ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
எமக்கு அபிவிருத்தியும் இல்லை உரிமையுமில்லை ; வியாழேந்திரன் முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இந்த நல்லாட்சியில் இந்த நாட்டில் யார் பிழை செய்தாலும் விசாரணை நடாத்தப்படும் நிலைமை அதிகரித்துள்ளதையே ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதமர் ஆஜராகியுள்ளது வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவு…
-
- 0 replies
- 156 views
-
-
டெனீஸ்வரனின் ரிட் மனுவை தொடர்ந்து விசாரிக்க உத்தரவு!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னைப் பதவி நீக்கியமைக்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையைத் தொடருமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்று டெனீஸ்வரன் தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான விசாரணையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள…
-
- 0 replies
- 207 views
-
-
ஆவா குழுவின் முக்கிய உறுப்பினருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத் தண்டனை! நீதிமன்ற வளாகத்தில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் காவலிலிருந்து தப்பித்த குற்றத்துக்காக ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் எனக் கூறப்பட்ட நிசா விக்டருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி மல்லாகம் நீதிவான் மன்றம் இன்று தீர்ப்பளித்தது. மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபரான நிசா விக்டர், அந்த வழக்கில் முற்படுத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதிமன்றுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த சந்தேக நபர் நீதிமன்…
-
- 1 reply
- 304 views
-
-
நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், சுற்றி வர சிங்களப் பிரதேசங்களை சூழமைந்த, ஏனைய ஊர்களோடு ஒப்பிடுமிடத்து இனங்களுக்கிடையில் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்போடும் வாழும் கிந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து தேசிய மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாறும் அளவுக்கு இனக்கலவரமாக மாறி விட்டது. மிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது உண்மையிலே கவலைக்குர…
-
- 7 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும், மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, இன்று (21) முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மீனவர் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள், மீனவர் அமைப்புகள், பொது அமைப்புகள் இணைந்து, இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தன. மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த உதவித் திட்டங்களை, நல்லாட்சி அரசாங்கம் அதிகரிக்கவேண்டும் என…
-
- 0 replies
- 293 views
-
-
காலி நகரில் -மீண்டும் குண்டு வெடிப்பு!! காலி நகருக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் கூறப்படுகிறது. காலி – தூவ பிரதேசத்தில் அமைந்துள்ள சமகிவத்தை குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றின் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்னர் காலி – கிந்தொட்ட பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளின் சூடு தணிவதற்குள், இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பெற்றோல் குண்டு தீப்பற்றும் முன்னர் அணைக்கப்பட்டமை காரணமாக, சேதங்கள் தவிர்க்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. மேலதிக வ…
-
- 0 replies
- 260 views
-
-
தெளிவான காலவரம்புடன் கூடிய போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும், ரோம், அனைத்துலக குற்றவியல் உடன்பாடுகளில் கையெழுத்திட வேண்டும் என்றும், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் அனைத்துலக சமூகம் வலியுறுத்தியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான மூன்றாவது பருவகால, பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 15ஆம் நாள், நடைபெற்றிருந்தது. இந்த அமர்வில் உலக நாடுகளால் மேற்படி விடயங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. ஜோர்ஜியா – இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான காணிகள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண காணி சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும். ஜேர்மனி - 30/1 தீர்மானத்தை…
-
- 7 replies
- 416 views
-
-
தமிழ் – முஸ்லிம் உறவைப் பலப்படுத்த முஸ்லிம் தலைவர்கள் முன்வரவேண்டும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையி்ல் முஸ்லிம் மக்கள் நடந்து கொள்ளக் கூடாதென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ள நிலையில், வடக்கு–கிழக்கு இணைப்பு யோசனைக்கு முஸ்லிம்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. வடக்கும், கிழக்கும் இணைக்கப்படுமானால் நாட்டில் இரத்த ஆறு ஓடுமென ராஜாங்க அமைச்சரான ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத் துள்ள நிலையில், அமைச்சர் றிசாத் பதியுதீனும் அதைப் போன்றதொரு கருத்தை வௌியிட்டுள்ளார். இவர்களில் முன்னவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்; மற்றையவர் வடக்கு ம…
-
- 1 reply
- 367 views
-
-
