ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142775 topics in this forum
-
உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிளாலியில் …
-
-
- 7 replies
- 349 views
-
-
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் மீனவர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்தொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்! | Virakesari.lk
-
- 2 replies
- 208 views
-
-
Published By: DIGITAL DESK 2 21 JAN, 2025 | 01:04 PM சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடி பகுதியில் குழந்தை ஒன்று கிணற்றினுள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/204430
-
- 1 reply
- 116 views
- 1 follower
-
-
21 JAN, 2025 | 05:12 PM கடந்த 2024 ஆம் ஆண்டில் 386 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 81 யானைகளும், மின்சாரம் தாக்கி 56 யானைகளும், ரயிலில் மோதி 11 யானைகளும், நீரில் மூழ்கி 10 யானைகளும், கிணற்றில் தவறி விழுந்து 07 யானைகளும், யானை வெடி வெடித்ததில் 51 யானைகளும் உயிரிழந்துள்ளன. இளம் வயதுடைய யானைகளே அதிகளவில் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், யானைகளின் தாக்குதல்களினால் 154 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளதாக வன…
-
- 0 replies
- 129 views
- 1 follower
-
-
அதிகாலையில் போக்குவரத்து பொலிஸாருடன் அர்ச்சுனா எம்.பி. வாக்குவாதம்! அநுராதபுரம் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று அதிகாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தனது வாகனத்தில் VIP விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பயணித்த வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால், பணியில் இருந்த பொலிஸார் அதிகாரிகளுடன் எம்.பி.க்கு வாக்குவாதம் ஏற்பட்டது, அங்கு பொலிஸார்கள் எம்.பி.யிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்டுள்ளனர். அந்த ஆவணங்களை வழங்க மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அடாவடி…
-
-
- 11 replies
- 766 views
-
-
இலங்கையில் பிறந்த மியான்மார் குழந்தை! Vhg ஜனவரி 21, 2025 இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20-01-2025) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. ஆண் குழந்தையை பிரசவித்த மியான்மார் கர்ப்பிணித்தாய் குறித்த படகு கரைக்கு வரமுடியாத நிலையில், கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு, பின்னர் முல்லைத்தீவு கேப்பாபிலவு வி…
-
- 2 replies
- 188 views
-
-
‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு January 21, 2025 12:43 pm வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகசும் அவர் கூறினார். சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்ப…
-
- 1 reply
- 200 views
-
-
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் January 21, 2025 12:20 pm பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். சிறீதரன் எம்.பி தனது சிறப்புரிமை கேள்வியில், கடந்த வாரம் தாம் இந்தியாவுக்குச் சென்ற தருணத்தில் தமக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்குச் செல்ல முடியாது ஆவணங்களை பரிசீலிக்க வேண்டும் என விமான நிலையத்தில் இருக்கும் குடிவரவ…
-
- 4 replies
- 294 views
- 1 follower
-
-
நினைவேந்தல் என்ற பெயரில் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் இனிமேல் அதிக கவனம் செலுத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கே.எம்.ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “உயிழந்த தமது உறவுகளை நினைவேந்த எந்த இனத்தவர்களுக்கும் முழு உரிமையுண்டு. அதை எமது அரசு தடுத்து நிறுத்தாது. ஆனால், வடக்கு, கிழக்கில் சில நினைவேந்தல் நிகழ்வுகளில் அரசியல் தலையீடு ஆதிக்கம் செலுத்துவதால் அது வெளியில் வேறொரு கோணத்தில் பார்க்கப்படுகின்றது. தெற்கில் உள்ள ஒரு தரப்பினர் அதைப் பயங்கரவாதக் கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இதனால் வடக்கு – தெற்கு அரசியல்வாதிகளுக்கிடையில் பொது வெளியில் கருத்து மோதல்கள் இடம்பெறுகின்றன. எனவே, நினைவே…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 2 20 JAN, 2025 | 04:42 PM (எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கம், இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இந்தியாவின் ஆதிக்கத்துக்கு கீழ் கொண்டுவருவதற்கும் தென் மாகாணத்தின் கீழ் பிரதேசங்களை சீன அரசாங்கத்துக்கு வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இணக்கப்பாடுகள் மூலம் இலங்கை உலகளாவிய அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது என முன்னிலை சோசலி கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா மற்றும் சீன அரசாங்கங்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு பிரகடனம் தொடர்பில் கருத்து தெரிவி…
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
எதிர்வரும் காலங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடக நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார். அதேநேரம், இனிமேல் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறப்பு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக விசேடமாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படாது என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/articl…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 21 JAN, 2025 | 10:32 AM முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் அந்த வீட்டிலிருந்து வெளி…
-
- 2 replies
- 200 views
- 1 follower
-
-
கூட்டுறவு சங்க தேர்தல் தோல்வியின் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது - கம்மன்பில தெரிவிப்பு 20 Jan, 2025 | 11:14 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பல பிரதேசங்களில் இடம்பெற்ற கூட்டுறவு சங்க தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளதன் மூலம் அரசாங்கத்தின் சரிவு ஆரம்பித்துள்ளது. தாேல்வியை தடுப்பதற்கே அரசாங்கம் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 176 views
-
-
பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் January 20, 2025 09:01 தேசிய மக்கள் சக்தியின் 'பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம்' யாழ்ப்பாணத்தில் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. யாழ். பலாலி வீதி, கந்தர்மடத்தில் இந்த அலுவலகம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்,பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://tamil.adaderana.lk/news.php?nid=199047
-
- 1 reply
- 256 views
-
-
20 JAN, 2025 | 03:47 PM பெண்கள் பொதுத் துறைகளில் ஈடுபடுவதும், அதற்கு ஆண்கள் துணை நிற்பதும் வரவேற்கத் தக்க பண்புகளாகும் என கண்டி உதவி இந்தியத் தூதுவர் வீ.எஸ்.சரன்யா தெரிவித்தார். கண்டி சஹஸ் உயன பூங்காவில் நடைபெற்ற பொங்கல் தின வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், நானும் பொங்கல் தினத்தை கொண்டாடும் ஒருவராக உள்ளேன். ஆனால், எனக்கு இம்முறை எனது சொந்த ஊரில் அதனை கொண்டாட முடியாமல் போனது. இருப்பினும் அது பற்றி எந்தக் கவலையும் ஏற்படாமல் எனது சொந்த ஊரில் கொண்டாடும் ஒரு நிகழ்வு போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதாவது இந்தியாவில் எமது பிரதேசத்தில் கொண்டா…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
யாழில் கொள்ளையிட்டோர் பொலிஸ் பிடியில் சிக்கினர்; இருவர் இராணுவ புலனாய்வாளர்கள்! யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் ரி.ஐ.டி. என்று அடையாளப்படுத்தி நூதனமான முறையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் சூத்திரதாரி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு தொகைப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தெரியவருகின்றது. நூதனமாகக் கொள்ளை சில நாள்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில், கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றிலேயே இந்த நூதனக்கொள்ளை நடந்திருந்தது. நகைக்கடையொன்றுக்குச் சென்ற குழு ஒன்று தங்களை ரி.ஐ.டியினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டதுடன், விசாரணை என்ற போர்வையில்…
-
- 2 replies
- 280 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் - வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சே…
-
- 0 replies
- 142 views
-
-
20 Jan, 2025 | 11:15 AM முல்லைத்தீவு - வட்டுவாகல் கிராமத்தைச்சேர்ந்த உறவுகளின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) பட்டத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பட்டத்திருவிழாவில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தார். அதனையடுத்து விருந்தினர்களால் சிறார்களிடம் பட்டங்கள் கையளிக்கப்பட்டு குறித்த பட்டத்திருவிழா வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், முல்லைத்தீவுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், கரைதுறைப்பற்று பிரதேசசபைச் செயலாளர் இராஜயோகி…
-
- 0 replies
- 222 views
-
-
வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்றைய தினம் (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர். வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவர…
-
- 0 replies
- 168 views
-
-
20 Jan, 2025 | 03:23 PM யாழில் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ்மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (20) யாழ்ப்பாணம் - பலாலி வீதி, கந்தர் மடம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசாரம் மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குறித்த நிகழ்வில் நானும் அதி…
-
- 0 replies
- 208 views
-
-
20 Jan, 2025 | 03:44 PM போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று திங்கட்கிழமை (20) காலை மொரட்டுவையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அலுவலக ரயிலில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். இந்த பயணத்தின்போது, பயணிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகள் குறித்து பிமல் ரத்நாயக்க பயணிகளுடன் உரையாடும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இவர் ஊடகங்களுக்கு அறிவிக்காது, ரயில் பயணத்தின்போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்காணிக்க நேரடி கள ஆய்வை முன்னெடுத்துள்ளார். இதன்போது, அடிக்கடி இடம்பெறும் ரயில் தாமதங்கள், மின் விசிறிகள் பழுது, ரயில்களில் ஏறுவதில் மாற்றுத்…
-
- 2 replies
- 253 views
-
-
20 Jan, 2025 | 07:04 PM (எம்.மனோசித்ரா) இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல. அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். திங்கட்கிழமை (20) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந…
-
- 3 replies
- 324 views
-
-
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்ட கம்பனிகளின் பெயர் விபரம் வெளியாகியது! தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கம்பனிகளின் பெயர் விபரங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இலங்கை மத்திய வங்கி இதனை வெளிப்படுத்தியுள்ளது. 21 கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1998 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தி தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதேவேளை வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ள கம்பனியொன்றின் பெயரை வெளிப்படுத்தலானது அந்தக் கம்பனி தொடர்பாக வழங்கப்பட்டுள்ள நீத…
-
- 0 replies
- 226 views
-
-
20 JAN, 2025 | 10:33 AM யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இவருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (18) வல்வெட்டித்துறை பொலிஸார் இந்த நபரை கைது செய்து, பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் தடுத்து வைத்திருந்தனர். அந்நிலையில் திடீர் சுகவீனம் ஏற்பட்டதாக கூறி அவரை வல்வெட்டித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சட…
-
- 1 reply
- 302 views
- 1 follower
-
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை Sunday, January 19, 2025 செய்திகள் (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி வீதியில் அமைந்துள்ள கல்முனை தமிழர் கலாசார பேரவை வளாகத்தில் குறித்த சிலை பொலிஸாரின் பாதுகாப்பிற்கும் மத்தியில் இன்று(19) மாலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை தி…
-
-
- 17 replies
- 957 views
- 2 followers
-