ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143353 topics in this forum
-
கதிர்காமக் கந்தனுக்கு ஏற்பட்ட பரிதாபம்: கப்புராலவிற்கும் – நிலமேக்கும் இடையில் மோதல் - ஓடித் தப்பித்த பக்தர்கள்
-
- 1 reply
- 340 views
-
-
பேருந்துச் சாரதி மீது அராலியில் வாள்வெட்டு தனியார் பேருந்துச் சாரதி மீது இனம்தெரியாத குழுவினர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர். அதில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அராலியில் நேற்று இரவு நடந்தது. சம்பவத்தில் அராலியைச் சேர்ந்த தெய்வேந்திரம் லோகேந்திரம்(வயது 28) என்பவர் படுகாயமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது. முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் சென்ற பத்துப் பேர் கொண்ட குழுவினர் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். http://newuthayan.com/story/23133.html
-
- 1 reply
- 505 views
-
-
ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மீது முறைப்பாடு பதிவு கடமை செய்வதற்கு தொடர்சியான முறையில் இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து ஊர்காவற்துறை தலமை பொலிஸ் பரிசோதகரால் ஊர்காவற்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு எதிராக சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்றுதுறை பிரதேசத்துக்குட்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் பொறுப்பாகவுள்ள உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அப்பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை தப்பிக்க வைப்பதாகவும் கீழ் அதிகாரிகளை கடமையின் போது அச்சுறுத்துவதும், கடமையை செய்யவிடாது தடுப்பதும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலை நாளுக்கு நாள் மோசம…
-
- 1 reply
- 472 views
-
-
அமைச்சர் சுவாமிநாதன் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குப் பயணம் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று பயணம்செய்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆலய நிருவாகசபையினருடன், பூசை வழிபாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும் கலந்து கொண்டுள்ளார். http://newuthayan.com/story/23204.html
-
- 0 replies
- 262 views
-
-
கடந்த 15ஆம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் சர்வதேச நாடுகளைத் தலையிடுமாறு கோரி ஐநாவுக்கு கடிதம் எழுதப்பட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி பொய்யென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச தலையீட்டை கோரி கூட்டமைப்பு கடிதம் என்ற முக்கிய தலைப்புடன் கடந்த 15-08-2017 வெளிவந்த தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்தில் அதி முக்கிய செய்தியாக வெளிவந்திருந்தது. எனினும் சர்வதேச சமூகத்திற்கு எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட கடிதத்தின் முழுவிபரங்கள் எதுவும் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. அதே தினம் கொழும்பில் வெளிவந்த ஆங்கில ஊடகங்களில் குறித்த செய்தியானது 13ஆம்…
-
- 3 replies
- 465 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 78 வீடுகளை இன்று கையளிக்கப்பட்டது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இந்த வீடுகளை உத்தியோகபூர்வமாக பயனாளிகளிடம் கையளித்தார். நிகழ்விவ் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், மாவட்ட செயலா் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரும், மாவட…
-
- 1 reply
- 230 views
-
-
முன்னாள் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு மாறாக அவரே செயற்படுகின்றார் : திஸாநாயக்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாகும் பட்சத்தில் அவருக்கு கட்சியின் தலைமைப்பதவி வழங்கப்பட வேண்டும் என்ற திருத்தத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே நடைமுறைப்படுத்தினார். ஆனால் இன்று அவரின் செயற்பாடுகள் அந்த நடைமுறைக்கு மாறாகவே அமைந்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லை செத்சிரியாயவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவ…
-
- 0 replies
- 184 views
-
-
அஸ்கிரிய பீடாதிபதிகளின் ஆசிர்வாதம் பெற்றார் கடற்படைத்தளபதி இலங்கையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அத்மிரல் ட்ரவிஸ் சின்னையா இன்று கண்டி தலதா மாளிகையில் சமய அனுஷ்ட்டானங்களில் ஈடுபட்டதன் பின்னர் மல்வது மற்றும் மஹா நாயக்க தேரர்களின் கால்கலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கடற்படைத் தளபதி அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவற்கு முன்னர் தலதா மாளிகையின் நிலமேயை சந்தித்து நட்புரையாடலில் ஈடுபட்டார். பின்னர் அஸ்கிரிய பீடாதிபதிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன் போது பீடாதிபதிகள் புதிய உயர்பதவிகளை பொறுப்பேற்று எவ்வாறு நடத்திச் செல்ல வேண்டும் என சுருக்கமான அறிவுரையை வ…
-
- 2 replies
- 487 views
-
-
