ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143348 topics in this forum
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேவைக்காகவே புதிய யாப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது தேவையை நிறைவேற்றும் வகையிலேயே சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டு புதிய யாப்பை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும், ஜெனீவாவிற்கான ஸ்ரீலங்காவின் முன்னாள் தூதுவருமான கலாநிதி தயான் ஜயதிலக்க இதனால் புதிய அரசியல் யாப்பு தோற்கடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய தயான் ஜயதிலக்க, புதிய யாப்பின் ஊடாக நாடு பிளவடையாவிட்டாலும் அதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுவரும் புதிய…
-
- 0 replies
- 236 views
-
-
மருதங்கேணி கிராமிய வங்கியில் பெரும் நிதிமோசடி வைப்பிலிட்ட பணத்தை வழங்குமாறு மக்கள் கோரிக்கை மருதங்கேணி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கிராமிய வங்கியில் மக்களால் வைப்பிலிடப்பட்ட கோடிக்கணக்கான நிதி மோசடி செய்யப்பட்டு வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை எமக்கு மீளப் பெற்றுத்தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் அந்த மக்கள் தெரிவித்ததாவது; மருதங்கேணி கிராமிய வங்கியில் வைப்பிலிட்ட எமது பணத்துக்கு என்ன நடந்தது என வங்கி முகாமையாளர் எமக்குக் கூறவேண்டும். ஆயிரக்கணக்கான நாம் கோடிக்கணக்கில் இந்த வங்கியில் பணத்தினை…
-
- 1 reply
- 286 views
-
-
யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா.? (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) இறுதி யுத்தகாலப்பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் இராணுவத்திடம் இல்லை எனில் யுத்தகாலத்தில் நாட்டில் இருந்தது இலங்கை இராணுவமா? அல்லது பன்னாட்டு இராணுவமா? பன்னாட்டு இராணுவம் நாட்டில் இருந்தால் காணாமல் போனவர்களின் பட்டியலை அவர்களிடம் ஒப்படைத்து தேடி பார்க்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். அத்துடன் இராணுவ தளபதிகள் பாதுகாப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள நிலையில் இராணுவம் ஒரு குற்றமும் இழைக்கவில்லை என்றால் இராணுவ தளபதிகள் தாங்க…
-
- 1 reply
- 558 views
-
-
இனி சிங்களத்தில் சீட்டு வழங்கப்படமாட்டாது -க. அகரன் போக்குவரத்து விதியை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்குவரத்து பொலிஸார் குறித்த சாரதிக்கு தெரிந்த மொழியிலேயே அதனை வழங்க வேண்டும். அவரது மொழி உரிமையை மீற முடியாது என, இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார். போக்குவரத்து பொலிஸார் ஒருவரால், தனக்கு புரியாத சிங்கள மொழியில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமையை ஆட்சேபித்தும், தனது மொழி உரிமை மீறப்பட்டதாகத் தெரிவித்தும் வவுனியா, மன்னார் வீதியைச் சேர்ந்த அன்று பிரசன்னோ என்ற இளைஞர்…
-
- 1 reply
- 389 views
-
-
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வீரசிங்கம் மண்டபத்தில் கலந்துரையாடல் தமிழர் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் ஸ்ரீலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இக் கலந்துரையாடலில்…
-
- 7 replies
- 958 views
-
-
சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தீர்மானம் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தெரிவிப்பு (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தீர்மானம். சுயாதீனமாகவோ அல்லது பொது எதிரணியில் அமரவோ தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் தம்மால் பங்கெடுக்க முடியாது எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிகளை கண்டித்தும் முரண்பாடுகளை கண்டித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்ட…
-
- 1 reply
- 281 views
-
-
வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புப்பட்ட பிரபல நபர் யார்.? (எம்.ஆர்.எம்.வஸீம்) வித்தியா கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமாரை விடுவிப்பதற்கு பிரபல நபர் ஒருவர் செயற்பட்டுள்ளார். அந்த நபர் யார் என்பதை அரசாங்கம் தேடிப்பார்க்கவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/article/24116
-
- 0 replies
- 361 views
-
-
200 வது நாளை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவா்கள் உறவினா்களின் போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்களின் போராட்டம் இன்று 200 வது நாளை எட்டியுள்ளது. 200 ஆவது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனா். நல்லாட்சி அரசின் ஜனாதிபதி கூட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்து பல வாக்குறுதிகளை வழங்கிய போதும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் எந்தவித உறுதிப்பாடுகளும் இல்லாது 200 வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனா். http://www.virakesari.lk/article/24112
-
- 0 replies
- 294 views
-
-
விமானப்படை பயிற்சி முகாமில் வெடிப்பு (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை-மொறவெவ விமானப்படை பயிற்சி முகாமில் இன்று (07) வெடிபொருளொன்று வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நான்கு பேரும் இராணுவ வீர்கள் எனவும் அதில் மேஜரொருவரும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது. http://www.tamilmirror.lk/செய்திகள்/விமானப்படை-பயிற்சி-முகாமில்-வெடிப்பு/175-203403
