Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. Shares மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நாளை! மட்டக்களப்பபில் இலங்கை தமிழரசு கட்சி வாகரை பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில். 18.05.2017 வியாழக்கிழமை மு.ப9.30க்கு இடம்பெறவுள்ளது. பொதுமக்கள் சார்பில் நடைபெற இருக்கும் நினைவேந்தலிற்கு அனைவரும் அணி திரள்வோம் http://battinaatham.com/description.php?art=10061

    • 0 replies
    • 227 views
  2. 02.04.2017 அன்று மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமாக காணாமற் போனோர் பற்றியும் காணிகள் திரும்பவும் உரித்தாளர்களுக்குக் கையளிப்பது பற்றியும் வேலையற்ற பட்டதாரிகள் சம்பந்தமாகவும் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளளிக்கும் முகமாக இன்றைய தினம் என்னை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் தமது வாசஸ்தலத்திற்கு அழைத்திருந்தார். அங்கு பல அமைச்சர்களும் சட்டத்துறை தலைமையதிபதியும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்களும் வேறு பலரும் சமூகமளித்திருந்தனர். எம் சார்பில் கௌரவ அமைச்சர் குருகுலராஜா அவர்களும் ஆலோசகர் திரு.நிமலன் கார்த்திகேயன் அவர்களும், காணி ஆணையாளர் திரு.குகநாதன் அவர்களும் காணித்திணைக்கள அலுவலர்கள் இருவரும் பங்கு பற்றியிருந்தார்கள். முதலில் காணமற் போனோர் சம்பந்தமாக…

    • 0 replies
    • 349 views
  3. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ஏற்பாடுகளை செய்துவந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார்விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அருட்தந்தை இன்று (08) இரவு எட்டு மணியளவில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸாரினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். முள்ளிவாய்க்கால் தேவாலயப்பகுதியில் இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் நினைவாக நினைவு படிம கற்கள் பொறிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த கற்களில் பொறிக்கப்படும் பெயர்களில் விடுதலைப்புலிகளின் பெயர்களும் உள்ளதா? மற்றும் எதற்காக பெயர்கள் பொறிக்கப்படுகின்றன போன்ற விடயங்களை ஆராயும் நோக்குடனே முல்லைத்தீவு பொலிஸார் அருட்தந்தை எழிலை விசா…

    • 2 replies
    • 795 views
  4.  சமாதானத்துக்கு ஆபத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அனைத்துத் தரப்பினரிடையேயும் இனங்களுக்கிடையேயும், நீடிக்கும் சமாதானமும் கூட்டுறவும் ஏற்படுமெனக் காணப்பட்ட மெல்லிய நம்பிக்கை, ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பு, 1995ஆம் ஆண்டு முதல், உலகெங்கிலும் இயங்கி வருகிறது. இந்நிலையில், இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை, இக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் முதல் 9 மாதங்களில், கணிசமான அட…

    • 2 replies
    • 347 views
  5. இலங்கை - கனடா இடையே விமானசேவை உடன்படிக்கை இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் முறையான விமான சேவையினைக் கட்டியெழுப்பும் நோக்கில், விமான சேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடு சென்றுள்ள அதிகமான இலங்கையர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர். எனினும், இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையில் எவ்வித விமான சேவை உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவில்லை. எனவே, இரு நாடுகளுக்கும் இடையில் முறையான விமான சேவையினை கட்டியெழுப்பும் நோக்கில், தற்போது அதிகாரிகள் மட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள முன்மொழியப்பட்டுள்ள விமானசேவை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் உடன்படிக்கையின் அம்சங்களை …

  6. மட்டக்களப்பின் மற்றுமொரு எல்லைக் கிராமமான பாவற்கொடிச்சேனையை நோக்கி

  7. மீண்டும் கண்ணீர்ப்புகை தாக்குதல் (UPDATE) 05.38PM அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை தற்போது மேற்கொண்டுள்ளனர். 4.37 PM: அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது 3ஆவது முறையாக பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், கொழும்பு, விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பேரணி மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம், இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இ…

