Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையின் நல்லிணக்கப் பயணத்திற்கு ஜப்பான் முழுமையாக உதவும் : ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் இலங்கைக்கு ஜப்பான் முழுமையாக உதவ தயாராக உள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் தாரோ கோனோ இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தார். ஜப்பான் வெளிவிவகார அமைச்சரொருவர் இலங்கைக்கு விஜயம்செய்திருப்பது 15 வருடங்களுக்கு பின்னராகும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்குமிடையில் சிறந்த வர்த்தக உறவுகள் பே…

  2. மாவைக் கந்தன் ஆலயத்தில் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு! அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கத்தின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு, மாவைக் கந்தன் ஆலயத்தில் வைத்து வெளியீடு செய்தமை தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசேட குழுவொன்று, நேற்று தேர்தல்(04.01.2018) ஆணையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் சம இயக்கப் பிரதிநிதிகளான, வலி. வடக்கு பிரதேச சபையின் பிரதம வேட்பாளர் தாயுமானவர் நிகேதன் மற்றும் வலி. மேற்கு வேற்காளர் பொன்ராசா உள்ளிட்ட பலர் கலந்…

  3. மடு தேவாலயத்திற்கு அருகில் பௌத்த தேவாலயம் அமைப்பதை தடுத்து நிறுத்தவும் மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவப் படையினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கும் எடுக்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வட மாகாண கல்வி மற்றும் கலாச்சார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இந்த இடத்தில் சிற்றுாண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவப் படையினர் குறித்த இடத்தில் உள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த தேவாலயம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜைகள் சங்கம், இந்த இடத்தில் இவ்வாறான…

    • 1 reply
    • 365 views
  4. விடுதலைப்புலிகளின் மண் என்பதால் புதுக்குடியிருப்பில் புளொட்டிற்கு வேட்பாளர் தெரிவில் சிரமம் இருந்திருக்கலாம்: சிவமோகன் எம்.பி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இறுதிவரை இருந்த மண் என்பதனால் புளொட்டிற்கு புதுக்குடியிருப்பில் வேட்பாளர்களை தெரிவு செய்வதில் சிரமம் இருந்திருக்கலாம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். முல்லைத்தீவில் பெண் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக தன்னிலை விளக்கத்தினை அளிப்பதற்காக ஊடகவியலாளர் சந்திப்பனை வவுனியாவில் ஏற்பாடு செய்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இருந்த 100 வீத வெற்றிக்கு சேறுபூசு…

  5. கோட்டாவுக்கு எதிராக பெசில் களத்தில்; மஹிந்த அணிக்குள் அடிதடி-அநுருத்த எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதை தடுப்பதற்கான சூழ்ச்சியில் அவரது சகோதரதும், முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்சவின் பங்களிப்பு காணப்படுவதாக ஒன்றிணைந்த எதிரணியிலுள்ள உறுப்பினர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிரணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பொல இந்தக் குற்றச்சாட்டை வெளியிட்டதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சிறைக்கைதியாகிவிட்டார் என்றும் கூறினார். ஒன்றிணைந்த எதிரணியின் முன்னாள்…

  6. பிரித்தானிய பாராளுமன்றக் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர் இலங்கை தொடர்பான பிரித்தானிய பாராளுமன்ற சர்வகட்சி குழுவினர் இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தனர். பிரித்தானிய கொன்ஸர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை வம்சாவளி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் ஜயவர்தன குழுவின் தலைவராக செயற்படுவதுடன், அவர் உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து சென்றதன் பின்னர் பொதுநலவாய நாடுகளுடனான தொடர்புகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொண்டு வருகின்றன. ப…

    • 2 replies
    • 487 views
  7. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம்…. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ் கந்தர்மடத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. http://globaltamilnews.net/2018/59625/

  8. சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக யாழ்., கிளிநொச்சி பிரபல பாடசாலை மாணவர்கள் இராணுவ பயிற்சியில் யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சியின் உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களே இராணுவப் பயிற்சிக்கு உள்ளீர்க்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.எதிர்காலத்தில் உயர் இராணுவ அதிகாரிகளாக உருவாக மிகப்பெரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு மாணவர்கள் இணைக்கப்பட்டுவருவது குறிப்பித்தக்கது. சிங்கள மயமாக்கலின் இன்னொரு வடிவமாக தமிழ்ப் பாடசாலை மாணவர்களை சிறிலங்கா இராணுவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அரச திணைக்களங்களுக்கு நியமனம் பெறுகின்ற உத்தியோகத்தர்களை தலைம…

