ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142769 topics in this forum
-
07 FEB, 2025 | 11:46 AM படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பரிசீலனை செய்யவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க விவகாரம் குறித்து ஒரு நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்தத் தயார் என்றும் இன்று வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/206050
-
- 1 reply
- 234 views
- 1 follower
-
-
07 FEB, 2025 | 11:13 AM 2024ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக இரத்து செய்து, மின் பாவனையாளர்களின் உரிமையையும் மின்சாரத் துறையின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்துக்கு வலியுறுத்துகிறார். இன்று (07) வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: 2002ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு சட்டத்தின் கீழ் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிறுவப்பட்டது. இது நாட்டின் மின்சார துறை, பெற்றோலிய துறை மற்றும் நீர் சேவை துறையை ஒழுங்குபடுத்துவதற்காக ஆகும். பின்னர் 2009ஆம் ஆண்டி…
-
- 0 replies
- 139 views
- 1 follower
-
-
பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 07 Feb, 2025 | 09:16 AM பலாலி ஓடுபாதையை விரிவாக்குவதற்காக ஒருதலைப்பட்டசமாக காணிகளை அபகரிக்கக் கூடாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஓடுபாதையை விரிவுபடுத்துவதற்காக பலாலியில் மேலும் நிலத்தை அரசாங்கம் அபகரிக்கப் போவதாக தினக்குரல் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக உள்ளது. தற்போது பலாலி ஓடுபாதை 1,300 மீற்றராகவும் கட்டுநாயக…
-
- 1 reply
- 207 views
-
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முக்கிய வெளிநாட்டுப் பணிகளுக்கான அரசியல் நியமனங்களை செய்கிறது editorenglishFebruary 7, 2025 இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான அரசியல் நியமனங்களைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், வெளிவிவகார அமைச்சு, அமெரிக்காவுக்கான தூதுவராக தொடர்ந்து பணியாற்றும் திரு.மகிந்த சமரசிங்கவைத் தவிர, ஏனைய அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து இலங்கை தூதுவர்களையும் திரும்ப அழைத்தது. …
-
- 0 replies
- 122 views
-
-
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம் பலமானதொரு எதிரணியைக் கட்டியெழுப்பி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். சமகால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட…
-
- 4 replies
- 271 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த சதி செய்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது அசாத் மவுலானா முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கோட்டாபய ராஜபக்ச, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். “தயவு செய்து, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை படியுங்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வழங்கியுள்ள சாட்சியங்கள் உட்பட.. குறித்த அறிக்கையில் உள்ளதைத் தவிர வேறு எதுவும் எனக்கு தெரியாது” என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச டெய்லி மிரர் நாளிதழுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/315155
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
06 Feb, 2025 | 01:57 PM கருணா அம்மான் பிள்ளையானை கொலை செய்வதற்கான சதிமுயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றிய சுரேஸ் சாலே பிள்ளையானிடம் தெரிவித்தார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது 2007 நவம்பர் 2ம் திகதி போலிகடவுச்சீட்டில் பிரித்தானியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அந்த நாட்டில்கைதுசெய்யப்பட்டார். இலங்கையின் தேசிய புலனாய்வு சேவையே இந்த கடவுச்சீட்டை வழங்கியிருந்தது. கருணா அம்மானை அகற்றிவிட்டு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவராக பிள்ளையானை கொண்…
-
- 1 reply
- 299 views
-
-
Published By: DIGITAL DESK 3 03 FEB, 2025 | 11:22 AM இலங்கையின் மிகப்பெரும் தொழிலதிபரும் நிர்வாகியுமான தேசமான்ய கந்தையா பலேந்திரா (கென்) தனது 85ஆவது வயதில் காலமானார். 1940 ஆம் ஆண்டு பிறந்த பாலேந்திரா இலங்கையிலும் அதன் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். மிகப்பெரிய கூட்டு நிறுவனமான John Keells Holdings Ltd இன் முதல் இலங்கைத் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். அவர் பிரண்டிக்ஸ் லங்கா லிமிடெட் மற்றும் கொமன்வெல்த் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தெற்காசிய பிராந்திய நிதியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். https://www.virakesari.lk/article/205660
-
-
