ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
யாழில்.கனமழை – நீரேரிகளின் நீர்மட்டம் உயர்வு – மக்களை விழிப்பாக இருக்குமாறு எச்சரிக்கை யாழில் பெய்து வரும் கன மழை காரணமாக தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள கிராம மக்களை அவதானமாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. யாழில்.கடந்த 24 மணிநேரமாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை தொடர்ந்து நீடிக்குமாயின் தொண்டமனாறு கடல் நீரேரியின் நீர் மட்டும் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. அதனால் கோப்பாய், அச்சுவேலி, புத்தூர், வாதரவத்தை மற்றும் மாண்டான் ஆகிய பகுதி மக்களை விழிப்பாக இருக்குமாறு வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர் என். சுதாகரன் அறிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.2k views
-
-
வரி அதிகரிப்பினால் சொகுசு கார்களின் விலைகள் சடுதியாக உயர்வு மறைமுக தாக்கமே அதிகமென சந்தேகம் (எம்.சி.நஜிமுதீன்) பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தின் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் விலைகளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் Toyota Aqua வின் இறக்குமதி வரியானது 2994750 ரூபாவிலிருந்து 3726750 ரூபாவாக 732000 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேவேளை Toyota Axio (HYBRID) காருக்கு இது வரை விதிக்கப்பட்டு வந்த 2995950 இறக்குமதி வரியானது 3726750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 73080…
-
- 0 replies
- 708 views
-
-
சவீந்திர சில்வா மிகமோசமான போர்க் குற்றவாளி – கொதிப்படைந்தது இலங்கை இராணுவம் : குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கை இராணுவத்தின் புதிய நிறைவேற்று ஆணையாளரும் முன்னாள் இராணுவ அதிகாரியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினை மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளமை குறித்து இலங்கை இராணுவம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் கஜபா படைப்பிரிவின் நிகழ்வொன்றிற்கு கோக் நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறித்து அந்நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடித்திலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கஜபா…
-
- 3 replies
- 599 views
-
-
சாத்தியமற்ற முயற்சியில் புலிகளின் ஆதரவாளர்கள்!! – மைத்திரிபால தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் உலகம் முழுவதிலும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளளர். இவ்வாறு தெரிவித்துள்ளார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. நாரேஹின்பிட்டி இராணுவ மருத்துவமனையில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்தாவது- சர்வதேச ரீதியாக ஒழுங்கமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், தமிழீழத்தை உருவாக்குவதற்கான சாத்தியமற்ற ஒரு முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.…
-
- 1 reply
- 390 views
-
-
நுளம்புக்கொல்லி மீன்களை பொதுமக்களிடம் கோருகிறார் சுகாதார அதிகாரி! [Friday 2017-11-10 19:00] யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் கடந்த வருடம் 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வருடத்தில் 4700 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த தகவல்களை வௌியிட்டார். 'பருவமழை ஆரம்பித்திருக்கும் நிலையில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. மேலும், மலேரியா நுளம்பு பெருக்கம் பல இடங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. ஆரம்…
-
- 4 replies
- 2k views
-
-
ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினம் இன்று யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜ் அவர்களின்11 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று காலை சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள அன்னாரது நினைவுச் சிலை முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சி.துரைராஜா தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. http://newuthayan.com/story/45267.html
-
- 3 replies
- 878 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் உள்ள தடை என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வௌியேறலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் அண்மையில் ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தார். இவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படமுடியாது என EPRLF தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அங்கத்துவக் கட்சிகள் இணங்கின. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள…
-
- 0 replies
- 378 views
-
-
அம்மாச்சி உணவக கட்டடப் பணி: பொலிஸ் விசாரணை மன்னார் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவக கட்டடம் நிர்மாணிக்கும் பணியில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக வெளியான செய்திகளை அடுத்து மன்னார் மாவட்ட உதவி விவசாயப் பணிப்பாளரிடம் புலானாய்வுப் பிரிவினர் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மன்னார் மாவட்ட கால்நடை மருத்துவ வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகக் கட்டடம் அமைப்பதில் ஊழல் இடம்பெறுவதாக சில இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இது த…