யாழ். வாள் வெட்டு சம்பவங்கள் 81 பேர் கைது 75 பேருக்கு பிணை யாழில். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 81 பேர் கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரொசான் பெனார்ன்டோ தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த நாட்களில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சந்தேகத்தில் 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் முற்படுத்தினோம். நீதிமன்றினால் 75 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஏனைய 6 பேரும் நீத…
-
- 0 replies
- 270 views
-
-
நானே ஆலோசனை வழங்கினேன் : பிணைமுறி குறித்த ஆணைக்குழுவில் பிரதமர் சாட்சியம் அர்ஜுன மகேந்திரனை நியமிக்க முன் மருமகன் அலோசியஸை பதவி விலகுமாறு கூறினேன் பெரும் தொகை நிதித் தேவை ஏற்பட்டமைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தமும் காரணம் தெளிவான சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருந்தேன் குறைந்த வட்டி வீதத்தில் கேள்விப் பத்திரத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கவில்லை (எம்.எப்.எம்.பஸீர்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை அப்பதவிக்கு நியமிக்கும் போது அவ ரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அறிவித்தேன் எ…
-
- 1 reply
- 420 views
-
-
காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்! காலி ஜின்தோட்டை பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது வீடொன்றுக்கும் தீ வைக்கப்படுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். கால்பந்தாட்டப் போட்டி மற்றும் விபத்தொன்றை தொடர்ந்து இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் பதற்றமான நிலைம…
-
- 23 replies
- 2.8k views
-
-
வ.மா.கல்வி அமைச்சருக்கு எதிரான தீர்ப்பு மற்றவர்களுக்கு சிறந்த பாடம் தேசியக்கொடியை ஏற்றாத விடயத்தில் வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு எதிராக வழங்கும் தீர்ப்பானது ஏனைய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடமாக அமைய வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து அவரது ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வவுனியா பிரதேசத்தின் சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில்நேற்றைய தினம்(20) பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் http:/…
-
- 0 replies
- 404 views
-
-
வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ : ஒற்றுமையாக வாழும் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் விசமிகளின் செயற்பாடா ? வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் சுமார் 14 கடைகள் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியதையடுத்து பள்ளிவாசல் ஊடாக தீ அணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீ அணைப்பு பிரிவனரும் பொது மக்களின் உதவியோடு பற்றி எரிந்த தீயை…
-
- 4 replies
- 426 views
-
-
ஜெனிவாவில் 177 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது அரசாங்கம் 53 விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக அறிவிப்பு (ரொபட் அன்டனி) ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட 230 பரிந்துரைகளில் இலங்கை அரசாங்கம் 177 பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனைய 53 பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அதுமட்டுமன்றி அரசாங்கம் 12 வாக்குறுதிகளை ஐ.நா.வுக்கு வழங்கியிருக்கிறது. இது தொடர்பில் பரிந்துரைகள் அடங்கிய யோசனை நிறைவேற்றப்பட்டபோது ஜெனிவாவில் உரையாற்றிய பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, ஒருசில வ…
-
- 0 replies
- 694 views
-
-
12 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது வவுனியாவில் இருவேறு இடங்களில் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனிமையாக நின்றிருந்த ஒருவரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சோதனையிட்ட போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிக் கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் புத்தளத்தை சேர்ந்த முகமத் எம்னு (வயது - 30) என்ற நபரை கைது செய்ததாகவும் இதேவேளை, கொழும்பு செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருந்த முல்லை…
-
- 0 replies
- 287 views
-
-
வியாழக்கிழமை மோடியை சந்திக்கிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இந்தியா பயணிக்கின்றார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியா பயணிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடில்லி யில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் ஆகியோருடன் பேச்சுவார்த்தை முன்னெடு க்கவுள்ளார். இதேவேளை நாளை மறுதினம் 23 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்…
-
- 0 replies
- 275 views
-
-
‘இருவரும் சந்திக்கவில்லை’ “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில், சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை” என ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சுமார் 1 மணி 45 நிமிடங்கள் ஆணைக்குழுவில் அவரிருந்தார். ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் காலை 10 மணிக்கு ஆரம்பமாகின. ஆரம்ப நடவடிக்கைகளை நிறைவடைந்ததன் பின்னர், பிரதமர் ரணிலிடம் தெளிவுபடு த்திக்கொள்வதற்கான கேள்விகள், காலை 10:…
-
- 0 replies
- 131 views
-
-
