ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143320 topics in this forum
-
வில்பத்து விலத்திக்குளம் சட்டவிரோத காடழிப்பு – ரிஷாத் பதியுதீனின் தலையீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது:- வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளமை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விஷேட ஆய்வின் இறுதியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக் காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூழலியளாலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட விஷேட ஆய்வு அறிக்…
-
- 7 replies
- 779 views
-
-
மகிந்த சம்பந்தனை ஏன் பார்த்தார்?- கஜேந்திரகுமார் கேள்வி மகிந்தவை ஆட்சிக்கு கொண்டு வர முயற்சிக்கின்றோம் என்று எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றபோதும் மகிந்த எம்மை ஒரு தடவையேனும் பார்க்கவரவில்லை. ஆனால் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: கடந்த காலங்களில் தேர்தல் …
-
- 1 reply
- 304 views
-
-
யாழ். இந்திய துணைத் தூதுவர் நடராஜன் மீள அழைக்கப்பட்டார்! யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் இந்திய வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து மீள அழைக்கப்பட்டுள்ளார் என அறியமுடிகின்றது. அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாகவே அவருக்கு எதிராக இந்த நடவடிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதுவராக கண்டி துணைத் தூதரகத்தின் அதிகாரி ஒருவரை நியமிக்க இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக ஆறுமுகம் நடர…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொழும்பில் மனோ கணேசன் தனித்து போட்டியிடுவது சரியானதே : வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்தும், சேர்ந்தும் பல்வேறு உள்ளூராட்சி சபை தேர்தல்களில் போட்டியிடுவது சரியானதே. அதிலும் கொழும்பு மாநகரில் கொழும்பு மாநகரசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதன் மூலம் தனது அரசாங்கத்துக்கு உள்ளே தன்னை பலப்படுத்திக்கொள்ளவும் எமது தனித்துவத்தை வெளிக்காட்டவும் அவர் முனைவது சாலச்சிறந்தது என நான் கருதுகிறேன் என வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் அமைச்சர் மனோ கணேசனுக்கும், வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து ஊடகவியலாளர்…
-
- 0 replies
- 310 views
-
-
மைத்திரி, ரணில் சம்பந்தனிடம் சுகம் விசாரிப்பு!! உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் உடல்நிலை தேறி வீடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் உடல்நிலை குறித்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டு அறிந்துகொண்டனர் எனத் தெரியவந்தது. அவசர மருத்துவ உதவிகள் ஏதும் தேவைப்படின் உடனடியாகத் தெரிவிக்குமாறு மேற்படி இரு தலைவர்களும் சம்பந்தனிடம் வே…
-
- 0 replies
- 343 views
-
-
‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் “மாபியாக்களை விரட்டுவோம்” பேரணியும் ஆர்ப்பாட்டமும்…. அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைற் அகழ்வு வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை திருக்கோவில் கரையோரப் பிரதேசத்தை அழிவுக்கு உட்படுத்தும் என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திருக்கோவில் கரையோரப் பிரதேசம் பாரிய அழிவுகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பாரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், ‘திருக்கோவில் பிரதேசத்தினை காப்போம் – “மாபியாக்களை விரட்டுவோம்” எனும் தொனிப்பொருளில் இன்று (27.12.17) இடம்பெற்றத…
-
- 0 replies
- 319 views
-
-
பகலில் வேலைக்காரி இரவில் இன்போர்மர் – தீரன் திரைப்பட பாணியில் தகவல் வழங்கும் பெண் சிக்கினார்… யாழ்.புறநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீட்டு வேலைக்கு செல்லும் பெண் இரவு வேளைகளில் கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்து வந்த நிலையில் மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 55 வயதான பெண்ணொருவரே கைது செய்யப்பட்டு உள்ளார். அது தொடர்பில் காவற்துறையினர் தெரிவிக்கையில் , “கடந்த காலங்களில் சங்கானையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் , சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை மற்றும் பணம் திருடபட்ட சம்பவம் , வட்டுக்கோட்டையில் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகிய சம்பவங்களுடன் குறித்த பெண்ணுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் கணவன்- மனைவி இருவருக்கும் எச்ஐவி நோய் தொற்று யாழ்ப்பாணத்தில் கணவன்- மனைவி இருவருக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் இந்த நோய்த் தொற்று காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், வடக்கில் கடந்த நவம்பர் மாதம் வரை 35 பேராக காணப்பட்ட எய்ட்ஸ் நோயாளிகள் தற்போது 38 ஆக அதிகரித்துள்ளனர். கடந்த 1ஆம் திகதி எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரையும் பரிசோதனை மேற்கொள்ளுமாறு எய்ட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவினர் பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.இந்த நிலையில், நோய் கார…
-
- 0 replies
