ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
Published By: DIGITAL DESK 7 23 FEB, 2025 | 04:09 PM (துரைநாயகம் சஞ்சீவன்) புல்மோட்டை – சாத்தனமடு பகுதியில் பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய காணிகளை விடுவிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். புல்மோட்டை கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட புல்மோட்டை சாத்தனமடு குளப்பகுதியின்கீழ் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாயிகளின் காணியில் பௌத்த மதகுரு ஒருவர் புத்தர் சிலையை வைத்து அதனைச் சுற்றியுள்ள விவசாய காணிகளில் பல வருட காலமாக விவசாயம் மேற்கொண்டுவந்த விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளுக்கு தடைவிதித்து வருவதால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அதனை சுற்றியுள்ள 10 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2025 | 12:21 PM மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயதுடைய மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசிய சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது, 18 வயதுடைய மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணி என்பதை மறைத்து வயிற்று வலி என தெரிவித்து சம்பவதினமான இன்று அதிகாலை 3.30 மணியளவில் மட்டு. போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியர் சரியான முறையில் சோதனையிடாத நிலையில் மாணவிக்கு ஊசி மூலமாக வயிற்று வலிக்கான வலிநிவாரண மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதிகாலை 5 மணியளில் மாணவி மலசல கூடத்திற்கு சென்று குழந்தையை பெற்று யன்னல் வழியாக வீசியுள்ளார். குழந்தை யன்னலி…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
22 FEB, 2025 | 04:11 PM (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு, ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அங்கு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை (20) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது, கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் வாள்வெட்டுத் தாக்குதலை நடாத்திய குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வாள்வெட்டுத் தாக்குதல் இடம்ப…
-
-
- 3 replies
- 345 views
- 2 followers
-
-
ஒரு சிறுவருக்கு ஏறத்தாழ 30,000 ரூபா ஒதுக்கப்படுகிறதா? இலங்கை முழுவதிலும் 379 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் இயங்குவதாகவும், இவற்றில் 47 நிலையங்கள் அரசாங்கத்திற்குரியது என்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். ஏனைய அனைத்து சிறுவர் பராமரிப்பு நிலையங்களும் அரசுசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுசரணையுடன் பராமரிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடு முழுவதிலும் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களின் திறன்களை மேம்படுத்தவும் அவற்றின் பௌதீக வள, மனிதவள மேம்பாட்டிற்கும் இந்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மகளிர் மற…
-
- 0 replies
- 228 views
-
-
மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் adminFebruary 22, 2025 மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22) ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு செய்யும் நிகழ்வு நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது. குற…
-
- 0 replies
- 274 views
-
-
ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவர் கைது யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (22) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் ரயில்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. கல்வீச்சு தாக்குதலில் ரயில்களின் கண்ணாடிகள் சேதமடைந்தும், பயணி ஒருவர் காயமடைந்தும் இருந்தார். தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரயில் நிலைய அதிபரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ரயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில்…
-
- 0 replies
- 244 views
-
-
எம்.கே.சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி! தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனம் காரணமாக அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் சுகயீனம் காரணமாக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். கொழும்புக்கு பயணித்த வேளையில், சுயநினைவற்று மயங்கி விழுந்த நிலையில், அவர் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.co…
-
- 0 replies
- 186 views
-
-
Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 03:44 PM யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த 30 வயதுடையவரே விபத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு , அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத…
-
-
- 4 replies
- 419 views
- 2 followers
-
-
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தொழிற்படுகின்ற தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குழுக்களிடமிருந்து பெறப்படுகின்ற உதவியுடன் அந்த அமைப்பை மீள் உருவாக்குவதற்கான எத்தனிப்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாத…
