ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
18 FEB, 2025 | 05:58 PM உயிர் வாழச் செய்ய முடியாமற்போன நோயாளியின் உறுப்புகளை உயிருக்காக போராடும் நோயாளிக்கு தானம் செய்வது மிகவும் மனிதாபிமானம் மிக்க செயலாகும் என தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நமது பண்பாடு, நமது மதங்கள் மூலம் கிடைத்த இந்த தானம் செய்யும் பண்பு மிக உயர்ந்த நற்செயலாகும். அந்த பரோபகார சிந்தனை நமது நாட்டின் கலாசாரத்திலும் “இலங்கையர்” என்ற அடையாளத்திலும் வலுவானதாக இருப்பதை நான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். உடல் உறுப்பு தான தேசிய தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (18) பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் வைத்தியசாலையில் நடைபெற்றது. உடல் உறுப்பு தான த…
-
- 1 reply
- 197 views
- 1 follower
-
-
(எம்.நியூட்டன்) யாழ். மாவட்டத்தில் உள்ள வீதிகளின் முழுமையான விபரங்கள் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தயாரிக்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு கையளிக்கப்படும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டு ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை நடத்தியபோது யாழ். மாவட்டத்துக்கு வீதிகளை புனரமைக்க எவ்வளவு நிதி தேவை, எத்தனை கிலோ மீற்றர் தூர வீதிகள் புனரமைக்கப்படவேண்டும் என்ற கேள்விகளை கேட்டபோது அதற்கு முறையான பதில்களை அரசாங்க அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை. மேலும், யாழ். மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழுவின் மீளாய்வு கூட்டம் நடை பெற்றபோதும் அமைச்சர் சந்திரசேகரனால் இ…
-
- 1 reply
- 207 views
- 1 follower
-
-
18 Feb, 2025 | 03:21 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். என்றாலும் வைத்தியர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாமல் இருப்பதையிட்டு கவலையடைகிறேன் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வரவு செலவு திட்டத்தில் வைத்தியர்கள் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடந்த வருடம் மாத்திரம் 2ஆயிரம் டாக்டர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். பட்டப்பின் படிப்பு பயிலுனர்களுக்காவது அரசாங்கம் ஏதாவது ஒரு விடயத்தை செய்…
-
- 2 replies
- 216 views
-
-
18 Feb, 2025 | 05:32 PM சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை அதிகரிப்பானது இன்று செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்திற்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரைட் ரைஸ், கொத்து ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினாலும், தேநீரின் விலை 05 ரூபாவினாலும், பால் தேநீரின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்ப…
-
- 0 replies
- 128 views
-
-
அத்துமீறிய இந்திய இழுவை மடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, இந்திய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுவதற்காக எம்மை பயன்படுத்த இடமளிக்க மாட்டோம் என யாழ். மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாஜத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் சீன தூதரக அதிகாரிகளை எமது கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தில் சந்தித்தோம். கொரோனா காலங்களிலும் இந்திய இழுவைப் படகுகளினால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டபோதும்…
-
- 0 replies
- 113 views
-
-
26 MAR, 2024 | 03:40 PM முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) நிராகரித்துள்ளது. இதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது . இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வை…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
18 FEB, 2025 | 12:33 PM மது போதையில் அரச பாடசாலை ஒன்றிற்குள் சென்று மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் முல்லைத்தீவு, மல்லாவி பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. மல்லாவி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றைய தினம் மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்றுள்ள நிலையில் அங்கிருந்த மாணவிகளிடம் அநாகரீகமாக செயற்பட்டுள்ளார். இதன்போது, பாடசாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்…
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
பாண் விலை 10 ரூபாவினால் குறைப்பு! கோதுமை மா விலை குறைப்புக்கு அமைவாக பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1421891
-
- 1 reply
- 390 views
-
-
சட்டத்தரணி,அருட்தந்தையர் உட்பட 10 பேருக்கு தடை உத்தரவு adminFebruary 17, 2025 மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக,நஷ்டம்,தொந்தரவு ஏற்படலாம் எனத் தொிவித்து மன்னார் காவல்துறையினரால் முன் வைக்கப்பட்ட தடை உத்தரவு கோாிக்கைக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னார் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை(17) மாலை அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனிய மணல் அகழ்வு மேற்கொள்வதற்கான அனுமதி வழங்குவதற்கு அரச திணைக்கள அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காக இரு முறை மன்னார் மாவட்டத்திற்கு சென்றிருந்த போதும் இரு முறையும் மக்களின் ஒன்றினைந்த எதிர்ப்பால் அரச திணைக்களங்கள் உள்ளடங்களாக சம்பந…