-
- 0 replies
- 279 views
-
-
‘‘நானும் காணாமல் ஆக்கப்பட்டவன்தான்’’ அன்று நடந்ததை இன்று சொல்கிறார் மைத்திரி “நானும் கடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டிருந்தேன். காணாமல் ஆக்கப்படுதலால் ஏற்படும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரியும்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வடக்கு – கிழக்கிலிருந்தும், கொழும்பிலிருந்தும், அரச தலைவர் செயலகத்தால் அழைக்கப்பட்டிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களையே சந்திக்க வேண்டும் என்று அரச தலைவர் வ…
-
- 4 replies
- 333 views
-
-
தமிழர் வாக்குகளாலேயே அரச தலைவனானவன் நான் நன்றி பாராட்டிய சிறிசேன “தமிழ் மக்களில் 90 சதவீதத்தினர் எனக்கு வாக்களித்தனர். அவர்களின் வாக்குகளாலேயே நான் அரச தலைவராகத் தெரிவு செய்யப்பட்டேன். உங்களுக்கு நியாயமா கவே நான் செயற்படுவேன்” இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் நேரில் தெரிவித்தார். அரச தலைவர் செயலகத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் அரச தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மதியம் 12.30மணிக்கு ஆரம்பமானது. இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அரச தலைவரின் ச…
-
- 2 replies
- 509 views
-
-
வடக்கு அரசுக்குமுழுச் சுதந்திரம் கூட்டு அரசால் வழங்கப்பட்டுள்ளது மங்கள சமரவீர தெரிவிப்பு “வடக்கு மாகாண சபையை கடந்த அரசு எதிரியாக நடத்தி வந்தாலும் கூட்டு அரசின் கீழ் அது மாற்றியமைக்கப்பட்டு அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்குரிய அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன”. இவ்வாறு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உற்பத்தி வரி (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகளையும், முத்திரை தீர்வை (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கட்டளையையும் அங்கீகரிப்பதற்கான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையா…
-
- 1 reply
- 258 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 07.09.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 158 views
-
-
இனிமேலும் அமைதியாக இருக்கமாட்டேன் – கோத்தா எச்சரிக்கை நாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார். பொரலஸ்கமுவவில் நேற்று, எலிய என்ற அமைப்பை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கோத்தாபய ராஜபக்ச தலைமையில், ‘எலிய- ஒளிமயமான அபிலாசைகள்’ என்ற பெயரிலான புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பொரலஸ்கமுவவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றுமாலை இந்த அமைப்பின் தொடக்கவிழா இடம்பெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர்களான சமல் ராஜபக்ச, பசில…
-
- 3 replies
- 587 views
-
-
‘அலோசியஸ் தொடர்பில் தகவல் இல்லை’ பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் தொடர்பில் எவ்விதமான தகவலும் கிடைக்கவில்லையென, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்று (06) கொண்டுவந்தார். திறைச்சேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நேற்றைய விசாரணையின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு, ஆணைக்குழுவின் அதிகாரிகள், பல நாட்கள் முயற்சிகளை மேற்கொண்டனர், அவருடைய காரியாலயத்துக்கும் அவருடைய வீட்டுக்கும் சென்றிருந்…
-
- 2 replies
- 863 views
-
-
’ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும்’ -எஸ்.நிதர்ஷன் “வட மாகாண சபையின் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், சபை ஒழுங்கு முறைகளை உரிய முறையில் பின்பற்றி நடக்க வேண்டும்” என, அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வட மாகாண சபையின் 105ஆவது அமர்வு, கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, சபை அறிவிப்புகளை விடுத்த அவைத் தலைவர் சிவஞானம், சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சபைச் செயற்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். “மாகாண சபையின் முதலமைச்சர், ச…
-
- 0 replies
- 174 views
-
-
20 ஆவது சட்ட வரைவை நிராகரித்தது வட மாகாண சபை கொழும்பு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது சட்ட வரைபை வடக்கு மாகாண சபை இன்று நிராகரித்தது. வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள சபை மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 20 ஆவது சட்ட வரைவு தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது. சட்ட வரைவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் முன்வைக்கப்பட்டால் அது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று சபையில் தெரிவிக்கப்பட்டது தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைவை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் அதனை நிராகரிப்பதாக சபையில் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/26378.html
-
- 0 replies
- 320 views
-
-
