Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நிலக்கடலைகளை ஒவ்வொன்றாக மைக்ரோ துளையிட்டு ஹெரோயினை உள்ளே வைத்து சிறை கைதிக்கு வழங்க முயற்சித்த நபரொருவர் கைது! (ரெ.கிறிஷ்­ணகாந்) நிலக்­க­டலை பொதியில் ஹெரோ­யினை மறைத்து வைத்து கொழும்பு மெகஸின் சிறைச்­சா­லைக்குள் கொண்டு செல்ல முற்­பட்ட நபர் ஒரு­வரை சிறைச்­சாலை புல­னாய்வு பிரி­வினர் கைது செய்து பொரளை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். பொரளை பிர­தே­சத்தை சேர்ந்த சிறைக் கைதி ஒரு­வரை பார்­வை­யி­டு­வ­தற்­காக நிலக்­க­டலை பொதி ஒன்­றுடன் சென்­றி­ருந்த நபர் ஒரு­வரை சோத­னை­யிட்­ட­போது, அப்­பொ­தி­யினுள் மிகவும் சூட்­சு­ம­மான முறையில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தலா 1 கிராம் நிறை­யு­டைய 18 ‍‍‍ஹெரோயின் பக்­கற்­று­களைச் சிறைச்­சாலை பு…

  2. கிளிநொச்சியில் மீண்டும் வாள்வெட்டு கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வாள்வெட்டு சம்பவம் நேற்றைய தினம் இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அக்கராயன் பகுதியைச் சேர்ந்தவர்களே வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பாதிக்கப்பட்ட 7 ஆண்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக…

  3. புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் புனா்வாழ்வுப் பெற்ற தெரிவு செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நேற்று (07) கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபா் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கோழி குஞ்சுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. http://tamil.adaderana.lk/news.php?…

  4. நவம்­ப­ரில் பொது­வாக்­கெ­டுப்பு நடக்­க­லாம் புதிய அர­ச­மைப்பு மீதான பொது வாக்­கெ­டுப்பு நவம்­பர் மாதம் நடை­பெ­ற­லாம் என்று நம்­பத் த­குந்த வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறிய முடி­கின்­றது. புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் ஈடு­பட்­டுள்ள வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை எதிர்­வ­ரும் 21ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அன்­றைய தினம், அறிக்கை மீதான விவா­தத் திகதி தீர்­மா­னிக்­கப்­ப­டும். பெரும்­பா­லும் ஒக்­ரோ­பர் மாதத்­தின் முதல் வாரத்­தில் விவா­தம் நடை­பெற்று, நவம்­பர் மாத இறு­தி­யில் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­லாம் என்று கூறப்­ப­டு­கின்­றது. http://newuthayan.com/story/26652.html

  5. ஒருபோதும் இடமளியோம் சுதந்திரக்கட்சி திட்டவட்டம் (ரொபட் அன்­டனி) இந்த நாடு பிரி­வ­டை­வ­தற்கு ஸ்ரீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. நாட்டில் சமஷ்டி முறையைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கோ, வடக்கு, கிழக்கை இணைப்­ப­தற்கோ, சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்­டு­வ­ரு­வ­தற்கோ ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறிங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. இந்த விட­யத்தில் நாங்கள் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். அடுத்து வரும் அனைத்துத் தேர்­தல்­க­ளிலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி தனித்தே போட்­டி­யிடும் அது…

  6. லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!! Share கடந்த அரச தலைவர் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்துக்காக தொலைத்தொடர்புகள் ஆணைக…

  7. வட- கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புக்கு இடைக்­கால அறிக்­கை­யில் இட­மே­யில்லை புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தயா­ரா­கி­விட்ட நிலை­யில், வடக்கு– கிழக்கு மாகா­ணங்­க­ளின் இணைப்­புத் தொடர்­பில் அதில் எந்­த­வி­த­மான இறு­தித் தீர்­மா­ன­மும் கூறப்­ப­ட­வில்லை என்று ‘உத­யன்’ அறிந்­தான். அது­போன்றே மதச் சார்­பற்ற நாடு என்ற விட­யத்­தி­லும் ஒரு­மித்த நிலைப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. இலங்­கை­யின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வாக புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதற்­காக நாடா­ளு­மன்­றம் அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றப்­பட்­டது. அத்­து­டன் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்­டல் குழு­வும் நிய­மிக்­கப்­…

