ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சி ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சி ஆதரவாளர்கள் காணொளி எடுத்த மறு கட்சியின் ஆதரவாளர்மீது தாக்குதல் புதுக்குடியிருப்பு , வள்ளிபுனம் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவர் தாக்கப்பட்டார். புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்கானார். உதய சூரியன் மற்றும் சைக்கிள் கட்…
-
- 0 replies
- 366 views
-
-
ஆறு மணிநேரத்தில் ஐம்பது சதவீத வாக்குப் பதிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், பிற்பகல் ஒரு மணி வரை அளிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல் அளித்து வருகிறார்கள். அதன்படி, காலை ஏழு மணி முதல் பிற்பகல் ஒரு மணிவரையான, அதாவது, கடந்த ஆறு மணி நேரத்தில் புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஐம்பது சதவீதத்துக்கு மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அம்பாந்தோட்டை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 35 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. வவுனியாவில் 45 சதவீத வாக்குகளும் பதுளையில் 40 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. http://www.virakesari.lk/arti…
-
- 0 replies
- 405 views
-
-
340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள் குறிப்பிட்ட உள்ளுராட்சி மன்றத்தில் வட்டார வாக்களிப்பு நிலையங்களிலேயே எண்ணப்படவுள்ளது. வாக்குகள் எண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும். முதலாவது கட்டத்தில் ஒவ்வொரு வாக்குப்பெட்டிகளிலுமுள்ள வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இரண்டாம் கட்டத்தின் கீழ் அந்த வட்டாரத்திற்கு உட்பட்ட தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். இந்த தபால் மூல வாக்குகளின் எண்ணிக்கை 50இற்கு அதிகமாக இருந்தால் தனியாகவும் , 50க்கு குறைவாக இருப்பின் அவற்றை ஏனைய வாக்குகளுடன் கலந்து எண்ணப்படும். மூன்…
-
- 14 replies
- 949 views
-
-
ஈ.பி.டி.பி வேட்பாளர் மீது தாக்குதல் -டி.விஜிதா ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊர்காவற்றுறை - தம்பாட்டி வேட்பாளர் மீது, சற்று முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த வேட்பாளர், ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை - தம்பாட்டி பகுதியில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரின் வீட்டுக்குச் சென்ற கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் படுகாயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதல் சம்பவ…
-
- 0 replies
- 320 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் மீது தாக்குதல்! ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் வாக்களிப்பு தினமான இன்று சனிக்கிழமை அதிகாலை(10.02.2018) தாக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் ஓட்டுப்பள்ளி வட்டார வேட்பாளர் எம்.பி.எம். இர்சாத் ஹனி என்பவரே மோட்டார் சைக்கிளுக்கு அணியப்படும் தலைக்கவசத்தினால் தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் தாக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இந்த சம்பவம் அவரது வீட்டுக்குப் பக்கதிலுள்ள வீதியிலேயே இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 229 views
-
-
சாதனை படைத்த இலங்கையின் தமிழ் விஞ்ஞானிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. 2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, தாய்லாந்து மாநாட்டு மண்டபத்தில் 2018.01.01 தொடக்கம் 2018.02.06 வரை நடைபெற்ற சர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு போட்டியில் 97 நாடுகளைச் சேர்ந்த 1800 பல்கலைக்கழக கண்டுபிடிப்பாளர்கள் போட்டியிட்டனர். அப்போட்டியில் இலங்கை சம்மாந்து…
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழில் சுமூகமான வாக்களிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 1 மாநகர சபை , 3 நகர சபை, மற்றும் 13 பிரதேச சபை அடங்கலாக 17 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக யாழ்.மாவட்டத்தில் 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்காளர்கள் வாக்களிக்கப்பதற்கு எதுவாக 521 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்கள் மற்றும் தற்காலிக இடங்களில் வசிக்கும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கு இலவச போக்குவரத்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் காலை 7 மணி முதல் மாலை…
-
- 0 replies
- 217 views
-
-
த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் கைது! தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன நோட்டிஸ் வீடுகளில் கையளித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-candidate-and-supp…
-
- 0 replies
- 249 views
-
-