ஜெனரல் ஜெகத்துக்கு எதிராக உடன் போர்க்குற்ற விசாரணை நாடாளுமன்றில் கூட்டமைப்பு வலியுறுத்து போர்க்குற்றச்சாட்டுகள் முன்வைக் கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக உரிய விசாரணை களை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத்தில் நேற்றுக் கோரியுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது: போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உரிய நீதி விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு பன்னாட்டுச் சமூகத்…
-
- 1 reply
- 262 views
-
-
ஜகத் ஜயசூரிய விவகாரம் சபையில் கடும் சர்ச்சை (எம்.எம்.மின்ஹாஜ்) ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக யுத்த குற்றம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு குறித்து கூட்டு எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு அரசாங்க தரப்பில் இருந்து பதிலளிப்பதற்கு இரு வார கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து நேற்று சபையில் கடுமையான சர்ச்சை ஏற்பட்டது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சியினர் சபையில் எழுந்து நின்று கோஷமிட்டு உடன் பதிலளிக்குமாறு கோரினர். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நிலையியற் கட்டளை 23 இன் 2 கீழ் கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற குழு தலைவர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே…
-
- 0 replies
- 488 views
-
-
"20" நிறைவேறியதும் ஒரு வருடத்தில் தேர்தல் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்தார் சட்டமா அதிபர் (எம்.எப்.எம்.பஸீர்) 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டு ஒரு வருடத்திற்குள் அனைத்து மாகாண சபைகளிலும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என சட்டமாதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 13 விஷேட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வேளையில் நேரடியாக உயர் நீதிமன்றில் ஆஜராகி அரசின் நிலைப்பாட்டை மன்றிற்கு அறிவித்து சட்டமா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் ஏதாவது ஒரு மாகாணசபை …
-
- 0 replies
- 310 views
-
-
தென் ஆபிரிக்க விடுதலை போராட்டத்தின் செயற்பாட்டாளர் இலங்கை விஜயம் தென் ஆபிரிக்க விடுதலைப் போராட்டத் தின் செயற்பாட்டாளர், வணபிதா, மைக் கல் லெப்ஸ்லி இலங்கையில் மலையக மக்களுடன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக அட்டன் பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாளை மறுதின--ம் சனிக்கிழமை காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை 88/2 டன்பார் வீதி, அட்டனில் அமைந்துள்ள CWF மண்டபத்தில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது. மைக்கல் லெப்ஸ்லி நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர். தனது இறைபணியின் மேலதிக கற்கைக்காக தென்னாபிரிக்கா நாட்டுக்கு அனுப்பப்பட்டார். அக் காலத்தில் தென்னாபிரிக்காவில் நிறபேத கொடூரத்…
-
- 0 replies
- 414 views
-
-
பறிக்கப்பட்ட வீடு மீண்டும் வழங்கப்பட்டது -எம்.றொசாந்த் காரைநகரில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபப் பெண்ணின் வீடு, நேற்று (06) மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன், குறித்த வயோதிபப் பெண், நேற்று (06) மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் - வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற குறித்த வயோதிபப் பெண், தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் உறுதி எழுதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய்க்…
-
- 0 replies
- 294 views
-
-
எச்சரிக்கை! நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி…
-
- 0 replies
- 241 views
-
-
பொன்சேகாவின் அறிவிப்பு தனிப்பட்டதே எந்தவொரு படையினரையும் அரசு சிறைக்குள் தள்ளாது; சபை முதல்வர் திட்டவட்டம் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய தொடர்பில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள கருத்து அரசின் நிலைப்பாடு அல்ல. எந்தவொரு படைத் தளபதியையும் கூட்டு அரசு சிறையில் அடைக்காது என்றும் சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல நேற்று நடாளுமன்றில் தெரிவித்தார். “முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசில் உள்ளிட்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தூதுவராகப் பணியாற்றியவருமான ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராகப் போர்க்குற்ற வழக்கு தாக்கல…
-
- 0 replies
- 393 views
-
-
கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரென பற்றி எரிகிறது மீதேன் வாயுப் பெருக்கமே காரணம்: அச்சத்தில் மக்கள் யாழ்ப்பாணத்தின் கழிவுகளைக் கொட்டும் இடமான கல்லுண்டாய் குப்பை மேடு திடீர் திடீரெனத் தீப்பற்றி எரிகிறது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடக்கும் இந்த நிகழ்வால் அந்தப் பகுதி மக்களும் அதன் வழியே பயணம் செய்பவர்களும் அச்சமடைந்துள்ளனர். இரவில் பயணிப்போர் மேலும் கலங்கிப் போகின்றனர். குப்பைகள் மற்றும் கழிவுகளால் ஏற்படும் அளவுக்கதிகமான மீதேன் வாயுவே தீ எரிவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ‘‘அதிகரித்த வெப்பம் காரணமாக குப்பைகளிலிருந்து வெளியேறும் உயிர…
-
- 0 replies
- 590 views
-