  8. சம்பந்தனையும் அழைக்கிறார் கோட்டாபய புதிய அரசியலமைப்பை உருவாக்கும் கூட்டரசின் முயற்சியை முறியடிக்கும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச தலைமையில் உதயமாகியுள்ள எலிய அமைப்பின் அடுத்த கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கட்சி தலைவர்களுக்கு தான் அழைப்புவிடுக்கவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எலிய – ஒளிமயமான அபிலாசைகள் என்ற பெயரிலான புதிய அமைப்பு அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை பொரலஸ்கமுவவிலுள்ள விடுதியொன்றில் இட…

  9. மக்களது அபிவிருத்தி விருப்பங்கள் மீறப்படமாட்டாது : ஜனாதிபதி நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார். நேற்று பிற்பகல் பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி,…

  10. வவுனியாவில் பாடசாலை மாணவியை காணவில்லை.! வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது - 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (06.09) அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டதன் பின்னர் வீட்டின் அறையில் உறங்கியுள்ளார். நேற்றைய தினம் அதிகாலை அவரது பெற்றோர் பாடசாலைக்கு செல்வதற்கு எழும்புமாறு அறைக்கு சென்ற போது குறித்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் வவுனியா …

  11. "முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமை மனவருத்தத்தையளிக்கிறது"// என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "வடமாகாணத்தின் மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் மக்களைக் கொண்ட எருக்கலம்பிட்டிக் கிராம மக்கள் 1990ஆம் ஆண்டில் இப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நாட்டின் நாலா பக்கங்களிலும் சிதறுண்டு வாழ்ந்து வருவது மனவருத்தத்திற்குரியது" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம் பெற்ற ஹஜ் பெருவிழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "…

  12. இராணுவத்தினரை விசாரணைக்கு அழைத்தால் முன்னாள் போராளிகளை கைது செய்யவேண்டுமாம்? இராணுவத்தினரின் போர்க் குற்றங்களை விசாரிக்க பொன்சேகா கோருவாராயின் விடுவிக்கப்பட்ட 12ஆயிரம் முன்னாள் போராளிகளையும் மீண்டும் கைது செய்ய வேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் மட்டுமா போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்? விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன், அடேல் பாலசிங்கம், விநாயகம் ஆகியோரும், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12,000 முன்னாள் போராளிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை…

  13. கிருசாந்தியின் நினைவு தினம் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செம்மணியில் கடைப்பிக்கப்பட்டது. கிருசாந்தியுடன் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கும் இதன் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். http://newuthayan.com/story/26347.html

  14. சலித்துப் போன உறுதிமொழிகள்! இலங்கைத் தமிழர்களை ஒருபோதுமே கைவிடப் போவதில்லையென்றும், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு நீதியும் நிரந்தரமுமான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து பாடுபடப் போவதாகவும் இந்தியா இன்னமும் கூட கூறிக் கொண்டேயிருக்கின்றது. இந்தியாவின் இந்த உறுதிமொழி புதியதொன்றல்ல... இலங்கையில் தோற்றம் பெற்ற இனமுரண்பாடானது 1983 ஜுலையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன ஒழிப்புக் கலவரமாக உருவெடுத்த நாளில் இருந்து, இங்குள்ள தமிழர்களின் விவகாரம் தொடர்பா…

  15. கிழக்கில் கூட்டாட்சி: சம்பந்தனும், ஹக்கீமும் இன உறவுகளை பலப்படுத்த வேண்டும் கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சி நடத்தும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரஸும் தழிழ், முஸ்லிம் சமூகங்களின் உறவுகளைப் பலப்படுத்த வேண்டுமென தேசிய சகவாழ்வு, தேசிய கலந்துரையாடல் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின், பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் (05) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ப…