வாக்களிப்பு சற்றுமுன் ஆரம்பம் ! நாடளாவிய ரீதியில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்றுமுன் (7 மணி ) ஆரம்பமாகியது. இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 4 மணி வரை இடம்பெறும். இம்முறை வட்டார மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைகள் அடங்கிய கலப்பு முறையின் கீழ் தேர்தல் நடைபெறுகின்றது. இதன் கீழ் வட்டார அடிப்படையில் 60 சதவீதமான வாக்காளர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 40 சதவீதமான பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள். மொத்தமாக 43 அரசியல் கட்சிகளையும், 222 சுயேச்சைக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 57 ஆயிரத்து 252 வேட்பாளர்கள் போட்ட…
-
- 0 replies
- 248 views
-
-
''பிரிகேடியர் மீது விசாரணையின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும்'' லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெளி விவகார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை நடத்திவருகின்றன. விசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று கேள்வியெ ழுப்பியபோதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். கடந்த நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர்ந்த…
-
- 0 replies
- 261 views
-
-
இலங்கை சிறையில் உள்ள 113 இந்திய மீனவர்கள் விடுதலை எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 113 பேரை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்திய துணைத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த பரிந்துரைக்கு அமைவாக இவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது வழமையாகியுள்ள நிலையில் இவ்வாறு இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு யாழ்ப்பாணம் சிறையில் 121 தமிழக மீனவர்கள் தடுத்த…
-
- 0 replies
- 107 views
-
-
கறுப்புப் பட்டியலில் இலங்கை இலங்கையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பண மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கு நிதிவசதியளிக்கின்றமை தொடர்பில் அதி உயர் அபாய நிலையிலுள்ள மூன்றாம் உலக நாடுகள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. பண மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மூலோபாய குறைபாட்டையுடைய மற்றும் தீவிரவாதத்திற்கு நிதிவசதியளிக்கும் ஆட்சிமுறைகளை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளை உள்ளடக்கிய மேற்படி ஐரோப்பிய ஆணையகப் பட்டியலில் தியூனிஸியா, இலங்கை, திரினிடாட் மற்றும் டொபாகோ உள்வாங்கப்படுவதை நிராகரிக்க ஐரோப்பிய பாராளுமன்றத்தைச் …
-
- 0 replies
- 235 views
-
-
தேர்தல் கடமையிலீடுபட்ட வாகனம் விபத்து : மூவர் படுகாயம் முல்லைத்தீவில் தேர்தல்கடமையில் ஈடுபட்ட மாவட்ட செயலக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நந்திக்கடலுக்கு அண்மையாக மூன்றாம்கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர் மற்றும் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்து முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/30459
-
- 0 replies
- 236 views
-
-
பேச அழைத்து மகிந்த மிரட்டல்!! பேச அழைத்து மகிந்த மிரட்டல்!! உண்மையைப் புட்டுப்புட்டு வைத்தார் சம்பந்தன் 2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பயமுறுத்தும் வகையிலேயே செயற்பட்டார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா…
-
- 5 replies
- 802 views
-
-
‘எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது’ “எமது மக்கள் வாக்களிக்கக் கூடாது” என வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (09) தெரிவித்துள்ளனர். வவுனியா பிரதான தபாலகத்துக்கு அருகாமையில் 351 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், ‘காணாமல் போனோரை எங்கும் தேடி பார்த்தோம். காணவில்லை’ என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து விசேட வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், இருநாட்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல…
-
- 0 replies
- 288 views
-
-
முக்கிய படிநிலை தேர்தல் பரப்புரைகள் முற்றிலுமாக முடிவடைந்து நாளை நாடெங்கிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்தானே என்று அவ்வளவு இலகுவில், அசண்டையீனத்தில் இந்தத் தேர்தலைத் தட்டிக்கழித்துவிடாமல் வாக்காளர்கள் தமது ஆதரவை சரியான, தகுதியான வேட்பாளருக்கு வழங்குதல் அவசியம். ஏனெனில் இதுவே கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல். அதேநேரம் அதிகாரக் கட்டமைப்பின் அத்திபாரமும்கூட. உள்ளூராட்சித் தேர்தலின் தெரிவுமுறை ஏனைய தேர்தல்களில் இருந்து வேறுபடுகின்றது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நெர…
-
- 0 replies
- 332 views
-
-
உதயங்க விடுதலை ! பேஸ்புக்கில் பதிவு (எம்.எப்.எம்.பஸீர்) மிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடுதலை செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவினை இட்டுள்ளார். எனினும் இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவை தொடர்புகொன்டு கேட்ட போது, அது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்பதால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்தார். அத்துடன் 7 பேர் கொண்ட சிறப்புக் குழு அபுதாபி சென்றுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் கிடைக்கும் வரை எதுவும் கூற முடியாது என அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் உதயங…
-
- 2 replies
- 419 views
-
-