வித்தியாவின் கொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்றது. ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டோர் “ இதுவா நல்லாட்சி ” , “ நீதியரசர் இளஞ்செழியனை சுட முயன்றவரை்களை கைதுசெய் ” , “ விஜயகலாவை கைது செய் ” போன்ற சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஆர்ப்பாட்டக்கார்களால் மகஜர் ஒன்றும் ஐ.நா.அலுவலக அரிகாரிகளிடம் கை…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி பொதுச்சந்தை துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் கிளிநொச்சி, பொதுச்சந்தை நீண்ட காலமாக துர்நாற்றம் வீசி வருவதாகவும், இதனால் வர்த்தகர்கள், பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறித்த பொதுச் சந்தையில் அமைந்துள்ள மலசலகூடம், அதை அண்மித்த பகுதிகள் இவ்வாறு துர்நாற்றத்துடன் காணப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் புதிதாக மலசல கூடம் நிர்ணிக்கப்பட்டுள்ள போதிலும், அது பாவனைக்கு கையளிக்கப்படவில்லை எனவும், 380 வர்த்தகர்கள் மற்றும் அங்கு வருகைதரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில…
-
- 0 replies
- 352 views
-
-
14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு மன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் சுதே (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்த…
-
- 0 replies
- 269 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மைதானங்களின் புனரமைப்பு தொடர்பாக கேள்விக்கு கௌரவ பிரதி அமைச்சரின் தீர்வை நோக்கிய பதில்.
-
- 0 replies
- 143 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 26.08.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 165 views
-
-
வட மாகாணசபை உறுப்பினர்களில் 26 பேர் செயற்றிட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை பேரவைச் செயலகம் தகவல் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்ட அறிக்கையை இதுவரை 11 உறுப்பினர்கள் மட்டுமே சமர்ப்பித்துள்ளனர். ஏனைய 26 உறுப்பினர்களும் அறிக்கை யைச் சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகம் சபை உறுப்பினர்களைக் கோரியுள்ளது. இது தொடர்பில் செயலகம் மேலும் தெரிவித்ததாவது, நடப்பு வருடத்தில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 37 பேருக்குமான பிரமாண அடிப்படையிலான மூலதன நன…
-
- 0 replies
- 149 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் நாட்டை குழப்புவதற்கு முயற்சி ; விஜயகலா மகேஸ்வரன் தற்போதைய நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை குழப்புவதற்கு தீயசக்திகள் முயல்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்கள் தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யும். அரசாங்கத்தின் மக்கள் பணியும் தொடரும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொது எதிரணியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பி…
-
- 0 replies
- 134 views
-
-
எனது கடமையை செய்துவிட்டேன் ஆணைக்குழு தேர்தலை நடத்தவேண்டும் அமைச்சர் பைஸர் முஸ்தபா (ந.ஜெகதீஸ்) தேர்தல்களை மேலும் கால தாமதப்படுத்த முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இது தொடர்பிலான எனது கடமைகள் அனைத்தும் முடிந்துள்ளன. தேர்தல் திகதிகளை அறிவிக்கும் பொறுப்பு தேர் தல்கள் திணைக்களத்திடமே உள்ளது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். உள்ளூராட்சிமன்ற எல்லை நிர்ணய செயற்பாடுகளின் போது பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டும் என்ற சிறுபான்மை அரசியல் கட்சியகளிக் கோரிக்கைகள் தொடர்பில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆராயப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சில் நேற்று வெள்ளிக்…
-
- 0 replies
- 238 views
-
-
விஜேதாஸவை பொது வேட்பாளராக களமிறக்கும் எண்ணம் இல்லை : பஷில் ராஜக்ஷ முன்னாள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக பொது வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். எனினும் அவ்வாறான யோசனை எம்மிடம் இல்லை. ஏனெனில் எமது கட்சியில் பொதுவேட்பாளர் கலா சாரம் இல்லை. அன்னம் சின்னத்தைப் பிரதிநிதித்துவப்படுத் தும் கட்சிகளுக்கே பொது வேட்பாளர் கலாசாரம் பொருந்துவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மாவட்ட ரீதியிலான பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள…
-
- 0 replies
- 211 views
-
-
நிறைவேறியது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்த சட்ட வரைவு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட வரைபு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்ட வரைவுக்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்துள்ளன. 44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்ட வரைவுக்காக தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில், அந்த சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டது என்று சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார். ஆயினும் சட்ட வரைபு மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 692 views
-
-
