ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143332 topics in this forum
-
யாழ். ஆவரங்காலில் பட்டப்பகலில் கத்திக் குத்து யாழ். ஆவரங்கால் சர்வோதயா வீதியில் வைத்து, நபரொருவர் மீது மர்ம நபர் இருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (19) காலை பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஆவரங்கால் சர்வோதயா வீதியில், உள் வீதிக்கு வந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கத்தியால் குறித்த நபர் மீது சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில், ஆழமான குத்துக் காயமொன்று கழுத்துப் பகுதியில் ஏற்பட்டுள்ளதுடன், குத்திய கத்தி, கழுத்துப் பகுதியில் அரைவாசியுடன் முறிவடைந்துள்ளது. வீதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை ரஜீவன் வயது (32) என்ற குறித்த ந…
-
- 0 replies
- 553 views
-
-
நீதி நிலை நாட்டப்படுவதில் நாட்டில் பெரும் பாரபட்சம் இப்படிக் கூறினார் ஞனசாரதேரர் நாட்டில் அனைவருக்கும் நீதி சமமாக நிலைநாட்டப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளார் ஞானசார தேரர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவதுபொலிஸ்மா அதிபர் சகலருக்கும் நீதி பாரபட்சம் இன்றி நிலைநாட்டப்படுவதாக கூறுவது பேச்சுக்கு மட்டும் மட்டுப்பட்டுள்ளது. என்றதுடன் வடக்கில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியும் தெற்கில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு வேறு ஒரு நீதியும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றார். http://newuthayan.com/story/38437.html
-
- 0 replies
- 346 views
-
-
தமிழர் கொலை : குற்றவாளிக்குத் தூக்கு கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் நடந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு சாவுத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர். ஹெய்யன்துடுவ இன்று இந்த சாவுத் தண்டனைத் தீர்ப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகேந்திரன் இளங்கோவன் என்ற தமிழர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மொஹமட் நசீர் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். நீண்ட வழக்கு விசாரணைகளுக்கு பின்னர், குற்றவாளிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்…
-
- 0 replies
- 364 views
-
-
தனிநாட்டுக்கான வாக்கெடுப்பை தமிழர்களும் கோரவேண்டுமா? இனப்பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் தீர்வைக் காண்பதை விடுத்து கட்லோனியா, குர்திஸ்தான், ஸ்கொட்லாந்து போன்று தமிழ் மக்களும் பொது வாக்கெடுப்பொன்றை நடத்தி பிரிந்து செல்லும் நிலைக்கு அரசு தமிழர்களைத் தள்ளுகின்றதா? இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இலத்திரனியல் திருத்தச் சட்டவரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். அப்போதே இந்த விடயம் குறித்து அவர் பேசினார். அவர் மேலும்…
-
- 6 replies
- 684 views
-
-
முன்னாள் புலி உறுப்பினர்கள் அரசியல் கைதிகளேதான்! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகள் அல்லர் என்கிற அரச தரப்பினரின் கருத்துக்கு தெளிவானதும் இறுக்கமானதுமான பதிலை வழங்கியிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை, அதுவும் மிக முக்கியமான தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களையே தாம் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்கிறோம் என்று அரச தரப்பினர் கூறிவரும் நிலையில், சம்பந்த…
-
- 0 replies
- 344 views
-
-
பாகிஸ்தான் வெளியுறவு செயலர் பிரதமரை சந்தித்து பேச்சு பாகிஸ்தானின் வெளியுறவு செயலர் தெஹ்மீனா ஜான்ஜிவா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கு இரு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாகிஸ்தான் வெளியுறவு செயலருக்கு வரவேற்பளித்ததுடன், இலங்கை - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை விருத்திசெய்யவேண்டியதன் அவசியத்தினை இதன்போது தெரிவித்தார். இதன்போது, பாகிஸ்தான் வெளியுறவு செ…
-
- 0 replies
- 360 views
-
-
தாஜுதீன் கொலை விவகாரம் : ஆனந்த சமரசேகர நீதிமன்றில் சரண்…! றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் கொலையில் சந்தேகிக்கப்படும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர சற்றுமுன்னர் கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தேடுதல் ஆணைக்கு அமைவாக, பெற்றுக் கொள்ளப்பட்ட உயிரிழந்த வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, நீதிமன்றத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைவாக, உயிரிழந்த வசீம் தாஜுதீனின் எலும்பு துண்டுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருப…
-
- 0 replies
- 246 views
-
-
இன்று ஜனாதிபதியை சந்திக்கிறது யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்றக் கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளது. இச் சந்திப்பு காலை 11 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாக 23 …
-
- 2 replies
- 464 views
- 1 follower
-
-