  16. வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது மட்டக்களப்பு – வாகனேரி, முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகக் கூறப்படும் பகுதிக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இன்று சென்றிருந்தார். முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதிக்கு இன்று சென்ற சந்தர்ப்பத்தில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததுடன், தம்மைக் கண்டதும் அவர்கள் ஓடிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மண் வளம் சட்டத்திற்குப் புறம்பாக சூறையாடப்பட்டு, வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் கொண்டு செ…

  17. சக்தி டிவி செய்திகள் 07 09 2017 , 8PM

  18. மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார். அரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அ…

  19. கொழும்பில் இடம்பெற்ற பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்பு தினம் கடந்த 1965 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுக் கூருமுகமாக கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் காரியாலயம் பாகிஸ்தானின் 52 ஆவது பாதுகாப்புத்தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. பாகிஸ்தானிற்கான பாதுகாப்பு ஆலோசகர் கலோனல். சஜ்ஜாத் அலி தனது ஆரம்ப உரையில், பாகிஸ்தானிய ஆயுதப்படைகள் தங்களது மண்ணில் தீவிரவாத்தினை இல்லாதொழிப்பதற்கு தியாகங்களை மேற்கொண்டுவருவதாகவும், நாட்டிலே சமாதானம் மற்றும் ஸ்த்திரத்தன்மையினை ஏற்படுத்துவதற்கு அளப்பரிய முயற்சிகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு இலங்…

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேவையை நிறைவேற்றும் வகையிலேயே சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும், ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க இதனால் புதிய அரசியல் யாப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தயான் ஜயதிலக்க, புதிய யாப்பின் ஊடாக நாடு பிளவடையாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் புதிய…

  21. மரு­தங்­கேணி கிராமிய வங்கியில் பெரும் நிதிமோசடி வைப்பிலிட்ட பணத்தை வழங்குமாறு மக்கள் கோரிக்கை மரு­தங்­கேணி பல நோக்கு கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிரா­மிய வங்­கி­யில் மக்­க­ளால் வைப்­பி­லி­டப்­பட்ட கோடிக்­க­ணக்­கான நிதி மோசடி செய்­யப்­பட்டு வேறு தேவை­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அந்­தப் பணத்தை எமக்கு மீளப் பெற்­றுத்­தர வேண்­டும் என பாதிக்­கப்­பட்ட மக்­கள் கோரிக்கை விடுத்­த­னர். இது தொடர்­பில் அந்த மக்­கள் தெரி­வித்­த­தா­வது; மரு­தங்­கேணி கிரா­மிய வங்­கி­யில் வைப்­பிலிட்ட எமது பணத்­துக்கு என்ன நடந்­தது என வங்கி முகா­மை­யா­ளர் எமக்­குக் கூற­வேண்­டும். ஆயி­ரக்­க­ணக்­கான நாம் கோடிக்­க­ணக்­கில் இந்த வங்­கி­யில் பணத்­தினை…

  22. யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா.? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இறுதி யுத்தகாலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் இராணுவத்திடம் இல்லை எனில் யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா? பன்னாட்டு இராணுவம் நாட்டில் இருந்தால் காணாமல் போனவர்களின் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்து தேடி பார்க்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். அத்துடன் இராணுவ தளபதிகள் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள நிலையில் இராணுவம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்றால் இராணுவ தளபதிகள் தாங்க…

  23. இனி சிங்களத்தில் சீட்டு வழங்கப்படமாட்டாது -க. அகரன் போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞர்…

  24. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் கலந்துரையாடல் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் ஸ்ரீலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில்…

  25. சுதந்­திர கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற தீர்­மானம் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தெரிவிப்பு (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற தீர்­மானம். சுயா­தீ­ன­மா­கவோ அல்­லது பொது எதி­ர­ணியில் அம­ரவோ தயா­ராக இருப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் தெரி­வித்­துள்­ளனர். தேசிய அர­சாங்­கத்தின் ஊழல் செயற்­பா­டு­களில் தம்மால் பங்­கெ­டுக்க முடி­யாது எனவும் ஜனா­தி­ப­தி­யிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். தேசிய அர­சாங்­கத்தில் இடம்­பெறும் மோச­டி­களை கண்­டித்தும் முரண்­பா­டு­களை கண்­டித்தும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 12 உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தை விட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.