புதிய அரசமைப்புத் தொடர்பிலான தடை விலகியது சுதந்திரக் கட்சியின் அறிக்கை தயார் புதிய அரசமைப்புத் தொடர்பிலான தமது கருத்துக்களை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தயாரித்திவிட்டது. அந்த அறிக்கை அனேகமாக அரச மைப்பு உருவாக்கத்துக்கான வழிந டத்தல் குழுவிடம் இன்று கையளிக் கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசமைப்பு உருவாக் கத்தில் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த தடை நீக்கப்படும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். சுதந்திரக் கட்சியின் அறிக்கையை, இடைக்கால வரைவுடன் பின்னி ணைப்பாகச் சேர்த்து, வழிநடத்தல் குழு வின் 6ஆம் திகதிய அமர்வில் முன் வைக்கப்படும் என்று தெரிவிக்கப…
-
- 0 replies
- 323 views
-
-
37ஆவது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் 4 அறிக்கைகள் : உன்னிப்பாக அவதானிக்கிரார் செய்ட் அல் ஹுசைன் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெறவுள்ள 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பாக நான்கு அறிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. இலங்கை தொடர்பாக நான்குக்கும் மேற்பட்ட அறிக்கைகள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் இதுவரை நான்கு அறிக்கைகள் அங்கு சமர்ப்பிக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது. ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையா ளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொட ர்பான ஒரு அறிக்கையையும், இலங்கை அரசாங்கம் ஒரு அறிக்கையை யும் 37 ஆவது கூட…
-
- 0 replies
- 271 views
-
-
வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் இரண்டு தமிழ் இராணுவத்தினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இடப்பக்க கைகளில் வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு உள்ளான இரண்டு தமிழ் இராணுவத்தினரும் கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. வெட்டுச் சம்பவம் ஊற்றுப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும் மேலதிக தகவல் எவையும் இன்னமும் கிடைக்கப்பெற்றவில்லை எனவும் அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். https://www.yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/?_fromLogin=1
-
- 1 reply
- 746 views
-
-
தேசிய வீரன் பண்டாரவன்னியனின் ஞாபகார்த்த விழா இன்று காலை 8.30மணியளவில் வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அன்னிய படையெடுப்புக்கு எதிராக 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தீரத்துடன் போராடிய தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியில் ஞாபகார்த்த நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. நினைவுத்தூபினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு. சிற்றம்பலம் தலைமையிலேயே இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களாக ப. சத்தியலிங்கம், ஜி.ரி. லிங்கநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி. ஸ்ரீஸ்கந்தாராஜா, தமிழ் விருட்…
-
- 3 replies
- 518 views
-
-
பிரித்தானியாவின் ஏழ்மையான பகுதியில் வாழும் இலங்கை தமிழ் புலம்பெயர் மாணவிக்கு அந்த நாட்டின் உயர் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த மாணவி உயர் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு லண்டன், செவன் கிங்ஸ் (Seven Kings) பகுதியில் வாழும் சுபதீனா விமலநாதன் என்ற 18 வயது மாணவியே இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் A சித்தியை பெற்றதன் ஊடாக லண்டனில் உள்ள Imperial பல்கலைக்கழகத்திற்கு அவர் செல்லவுள்ளார். மாணவியின் குடும்பத்தில் இரண்டாவது நபராக சுபதீனா பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ளார். இதற்கு முன்னர் அவரத…
-
- 1 reply
- 639 views
-
-
எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. எல்லை நிர்ணயத்தின் போது யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கணக்கிலெடுக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் முஸ்தபா ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எல்லை நிர்ணயம்தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில், ‘வெளிநாடுகளில் உள்ள 14 லட்சம் தமிழ் மக்கள் கணக்கில் எடுக்கப்படாமல் எல்லை நிர்ணயம் மேற்கொ…
-
- 0 replies
- 377 views
-
-
முல்லைத்தீவு இரட்டைவாயக்கால் சந்தி முதல் அம்பலவன்பொக்கணை புதுமாத்தளன் ஊடாக சாலை வரை செல்லும் பிரதான வீதி இதுவரை புனரமைக்கப்படாமையினால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியின் இரட்டைவாய்க்கால் சந்தியிலிருந்து வலைஞர்மடம் அம்பலவன்பொக்கணை இடைக்காடு, புதுமாத்தளன், பழைய மாத்தளன் சாலை வரை செல்கின்ற சுமார் 13 கிலா மீற்றர் நீளமான வீதி இன்றுவரை முழுயைமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. குறித்த வீதியின் இடைக்காடு பகுதியில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின்கீழ் வடமாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் ஒரு கிலோ மீற்றர் வரையான வீதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளதே த…
-
- 0 replies
- 330 views
-