-
- 0 replies
- 481 views
-
-
மட்டக்களப்பை நோக்கிப் படையெடுக்கும் யானைப் பட்டாளம்! மட்டக்களப்பில், அண்மைக் காலமாக யானைகளின் ஆதிக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மட்டக்களப்பின் பின்தங்கிய கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனங்கள் அதிகமாகப் பயணிக்கும் கொழும்பு செல்லும் பாதையைக் கடந்து செல்லும் இந்த யானைப் பட்டாளங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பல உயிர்ச் சேதங்களும் இடம்பெற்றுள்ள நிலையில் இதுபோன்ற யானைப் பட்டாளங்கள் அதிகரிப்பதனால் இன்னும் பல உயிர்கள் இழக்க நேரிடும் தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/26895
-
- 1 reply
- 373 views
-
-
வார இறுதிநாள்களில் சிறப்புச் சுற்றிவளைப்பு வடக்கில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளி லேயே வாள்வெட்டுக் குழுக்களின் அடாவடியும் மது போதையில் வாகனம் செலுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதனால் இந்த நாள்களில் பொலிஸாரின் அதிரடியான சுற்றிவளைப்புக்கள் இனி ஆரம்பிக்கப்படும். பிடிபடுபவர்கள் அனைவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ இந்தத் தகவலைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வாள்வெட்டுக் கு…
-
- 0 replies
- 448 views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் எதிர்காலம் கேள்விக்குறியில்! ஸ்ரீலங்கா எயார்லைன்ஸுக்கு எந்தவொரு நிதி ஒதுக்கீடுகளையும் செய்யவில்லை. இனிமேல் அதன் சுமையை அரசாங்கத்தினால் சுமக்க முடியாது என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். எயார் லைன்ஸ் நிறுவனத்தினை இலாபமீட்டுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. பல்வேறு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரியாது. முடியாதபோது வேறு வழிக்கு செல்ல வேண்டி வரும் என்றும் அவர் குறிப்பிட்டார். 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 363 views
-
-
அவையில் கேள்விக் கொக்கிகளைப் பூட்டிய சிறீதரன் வடக்கில் உள்ள பொருளாதார வளங்களை முடக்கும் வகையிலான திட்டமிடல்கள் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துமா என கேள்விஎழுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள பல விடயங்களையும் பட்டியலிட்டார். பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். “யுத்தம் நிறைவடைந்த பின்னர் யுத்தவெற்றி மமதையுடன் இருந்தவர்கள் தற்போது அதிலிருந்து சற்று இறங்கியிருக்கின்றமையை இந்த வரவுசெலவுத்திட்டம் ஒட்டுமொத்தமாக பாhக்கின்றபோதும் இனக்கு…
-
- 0 replies
- 251 views
-
-
மட்டக்களப்பில் புதிய நகரசபை உருவாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்) மட்டக்களப்பு, கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்கக் கோரியும் குறித்த பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்…
-
- 0 replies
- 347 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தால் மானியம் குறைந்த பட்சம் 5 முன்னாள் போராளிகள் மற்றும் போரினால் விதவையானவர்களை தொழிலுக்காகச் சேர்த்துக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், தொழிலாளர் ஒருவருக்கு ஆகக் கூடியது மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கினால், அதில் அரசு 50 சதவீதத்தை மானியமாக வழங்கும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: போர் மற்றும் இன முறுகலினால் பாதிக்கப்பட்ட விதவைகளுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் வாழ்வாதார உதவிகளை வழங்கி அவர்கள் மீண்டும் சமூக நீரோட்டத்திற்கு உள்வாங்கப்பட வேண்டியவர்களாகவு…
-
- 4 replies
- 840 views
-
-
கல்வியில் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதனால்தான் எமது இளைஞர்கள் ஆயுதமேந்தினர் அன்பார்ந்த மாணவர்களே பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் இதுவே உங்களின் குறிக்கோளாக அமையவேண்டும் இன்று இலங்கையின் கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது சமூகத்தின் தலைவிதியை மாற்றியமைக்க உங்களால் மாத்திரமே முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார். பாடசாலை சமூகத்தின் கோரிக்கைக்கு அமைய பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு அதிபர், பிரதி அதிபர்களுக்கான தளபாடங்களை தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக பெற்றுக்கொடுத்து அதனை ககையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்குபோதே அவர் இவ்வாறு தெரிவ…
-
- 0 replies
- 240 views
-
-
சீனாவின் போர் பயிற்சி கப்பல் இலங்கையை வந்தடைந்தது.! (டி.ரஸ்மிலா) இந்து சமுத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அமெரிக்காவைத் தொடர்ந்து சீன இராணுவத்தின் குய் ஜிகுவாங் போர் பயிற்சி கப்பலொன்று இன்று காலை இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. உத்தியோகபூர்வமாக கொழும்புத்துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் மரபு ரீதியான வரவேற்பளித்தனர். சுமார் நீளம் 165.3 மீற்றர் கொண்ட 9000 தொன் கொள்ளளவுடையதுமான குறித்த கப்பல், 4 நாட்கள் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனவும், எதிர்வரும் 14 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்…
-
- 0 replies
- 332 views
-
-
