Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மீட்புப்பணியில் ஈடுபட்ட விமானப்படை வீரர் பரிதாபமாக பலி நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கை அடுத்த பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டடிருந்த விமானப்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காலி நெலுவ பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ. 27 ரக ஹெலிகொப்டரில் பயணித்த விமானப்படை வீரர் தவறி வெள்ளத்தில் விழுந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யபரத்ன என்ற 37 வயதுடைய இலங்கை விமானப்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தவராவார். http:…

    • 5 replies
    • 502 views
  2. ‘கலவரத்தை ஏற்படுத்துவேன்’ நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும்” என்று, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (28) தெரிவித்தார். மேலும், “இம்முறை சிறைக்குச் செல்லும்போது, விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜிபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களில் ஒருவருடனேயே செல்வேன்” எனவும் தெரிவித்தார். பொது பல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “நான் நினைத்தால், ஒரு மணித்தியாலத்தில் இந்…

    • 1 reply
    • 454 views
  3. சக்தி டிவி செய்திகள் 28th May 2017, 8PM

  4. குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளின் வலையில் சிக்கினார் கோட்டா வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேரடியாக ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான ஆதாரங்களை, குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவம், 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவத்தின்போது, கோட்டாபய ராஜபக்‌ஷ, தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட நபர்களின் தகவல்கள் மற்றும் குறித்த அழைப்புகள் தொடர்பில், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடி…

  5. இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 109 ஆயிரத்து 773 குடுமபங்களை சேர்ந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 68 பேர்வரையில் பாதிப்புற்றுள்ளதாகவும், 49 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மழையின் சீற்றத்தினால் இதுவரை 14 மாவட்டங்களில் மண்சரிவு ம…

  6. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட மாணவரான இந்திரஜித் குமாரIndrajith Kumaraவினால் மே 18 நினைவுநாளை ஒட்டி எழுதப்பட்ட சிங்கள பதிவு ஒன்றின் தமிழாக்கம் “மறக்க முடியாது, மன்னிக்கவும் முடியாது, தமிழ் இன அழிப்பு நாள் மே 18″ இவ்வாறே தமிழ் எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. அதில் மலர் ஒன்று இருக்கிறதே, அதுதான் ஈழ இராச்சியத்தின் தேசிய மலர், அந்த சிகப்பு, மஞ்சள் நிறமே அவர்களி்ன் கொடியின் வர்ணம். இதைப் பார்க்கும் போது கோபமும் வெறுப்பும் வருகிறதா? மீண்டும் யுத்தம் புரிய தோன்றுகிறதா? ஆனால் யாழ்ப்பாணத்தில் இருக்கும் எங்களுக்கு அவ்வாறு தோன்றவில்லை. பெரிய ஏமாற்றமே ஏற்படுகிறது. இவர்களை நினைத்து அல்ல, எம்மவர்களை (சிங்களவர்களை) நினைத்து. நாங்கள…

    • 1 reply
    • 724 views
  7. ஈழ அகதிகளின் முகாம்களைக் கண்காணிக்க உத்தரவு! தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளின் முகாம்களில் ஆயுததாரிகள் தங்கியிருந்து நாசகார செயல்களில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தில், அங்கு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது 1 இலட்சத்து 50ஆயிரம் பேர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக தஞ்சமடைந்தனர். இவர்களில் இதுவரை 30ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு, ஈழ அகதிகள் முகாம்களை கண்காணிப்பதற்கு இரகசிய உத்தரவு விடுத்துள்ளது. அனைத்து மாவட்ட பொலிஸ் அலுவலகத்திலும் இதற்கென ஒரு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் முகாம்களிலுள்ள ஈழ அகதிகள் குறித்த விவரங்கள…

    • 0 replies
    • 440 views
  8. ‘நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது’ -எஸ்.நிதர்ஷன் நல்லாட்சியிலும் இனவாதம் தூண்டப்படுவது கவலைக்குரியது என சுட்டிக்காட்டியுள்ள சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன், நல்லாட்சி அரசாங்கமானது இன, மத பேதமின்றிச் செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். வல்வை ஆழிக்குமரன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகமொன்று அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் காரணமாக எமது இளைஞர், யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்ட முடியாத நிலைமை நிலவியது. தற்போது நல்லாட்சி அரசாங்கக் காலத்த…