  9. பிர­தான கட்­சிகள் ஒரு­மித்­தி­ருக்கும் சந்­தர்ப்­பத்­தை நழுவ விடா­தீர்கள் : கூட்­ட­மைப்­பிடம் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றக் குழு தெரி­விப்பு (ஆர்.ராம்) புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­காக பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒரு­மித்­தி­ருக்கும் தற்­போ­தைய சந்­தர்ப்­பத்­தை நழு­வ­விட்டு விடா­தீர்கள் என்று பிரித்­தா­னிய பாரா­ளு­மன்றக் குழு பிர­தான எதிர்க்­கட்­சியான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இலங்­கைக்கு விஜ­யம்­ மேற்­கொண்­டுள்ள ரணில் ஜெய­வர்த்­தன, மைக்கேல் டொனலன், கிறிஸ் கிரீன், ஜோன் லாமொண்ட் ஆகிய நால்­வரைக் கொண்ட பிரித்­தா­னிய பார­ளு­மன்­றத்தின்…

  10. தாமதம் வேண்டாம் ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் பெப்­ர­வ­ரி ­மாதம் 26 ஆம்­ தி­கதி முதல் மார்ச் மாதம் 23 ஆம்­ தி­க­தி­வரை நடை­பெ­ற­வுள்ள நிலையில் இலங்கை தொடர்­பாக இரண்டு தினங்கள் விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. பூகோள காலக்­கி­ரம மீளாய்வு சம்­பந்­த­மான இலங்கை குறித்த விவாதம் மார்ச் மாதம் 16ஆம் திக­தியும் இலங்கை மனித உரி­மைகள் நிலை­மைகள் மற்றும் ஐ.நா. தீர்­மானம் குறித்த விவாதம் 21ஆம் திக­தியும் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நடை­பெ­ற­வுள்­ளன. இதன்­போது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை குறித்த அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்­ள­துடன் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களும் இலங்கை தொடர்­பாக அறிக்­கை­களை தாக்கல் …

    • 1 reply
    • 598 views
  11. வவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்!!! வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை புதிய பஸ் நிலையத்தில் செய்தி சேகரித்துகொண்டிருந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மீதும் குறித்த பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 4 மணியளவில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் இ.போ.சபையினரின் வெளிமாவட்ட பஸ்கள் உள் நுழைக்கப்பட்டதையடுத்…

  12. பாரா­ளு­மன்றத்தை உடன் கூட்டுங்கள் : பிர­தான கட்­சிகள் கடும் தொனியில் வலி­யு­றுத்தல் (அலுவலக நிருபர்கள்) மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்ள விட­யங்கள் தொடர்­பாக ஜனா­தி­ப­தியின் அறி­விப்பு வெளியி­டப்­பட்­டுள்ள நிலையில் உட ன­டி­யாக பாரா­ளு­மன்ற அமர்வைக் கூட்டி அறிக்கை குறித்து விவாதம் நடத்­து­மாறு நாட்டின் பிர­தான அர­சியல் கட்­சிகள் கோரிக்கை விடுத்­துள்­ளன. உட­ன­டி­யாக பாரா­ளு­மன்ற அமர்வை கூட்டி இது தொடர்பில் விவாதம் நடத்­து­மாறு சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி கூட்டு எதி­ரணி மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி ஆகி­யன இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளன. கொழும்பில் நேற்று நடத்­…

  13. இலங்கையில் திறந்துவைக்கப்படவுள்ள வரலாற்று சிறப்புமிக்க மேம்பாலம் நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் இவ்வருட இறுதியிலேயே நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொதுமக்களின் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு அதன் நிர்மாணப்பணிகளை 11 மாதங்களுக்கு முன்னரே நிறைவு செய்ய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவ…

  14. பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழு இன்று வடக்கிற்கு விஜயம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவினர், இன்று வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோரை சந்தித்து, வடக்கின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கேட்டறியவுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக இதன்போது கவனஞ்செலுத்தப்படவுள்ளது.இதேவெளை, நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரித்தானிய நாடாளுமன்ற சர்வகட்சி குழுவி…

  15. மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த குற்றச்சாட்டை பிரதமர் மீது ரவி கருணாநாயக்க திருப்புகின்றாரா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான குற்றச்சாட்டை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது திருப்பும் வகையிலான கருத்துக்களை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் தாற்பரியம் புரியவில்லை என ரவி கருணாநாயக்க ஊடக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் மத்திய வங்கியோ அல்லது அரச வங்கிகளோ தமது அமைச்சின் கீழ் இயங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த நிலையில் தமக்கு எதிராக எவ்வாற…

  16. பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் இருப்­ப­தா­னது ஒட்­டு­மொத்த சமூ­­கத்­துக்கும் பாதிப்பு இலங்­கையில் புதிய அர­சியல் நாக­ரிகத்­தினை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் சமூக பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலும் சிறந்த சட்ட கட்­ட­மைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் தொடர்ச்­சி­யாக காணப்­ப­டு­வ­தா­னது ஒட்­டு­மொத்த சமூ­கத்­திற்கும் பாதிப்­பினை ஏற்­ப­டு­த்­து­வ­தாக உள்­ள­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அதே­நேரம் மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்­பாக 5614 முறைப்­பா­டுகள் கடந்த ஆண்டு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக தெரி­வித்­துள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வா­னது அவற்றுள் 1…

