ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
வடக்கிலுள்ள ஆலைகளை மீள ஆரம்பியுங்கள் “வடக்கு மாகாணத்தில் இயங்கிய பெரியளவிலான தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். எனவே அவற்றை மீளவும் ஆரம்பித்து உடனடியாக வேலைவாய்ப்பை வழங்க ஆவன செய்ய வேண்டும்” இவ்வாறு அரச தலைவரிடம் நேரில் வலியுறுத்தினார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். மாகாண முதலமைச்சர்கள் மாநாடு வட மத்திய மாகாணத்தின் ஹபரணப் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் முக்கிய அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் , அதிகார சபைகளின் தலைவர்கள் எனப் பல…
-
- 3 replies
- 545 views
-
-
மகிந்தவிடம் மயங்கிய சிட்னி தமிழ் வியாபாரி!-அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு ஆப்பு அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பென்டில்கில்லில் பணப்பரிமாற்றச் சேவை வியாபாரம் நடாத்தும் தொழிலதிபர் பிரதீபன் அவர்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரும் இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலைசெய்த போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து விருந்துபசாரம் மேற்கொண்டமை தொடர்பாக செய்தி தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தும் மோகன் என்பவரும் கலந்துகொண்டுள்ளார் என அறியவருகின்றது. தன்னை ஈழ ஆதரவாளனாக காட்டி தனது வியாபாரங்களை வளர்த்த பிரதீ…
-
- 0 replies
- 553 views
-
-
வடக்கில் அரச அலுவலகங்களில் சிங்கள ஊழியர்களுக்கு நியமனம்! [Monday 2017-05-08 19:00] வடக்கு, கிழக்கில் உள்ள அரச அலுவலகங்களுக்கு சிங்கள இளைஞர்கள் பணிக்கமர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சியில் உள்ள மத்திய அரசின் திணைக்களங்களில் நிரந்தர அலுவலக உதவியாளர்களாக சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது, அங்குள்ள வேலையற்ற இளைஞர்களை மட்டுமன்றி, குறித்த அலுவலகங்களில் பல வருட காலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி, இதுவரை காலமும் நிரந்தர நியமனம் கிடைக்காதவர்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப் பணிக்கு பொருத்தமானவர்களை அந்தந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகளே தெரிவு செய்ய வேண்டு…
-
- 0 replies
- 322 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே 12ஆம் திகதி ஆரம்பம்! - வடக்கு, கிழக்கில் அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடு [Monday 2017-05-08 19:00] முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் மே- 18ம் திகதி நினைவு கூரப்படவுள்ள நிலையில், வரும் 12ம் திகதி தொடக்கம் வட-கிழக்கு மாகாணங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் என வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், எஸ்.பசுபதிப்பிள்ளை, எம்.தியாகராஜா ஆகியோர் தெரிவித்தனர். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நாள் நினைவேந்தல் குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் கூறினர். “ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகள் வடமாகாணத்திலும், தமிழகத்திலும், புலம்பெ…
-
- 0 replies
- 451 views
-
-
பயமாக இருந்தால் மஹிந்த வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்துறங்கட்டும்! - சரத் பொன்சேகா [Monday 2017-05-08 19:00] மகிந்த ராஜபக்சவிற்கு பயமாகவிருந்தால், வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு படுத்துறங்க வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். “ சால்வையில் தொங்க விட்டு கொன்று விடுவேன் என்ற அச்சத்தில் மகிந்த ராஜபக்ச இருக்கின்றார். நான் கொன்றுவிடுவேன் என்று அஞ்சுவதால் அவருக்கு 200, 300 பேரை பாதுகாப்புக்காக வழங்க தேவையில்லை. அவரது பாதுகாப்புக்கு 100 பேரை கூட வழங்கக் கூடாது. மகிந்த ராஜபக்ச தன்னை பிடித்து சிறையில் அடைத்தார். முன்னாள் இராணுவ தளபதியான எனக்கு பாதுகாப்பு வழங்கினாரா? எந்த பாதுகாப்பும் இல்லாமல் பயங்…
-
- 0 replies
- 420 views
-
-
புதிய பயங்கரவாத தடைச் சட்டம், காணி விடுவிப்பு, கைதி விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஆகியவை தொடர்பாக ஆதவன் தொலைக்காட்சியுடன் பேட்டி
-
- 0 replies
- 141 views
-
-