  9. நிவாரணப் பொருட்கள், மருத்துவக் குழுவுடன் இந்தியக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது இந்தியாவில் இருந்து நிவாரணப்பொருட்களுடன் இந்தியக் கப்பலொன்று இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இதேவேளை மற்றுமொரு கப்பலொன்று நாளை கொழும்பை வந்தடையுமென இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரி­வினால் பாதிக்­கப்­பட்ட இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க இந்­தியா முன் வந்­துள்­ள நிலையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை மக்­க­ளுக்கு உதவி வழங்க முன்­வ­ரு­மாறு இலங்கை அர­சாங்கம் கேட்­டுக்­கொண்­டதை உட­ன­டி­யாக இந்­திய அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது. அதன் படி நிவா­ரணப் பொருட்­க­ளு­ட­னான இரு இந்­தி…

  10. இரகசியமாக நகர்த்தப்படும் மஹிந்தவின் இந்திய விஜயம் லியோ நிரோஷ தர்ஷன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ ப­க் ஷவின் இந்­திய விஜயம் மிகவும் இர­க­சி­ய­மான முறையில் நகர்த்­தப்­ப­டு­கின்­றது. விரி­வான கலந்­து­ரை­யா­ டல்­களை நடத்­து­வ­தற்கு புது­டில்­லிக்கு வரு­மாறு மஹிந்த ராஜ­ப­க் ஷ வுக்கு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்கை விஜ­யத்தின் போது அழைப்பு விடுத்­த­தாக தெரி­ய­வ­ரு­கி­றது. இந்­தியப் பிர­த­மரின் இலங்கை விஜ­யத்தின் போது மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட குழு­வினர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். மூடிய அறைக்குள் இடம்­பெற்ற இந்தச் சந்­திப்பின் போது அர­சியல் குறித்து கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வில்லை. இது மிகவும் சிநே­க­பூர்­வ­மா­னதும் சுமு­க­மா­ன…

    • 2 replies
    • 337 views
  11. கிளிநொச்சியில் செவ்வாயன்று அனைத்து மதவழிபாடுகள் அனைவரையும் பங்கேற்குமாறு காணாமற்போனோரின் உறவுகள் அழைப்பு “வடக்கு மாகா­ணத்­தில் முன்­னெ­டுக்­கப்­ப­டும் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளின் தொடர் போராட்­டத்­தின் நூறா­வது நாளான நாளை­ம­று­தி­னம் கிளி­நொச்சி கந்­த­சுா­வமி ஆலய முன்­ற­லில் அனைத்­து­மத வழி­பா­டு­க­ளுக்கு ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த வழி­பா­டு­க­ளில் அனைத்து மாவட்­டங்­க­ளின் உற­வு­க­ளும் கலந்­து­கொள்ள வேண்­டும்” இவ்­வாறு கிளி­நொச்சி மாவட்ட வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் சங்­கம் அழைப்­பு­வி­டுத்­துள்­ளது. வடக்­கில் வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­…

  12. மட்டக்களப்பில் 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிப்பு -ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தற்போது வீசி வரும் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக 25 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ருக்ஷான் குரூஸ், இன்று தெரிவித்தார். கடற்றொழிலில் ஈடுபடும் 14,000 மீனவக் குடும்பங்களும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் 11,000 மீனவக் குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். கடும் காற்றும் மற்றும் கடல் கொந்தளிப்புக் காரணமாக இம்மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

  13. கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளவேண்டுமே தவிர பஞ்சாயத்து நடத்தக் கூடாது “உண்­மை­களை மறைத்­துத் தவ­றான செய்­தி­களை வழங்­கு­வ­தன் மூலம் தாம் நினைத்­த­வற்றை சாதித்­து­வி­ட­லாம் எனச் சிலர் எண்­ணி­யுள்­ளார்­கள். அவர்­க­ளுக்கு சகா­யம் வழங்க பத்­தி­ரி­கை­க­ளும் இணை­யத்­த­ளங்­க­ளும் முன்­னிற்­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டு­கள் தவ­றா­னவை. அவை ஒரு­வித பலாத்­கா­ரமே. கருத்­துக்­க­ளுக்­குக் கருத்­துக்­களே முன்­வைக்­கப்­பட வேண்­டுமே தவிர, கட்­டைப் பஞ்­சா­யத்து முறை­கள் அல்ல” இவ்­வாறு தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி. விக்­னேஸ்வ­ரன். இயக்­கங்­கள் இயங்­கிய போது பலாத்­கா­ரமே கரு­வி­யா­கப் பாவிக்­கப்­பட்­டது. இரா­ணு­வ­ம…