வடக்கில் இடம்பெறும் கட்சி தாவல்கள் - ஈ.பி.ஆர்.எல்.எவ் இருந்து சிலர் வெளியேற்றம்! வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் இருந்து வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணையவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் வடக்கு மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் நேற்று தமிழரசுக் கட்சியில் இணைந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட உறுப்பினர் எஸ்.தியாகராசா, எஸ்.இந்திரராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் தமிழரசுக்கட்சியில் இணையவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். …
-
- 1 reply
- 403 views
-
-
கூட்டு அரசும் தமிழர்களுக்கு வேட்டு அரசா? கூட்டு அரசும் தமிழர்களுக்கு வேட்டு அரசா? நாட்டின் அரச தலைவராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 9ஆம் திகதி மூன்றாண்டுகள் நிறைவுபெறவுள்ளது. இந்த மூன்று வருட காலப்பகுதிக்குள் கூட்டு அரசின் நிர்வாகத்தில் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? என்ற வினாவுக்கு இல்லை என்றுதான் பதில் கூற முடியும். மைத்திரி அரசு தமிழ் மக்களுக்கு …
-
- 0 replies
- 373 views
-
-
கிந்தோட்டை வன்முறை அரசின் பெரும் தோல்வி போர் முடிவடைந்து 8 ஆண்டுகளின் பின்னரும் அதிலும் தற்போதைய கூட்டு அரசு பதவியேற்று இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டபோதும் இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மேம்படவில்லை, அந்த விடயத்தில் கொழும்பு அரசுகள் வெற்றிபெறவேயில்லை என்பதை காலி, கிந்தோட்டை வன் முறைகள் மீண்டும் நிரூபித்திருக்கின்றன. இனங்களுக்கு இடையிலான அமைதி, சகிப்புத்தன்மை, நல்லிணக்கம் என்பன இன்னும் அடிமட்ட நிலையிலேயே உள்ளன என்பதை அவதானிக்க முடிகிறது. நல்லிணக்கம்,…
-
- 0 replies
- 603 views
-
-
2015ல் நல்லாட்சிக்கு ஆதரவளித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்பலருக்கு இப்போதுதான் ஞானம் வந்துள்ளது இந்த ஆட்சி மோசம் என்றும் மஹிந்த பரவாயில்ல என்றும் கூறஆரம்பித்துள்ளார்கள். மஹிந்த புலிகளை முடித்த பின் முஸ்லிம்கள் சிங்களபேரினவாதத்துக்கு முகம் கொடுத்தது உண்மை. ஆனால் தமிழ்பேரினவாதம் வாலை சுருட்டிக்கொண்டு படுத்தது.ஆனால்இப்போது ஒரு பக்கம் சிங்கள பேரினவாதம் இன்னொரு பக்கம்தமிழ் பேரினவாதம் தலைதூக்கியுள்ளது. உலமா கட்சி படித்து படித்து சொன்னது. தென்னிலங்கைமுஸ்லிம்கள் மஹிந்தவுக்கெதிராக வாக்களிக்கலாம். அதில் ஓரளவுநியாயம் உண்டு. ஆனால் கிழக்கு மக்கள் மஹிந்தவுக்கேஆதரவளிக்க வேண்டும் என்று. இதில் கி…
-
- 2 replies
- 602 views
-
-
த.தே.கூ : மு.கா இடையில் இரகசிய உடன்பாடுகள் இருப்பின் வெளிப்படுத்துங்கள் வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கு தனியலகு வழங்குவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்குமாயின் அதனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் கிழக்கில் ஏற்படும் ஆபத்து குறித்து இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசியலமைப்பு பேரவையில் கடந்த நவம்பர் 8ஆம் திகதி உரையாற்றியிருந்தார். இதனை சிலர் திரிவுபடுத்தி ஊடக அறிக்கைகள் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் யாழ் மாவ…
-
- 0 replies
- 365 views
-
-
ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும் ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும் என அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சி மற்றும் சட்ட வழி செயற்படல், அனைவருக்கும் சமவுரிமை மற்றும் சமவாய்ப்புக்காக செயற்பட்டு வருகின்றதெனவும் இந்த தருணத்தில் அவர்களுக்கு தேவையான வகையில் தாங்கம் உதவுவோம் எனவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அமெரிக்கா அரச உதவியுடன் ; நிர்மாணிக்கப்பட்ட மகளிர் பாடசாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் …
-
- 0 replies
- 243 views
-
-
தமிழர்களுக்கு அடுத்த பேரிடி! ஈழத்தமிழர்கள் ஒருபோதும் இந்தியர்களை நம்ப வேண்டாம்? இலங்கையில் நடந்த தமிழர்களின் போராட்டம் பற்றியும், அந்தப் போராட்டத்தின் முடிவில் இலங்கை அரசு செய்த முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றியும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஐ.நா. சபையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக விடுதலை வேண்டி இன்னமும் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், இன்று வரை தமிழர்களுக்கான நீதியும், வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டு வருகிறது. சிங்கள இராணுவத்தினரின் பிடியில் தான் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிங்களவர்கள் மட்டுமே வாழும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று பிற நாடுகளின் உதவியோடு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய…
-
- 2 replies
- 582 views
-
-
புனரமைக்கப்பட்ட இரணைமடுகுளத்தில் இருந்து விவசாயத்திற்கு நீர் விநியோகம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்ட இரணைமடுகுளத்திலிருந்து இன்று(20) விவசாய நடவடிக்கைக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வழமையாக பெரும் போக நெற்செய்கைக்கு நீர் தேவைப்படும் போது இரணைமடுகுளத்திலிருந்து நீர் திறந்து விடப்படுவது வழமையாகும். ஆனால் இவ்வருடம் புனரமைப்புச் செய்யப்பட்ட காரணத்தினால் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு நீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளனா். இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 22000 ஏக்கர் செய்கைகளிற்கும் நீர் வழங்குவதற்காக குறித்த குளம் இன்று திறந்து விடப…
-
- 0 replies
- 270 views
-