  8. புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 09 வரையில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். குறித்த பாடசாலைக்கு புத்தூர் கிராமத்தில் ஒரு பகுதியை சேர்த்த மாணவர்கள் கடந்த சில வாரங்களாக பாடசாலைக்கு செல்வதில்லை. மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் சென்று தமது பிள்ளைகள்…

  9. சக்தி டிவி செய்திகள் 17th May 2017, 8PM

  10. ‘இணைந்ததே சிறந்தது’ ஆஸியின் அபிவிருத்தித்திட்டங்களை விபரிக்கின்றது ; ஆஸி. உயர்ஸ்தானிகர் எதிர்காலத்தில் இலங்கையில் அவுஸ்திரேலியா மேற்கொள்ளவிருக்கும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் பற்றி நான் இன்று ஆரம்பித்து வைத்துள்ள “இணைந்ததே சிறந்தது” எனும் புகைப்படக் கண்காட்சி விபரிக்கின்றதென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் தெரிவித்தார். அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான 70 வருடகால அபிவிருத்திக் கூட்டுறவைக் கொண்டாடும் வகையில், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ‘இணைந்ததே சிறந்தது’ புகைப்படக் கண்காட்சியை நேற்று ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிறைஸ் ஹற்செசன் மேற்கண்டவாறு தெரிவித…

  11. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் வழங்கப்படுவதன் மூலம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கூற முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லய் மார்கோ தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது மனித உரிமைகள் தொடர்பான நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே இந்த சலுகை மீண்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகத்தில் இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்ட விடயங்களைப் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கங்களை ஊக்குவிப்பதற்காகவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டு வருவதாகவும் அவர…

  12. ஜன­நா­யக வழி­மு­றை­களில் மக்கள் தங்கள் கவ­னத்தைத் திருப்­பி­யுள்­ளார்கள். முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வும் ஒரு­விதப் போராட்டம் தான். அநி­யா­ய­மாக கொலை செய்­யப்­பட்ட எம் மக்­களை நாம் ஒன்­றி­ணைந்து நினைவு கொள்­வதன் மூலம் மக்­களின் ஒரு பாரிய துயர அலையை உண்­டு­ப­டுத்­து­கின்றோம் என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். இறந்து போன­வர்­களின் ஆன்­மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒரு­மித்து மன­தார கோரிக்கை விடு­வது இங்கும் பிற­நா­டு­களில் வாழும் தமிழ் மக்­க­ளையும் மனதால் ஒன்று சேர் க்க உத­வு­கின்­றது. அத்­துடன் எம்மக்­களின் ஒற்­று­மையே எமது கோரிக்­கை­க­ளுக்கு ஆட்­சி­யா­ளர்­களைச் செவி­சாய்க்க வைக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். …

    • 2 replies
    • 441 views
  13. இன்று மேதகு ஜனாதிபதியைச் சந்திக்கும் எமது முதமைச்சர் எமக்கான சாதகமான முடிவுகளைத் தர வேண்டும். இன்றைய சந்திப்பின் பின்னர் வடமாகாண முதலமைச்சரால் எங்களுக்கான சாதகமான பதில்கள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டும் வடமாகாண சபையை முடக்கி அங்குள்ள மூன்று வாயில்களின் முன்பாகவும் கொட்டகைகள் அமைத்துத் தீர்வு கிடைக்கும் வரையிலான தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி வரும் என வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரச வேலைவாய்ப்பை வலியுறுத்தி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக மேற்கொண்டு வரும் காலவரையற்ற போராட்டம் இன்று புதன்கிழமை(17) 80 ஆவது நாளாகவும் தீர்வின்றி இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண…

