Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சட்டத்தரணி,அருட்தந்தையர் உட்பட 10 பேருக்கு தடை உத்தரவு adminFebruary 17, 2025 மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் எனத் தொிவித்து மன்னார் காவல்துறையினரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவு கோாிக்கைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) மாலை அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவதற்கு அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு சென்றிருந்த போதும் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்ப்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந…

  2. வடக்குக்கு வரும் நிதி திரும்பி செல்ல கூடாது-வடக்கு மாகாண ஆளுநர்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியினால், நேற்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது அதன்படி வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நி…

  3. பாண் விலை 10 ரூபாவினால் குறைப்பு! கோதுமை மா விலை குறைப்புக்கு அமைவாக பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1421891

  4. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கை! இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்படுவதற்கு அல்லது மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பொலிஸ் மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்ப…

  5. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் ஷங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ஓமான் மஸ்கட் நகரில் இடம்பெறும் 8 ஆவது இந்து சமுத்திரமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்க…

  6. நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர், 100,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுக்கப்பட்டார். இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயை முறை…

  7. 18 FEB, 2025 | 10:28 AM போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அத…

  8. Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 10:47 AM சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும். நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சி…

  9. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நியமிக்கப்பட்டமை பல தரப்பகளில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பில் அரசியல் தரப்புகளில் இருந்து சாதக பாதக கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, அண்மையில் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அ…

  10. Published By: VISHNU 17 FEB, 2025 | 07:39 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தால். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக்…

  11. Published By: VISHNU 17 FEB, 2025 | 07:33 PM நாளை செவ்வாய்க்கிழமை (18) பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வெப்பமான வானிலை நிலவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும், மேலும் சிறு குழந்தைகள்…

  12. புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விசேட உணவுப் பொதி. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கையில், புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப…

  13. 17 FEB, 2025 | 05:37 PM வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்துவருகிறார்கள் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கலை கலாச்சாரம் கட்டிக் காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின…

  14. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 05:11 PM முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டுக்குரிய வரவு - செலவுத் திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஆரம்ப கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும்போதே இவ்விடயத்தை அறிவித்துள்ளார். இந் நிலையில் தமது அயராத தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுத்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தமது தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணத்துக்கான நித…

  15. 17 FEB, 2025 | 04:21 PM தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) கட்டப்பட்டமையை யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இராணுவம் போர்க்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான …

  16. Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 01:26 PM சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்…

  17. 17 FEB, 2025 | 10:48 AM மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு சேவையாக இலங்கையின் புகையிரத சேவை மீளமைக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கண்டியில் தெரிவித்துள்ளார். கண்டியில் இருந்து தெமோதர நோக்கி பயணித்த 'எல்ல ஒடிசி - கண்டி புகையிரதத்தில் எல்லவுக்கு செல்வதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கண்டி ரயில் நிலையத்துக்கு சென்றபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, புகையிரத சேவை மக்களுக்கு வசதியாகவும் நம்பகத்தன்மையுடனும் இலாபகரமாகவும் அமைய வேண்டும். அதற்காக அரசு பாடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள் நமது நாட்டின் அரசு நிறுவனங்களையும் பொதுச் சேவையையும் புறக்கணித்தன. இதனால், அந்த நிறுவனங்கள்…

  18. தேசிய மக்கள் சக்தியின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் editorenglishFebruary 17, 2025 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் நாடாளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டது. வரவு செலவு திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். வரவு செலவுத் திட்டம் https://globaltamilnews.net/2025/211574/ நேரலை

  19. ஒருவரைக் கடத்திச் சென்று அவரிடமிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடையவர். விமான நிலையத்திற்கு வந்தபோது.. பெப்ரவரி 8 ஆம் திகதி யாழ்.ஆரியகுளம் பகுதியில் ஒருவரைக் கடத்தி 8.478 மில்லியன் ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். அதன்படி, குற்றச் செயல்களில் ஈடுபட்ட இரண்டு ஆண் சந்தேக நபர்களும் இரண்டு பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். குறித்த கைது செய்யப்…

  20. முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். குறித்த போராட்டம் இன்று (16) மூன்றாவது நாளாக தொடர்கின்றது பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் இன்று மூன்றாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். போராளியின் கொள்கை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவருக்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்ற நிலையில் இன்றைய தினம் (16) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Gajendran) உள்ளிட்டவர…

  21. Published By: VISHNU 16 FEB, 2025 | 09:44 PM முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை சந்திப்பதற்காக பல்வேறுபட்ட தரப்பினரும் வருகை தந்திருந்த போதிலும் அவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் ஞாயிற்றுக்கிழமை (16) மறுக்கப்பட்டிருந்தது. மீன்பிடி அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பிரதமரை சந்திக்க வந்த கேப்பாபிலவு மக்கள் அவரை சந்திக்க முடியாது ஏமாற்றமடைந்தனர். இது தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி காணி உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார். தாம் அமைச்சர் சந்திரசேகரனின் அழைப்பின் பேரில் காணி விடுவிப்பு தொடர்பாக வந்திருந்த போதிலும் ஒரு நிமிடம் கூட தமக்கு ஒதுக்கப்படவில்லை. என்ற கருத்து இங…

  22. Published By: DIGITAL DESK 3 16 FEB, 2025 | 04:51 PM இராணுவ மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் பணிப்புரை விடுத்துள்ளது. வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

  23. இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்!இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421674

  24. யாழ்ப்பாணம் (Jaffna) - பலாலி விமான நிலையத்துக்கு கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து சேவைகள் இடம்பெற்றால் சிறப்பானது என கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (Eric Walsh) வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் (High Commissioner for Canada) வடக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சுற்றுலா துறையில் அபிவிருத்தி அவசியம். பாதை வலையமைப்பு மேம்படுத்தப்பட வேண்டியுள்ளது. வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள்பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பயணிகள் கப்பல் போக்குவரத்து என்பவையும் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்து…

  25. யாழ்ப்பாணம் (Jaffna) - சாவகச்சேரி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் இன்று (16.2.2024) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் தீயில் எரிந்த நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital ) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த உதவி பிரதேச செயலாளர் தமிழினி சதீசன் நேர்மையாக துடிப்புடன் மிகச் சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதி மக்களுக்கு வழங்கி வந்தவர் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். செய்திகள் - பிரதீபன் யாழில் பெரும் சோகம் - பெண் அரச அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.