குளிர்களி விற்பனையில் ஈடுபடும் வாகனம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10மணியளவில் நீர்வேலி அரசகேசரி பிள்ளையார் ஆலய வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குளிர்களி விற்பனையில் ஈடுபடும் வாகனமானது நேற்று முன்தினம் வியாபார நடவடிக்கைகள் முடிந்ததன் பின்னர் இரவு 7மணியளவில் வழமையாக தரித்து நிற்கும் இடமான அரசகேசரி பிள்ளையார் ஆலய வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவில் இனந் தெரியாத விசமிகளால் 16இலட்சம் பெறுமதியான குறித்த வாகனத்திற்க்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வாகனத்தினை கண்ட அயலவர்கள் ஒன்று சேர்ந்து தீயை அணைக்க முற்பட்ட போதும்…
-
- 0 replies
- 278 views
-
-
இதுவொரு மூடத்தனமான செயற்பாடு! நான் தற்போது வெளிவிவகார அமைச்சர் இல்லை தனது கையொப்பத்துடன் வெளியாகியுள்ள போலிக்கடிதம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வெளிவிவகார அமைச்சின் கடிதத் தலைப்பில் தயாரித்துள்ள இந்த போலிக்கடிதத்தில் என்னுடைய கையொப்பத்தைச் சேர்த்துள்ள கும்பலானது தனது மூடத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளது. தற்போது நான் வெளிவிவகார அமைச்சர் இல்லை என்பதை அவர்கள் அறியாதிருக்கின்றனர். குறித்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவில் முறைப…
-
- 1 reply
- 330 views
-
-
சரியான சமிக்ஞையையே காண்பித்தாராம் – ‘கழுத்தறுக்கும்’ பிரிகேடியருக்கு ருவான் ஆதரவு விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, சரியான சமிக்ஞையையே காண்பித்துள்ளார் என்றும் அதற்காக அவரை ஆதரிப்பதாகவும், சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். “சிறிலங்கா அதிபர் தலையிட்டு பிரித்தானியாவிலேயே இருக்குமாறு அவரைக் கேட்டுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் இதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். விடுதலைப் புலிகள் ஆதரவு குழுவுக்கு அவர் காண்பித்த சமிக்ஞைக்காக பிரிகேடியருக்கே எனது வாக்கு. அவருக்கு நன்றி கூறுகிறேன். அங்கு எதிர்ப்புத் தெரிவித்த விடுதலைப் புலிகள் எவருமே,…
-
- 3 replies
- 418 views
-
-
தேர்தல் நேரங்களில் விக்னேஸ்வரன் நாடகம்! சுமந்திரன் பதில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் தேர்தல் நேர அறிக்கை தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தொலைக்காட்சி ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் இப்படித்தான் செயற்பட்டார். வாக்களித்த மக்களை மந்தையாடுகள் என அவர் வர்ணித்தமைக்கு அவரைத் தேர்தலில் நிறுத்தியவர்கள் என்ற முறையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றோம் என…
-
- 2 replies
- 535 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைபாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நாளைய தினம் (9) முறைபாடு செய்யவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் இலங்கைப் பிரஜை அல்லாத நபர் ஒருவரை மத்திய வங்கியின் ஆளுனராக தெரிவு செய்தமை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் என்ற ரீதியில் குறித்த அமைச்சில் நடைபெறும் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாகவே ஜனாதிபதிக்கு எதிராக முறைபாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், மகாவலி அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன…
-
- 0 replies
- 237 views
-
-
தேர்தலுக்கு வடக்கு தயார் : படங்கள் நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான அனைத்து தயார்ப்படுத்தல்களும் வடக்கில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கிலுள்ள சகல மாவட்டங்களிலும் வாக்கு பெட்டி விநியோக நடவடிக்கைகள் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. -(3) http://www.samakalam.com/செய்திகள்/தேர்தலுக்கு-வடக்கு-தயார்/
-
- 0 replies
- 365 views
-
-
மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு, லெப்னல் கேணல் கௌசல்யனின் 13வது நினைவேந்தல்! அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கெப்டன் அரியநாயகம் சந்திரநேரு, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்னல் கேணல் கௌசல்யன் உட்பட படுகொலை செய்யப்பட்ட 7 பேரின் 13வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை (08) திருக்கோவிலில் அனுஷ்டிக்கப்பட்டது. இவ் நினைவேந்தலானது மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான சந்திரநேரு சந்திரகாந்தனின் தலைமையில் அம்பாறை திருக்கோவில்-2 சுப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள நினைவுத் தூயில் இட…
-
- 0 replies
- 529 views
-
-
ஒருவருடமாக நிறுத்தப்பட்டிருந்த ரஜீவ் நாகநாதனின் கார் : சி.ஐ.டி. விசாரணைகளில் அதிர்ச்சித் தகவல் ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில், கடத்தப்படும் போது 5 மாணவர்களும் பயணித்த கறுப்பு நிறக் கார் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த தகவல்களை மையப்படுத்தி விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கறுப்பு நிற இன்டிகோ ரகத்தை சேர்ந்த குறித்த கார், 2008.09.17 ஆம் திகதி மாணவர்களுடன் சேர்த்து கடத்தப்பட்ட பின்னர், சுமார் ஒரு வருடமாக கடற்படை தலைமை…
-
- 0 replies
- 238 views
-