    • 0 replies
    • 156 views
  14. புளொட் நெடுமாறனுக்கு 2வருட கடூழியச் சிறைத் தண்டனை : வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வவுனியா வேப்பங்குளம் பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கி வந்த புளொட் முகாமிற்குப் பொறுப்பாளராக இருந்த சிவநாதன் பிரேமநாத் (போமரன்) நெடுமாறன் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. புளொட் நெடுமாறன், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவருடகாலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2014.08.11அன்று…

  15. இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவதனால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது – சரத் பொன்சேகா இறந்தவர்களை நினைவு கூரவும் அஞ்சலி செலுத்தவும் தீபம் ஏற்றவும் எவருக்கும் முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நாளை முல்லிவாய்க்கால் பகுதியில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வு குறித்து கேட்டபோதே சரத்பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கம் பிரபாகரனின் இரத்த உறவினர் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் யுத்த காலத்தில் அவ்வாறு இனங்காணப்படவில்லை எனத் தெரிவித்த சரத்பொன்சேகா யுத்தத்தின் போது உயிரிழந்…

  16. திருகோணமலை, மூதூர் - செல்வநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தோப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மூதூர் - செல்வநகர் பகுதியில் உள்ள காணியில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களே வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த காணியில் தங்கியிருந்த மக்களை வெளியேறுமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பிக்கு ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலைய…

    • 4 replies
    • 1.1k views
  17. இறுதிச்சடங்கு; அரசியல் கைதியை அழைத்து வர ஏற்பாடு -எஸ்.றொசேரியன் லெம்பேட் மெகசின் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தந்தை, நேற்று, உயிரிழந்துள்ளார். தந்தையின் இறுதி கிரிகைகளில் கலந்து கொள்ளுவதற்காக, அரசியல் கைதியை அழைத்து வர, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மத்திய வங்கியில் இடம் பெற்ற குண்டு வெப்பு சம்பவம் தொடர்பாக மெகசின் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும், யாழ். பண்டத்தரிப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் பார்த்தீபன் என்பவரின் தந்தையான விக்னேஸ்வ…

  18. இடறுப்படும் வடமாகாண சபை வடக்கு மாகாண சபை­யின் முத­ல­மைச்­ச­ருக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடை­யில் முறு­கல், முட்­டி­மோ­தல் தொடங்­கி­யுள்­ளது என்று தக­வல்­கள் வரு­கின்­றன. இதற்கு முன்­ன­ரும் இரு­வ­ருக்கு இடை­யி­லும் இது­போன்ற உர­சல்­கள் இருந்தே வந்­தன என்­றா­லும், இவ்­வ­ளவு வெளிப்­ப­டை­யாக இரு தரப்­பி­ன­ரும் மோதிக் கொண்­ட­தில்லை என­லாம். மாகாண சபை­யின் அதி­கா­ரி­கள் சில­ருக்கு ஆளு­நர் றெஜி­னோல்ட் கூரே இட­மாற்­றம் வழங்­கி­ய­மை­தான் இப்­போது எழுந்­துள்ள பிரச்­சி­னைக்­குக் கார­ணம். ஆளு­நர் தன்­னிச்­சை­யாக, தான்தோன்­றித்­த­ன­மா­கச் செயற்­பட்டுவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. முத­ல­மைச்­ச­ர் அமைச்சின் செயலாளருக்கு முதலமைச்சரிடம் கேட்காமலேயே இட­மாற்­றம் வழங…

  19. 'ஞானசாரரை சிறையிலடையுங்கள்' அஸ்லம் எஸ்.மௌலானா “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதமாகச் செயற்படுகின்ற ஞானசார தேரரை சிறையிலடைப்போம் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். அது போன்று பௌத்த தீவிரவாதிகள் மீது அவசரமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர், மேலும் கூறியதாவது, "பௌத்த தீவிரவாதிகள், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு…