  17. வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வடக்கில் முடங்கியது போக்குவரத்து!! வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தி­னர் இன்று திங்­கட்­கி­ழமை தொடக்­கம் கால­வ­ரை­ய­றை­யற்ற பணிப்­பு­றக்­க­ணிப்பை ஆரம்பித்துள்ளனர். தமது கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்ப­டா­து­வி­டின் போராட்­டம் தொட­ரும் என­வும் அறி­வித்­துள்­ள­னர். இது தொடர்­பில் வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்­கத்­தின் பொதுச் செய­லர் அரு­ளா­னந்­தம் மேலும் தெரி­வித்­த­தா­வது; வட­பி­ராந்­திய போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் தனித்­து­வத்தை இல்­லா­தொ­ழிக்­கும் முத­ல­மைச்­ச­ரின் நட­வ­டிக…

  18. மு.கா.கனவு காணும் கட்சியல்ல மக்கள் கனவை நனவாக்கும் கட்சி : ரவூப் ஹக்கீம் பொத்துவில் பிரதேசத்திலிருந்து எம்மை விரட்டலாம் என்ற நோக்கில் சிலர் கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கனவு காணும் கட்சியல்ல, மக்கள் கனவை நனவாக்கும் கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பொத்துவில் பிரதேச சபையில் யானைச் சின்னத்தில் போட்டியிடும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களின் தேர்தல் பிரசார அலுவலகங்களை இன்று திறந்துவைத்த பின்னர், உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீல…

  19. யாழில் சிசு பிறப்புவீதம் அதிகரிப்பு யாழ் போதனா வைத்தியசாலையில் சிசு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 5746 சிசுக்கள் பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பீ. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த பல வருடங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த 2017ஆம் ஆண்டின் சிசு பிறப்பு வீதம் 12 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலையின், சிசு இறப்புவீதம் 1 வீதமாக மாத்திரமே காணப்படுவதமாகவும் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/யாழில்-சி…

    • 2 replies
    • 673 views
  20. திருகோணமலை மாணவர் படுகொலை குறித்த விசாரணகைள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதனால் விசாரணைகளை தொடர்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் அண்மைய சட்ட திருத்தங்களின் அடிப்படையில் நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் வழக்கு விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகத…

  21. எதிர்க்கட்சிதலைவர் சம்பந்தன் பகிரங்க கோரிக்கை.! சர்ச்சைக்குரிய பிணைமுறிகள் விற்பனை குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய அதிகார பீடங்களுக்கு அனுப்பி துரித நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுசொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ள சம்பந்தன் உண்மையின் பக்கமே கூட்டமைப்பு இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சைக்குரிய இலங்கை மத்தியவங்கியின் பிணைமுறிகள் விற்பனை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின…

  22. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு டெங்கு அபாய வலயமாக பிரகடனம் காத்தான்குடி பிரதேசம் டெங்கு அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டள்ளது. இன்றையதினம் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற உயர் மட்டக் கூட்டத்தின் போது இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவை இவ்வாறு டெங்கு அபாய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுவதென…

  23. நெடுந்தீவு கடலில் 13 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். நெடுந்தீவுவுக்கு மேற்கே 10 கடல் மைல் தெலைவில் வைத்து நேற்று இரவு குறித்த 13 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய மீனவர்கள் பயணித்த இரு விசைப் படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காரைநகர் கடற்படை முகாமிற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லபட்டதுடன் அவர்களை மேலதிக வசாரணைக்க யாழ்ப்பாணம் மீன்பிடி உதவி இயக்குநரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  24. தமிழ்மொழி மீதான உரிமையை இழந்து வரும் வடக்கின் தமிழர்கள்! சிங்கள எழுத்தாளரும், ஊடகவியலாளரும், லக்பிம நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் (Lakbima Newspapers ) நிறுவனத்தில் பணிபுரிபவரும் , கொழும்புப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பட்டதாரியுமான கத்யானா அமரசிங்ஹ (Kathyana Amarasinghe) தனது யாழ்ப்பாண விஜயத்தின்போது அங்குள்ள மக்கள் மொழி காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளிப்படுத்தி கட்டுரையொன்றினை எழுதியுள்ளார். மிகவும் பயனுள்ள கட்டுரை. இது போன்ற கட்டுரைகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்துவதால், புரிந்துணர்வுக்கு வழி வகுப்பதுடன் , பிரச்சினைகளின் பக்கம் அரசியல்வாதிகளின் கவனத்தையும் திருப்பும் சாத்தியமுண்டென்பதால் வரவேற்கத்தக்கவை. க…

    • 0 replies
    • 352 views
  25. ஆவா குழுவினர் நால்வர் நேற்று வாளுடன் கைது புதுவருட தினத்தில், நவாலி – அட்டகரி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து, பொருட்களை அடித்துடைத்து சேதம் விளைவித்த ஆவாக்குழுவைச் சேர்ந்த நால்வரை, இன்று கைது செய்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்கள் நால்வரும், உடுவில் மற்றும் நவாலி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/ஆவா-குழுவினர்-நால்வர்-நே/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.