-
- 5 replies
- 650 views
- 1 follower
-
-
மீண்டும் கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு! கொட்டாஞ்சேனை கல்பொத்த வீதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை அண்மையிலுள்ளும் இங்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இடம்பெற்றுள்ளது. https://athavannews.com/2025/1422517
-
- 5 replies
- 446 views
- 1 follower
-
-
Published By: Vishnu 21 Feb, 2025 | 11:25 AM யாழ்ப்பாணம் தெல்லிப்பழையிலுள்ள கல்லூரியில் 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது இல்ல அலங்காரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த கல்லூரியில் கடந்த வருடம் இல்ல மெய்வல்லுனர் போட்டி நடைபெற்ற போது இல்லங்கள் கார்த்திகைப் பூ மற்றும் பீரங்கி அமைப்பு போன்ற வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் பாடசாலையின் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த விசாரணைகள் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இது இவ்வாறு இருக்கையில் இந்த ஆண்டு இல்லங்களுக்காக போடப்பட்ட பந்தலில் அலங்காரங்கள் செய்வதற்கு பாடசாலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டதாக பா…
-
-
- 4 replies
- 460 views
- 1 follower
-
-
22 FEB, 2025 | 05:57 PM (அட்டன் கிளை) அட்டன் கப்ரியல் மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பிரிவுக்கு தமது பிள்ளைகளை தரம் 6 இற்கு உள்வாங்குவதில் கல்லூரி நிர்வாகம் அசமந்தமாக செயற்படுவதாக பெற்றோர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் வலயக்கல்வி பணிமனையின் உத்தரவுகளையும் மேற்படி கல்லூரி நிர்வாகம் அசட்டை செய்வதாகவும் காரணமின்றி தமது பிள்ளைகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். தரம் 6 இற்கு தமது பிள்ளைகளை சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் பிள்ளைகளை நேர்காணலுக்கு அழைக்காமல் எந்த காரணங்களும் கூறப்படாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு பெற்றோருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கல்லூரி அதிபரின் கையொப்பம் இல்லாது இலட்சிணை மாத்திரம் …
-
- 0 replies
- 167 views
- 1 follower
-
-
வட் வரி செலுத்த தவறியமைக்காக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 3.5 பில்லியன் வரியை செலுத்த தவறியமைக்காவே நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த குற்றத்துக்காக மேலும் இருவருக்கும் நீதிமன்றம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196245
-
-
- 4 replies
- 910 views
- 1 follower
-
-
தமிழகத்திலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது சிவகங்கை கப்பல் ! Published By: DIGITAL DESK 7 22 FEB, 2025 | 02:16 PM நாகை துறைமுகத்திலிருந்து 83, பயணிகளுடன் இன்று சனிக்கிழமை (22) காலை இலங்கை காங்கேசன்துறையை , சிவகங்கை கப்பல் வந்தடைந்தது. இவ்வாறு தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கப்பலானது இன்று மதியம் 12.15 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது. இந்தியா - இலங்கை இடையிலான இரு நாட்டு கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 2003 ஆண்டு அக்டோபர் மாதம் நாகையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை …
-
- 0 replies
- 447 views
- 1 follower
-
-
சிவராத்திரி தினம் வெடுக்குநாறிமலையில் மாலை 6 மணி வரை சிறப்பாக இடம்பெறும். நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினம் தொடர்பாக ஆலய பூசாரியார் மதிமுகராசா மற்றும் முக்கியஸ்தரான பூபாலசிங்கம் ஆகியோர் நெடுங்கேணி பொலிசாரால் அழைக்கப்பட்டு விபரங்கள் பெறப்பட்டுள்ளது. நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகள் தொல்பொருட்திணைக்களத்திற்கு கீழ் உள்ளதாக தெரிவித்து, அந்த திணைக்களம் மற்றும் நெடுங்கேணி பொலிசாரால் பொதுமக்கள் வழிபாடுகளை மேற்கோள்வதற்கு பல்வேறு தடைகள் ஏற்ப்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்தவருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை செய்ய முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிசாரால் அடாவடியான முறையில் கைதுச…
-
- 0 replies
- 283 views
-
-
22 FEB, 2025 | 11:14 AM நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, 2024 ஆம் ஆண்டு 75 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 18 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இதேவேளை, பயங்கரவாத தடைச்சட…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் ராஜினாமா செய்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதற்கான வாய்ப்பை வழங்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவரைத் தொடர்பு கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன. சமீபத்தில் ரணில…
-
-
- 5 replies
- 421 views
-
-
வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபடும் பெண்! வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளான திருநெல்வேலி, கல்வியங்காடு, கோப்பாய், கொக்குவில் உட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நபர்களின் வீடுகளை இலக்கு வைத்து செல்லும் பெண்ணொருவர், தான் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும், தனக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது எனவும் போலியான மருத்துவ அறிக்கைகளை காண்பித்து பணம் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், த…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
Published By: Digital Desk 2 21 Feb, 2025 | 03:25 PM (எம்.மனோசித்ரா) வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடித்தல், செல்லுபடியாகாத மீன்பிடி பத்திரத்துடன் சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கடந்த 13 முதல் 19 வரை கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும், கடற்பரப்புகளிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 12 மீன்பிடி படகுகள், மோட்டார் சைக்கிலொன்று மற்றும் 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்கு…
-
- 1 reply
- 206 views
-
-
வலி- வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் வலியுறுத்து! யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிருப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழுகூட்டம் நேற்று நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்; யாழ் - வலி. வடக்கில் 2009ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23ஆயிரம் ஏக்கர் காணி …
-
- 2 replies
- 266 views
-
-
Published By: DIGITAL DESK 2 21 FEB, 2025 | 07:34 PM (செ.சுபதர்ஷனி) யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நிலவிவரும் வைத்திய சேவை ஊழியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு சுகாதார அமைச்சால் துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் காணப்படும் மனிதவள தேவைகளை இனங்கண்டு, அவற்றிற்கு உரிய தீர்வுகளை பெற்று தரும் நோக்குடன் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் விசேட கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது ஊர்காவற்றுறை பொது மருத்துவமனை, வேலணை மாவட்ட மருத்துவமனை, வேலணை சுகாதார மருத்துவ அத…
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
21 FEB, 2025 | 07:25 PM சமூக புதைகுழியினை மறைக்கும் முகமாக தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ளதா என சந்தேகம் இருப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவரால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, படையினரை பொறுத்தவரையில் தமிழர் பிரதேசத்தில் நாட்டின் சட்டங்கள் அவர்களின் இரும்பு சப்பாத்தின் கீழ் என்பதற்கு இன்னொரு அடையாளமே அவர்களால் தையிட்டியில் தனியார் காணியில் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரையாகும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயக உரிமையோடு போராடுவோர்க்கு எதிராக பொலிஸாரும் செயற்பட்டு போராட்டம் த…
-
- 1 reply
- 314 views
- 1 follower
-
-
21 Feb, 2025 | 01:42 PM யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் கொத்து ரொட்டி தயாரிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளருக்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரான ம.ஜெயப்பிரதீப் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, சுகாதர சீர்கேட்டுடன் கொத்து தயாரிக்கப்பட்ட உணவகமொன்றுக்கும், மற்றுமொரு உணவகத்தில் மலசல கூடத்தினுள் மின் மோட்டாரை இயக்கி, நீர் வழங்கி வந்த நபருக்கும் எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைகள் வியாழக்கிழமை (20) நடைபெற்ற போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர். சுகாதாரத்திற்கு கேடான முறையில் கொத…
-
- 0 replies
- 185 views
-
-
Published By: Rajeeban 21 Feb, 2025 | 04:08 PM அமெரிக்காவினால் பனாமாவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் பனாமாவில் டாரியன் காட்டுப்பகுதியில் உள்ள தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் வேறு நாட்டிற்கு நாடு கடத்தப்படலாம் எனபனாமா தகவல்கள் தெரிவித்துள்ளன. பனாமா கோஸ்டரிகா குவாத்தமாலா ஆகிய நாடுகள் அமெரிக்கா நாடு கடத்தும் ஏனைய நாட்டவர்களை ஏற்பதற்கும் அவர்கள் நாடு கடத்தப்படும் வரை தங்கள் நாட்டில் வைத்திருப்பதற்கும் இணங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பனாமா கால்வாயை கைப்பற்றப்போவதாக எச்சரித்த சூழ்நிலையில் சமீபத்தில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இந்த நாடுகளிற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் அமெரிக்க நாடுகள் இதற்கு இணங்கியுள்ளன. கடந…
-
- 0 replies
- 143 views
-
-
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக கடற்தொழில் அமைப்பு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் வெள்ளிக்கிழமை (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் வடக்கில் குறிப்பாக எமது தீவக பிரதேச கடற்தொழிலாளர்கள் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்துமாறு நாம் பல போராட்டங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் எமது வாழ்வுரிமைக்கான பொருளாதார ஈட்டலை உறுதி செய்ய நாம் வீதிக்கிறங்கி போராட தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் தீவக கடற்றொழில் அமைப்பு…
-
- 0 replies
- 129 views
-