உலகில் முதலாவது நவீன லேசர் வெசாக் இலங்கையில் உலகில் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தல் கொழும்பு காலிமுகதிடலில் மக்கள் பார்வைக்காக எதிர்வரும் புதன்கிழமை(10) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. குறித்த நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரப் பந்தலானது 60 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதனை பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதில், புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள், லேசர் கீற்று வெசாக் அலங்காரப் பந்தலில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இது ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத…
-
- 1 reply
- 697 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சின் பதில் என்ன? தகுதியானவர்களை தவிர்த்து கிளிநொச்சியில் முறையற்ற அதிபர் நியமனமா? கிளிநொச்சி வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் நியமனத்தில் எவ்வித சட்டதிட்டங்களோ நடைமுறைகளோ பின்பற்றப்படாது தகுதியானவர்கள் இருக்கின்ற போது முறையற்ற வகையில் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகம் குற்றம் சுமத்தியுள்ளது. 1ஏபி பாடசாலையான கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கடமையில் இருந்த அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த அதிபரை 1சி பாடசாலையான இராமநாதபுரம் பாடசாலைக்கு மாற்றிவிட்டு வட்டகச்சி மகா வித்தியாலயத்திற்கு அதே அதிபர் தரம் இரண்டைச்சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். …
-
- 0 replies
- 222 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8th May 2017, 8PM
-
- 0 replies
- 169 views
-
-
வடக்கு மாகாண ஆளுநர் அதிர்ச்சி நாகவிகாரை விடுதிக் கழிவுகளால் யாழ்ப்பாண நகர் நாகவிகாரை ஓய்வு விடுதியின் கழிவுகள் அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் போடப்படுவதைக் கண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அதிர்ச்சி அடைந்தார். அந்த விடுதியின் நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய யாழ்ப்பாண மாநகர சபையின ரையும் அவர் கடிந்துகொண்டார். யாழ்ப்பாணம், ஆரியகுளம் மற்றும் குளத்திலி ருந்து கடலுக்குச் செல்லும் வாய்க்கால்கள் என்பன நேற்றைய தினம் ஆளுநரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்கள் , படையினர் , மாநகர சபையினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சுத்தம் செய்யப்பட்டன. இதன்போது …
-
- 1 reply
- 401 views
-
-
அகதிகள் என்ற தோரணையில் மியன்மார் மற்றும் இன்னும் சில நாடுகளில் உள்ள முஸ்லிம்களை இலங்கை கொண்டுவரும் மனித கடத்தல் வியாபாரம் ஒன்று இடம்பெறுவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே கடந்த வாரம் இந்திய கடற்பரப்பு ஊடாக இலங்கைக்குள் வந்துள்ள மியன்மார் நாட்டவர்கள் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… ஆதரவற்றவர்களிக்கு ஆதரவு அளிக்குமாறு பௌத்த தர்மம் போதிக்கிறது.அது தொடர்பில் எமக்கு மாற்று கருத்து இல்லை.நாம் அந்த விடயத்தில் இன மத பேதம் பார்ப்பதில்லை.ஆனால் கடந்த வாரம் நாட்டுக்குள் வந்த மியன்மார் அகதிகள் என்ற தோரணையில் இலங்கைக்குள் தஞ்ஞம் புகுந்தவர்க…
-
- 0 replies
- 405 views
-
-
கார்கில்ஸ் கட்டடத்தொகுதி திரையரங்கில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் - பாகுபலி பார்க்கச் சென்றவர்கள் குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் கார்கில்ஸ் கட்டடத்தொகுதியில் இயங்கும் மஜிஸ்ரிக் திரையரங்கின் நிர்வாகத்தில் மிகப்பெரிய குழப்பங்கள் இருப்பதாக மக்கள் குறைபட்டுள்ளனர். “பாகுபலி 2” படம் திரையாகி வருகின்ற இவ் வேளையில் அங்கு கூடுகின்ற மக்களை மிக மோசமாக மஜிஸ்ரிக் நிர்வாகம் நடத்துவதாகவும் திரைப்படம் ஆரம்பமாகும் நேரங்கள் பற்றியோ ரிக்கட் எடுப்பதற்காக மக்கள் காத்திருப்பது குறித்தோ அந்த நிர்வாகம் எந்தக் கருசனையும் கொள்ளவில்லை என்று விசனம் தெரிவிக்கும் பொதுமக்கள், ஒவ்வொரு காட்சி நேரத்துக்கும் 15 நிமிடங்கள் முன்னதாக ரிக்கெட் வழங்கும் கவுண்டர் திறக்கப…
-
- 2 replies
- 492 views
-
-