- 27 replies
- 1.6k views
- 2 followers
-
-
Published By: VISHNU 06 FEB, 2025 | 07:24 PM புதிய முப்படைத் தளபதிகள் வியாழக்கிழமை (06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர். புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, புதிய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்தனர். பதவியேற்ற பின்னர், முப்படைத் தளபதிகள் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியைச் சந்தித்ததோடு ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினர். https://www.virakesari.lk/article/206015
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
அதிகாரிகள் தவறுகளை விட்டுள்ளனர் காணிகளை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பேன் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 06 Feb, 2025 | 12:08 PM காணி விடயத்தில் அதிகாரிகளும் சில இடங்களில் தவறிழைத்துள்ளனர். படிப்படியாக காணிகளை விடுவிக்க என்னாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பினருக்கும் (PARL)ஆளுநருக்குமிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இடம்பெயர்ந்த மக்களின…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
“ஜனாதிபதியும் சி.ஐ.டியினரும் முட்டாள்கள்” - சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வெளிநாட்டில் நிரந்தர வதிவிட உரிமை கோரும் மௌலானா, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்)தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கும்போதே பிள்ளையான் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தர வதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வை…
-
- 2 replies
- 166 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 04 FEB, 2025 | 01:16 PM யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 77 ஆவது தேசிய சுதந்திர தினம் நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக பிரதான கொடி கம்பத்தில் பறந்த தேசிய கொடி மாணவர்களால் இறக்கப்பட்டு கறுப்புக் கொடியேற்றப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை பல்கலைகழக சூழலில் கறுப்புக் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தன. சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ். பல்கலைகழக மாணவர்கள் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்…
-
- 2 replies
- 785 views
- 1 follower
-
-
06 Feb, 2025 | 01:42 PM மன்னார் மாவட்டத்தில் மாந்தை மற்றும் நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மேய்ச்சல் தரை பிரச்சினை நீண்ட நாட்களாக இருந்துவரும் நிலையில், அண்மைக்காலமாக மேய்ச்சல் தரை இன்றி அதிகளவான கால்நடைகள் உயிரிழந்து வருகின்றன. குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நாயாற்றுவெளி பகுதியில் அதிகளவான கால்நடைகள் மேய்ச்சலுக்காக கொண்டு செல்லப்படுகின்ற நிலையில், சீரற்ற வானிலையுடனான அதிக பனி காரணமாக அதிகமான மாடுகள் உயிரிழக்கின்றன. அதேவேளை, அதிகளவு மாடுகள் ஒரே பகுதிகளில் மேய்வதால் பட்டினியால் உடல் மெலிந்து இறந்துள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளால் வாழ்வா…
-
- 3 replies
- 286 views
-
-
யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ, விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள கா…
-
- 2 replies
- 246 views
-
-
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆரம்பி…
-
- 0 replies
- 109 views
-
-
06 Feb, 2025 | 12:07 PM யாழ். மத்திய பேருந்து நிலைய வளாகத்தின் பின்புறமாக வைரவர் கோயில் வீதியில் உள்ள பழக்கடை வியாபாரிகள் யாழ். மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்து வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி போராட்டம் ஒன்றை இன்று வியாழக்கிழமை (06) முன்னெடுத்தனர். குறித்த பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து பழங்களை விற்பனை செய்துவரும் வியாபாரிகள் இந்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் தமது குடும்ப வருமானம் முழுமையாக மாநகர சபையினரால் பறிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழில் தமது கடை தொகுதியின் முன்றலில் போராட்டத்தை நடத்திய பழக்கடை உரிமையாளர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 168 views
-
-
06 Feb, 2025 | 05:23 PM மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கற்சேனை, அம்பிளாந்துறை, வால்கட்டு, கடுக்காமுனை, அரசடித்தீவு போன்ற பல கிராமங்களை சூழ்ந்து காணப்படும் வில்லுக்குளத்தில் காட்டுயானைகள் சஞ்சரிப்பதை பிரதேச வாசிகள் இன்றைய தினம் வியாக்கிழமை (06) அவதானித்ததுடன், அப்பிரதேசத்திற்கு பொறுப்பான வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உடனடியாக வருகை தந்து காட்டுயானைகளை பார்வையிட்டனர். இது தொடர்பில் ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கூறுகையில், தற்போது பகல் வேளையாகவுள்ளது, எனினும், வேளாண்மை அறுவடை செய்யப்பட்டு கொண்டிருக்கின்ற இவ்வேளையில் கிராமவாசிகளும் விவசாயிகளும் தற்போது அதனை சூழ காணப்படுகின்றனர். …