    • 1 reply
    • 340 views
  14. மோ.சைக்­கிள்­கள் கிடந்த கிணற்­றில் பெரு­ம­ளவு வெடி­பொ­ருள்­க­ளும் மீட்பு காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யில் மோட்­டார் சைக்­கிள்­கள் கண்­டெ­டுக்­கப்­பட்ட தனி­யா­ருக்­குச் சொந்­த­மான கிணற்­றி­லி­ருந்து ஆயு­தங்­க­ளின் பாகங்­கள் உள்­ளிட்ட பல வெடி­பொ­ருள்­க­ளும் நேற்று மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இரா­ணு­வத்­தால் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட காங்­கே­சன்­து­றைப் பகு­தி­யின் குரு வீதிப்­ப­கு­தி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணி­யில் உள்ள கிணற்­றில் இருந்து கடந்த வாரம் 2 மோட்­டார் சைக்­கிள்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­யில் கிணற்­றில் இருந்து அள்­ளப்­பட்ட மன்­ணுக்­குள் இருந்து துப்­பாக்கி ரவை­கள் மற்­றும…

  15. சக்­தி­வாய்ந்த வெடி­குண்­டு­கள் தையிட்­டிக் கிணற்­றி­லி­ருந்து நேற்­றும் மீட்­கப்­பட்­டன யாழ்ப்­பா­ணம், வலி­கா­மம் வடக்கு, தையிட்­டிப்­ப­கு­தி­யில் நேற்­றைய தின­மும் கிணற்­றில் இருந்து 60க்கும் மேற்­பட்ட மோட்­டார்க் குண்­டு­கள், 8 பரா ரக குண்­டு­கள், 21 கைக்­குண்­டு­கள் உள்­ளிட்ட ஏரா­ள­மான வெடி­பொ­ருள்­கள் மீட்­கப்­பட்­டன. இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த காங்­கே­சன்­து­றைப் பிர­தே­சத்­தின் ஒரு தொகுதி காணி­கள் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நிலை­யில் அந்­தக் காணி­களை உரி­மை­யா­ளர்­கள் துப்­பு­ரவு செய்து வரு­கின்­ற­னர். கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் வலி. வடக்கு தையிட்­டிப் பகுதி ஜே/247 கிராம …

  16. இரத்தினபுரி மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நி­லையால் 13 பிர­ தேச செய­ல­கங்­க­ளிலும் மண்­ச­ரிவு, வெள்ள அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. மண் சரிவு அனர்த்­தத்தால் நிவித்­தி­கலை பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பகுதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு மண்ணில் புதை­யுண்ட 12 பேரின் சட­ லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. 14 பேர் காணாமல் போயுள்­ள­துடன் இவர்­களை மீட்கும் பணியில் இரா­ணு­வத்­தினர் ஈடு­பட்­டுள்­ளனர். இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் இது ­வரை 47பேர் மண்­ச­ரி­வி­னாலும், வெள்­ளத்­தாலும் உயி­ரி­ழந்­துள்­ளனர். 328 குடும்­பங்­களைச் சேர்ந்த 1168 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்…

  17. காற்றின் வேகம் அதிகரிப்பு அவதானத்துடன் இருக்க கோரிக்கை நாட்டில் நிலவும் கன­மழை மற்றும் சீரற்ற கால­நிலை கார­ண­மாக இலங்­கையின் வடக்கு, கிழக்கு பகு­தி­களில் காற்றின் வேகம் மணிக்கு 80 கிலோ­மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் கட­லோர பகு­தி­களில் மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் இருக்­கு­மாறும் வானிலை அவ­தான நிலையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. கடந்த மூன்று நாட்­க­ளாக நாட்டில் கன­மழை பெய்­து­வரும் நிலையில் நாட்டின் 14 மாவட்­டங்கள் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்கள் முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்ள அதே வேளையில் கேகாலை, காலி பகு­தி­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நாட்டின் இந்த மோச­மான கால­ந…

  18. யாழ். விஜயம் செய்த 300 பிக்குகள் நயீனாதீவில் பூஜை வழிபாடு தென்னிலங்கை அமைப்பொன்றை சேர்ந்த 300 பௌத்த மத துறவிகளால் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் விஷேட பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த தென்னிலங்கை அமைப்பை சேர்ந்த பௌத்த துறவிகளால் கடந்த வியாழக்கிழமை இவ் விஷேட பூஜை வழிபாடுகளானது யாழ்.நாவற்குழி பௌத்த விகாரையில் இடம்பெறவிருந்தது. எனினும் பின்னர் சில காரணங்களால் பிற்போடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பூஜை வழிபாடுகளானது இடம்பெற்று வருகின்றது. இதன்படி இன்றைய தினம் இடம்பெற்றுவரும் விஷேட பௌத்த மத துறவிகளது பூஜையானது நயீனாதீவு நாக விகாரையில் இடம்பெற்றுவருகின்றது. …