வடக்கு-கிழக்கு இணைப்புக்கு நியாயமான காரணம் வேண்டும் நல்லாட்சிக்கான முன்னணியிடம் கேட்கிறார் ஹிஸ்புல்லாஹ் “முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு வழங்கக் கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக இருக்கவேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குறிப்பிட்டுள்ள கருத்து கண்டிக்கத்தக்கது. வடக்கு -– கிழக்கு இணைய வேண்டும், அது இயற்கையானது என்று குறிப்பிட் டுள்ள கருத்துக்கு முடியுமானால் ஒரு நியாயமான காரணத்தை முன்னணி முன்வைக்க வேண்டும்” இவ்வாறு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நேற்றுமுன் தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மே…
-
- 0 replies
- 344 views
-
-
நியாயமான ரீதியிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒத்துழையுங்கள் இந்தியப் பிரதமர் மோடியை தனித்தனியே கோரவுள்ள த.தே.கூ., த.மு.கூ. (ஆர்.ராம்) ஒருமித்த நாட்டினினுள் நியாயமான முறையில் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கு 1983 ஆம் ஆண்டிலிருந்து தமிழர் பிரச்சினை யில் கவனம் செலுத்தி வரும் இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இலங்கைக்கு விஜயம் செய்ய வுள்ள பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர…
-
- 1 reply
- 260 views
-
-
மகிந்தவின் செல்வாக்கை குறைத்து மதிப்பிடாதீர்கள் ரணிலுக்குக் கட்சியினர் புத்திமதி மகிந்தவைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ரணிலிடம் எடுத்துரைத்த ஐக்கிய தேசியக் கட்சியினர் அவரது தொழிலாளர் தினக் கூட்டத்துக் குத் திரண்ட மக்கள் தொடர்பிலும் நீண்ட பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தொழிலாளர் தினத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட் டத்திலும் இது பிரதிபலித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற கூட்டத்தை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க கூட்டி…
-
- 1 reply
- 289 views
-
-
மஹிந்தவின் எழுச்சியால் அரசாங்கம் பின்வாங்கும் ஆபத்து! - சம்பந்தன் [Saturday 2017-05-06 18:00] மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்துக்குத் திரண்ட சிங்கள மக்களினால் அரசமைப்பு விடயத்தில் அரசு பின்வாங்கும் ஆபத்து இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார். காலிமுகத்திடலில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் மே தினக் கூட்டத்தில் சிங்கள மக்கள் பெருமளவானோர் திரண்டுள்ளனர். அந்தக் க…
-
- 6 replies
- 733 views
-
-
மஹிந்தவின் பாதுகாப்பு வாபஸ் இரத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கான நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் 50பேரைக் குறைப்பதாக எடுத்திருந்த தீர்மானம், இரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மஹிந்தவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 157 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், தொடர்ந்து சேவையில் ஈடுபடுவர் என்று, அமைச்சர் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேற்படி 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும், மஹிந்தவின் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நீக்கப்பட மாட்டார்களென, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதென, மஹிந்தவின் பிரத்தியேகச் செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.…
-
- 0 replies
- 306 views
-
-
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரி காலமானார்...! முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் சாகோதரி சாந்தினி ராஜபக்ஷ காலமானார். இவர் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து காலமாகியுள்ளார். இவர் நோய்நிலை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 58வது வயதில் உயிரிழந்துள்ளார். இவரது பூதவுடல் தற்போது நுகேகொட - எம்புல்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிக்கிரியைகள் நாளை மாலை உடஹாமுல்ல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/19827
-
- 0 replies
- 370 views
-
-
வடக்கு, கிழக்கை இணைத்து தனி அலகை உருவாக்கும் திசையை நோக்கி நாடு பயணிக்கிறது நாட்டின் தேவை இடதுசாரி கொள்கை நூல் வெளியீட்டு விழாவில் விமல் தெரிவிப்பு (ந.ஜெகதீஸ்) ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் குழு வாழும் பகுதியில் சர்வதேச சட்டத்தினை மீறும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்கள் வாழும் பகுதியை சுயாதீன ராஜ்ஜியமாக அமுல் படுத்த வேண்டும் என்றே சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று இலங்கையின் பூகோள வடிவ மாற்றங்களைக்கூட ஐ.நாவே தீர்மானிக்கின்றது. எனவே வடக்கு, கிழக்கை இணைத்து தனியான ஒரு அலகாக உருவாக்கப்படும் திசையை நோக்கி நாடு பயணிக்கின்றது என பாராளு…