-
- 0 replies
- 134 views
-
-
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு! உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு எனவும் அவர் தெரிவித்தார். https://athavannews.com/2025/1420036
-
- 0 replies
- 156 views
-
-
எம்.பி.க்களுக்கான வாகன இறக்குமதி தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானம்! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதில் நம்பிக்கை இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது. ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வருடம் வாகன இறக்குமதிக்காக 1000 முதல் 1200 மில்லியன் ரூபா வரை வெளிநாட்டு கையிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.பி. ஒருவருக்கு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சின் …
-
- 0 replies
- 169 views
-
-
பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் திட்டம் தொடர்பில் அறிவிப்பு! 35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு பகுதிக்கான ஆட்சேர்ப்பு உள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார் அத்துடன், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அதனைக் கையாள்வதற்காக மற்ற…
-
- 0 replies
- 98 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் உயர் நீதிமன்ற அறிவிப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாகக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகளான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை இந்த மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறத…
-
- 0 replies
- 142 views
-
-
குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது - அருட் தந்தை சிறில் காமினி 06 Feb, 2025 | 12:12 PM (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அரசியல் தலையீடு தேவையற்றது. எனவே இந்த விசாரணைகள் சுயாதீனமாக முன்னெடுக்கப்படுவதற்கு இடமளிக்கப்பட வேண்டும். குற்றப்புலனாய்வுப்பிரிவு அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து விடக் கூடாது என பேராயர் இல்ல பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி வலியுறுத்தினார். நேற்று புதன்கிழமை (05) கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை …
-
- 0 replies
- 102 views
-
-
வேலை வாய்ப்பு எனக் கூறி பாரிய மோசடி February 6, 2025 07:29 am அரசு நிறுவனங்களின் இலட்சினைகளை பயன்படுத்தி போலியாக வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் சிரேஸ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் இலட்சினையை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அந்த விளம்பரம் பரப்பப்பட்டுள்ள நிலையில், அது ஒரு போலியான விளம்ப…
-
- 0 replies
- 85 views
-
-
அநுரவின் வெற்றிக்கு புலம்பெயரிகளே காரணம்! - விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு விமல் வீரவன்ஸ கண்டுபிடிப்பு கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் தலையீட்டாலேயே வடக்கு மாகாணத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: தேசிய மக்கள் சக்திக்கு வடக்கில் இயல்பாக வாக்குகள் கிடைத்திருக்கும் என நான் நம்பவில்லை. ஏனெனில் அங்குள்ள குடும்பங்களில் 90 சதவீதமானவற்றில் எவரேனும் ஒருவர் வெளிநாட்டில் இருப்பார்;. அவர்கள் அங்கு பலமாக உள்ளனர். எனவே, அங்கிருந்து வரும் தகவலுக்கமைய இங்கு தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படலாம். அந்த சக்திகளை (புலம்பெயர்) திருப்திப்படுத்துவதற்கு அரசாங்…
-
- 0 replies
- 105 views
-
-
பெப்ரவரி 15 முதல் உத்தரதேவி ரயில்! பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - கொழும்புக்கு இடையில், உத்தரதேவி ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி, காலை 5:30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகின்ற ரயில் மதியம் 1:15 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையவுள்ளது. கொழும்பிலிருந்து காலை 11.50 மணியளவில் பயணிக்க ஆரம்பிக்கும் ரயில் மாலை 6:50 மணியளவில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சேவைகள் கடந்த 31ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்பட்ட இரவு நேர தபால் சேவையானது காங்கேசன்துறையிலிருந்து இரவு 8 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து, அதிகாலை 4.20 மணியளவில் கொழும்பு கோட்டையைச் சென்றடையும். கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 8 மணியளவில் பயணத்தை ஆர…
-
- 0 replies
- 105 views
-