ஊழியர்கள் ரூ.20,000 சம்பள உயர்வு கோரிப் போராட்டங்களை நடத்தியதை அவர் நினைவுபடுத…

  14. நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு! கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாதாள உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இன்று அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையின் போது, சட்டத்தரணி போல் வேடமணிந்து வந்த நபரினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சட்டத்தரணிகளின் மேசையில் அமர்ந்திருந்த சந்தேக நபர் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். துப்ப…

  15. 19 FEB, 2025 | 11:02 AM இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரான அன்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick) இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரனை இன்று புதன்கிழமை (19) சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சுமந்திரனிடம் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக கேட்டறிந்ததோடு, வடக்கின் பொருளாதார நிலை மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் - சுமந்திரன் சந்திப்பு

  16. Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 05:19 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெற்றோலிய விற்பனையின் மூலம் 2023 -2024 வரையான காலப்பகுதியில் 265.63 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், இக்காலப்பகுதியில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் 42.04 பில்லியன் ரூபாய் இலாபமடைந்துள்ளது. எரிபொருள் இறக்குமதியின் போது அறவிடப்படும் 50 சதவீத வரியை குறைப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற அமர்வு வேளையில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேல…

  17. தமிழரசுக் கட்சியினுடைய பதில் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்(M. A. Sumanthiran) நியமிக்கப்பட்டுள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இதுவரை அந்த பதவியில் இருந்த மருத்துவர் ப.சத்தியலிங்கம் எம்.பி. சுகவீனம் காரணமாக பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் அறிவித்தமையை அடுத்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பதில் செயலாளராக இருக்கும் சத்தியலிங்கம்(P. Sathiyalingam) நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்ற நிலையில், அவர் ஏன் பதில் செயலாளர் பதவியை மட்டும் துறந்தார் என அரசியல் ஆய்வாளர் திபாகரன் கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போ…

  18. 18 FEB, 2025 | 08:12 PM (எம்.நியூட்டன்) ஒரு இனத்தின் தேசிய அடையாளங்களில் உணவுப் பண்பாடும் ஒன்று. தேசியத்தைக் கட்டமைப்பதில் பண்பாட்டின் ஏனைய கூறுகளைப்போன்று உணவுப் பண்பாடும் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது. ஆனால், மதப் பண்பாட்டில் பௌத்தத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற நாம், உணவுப் பண்பாட்டில் நிகழும் ஆக்கிரமிப்புகள் குறித்துக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். அண்மைக்காலமாக வெளிநாட்டு உணவகங்கள் பல இங்கு கிளைகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. எமது உணவுப் பண்பாட்டில் திணிக்கப்படும் மாற்றங்கள் பற்றி நாம் விழிப்படையாவிட்டால் வெளிநாட்டு உணவகங்கள் எமது பாரம்பரிய உணவுகளை மேலும் ஓரங்கட்டிவிடும் எமது ஆரோக்கியமும் மேலும் வீழ்ச்சியடையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்த…

  19. 18 FEB, 2025 | 05:58 PM உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும் என தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நமது பண்பாடு, நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் வைத்தியசாலையில் நடைபெற்றது. உடல் உறுப்பு தான த…

  20. 18 FEB, 2025 | 05:27 PM மன்னார் தீவில் மக்களின் விருப்பமின்றி கனிய மணல் அகழ்வதற்காக நாளை (19) மேற்கொள்ளப்படவுள்ள கள ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் விருப்பமின்றி இந்த கள ஆய்வு இடம்பெற்றால் பாரிய அளவில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது. இதனால் ஆபத்தான நிலைமைகள் தோன்றலாம். இதன் காரணமாக சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களும் உண்டாகும் என ரவிகரன் மேலும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் இன்று (18) நடைபெற்ற வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்…

  21. 18 Feb, 2025 | 03:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்…

  22. (எம்.நியூட்டன்) யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், யாழ். மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் மீளாய்வு கூட்டம் நடை பெற்றபோதும் அமைச்சர் சந்திரசேகரனால் இ…

  23. 18 Feb, 2025 | 05:32 PM சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்ப…

  24. அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாஜத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீன தூதரக அதிகாரிகளை எமது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். கொரோனா காலங்களிலும் இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும்…

  25. 18 FEB, 2025 | 12:33 PM மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றைய தினம் மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார். இதன்போது, பாடசாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.