  19. சக்தி டிவி செய்திகள் 27th May 2017, 8PM

  20. அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள் இலங்­கை­யின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய டி.எஸ். சேனா­நா­யக்­க­வின் அர­சில் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஆவார். டி.எஸ். சேனா­நா­ய­க­வின் திடீர்ச் சாவை­ய­டுத்து தலைமை அமைச்­ச­ராக ஆன டட்லி சேன­நா­ய­கா­வும் நிதி­ய­மைச்­ச­ராக ஜே.ஆரையே நிய­மித்­தார். 1952 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் அதி­கா­ரத்தை மீண்­டும் கைப்­பற்­றிய டட்லி, ஜே. ஆரையே தமது அர­சின் நிதி அமைச்­ச­ராக்­கி­னார். அந்­த­வே­ளை­யில் டட்­லிக்­கும் ஜே.ஆருக்­கு­மான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், 1953 ஆம் ஆண்­டின் வரவு செல­வுத் திட்…

  21. ரத்துப்பஸ்வெல சொல்லித்தரும் பாடம் ரத்துப்­பஸ்­வெல என்ற இடத்­தில் 2013ஆம் ஆண்டு பொது­மக்­கள் மீது இரா­ணு­வத்­தி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூடு தொடர்­பில் இரா­ணுவ அதி­கா­ரி­யான பிரி­கே­டி­யர் தேசப்­பி­ரிய குண­வர்த்­தன கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். துப்­பாக்­கிச் சூட்­டோடு தொடர்­புபட்ட இரா­ணுவ அணி­யின் கட்­ட­ளை­யி­டும் அதி­கா­ரி­யாக அவர் இருந்த கார­ணத்­தால் கட்­ட­ளைப் பொறுப்­பா­ளி­யான அவர் குற்ற விசா­ர­ணைப் பிரி­வின் சிறப்பு அணி­யி­னால் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார். இந்­தச் சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­பட்­ட­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் ஏற்­க­னவே 3 இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கும் நிலை­யில் இந்­தக் கைத…

  22. வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வட மாகாண முதலமைச்சரால் வன்னேரியில் சுற்றுலா மையம் திறப்பு! வடக்கு மாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் வன்னேரியில் சுற்றுலா மையமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் திறந்துவைத்துள்ளார். பறவைகள் சரணாலயமாகக் காணப்படுகின்ற வன்னேரிக்குளத்தை அண்மித்த பிரதேசத்திலே சுமார் 6 மில்லியன் ரூபா செலவில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து பருவகாலப் பறவைகளும் அதிகம் வருகை தருகின்றமையால், இந்த பிரதேசத்தை எதிர் காலத்தில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக்கும் நோக்கோடு திறந்து வைக்க…

    • 0 replies
    • 584 views
  23. பிளாஸ்ரிக் பைகளைத் தவிர்ப்பதற்கான உறுதிமொழி வடக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் எல்லா வகையான பிளாஸ்ரிக் பைகளையும் ஒருநாள் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்ரிக் பொருட்களையும் தவிர்ப்பதற்கான உறுதிமொழி மே 29ஆம் திகதி எடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய நாடுகளால் ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாகச் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல்பற்றி உலகின் கவனத்தை ஈர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சூழல் பாதுகாப்பில் அனைவரினதும் ஆக்கபூர்வமான பங்களிப்பை வேண்டுவதே இத…

  24. நாவற்குழியில் புகையிரதத்துக்கு கல்வீச்சு, இராணுவச் சிப்பாய் காயம்! யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் வைத்து புகையிரதத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதன்போது புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை பயணித்த புகையிரதத்தின் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிரதத்தின் மீது வீசப்பட்ட கல், புகையிரதத்தில் பயணித்த இராணுவ சிப்பாயின் தலை மீது பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கல்வீச்சு த…

    • 1 reply
    • 535 views
  25. வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டம் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சியில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள சுமார் 150 குடும்பங்களின் பாவனைக்காகவே இந்த குடிநீர்த் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் பாவனைக்காக இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்துள்ளார். மேலும், இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி .சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை, வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.