- 351 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறிவேன் – சுமந்திரன் சவால் தேர்தல் காலம் நெருங்குவதால் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தினால் சிலர் பொய்களை அவிழ்த்து விடுகின்றனர். அமைச்சராகினாலோ அல்லது பிரதேசசபையின் உறுப்பினராகினாலோ உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்கப்படும். ஆனால் இங்கு அப்படி ஒன்றும் இடம்பெறவில்லை. ஆகவே எந்த அடிப்படையில் எனக்கு அமைச்சுப்பதவி கிடைத்துள்ளதாக கூறுகின்றார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இதேவேளை, கொழும்பு – 7இல் வெறும் 135 ரூபாய் வாடகைக்கு அரசாங்கம் எனக்கு வீடு கொடுத்திருப்பதாக ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார். எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுக்களில் ஏதேனும…
-
- 0 replies
- 307 views
-
-
தேர்தலுக்குமுன் பிணைமுறி குற்றவாளிகளுக்கு தண்டனை : வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சு.க. (ஆர்.யசி) அடுத்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்னர் மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவ காரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், அறிக்கையினை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனினும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று அரச தொழில்முயற்சி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார். குற்றவாளிகளை தண்டிப்பதாக ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 140 views
-
-
வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடார்கள் : நியாயமான தேர்தலுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்கிறார் மஹிந்த தேசப்பிரிய (ரொபட் அன்டனி) எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். அது அதிக செலவை ஏற்படுத்தும் விடயமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார். அத்துடன் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்காக நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண் டும்.அத்துடன் தேர்தல் தொடர்பில் மக்களை தெ ளிவுபடுத்துவதே இங்கு முக்கியமான விடயமாகும் என…
-
- 0 replies
- 152 views
-
-
பேரழிவை ஏற்படுத்திய பேரலைக்கு இன்றோடு ஆண்டுகள் 13...! இலங்கையில் சுனாமிப் பேரலை தாக்கி பாரிய அழிவுகளை ஏற்படுத்தி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. இதற்கமைய, இன்று காலை 9.25 முதல் 9.27 வரை சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது. http://www.virakesari.lk/article/28608 சுனாமியில் இறந்தவர்களை நினைவுக்கூர்ந்த மலையக மக்கள்!! சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2017 இன்றுடன் 13 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூறும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம…
-
- 6 replies
- 1.2k views
-
-
அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டேன் – புலம்பும் மகிந்த 2015 அதிபர் தேர்தலில் தான், தோற்கவில்லை என்றும் அனைத்துலக சக்திகளால் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. ஹோமகமவில் நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்கா பொதுஜன முன்னணியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி இந்த நாட்டைத் துண்டாடும் சதித்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது. வடக்கு -கிழக்கு இணைப்பு, அதியுச்ச அதிகாரங்கள் என அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்கி இந்த நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நாடு பிளவுபட வேண்டுமா அல்லது இணைந்து செயற்பட …
-
- 0 replies
- 213 views
-
-
கூட்டாட்சி பிளவடையக் கூடாது : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்து (ஆர்.ராம்) ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியும் இணைந்து முன்னெடுக்கும் கூட்டாட்சி பிளவடையக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத் தியுள்ளது. டிசம்பர் 31ஆம் திகதியுடன் ஆட்சியின் பங்காளிகளாகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா அல்லது தனியாக அரசாங் கத்தை அமைப்பதா என்பது தொடர் பிலான உயர்மட்டக் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியானது, சுதந்திரக்கட்சியானது இணைந்து செயற்பட முடியாது என அறிவிக்கும் பட்சத்தில் தனி…
-
- 2 replies
- 286 views
-
-
பிராத்திய அரசியல் அக்கப் போரில், மீண்டும் சிக்கும் இலங்கை.. 2018ல், ஆடுகளம் சொல்லும் செய்தி என்ன? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… இலங்கையில் இடம்பெறும் சீனாவின் வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்தியா கடுமையான அழுத்தத்திற்கும், விசனத்திற்கும் உள்ளாகி இருப்பதாக செய்திகளும் பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இதற்கான உடனடி பதில் நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளதாகவும், தனக்கு துணையாக யப்பானையும் களமிறக்கி உள்ளதாகவும் சீன அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, இந்தியா ஜப்பானுடன் இணைந்து இலங்கையில் அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த முனைவதாகவும், செய்தி வெளியிட…
-
- 1 reply
- 344 views
-
-
திடீர் சுகயீனம்; இரா சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகயீனத்தினால் எதிர்கட்சித் தலைவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அவரது உடல்நிலை வழமைக்குத் திரும்பி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. https://news.ibctamil.com/ta/internal-affairs/sampanthan-admitted-to-hospital-
-
- 19 replies
- 1.8k views
-