சமஷ்டியை வழங்கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்புபட்டி போராட்டம் சிறந்த ஒத்திகை என்கிறார் கெஹலிய (ரொபட் அன்டனி) சமஷ்டி முறைமையில் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண் டால் என்ன நடக்கும் என்பதற்கான ஒரு ஒத்திகையையே நாம் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் கண்டோம். வடக்கு முதலமைச்சருக்கு பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் அன்று என்ன நடந்திருக்கும் என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தர் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அத்துடன் ஒருமித்த நாடு என்பது சமஷ்டிக்கு ஒப்பானதாகும். எனவே இதனை அடிப…
-
- 1 reply
- 319 views
-
-
ட்ரயல் அட்பார் நீதிமன்றை நிறுவி அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள்.! தேசிய மட்டத்தில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரத்தை ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஒன்றை நிறுவி மூன்று மாதகாலத்தில் தீர்த்துவிடவேண்டும். இந்தப் பிரச்சினையை தொடர்ந்து இவ்வாறு நீடித்துக்கொண்டிருப்பது முறையல்ல என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்:- அரசியல் கைதிகள் விவகாரம் விரை…
-
- 0 replies
- 269 views
-
-
‘கைநீட்டிய’ பிரதி பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில்! அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞரைத் தாக்கிய தங்காலை பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார தலுவத்தையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவித்த விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் குறித்து நடைபெற்று வரும் விசாரணையில் கலந்துகொள்ளும் முகமாக அவரை வரவழைத்திருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சாலிய பெரேரா தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் இன்று (19) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளிக்கவுள்ளார். இச்சம்பவம் குறித்து தேசிய பொலிஸ் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேற்படி சம்பவம் ஊடகங்களில…
-
- 0 replies
- 320 views
-
-
பௌத்த தேரர் முறைப்பாடு ; அழைப்பாணையை நிராகரித்தார் சிவாஜிலிங்கம் பௌத்த தேரர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பௌத்த தேரர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து இம் முறைப்பாடு தொடர்பாக வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக நேற்றைய தினம் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவில் …
-
- 0 replies
- 182 views
-
-
மர்மமானமுறையில் காணாமல்போன 3 பெண்களில் இருவர் சரண் ; தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் கொலன்னாவை பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை முதல் காணாமல்போயிருந்த மூன்று பெண்களில் இரு பெண்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவர் 19 வயதுடைய வத்சலா பெரேரா எனவும் மற்றையவர் அவரது கணவரின் 15 வயதுடைய சகோதரியெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இவர்களுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை காணாமல்போய் மீண்டும் வராத 14 வயதான தமிழ் சிறுமியை தேடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த, ஒன்றரை வயதுடைய குழந்தையின் தாயான 1…
-
- 2 replies
- 594 views
-
-
ஆறு நாடுகளின் 9 போர் கப்பல்கள் இலங்கை விஜயம்.! அடுத்த மாதம் நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில் ஆறு நாடுகளின் ஒன்பது போர்க் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன. இந்த விஜயங்களின்போது இலங்கை கடற்படையுடன் பல்வேறு கூட்டு ஆயுதப்பயிற்சிகளும் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளின் போர்க்கப்பல்கள் இலங்கை நோக்கி விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அண்மைக்காலமாக இலங்கை நோக்கிய எந்த விஜயமும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அடுத்த மாதம் பத்தாம் திகதி வரையிலான காலப்படுதியில் ஆறு நாடுகளை சேர்ந்த ஒன்பது போர்க்கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றன.…
-
- 0 replies
- 311 views
-
-
தென் மாகாணத்தின் சில பகுதிகளில் வெடிப்புச்சத்தம் தென் மாகாணத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 9 மணியளவில் வெடிப்புச்சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, கடற்கரையை அண்மித்த பல பகுதிகளில் பிரகாசமான வௌிச்சத்தினை அவதானிக்க முடிந்ததாகவும் சிலர் கூறினர். இது குறித்து மேலதிகத் தகவல்களை எதிர்பாருங்கள்… http://newsfirst.lk/tamil/2017/10/தென்-மாகாணத்தின்-சில-பகு/ தென்னிலங்கை வானில் திடீரென தோன்றிய தீப்பிழம்பு; பதறியடித்து ஓட்டமெடுத்த மக்கள்! இலங்கையின் தெற்கே மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் பாரிய வெளிச்சத்துடனான சத்தமொன்று கேட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித…
-
- 3 replies
- 583 views
-
-
காட்டு யானை அட்டகாசம்: பயன்தரு மரங்கள் நாசம் முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளில் நேற்று குடிமனைக்குள் புகுந்த காட்டு யானைகள் பயன்தரு மரங்கங்களை அழித்தன என்று தெரிவிக்கப்பட்டது. அதிகாலை வேளை குடிமனைகளுக்குள் புகுந்த யானை தென்னம்பிள்ளைகள், வாழை மரங்கள் போன்ற பயன்தரு மரங்களையும் நாசமாக்கின என்று தெரிவிக்கப்பட்டது. போரின் பின்னரே காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது என்றும் அவை வேறிடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கு இறக்கிவிடப்பட்டுள்ளன என்று பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வரட்சி காரணமாக விவசாயமும் அழிந்த நிலையில் மீதமிருக்கும் வான் பயிர்களை யானைகள் அழிக்கின்றன. உடனடியாக எமது ப…