-
- 0 replies
- 166 views
-
-
பிரதமர் மோடி வியாழன் வருகிறார் லியோ நிரோஷ தர்ஷன் மலையகத்தில் சிறப்புரை : கூட்டமைப்புடன் கொழும்பில் சந்திப்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு இலங்கைக்கு வருகின்றார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாட உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் போது நல்லிணக்கம் மற்றும் நிலையான அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு திட்டம் தொடர்பில் முன்னேற்றங்களை இந்தியப் பிரதமர் கேட்டறிய உள்ளார். குறிப்பாக …
-
- 2 replies
- 413 views
-
-
மைத்திரியின் அறிவிப்பு இரு வாரங்களில் புதிய அரசமைப்புத் தொடர்பானது புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விரைவில் சிறப்பு அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இன்னும் 2 வாரங்களில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப் பாட்டையும் கட்சித் தலைவர் என்ற ரீதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன விளக்குவார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. புதிய அரசமைப்பு உருவாக்க…
-
- 0 replies
- 242 views
-
-
மக்கள் என்னுடன் கைகோர்த்தமையே எனது பாதுகாப்பு நீக்கப்பட காரணம் (ஆர்.யசி) மே தினத்தில் மக்கள் என்னுடன் கைகோர்த்ததன் பிரதிபலனாகவே எனது பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. என்னை அச்சுறுத்த முன்னெடுக்கும் எந்த நடவடிக்கையையும் கண்டு நான் அஞ்சப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார். அரசாங்கத்துடன் தனிப்பட்ட காரணிகளுக்காக முரண்படவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இந்த மக்களையும் நாட்டையும் அழிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்தே நான் போராடி வருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத…
-
- 0 replies
- 418 views
-
-
யாழ். பல்கலையில் பதட்டம் சிங்கள மாணவரிடையேயான கருத்து மோதலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச் சூழலில் வெசாக் தினத்துக்காக வெளிச்சக் கூடுகளைக் கட்ட முயன்ற புகுமுக சிங்கள மாணவர்களுக்கும் மூத்த மாணவர்களுக்கும் இடையில் நேற்று மாலை குழப்பம் ஏற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தோன்றியது. இராமநாதன் வீதியில் ஏற்பட்ட இந்தக் குழப்பத்தால் பல்கலைக்கழகச் சூழலில் அரை மணிநேரத்துக்கும் அதிகமாகப் பதற்றம் நிலவியதாகத் தெரிவிக்கப்பட்டது. வெசாக் தினத்தை முன்னிட்டு சிங்கள மாணவர்களில் புகுமுக மாணவர்கள் வெளிச்சக் கூடுகளைத் தயார் செய்து அலங்காரத்தை மேற்கொள்ள முயன்றனர். இதனை அறிந்து அங்கு வந்த மூத்த சிங்கள மாணவர்கள் அலங்காரத்தைத் தாமே மே…
-
- 1 reply
- 569 views
-
-
இலங்கையுடனான உறவு மேம்படட்டும்! இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயின் இந்திய வருகை, இந்திய இலங்கை உறவு மேலும் வலுவடையும் எனும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. 2015 ஜனவரிக்குப் பிறகு, இந்தியாவுக்கு அவர் மூன்றாவது முறையாக வருகை தந்தது, இந்தியாவுடனான உறவில் இலங்கை கொண்டிருக்கும் ஈடுபாட்டை வெளிக்காட்டுகிறது. கடந்த வாரம் புதுடெல்லி வந்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவுகள் தொடர்பாக விரிவான பேச்சு நடத்தினார். பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஒருபக்கம், இலங்கையில் சீனத்தின் பங்கேற்பு அதிகமாகிக்கொண்டே வருவதை இந்தியா கவனித்த படிதான் இருக்கிறது. எனினும், இரு நாடுகளும் …
-
- 0 replies
- 228 views
-
-
தேநீர் அருந்தியவர்கள் மீது வாள்வெட்டு கடைக்குள் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திய இனந்தெரியாத நபர்கள் சிலர், தப்பியோடியுள்ளனர். கனகன்புளியச் சந்தியில் உள்ள தேநீர் கடையின் இன்று பி.ப.3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்கள், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/196179/த-ந-ர-அர-ந-த-யவர-கள-ம-த-வ-ள-வ-ட-ட-#sthash.qytovGyl.dpuf
-
- 1 reply
- 354 views
-