-
- 0 replies
- 227 views
-
-
வடக்குக்கு வரும் நிதி திரும்பி செல்ல கூடாது-வடக்கு மாகாண ஆளுநர்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதியளித்தவாறு வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளார் என்றும் அவருக்கு எமது வடக்கு மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியினால், நேற்று திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது அதன்படி வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு வகையிலும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதிகளவான நி…
-
- 0 replies
- 153 views
-
-
பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள சிறப்பு அறிக்கை! இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அல்லது சேவையை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் பணியில் சேரும் அதிகாரிகள், போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி பொலிஸ் ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் பொலிஸ் அதிகாரிகள், பணியமர்த்தப்படுவதற்கு அல்லது மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதற்கு முன்பு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கண்டறிய பொலிஸ் மருத்துவமனையில் பொருத்தமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அனைத்து மூத்த அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவ அறிக்கையில் ஒரு அதிகாரி போதைப்பொருள் பயன்ப…
-
- 0 replies
- 241 views
-
-
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையில் காற்றின் தரம் Published By: DIGITAL DESK 3 28 JAN, 2025 | 09:53 AM நாட்டில் நேற்றைய தினம் பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான அளவிலும், கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்பட்டது. இன்றும் மேற்கூறிய பகுதிகளில் 58 மற்றும் 120 க்கு இடையில் காற்றின் தரக் குறியீடு ஆரோக்கியமற்ற மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்து காணப்படும் என கணிக்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு மற்றும் வாகனப் போக்குவரத்துத் திணைக்க…
-
-
- 15 replies
- 899 views
- 1 follower
-
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட சந்திப்பு! இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய் ஷங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் ஓமான் மஸ்கட் நகரில் இடம்பெறும் 8 ஆவது இந்து சமுத்திரமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதேவேளை இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள தொடர்புகள் மற்றும் விரிவான ஒத்துழைப்பு மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இலங்க…
-
- 0 replies
- 145 views
-
-
நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, சர்ச்சைக்குரிய கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவர், 100,000 ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுக்கப்பட்டார். இலங்கையில் ரக்பி விளையாட்டின் அபிவிருத்திக்காக இந்தியாவைத் தளமாகக் கொண்ட கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயை முறை…
-
- 0 replies
- 194 views
-
-
18 FEB, 2025 | 10:28 AM போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தம்பதி ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மனைவியும் 40 வயதுடைய கணவனுமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் செல்வதற்காக நேற்றைய தினம் இரவு 08.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் சோதனை நடவடிக்கைகளுக்காக தங்களது ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சந்தேக நபர்களின் ஆவணங்கள் குறித்து சந்தேகமடைந்த விமான நிலைய அத…
-
- 0 replies
- 190 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 18 FEB, 2025 | 10:47 AM சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார். அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம். இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும். நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சி…
-
- 0 replies
- 104 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்!இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421674
-
-
- 6 replies
- 632 views
- 2 followers
-
-
அம்பாறை (Ampara) - பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக பொதுமக்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியனுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று (16.02.2025) இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது போராட்டக்காரர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியனை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்திய நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையினை மூடுமாறு வலியுறுத்தி பெரியநீலாவனை பகுதியில் தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் எதிர்ப்பு இந்நிலையில், இன்று அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின…