  20. இலங்கை வரலாற்றில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து பெரும்பான்மையினரால் மேற்கொள்ளப்பட்ட பல அடாவடித்தனங்கள் மறக்க முடியாத கறையாக படிந்த வரலாற்றைக் கொண்டவை. முஸ்லிம் மக்களை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் அளுத்கமை, பேருவளை சம்வங்களே அனேகமானோரின் மனதில் இன்னும் ஊசாலாடுகின்றன. எனினும், வரலாற்றில் பல இடங்கலில் இவ்வாறான சம்பவங்கள் நிறையவே இடம்பெற்றுள்ளன என்பது சிலருக்கு தெரிந்தும் மறந்து போன உண்மைகளாகும். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகரில் 2001 மே மாதம் முதலாம், 2ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த அடாவடிகள் ஓட்டுமொத்த இலங்கை வாழ் முஸ்லிம்களினதும் “கறுப்பு மே’ தினமாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இன்றுடன் 16 வருடங்…

    • 1 reply
    • 584 views
  21. சம்பந்தனின் அலுவலகத்துக்கு முன்னால் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்துக்கு முன்னால், காணாமற்போனோரின் உறவினர்கள், அமைதியான முறையில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். காணாமற்போனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவரிடம் மனுவொன்றைக் கையளிப்பதற்காக வருகை தந்திருந்த உறவினர்களே, இவ்வாறு அமைதிப் போராட்டமொன்றை மேற்கொண்டு வருகின்றனர். “காணாமற்போனோரைக் கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை விரைவில் ஸ்தாபிப்பதற்கு, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைக…

  22. ஞான­சார தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஞான­சார தேரரின் இன­வாத கருத்­துக்கள் மற்றும் சம­யத்தை இழி­வு­ப­டுத்­து­கின்­ற­மைக்கு எதி­ராக நேற்று பொலிஸ் தலை­மை­ய­கத்தில் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்­மா­னினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதன்­போது கருத்துத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர், மீண்டும் இந்­நாட்டில் இன­வா­தத்தை தூண்ட ஒரு­சில சக்­திகள் முயற்சி செய்­கின்­றன. முக்­கி­ய­மாக ஞான­சார தேரர் இந்­நாட்டை பிரிக்கும் செயற்­பாடுகளிலும் 2005 ஆம் ஆண்­டுக்கு முன்னர் இருந்­ததை போன்று மக்­க­ளி­டத்தில் இன­வா­தத்தை பரப்பும் நட­வ­டிக்­கை களில் ஈடு­பட்டு வரு­கிறார். ஒரு சமயத் தலைவர் எவ்­வி­த­ம…

  23. சமாதானம் பேசவந்த நோர்வேயின் தேசிய தினத்தில் தேசிய இனமொன்று சுதந்திரம் இழந்த நாள் முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்….விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! ஈழத்து நிலவன் முள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமு…

    • 0 replies
    • 591 views
  24. வித்தியா – மரணம் முதல் இன்றுவரை. – குளோபல் தமிழ்ச்செய்திகளுக்காக தொகுப்பு – மயூரப்பிரியன் 13.05.2015. -காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள். 14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள் தேடுகின்றார்கள். வித்தியா பாடசாலை செல்லும் பாதையில் உள்ள பாழடைந்த வீடொன்றின் பின் புறமாக கைகள் கால்கள் கட்டப்பட்டு வாய்க்குள் துணி அடையப்பட்ட நிலையில் வித்தியா சடலமாக மீட்கப்படுகின்றாள். 14.05.2015. -மதியம். புங்குடுதீவில் உள்ள 9 பாடசாலைகளையும் சேர…

  25. காணாமல் போனோர் அலுவலகத்தை ‘உடனடியாக செயற்படுத்துக’ கவிதா சுப்ரமணியம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கடந்த பல வருடங்களாக சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர் என்று தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிவதற்கான அலுவலகம், எந்தவொரு தாமதமும் இன்றி வெகு விரைவில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, “ஆட்கள் காணாமல் போகச் செய்வதை குற்றவியல் குற்றமாக்கு” எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு, கொழும்பிலுள்ள தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில், நேற்று (16) இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.