இருட்டிலிருந்து வெளிச்சத்தை நோக்கி பேசுகிறேன்
-
- 0 replies
- 314 views
-
-
இரட்டைப் பிரஜாவுரிமை மறைக்கப்பட்டால் சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை அறிந்துகொண்டு யாராவது இரட்டைப் பிரஜாஉரிமையை பாராளுமன்றத்துக்கு மறைத்தால் அவர்களுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்புடன் சிறைத்தண்டனையும் வழங்கப்படவேண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை பிரஜா உரிமையை வகிக்க முடியாது என உயர்நீதிமன்றத்தின…
-
- 0 replies
- 356 views
-
-
சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்; பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம் (படங்கள்) நாட்டின் மிக முக்கியமான தருணத்திலும், கூட்டு எதிர்க் கட்சிகள் காலோசிதமாகத் தமது எதிர்ப்புகளை வெளிக்காட்டத் தவறவில்லை. அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் இன்னும் சில நிமிடங்களில் பாராளுமன்றில் வாசிக்கப்படவிருக்கிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டிகளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். துவிச்சக்கர வண்டிகளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் கண்டு தாம் முதலில் த…
-
- 3 replies
- 577 views
-
-
காசோலை வழக்கில் ஆள் மாறாட்டம் செய்த யாழ்.காவல்துறையினர் – இடைத்தரகர்களுடன் நெருக்கமா ? குளோபல் தமிழ்ச்செய்தியாளர் காசோலை வழக்கில் ஆள்மாறாட்டம் செய்ய யாழ்.காவல்துறை சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு யாழ்.நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் காயத்திரி சைலவன் கடுமையாக எச்சரித்துள்ளார். யாழ்.நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை 25 இலட்ச ரூபாய் காசோலை வழங்கி மோசடி செய்தமை தொடர்பிலான வழக்கு சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினரால் தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நேற்று முன்தினம் புதன் கிழமை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் நடைபெற்ற போது , முறைப்பாட்டாளர் , காசோலை …
-
- 1 reply
- 462 views
-
-
வடக்கு – கிழக்கில் உதய சூரியனில் பொது அணி எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் அரசியல் கட்சிகள் சில இணைந்து உதய சூரியன் சின்னத்தில் களமிறங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழரசு கட்சிக்கு எதிரான நிலைப்பாடுகளை கொண்டுள்ள கட்சிகள் இணைந்தே இவ்வாறாக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சில கட்சிகளும் இந்த பொது சின்னத்துடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com
-
- 2 replies
- 429 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்திய துணை தூதரகம் அமைக்கப்பட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்திய துணைத் தூதரகம் அமைக்கப்பட வேண்டும் என லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். ஏறாவூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், தமிழ்பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் மக்கள் தமது தேவை களை நிறைவேற்றிக்கொள்ள கொழும்பு நோக்கியே செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க நேரிடுவது தொடர்பில் மக்கள் பல தடவைகள் முறையிட்டுள்ளனர். …
-
- 0 replies
- 255 views
-
-
குடாநாட்டில் தலைவிரித்தாடும் வன்முறைக்கலாசாரம் யாழ்.குடாநாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அண்மைக்காலமாக குற்றச் செயல்கள் வகை தொகையின்றி அதிகரித்த வண்ணமுள்ளன. தமக்குக் கிட்டும் தகவல்களின் அடிப்படையில் அச்சு ஊடகங்களும் சரி, இலத்திரனியல் ஊடகங்களும் சரி இத்தகைய குற்றச்செயல்கள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு அறியத்தந்தாலும், குறித்த ஊடகங்ளுக்கு எட்டாத் தகவல்களாகவும் சிற்சில குற்றச்செயல்கள் யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெறவே செய்கின்றன. போர் இடம்பெற்ற காலகட்டத்தில் கூட, பாதுகாப்புப் படையின…
-
- 0 replies
- 361 views
-
-
நல்லிணக்கத்திற்கு சாதகமான பட்ஜட் அரச,தனியார் துறை ஊழியர்களுக்கு நிவாரணங்கள் எதுவுமில்லை சொகுசு கார் விலை ரூபா 25 இலட்சத்தினால் அதிகரிப்பு மின்சார கார் விலை ரூபா 10 இலட்சத்தால் குறைப்பு மலையக வீடமைப்புக்கு 2600 மில்லியன் ரூபா டீசல் ஆட்டோ விலை ரூபா 50 ஆயிரத்தினால் அதிகரிப்பு வடக்கில் மீள்குடியேறவும் வீடமைக்கவும் 2750 மில்லியன் ரூபா மதுபானத்துக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார நிலையம் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்க 1400 மில்லியன் ரூபா முன்னாள் போராளிகளுக்கு தொழில் வழங்கினால் சம்பள உதவித் தொகை வடக்கு, கிழக்கில் 50000 வீடுகள் அமைக்கும் தி…
-
- 0 replies
- 368 views
-
-
பொது எதிரணியின் சிறப்புரிமை பிரச்சினையால் சபையில் சர்ச்சை கவலை தெரிவித்த சபாநாயகர் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) கூட்டு எதிர்க்கட்சியினர் துவிச்சக்கர வண்டியில் நேற்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்த போது பொலிஸார் தடு த்து நிறுத்தியுள்ளனர். இந்த செயற்பாட்டினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினேஷ் குணவர்தன எம்.பி சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது ஆளும் எதிர்க்கட்சியினர் ஆரவாரமிட்டு குழப்பம் விளைவித்தனர். இதனையடுத்து பாராளு…
-
- 0 replies
- 214 views
-