-
வில்பத்து தொடர்பில் ஆடிட் (தணிக்கை) அறிக்கை வெளியாகியது வர்த்தக, தொழில்துறை அமைச்சர், வன பாதுகாப்பு இயக்குனருக்கு, பாதுகாப்புக்கு உரியது என அரசினால் அறிவிக்கப் பட்டிருந்த வில்பத்து வனப்பகுதியில் இருந்து, விளாத்திகுளம் பகுதிக்கு 650 ஏக்கர் காடுகளை அழிக்கவும், குடியிருப்புக்கான வசதிகளை உண்டாக்கவும், உத்தரவு இட அதிகாரம் இருக்கவில்லை என்றும், அதேவேளை இயக்குனர் அந்த உத்தரவை ஏற்று செயல் படுத்தும் கடமைப்பாடு இருக்கவில்லை என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. மேலும் பங்கிடப் பட்ட காணிகளை பெற்றுக் கொண்ட யாருமே, இடம் பெயர்ந்தவர்கள் இல்லை என்று அறிக்கை தெரிவித்து உள்ளது. காணிகள் வழங்கப்பட்ட 1371 குடும்பங்களில் 1030 குடும்பங்கள் வேறு இடங்களில் காணி வைத்து இருக்கிறார்கள…
-
- 2 replies
- 563 views
-
-
நல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா? MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது? குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்… நல்லிணக்க அரசாங்கம் என அழைக்கப்படும், தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? ஐக்கியதேசியக் கட்சியுடனான ஆளும் உறவை 2020 வரை தொடர்வதா? என்பது குறித்து விரைவில் குறிப்பாக அடுத்தவாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆராய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான அமைச்சர் பௌசி, கடந்த இரண்டு வருட கால, இணக்கப்பட்டு அரசியல் முன் நகர்வில், பல்வேறு விமர்சனங்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்…
-
- 0 replies
- 271 views
-
-
நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்! தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் …
-
- 28 replies
- 1.9k views
-
-
சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளது – தமிழிலில் குளோபல் தமிழ் செய்திகள் சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொகைகளை செலுத்த முடியாது இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, இலங்கை சீனாவிடம் ஒப்படைத்துள்ளது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியனவற்றினால் வழங்கப்படும் கடன்களைப் போன்றல்லாது, சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து கடனுதவிகளை வழங்கி வருகின்றது. நீண்ட கால அடிப்படையில் கடன் வழங்கு தந்திரோபாய ரீதியிலும் கேந்திர ரீதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்த கடன்களை சீனா வழங்குகின்றது…
-
- 3 replies
- 566 views
-
-
வெறும் கண்துடைப்புக்காக மட்டும் விசாரணைகள் இடம்பெறக்கூடாது மக்களின் உடமைகளுக்கும் அரச சொத்துக்களுக்கும் இழப்பினை ஏற்படுத்திய சிறிலங்கன் விமான சேவை, மிஹின் எயார் விமான சேவை என்பவற்றில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக எந்தவொரு அரசாங்கமும் இதுவரை மேற்கொண்டிராத தீர்மானங்களை மேற்கொண்டதுடன் எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்க…
-
- 0 replies
- 277 views
-
-
ரணில் – -மைத்திரி கூட்டணி மஹிந்தவை காப்பாற்றுகிறது உள்ளூராட்சி அதிகாரத்தை தாருங்கள் மக்களுக்கு சேவையாற்றி காட்டுகின்றோம் என்கிறார் அனுரகுமார (ஆர்.யசி) கள்வர்களை தண்டிப்பதாக வாக்குறுதி வழங்கி வாக்குப்பெற்ற அரசாங்கம் இன்று அதே கள்வர்களுடன் இணைந்து நாட்டினை சூறையாடி வருகின்றது, ரணில்–மைத்திரி கூட்டணி மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றஞ்சாட்டினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜே.வி.பிக்கு அதிகாரத்தை கொடுங்கள் நாங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் காட்டுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று அகலியகொடை பிரதேசத்தில் இ…
-
- 0 replies
- 273 views
-
-
தேயிலைக்கான தடையை நீங்கியது ரஷ்யா இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்ய ரஷ்யாவினால் விதிக்கப்பட்ட தடை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டவுள்ளதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/28606
-
- 3 replies
- 295 views
-
-
சு.க.வுடன் பிரச்சினை இல்லை ஐ.தே.க.வுடனேயே போட்டி : சம்பந்தனிடத்தில் நேரடியாக கூறினார் மஹிந்த ராஜபக் ஷ (ஆர்.ராம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே பிரச்சினை கள் உள்ளன. அவர்களுடன் தான் எமக்கு தேர்தல் போட்டியும் உள்ளது என்று எதிர்க் கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனி டத்தில் முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ஷ நேரடியாகத் தெரிவித்துள்ளார். சுகவீனமுற்றிருந்த நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனை பார்வையிடுவதற்காக நேற்று திங்க…
-
- 0 replies
- 233 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் பொலிஸாரை நம்புவதில்லை வடமாகாணத்திலுள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாதுகாப்பது சிங்கள பொலிஸார் எனவும், இது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நல்ல எடுத்துக்காட்டு என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல்வாதிகள் சிங்கள பொலிஸ் அதிகாரிகளை நம்பும் அளவுக்கு தமிழ் பொலிஸ் அதிகாரிகளை நம்பாமை தொடர்பில் தேடி ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் எலுவைத்தீவு மற்றும் அனலைத்தீவுகளுக்கிடையில் பயணிகள் போக்குவரத்து படகு சேவையை இன்று (26) ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழ்-அரசியல்வாதி…
-
- 0 replies
- 513 views
-