-
-
- 9 replies
- 691 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று நியமிக்கப்பட்டமை பல தரப்பகளில் பேசுபொருளாகியுள்ளது. இது தொடர்பில் அரசியல் தரப்புகளில் இருந்து சாதக பாதக கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, அண்மையில் யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் புதிய பதில் பொதுச்செயலாளர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசியின் செய்திகளுக்கு அ…
-
- 0 replies
- 251 views
-
-
Published By: VISHNU 17 FEB, 2025 | 07:39 PM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் ( விசேட ஏற்பாடுகள் ) சட்டமூலம் 187 வாக்குகளுடன் திருத்தங்கள் ஏதுமின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. உள்ளூராட்சி மன்றத் அதிகாரசபைகள் தேர்தல்கள் ( விசேட ஏற்பாடுகள்) தொடர்பான சட்டமூலத்தை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்திம அபேரத்ன, முதலாம் வாசிப்புக்காக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சபைக்கு சமர்ப்பித்தால். குறித்த சில உள்ளூர் அதிகார சபைகளின் தேர்தல்கள் கோரப்பட்டு பிற்போடப்பட்டுள்ளவிடத்து அத்தகைய உள்ளூர் அதிகாரசபைகள் தொடர்பில் புதிய நியமனப்பத்திரங்களைக்…
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
Published By: VISHNU 17 FEB, 2025 | 07:33 PM நாளை செவ்வாய்க்கிழமை (18) பல பகுதிகளில் வெப்பமான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வெப்பமான வானிலை நிலவரங்கள் குறித்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வானிலை ஆய்வுத் துறை திங்கட்கிழமை (17) மாலை 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை "எச்சரிக்கை" மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும், மேலும் சிறு குழந்தைகள்…
-
- 0 replies
- 221 views
- 1 follower
-
-
புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விசேட உணவுப் பொதி. எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான மானிய நடவடிக்கையாக, பண்டிகைக் காலத்திற்கான உணவுப் பொதி ஒன்றை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (17) வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவிக்கையில், புத்தாண்டு காலத்தில் லங்கா சதொச நிறுவனத்தின் மூலம் அரிசி, ரின் மீன், பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் கருவாடு உள்ளிட்ட உலர் உணவுப…
-
- 0 replies
- 320 views
-
-
17 FEB, 2025 | 05:37 PM வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவது தொடர்பிலோ போதைப்பொருள் பயன்பாடுகளை நிறுத்துவதற்கோ விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதன் விளைவே மக்கள் துன்பங்களை சந்தித்துவருகிறார்கள் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். வட்டுக்கோட்டை சுழிபுரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் சந்திரசேகர் இதனை தெரிவித்தார். அமைச்சர் சந்திரசேகர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கல்விக்கு சிறந்த பெயர் பெற்ற இடமான யாழ்ப்பாணத்தில் இன்று துர்நடத்தைகள் அதிகரித்து வருவதற்கு காரணம் என்ன? கலை கலாச்சாரம் கட்டிக் காத்த யாழ்ப்பாணத்தில் ஏன் இத்தகைய நிலை. ஜனாதிபதித் தேர்தலுக்காக நாம் வீடு வீடாகச் சென்றபோது இங்கு இடம்பெற்று வருகின…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
17 FEB, 2025 | 04:21 PM தனியார் காணியில் விகாரை கட்டியமை சட்டவிரோதமான செயற்பாடு எனக் கூறும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு, விகாரை கட்டப்பட்டதை வன்மையாக கண்டித்ததோடு காணி உரிமையாளருக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்துவந்த தனியார் காணியில் அவர்களது அனுமதியின்றி இராணுவத்தின் பாதுகாவலில் பௌத்த விகாரை (திஸ்ஸ விகாரை) கட்டப்பட்டமையை யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இராணுவம் போர்க்காலத்தில் கையகப்படுத்திய ஆயிரக்கணக்கான …
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 17 FEB, 2025 | 01:26 PM சர்வதேச குழந்தைப் பருவ புற்றுநோய் தினமான கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமட்டா, "Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)" திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான "SUWA ARANA" நோய்த்தடுப்பு பராமரிப்பு மையத்தின் குணப்படுத்தும் தோட்டத்தைக் கையளிக்கும் விழாவில் கலந்துகொண்டார். Suwa Aranaவை இயக்கும் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் லங்கா ஜயசூரிய திசாநாயக்க, புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தலில் இத்தோட்டத்தின் பங்கு தொடர்பாக எடுத்துரைத்தார். அத்துடன், புற்றுநோயானது மனம், உடல் மற்றும் உயிரை பாதிக்கிறது என்பதை வலியுறுத்…
-
- 0 replies
- 115 views
- 1 follower
-