-
- 0 replies
- 459 views
-
-
‘அரசியல் கைதிகள் நலமாக உள்ளனர்’ சாகும் வரையான உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை, சிறப்பான நிலையில் காணப்படுகிறது என, அநுராதபுர போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளனர். அவர்களின் உடல்நிலையைச் சோதித்த பின்னரே, இது அறிவிக்கப்பட்டுள்ளது.தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந்து, இப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். தம்மீதான வழக்குகள், வவுனியா நீதிமன்றிலிருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டெம்பர் 25ஆம் திகதியிலிருந…
-
- 0 replies
- 245 views
-
-
‘மைத்திரியை வீழ்த்துவோம்’ அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தார்மீக உரிமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாது என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக, அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீழ்த்தியமை போன்று, ஜனாதிபதி சிறிசேனவையும் வீழ்த்துவோம் என எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், கட்சியின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அத்தோடு, நிறைவேற்று அதிகாரமுறை தொடர்பான தனது நிலைப்பாட்டை, ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டுமெனவும் அவர…
-
- 0 replies
- 270 views
-
-
தேர்தலில் வடக்கு, கிழக்கில் தனித்து போட்டியிடப்போகிறேன் - கருணா உள்ளூராட்சிசபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனித்து போட்டியிடப்போவதாக கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளாரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்து. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்துள்ள விநாயகமூர்த்தி முரளாரன், இவ்வாறான நிலையிலே தாம் இந்த முடிவை எடுத்ததாக குறிப்பிட்டார். எதிர்கால தேர்தல் திட்டங்கள் தொடர்பாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச தலைமையிலான குழுவி…
-
- 1 reply
- 470 views
-
-
மெர்சல் படம் பார்த்துவிட்டு வந்தவருக்கு யாழில் நடந்த விபரீதம்! மெர்சல் பாடம் பார்த்து விட்டு வீதியில் நின்றவரின் தலையை மோட்டார்சைக்கிளில் வந்த குழுவினர் போத்தலால் அடித்து சிதைத்துள்ளனர். மெர்சல் திரைப்படம் பார்த்துவிட்டு கன்னாதிட்டி வீதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் நின்றுள்ளார். அந்த பகுதியால் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் குறித்த இளைஞனுடைய தலையில் பலமாக தாக்கியுள்ளனர். தலை சிதைவடைந்த நிலையில் இளைஞர் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஏ.வி. வீதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்தவர் என தெரியவருகிறது. https://news.ibctamil…
-
- 0 replies
- 875 views
-
-
20ஆண்டுகளின் பின்னர்தாயகம் திரும்பியவர்கைதாகி விடுவிப்பு சுவிட்ஸர்லாந்திலிருந்து 20ஆண்டுகளின் பின்னர் தாயகம் திரும்பிய போது, கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. கொழும்பு பிரதான நீதிவான் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, பிணையில் விடுதலை செய்த நீதிபதி, எதிர்வரும் 30ஆம் திகதி மன்றில் முன்னிலையாகு மாறும் உத்தரவிட்டுள்ளார். சுவிட்ஸர்லாந்திலிருந்து தாயகம் திரும்பிய சாவகச்சேரியைச் சேர்ந்த 34 வயதான தேவன் கமலீசன் என்ற இளைஞர் கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்…
-
- 2 replies
- 535 views
-
-
(ரெ.கிறிஷ்ணகாந்) தனது திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மின்னுயர்த்தியினுள் (லிப்ட்) வெகுநேரமாக தான் சிக்குண்டதால் திருமணத்துக்கான முகூர்த்த நேரம் கடந்த நிலையில் சம்பிரதாயங்கள் எதனையும் மேற்கொள்ளாது பதிவுத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு குறித்த 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தால் தான் அசெளகரியத்துக்கு உள்ளானதாக மணமகனான சட்டத்தரணி வருண நாணயக்கார அந்த ஹோட்டலுக்கு எதிராக நட்டஈடுகோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், திருமண தினத்தன்று மின்னுயர்த்தியில் சிக்குண்டு தான் அசெளகரியத்துக்குள்ளானமைக்கு நட்டஈடாக குறித்த ஹோட்ட…
-
- 6 replies
- 582 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (18-10-2017)
-
- 0 replies
- 225 views
-
-
தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தை காண யாழ்ப்பாண தியைரங்குகளில் இரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது.
-
- 12 replies
- 831 views
-
-
வடக்கில் இப்போதே கூட்டாட்சியா நாட்டில் இருவேறு சட்டங்களா என்று கேள்வி எழுப்பியது மகிந்த அணி போராட்டங்களுக்கு நீதிமன்றில் தடை உத்தரவுகள் பெறப்படுவதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதிலும், வடக்கிலும் தெற்கிலும் ஒவ்வொரு முறைமை பின்பற்றப்படுகின்றது. வடக்குக்கு இப்போதே கூட்டாட்சி வழங்கப்பட்டு விட்டதா ? இவ்வாறு மகிந்த அணி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது. நாடாளுமன்றத்தில் மகிந்த அணி எழுப்பிய கேள்விக்கு அரச தரப்பு வழங்கிய பதிலின் பின்னரான கருத்து மோதலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. ‘‘மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ந…
-
- 0 replies
- 461 views
-