ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
நரேந்திர மோடியினால் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை கட்டிடம் திறந்து வைக்கப்படும் : ரஞ்சித்சிங் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ், நவீன வசதிகளுடன் டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிடுவதற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் த. ரஞ்சித் சிங், டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மேலும் குறித்த விஜயத்தின் போது புதிய கட்டிடத்தை, மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அத்தோடு இந்த வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட இரு…
-
- 0 replies
- 229 views
-
-
சிங்கள தேசத்தை பங்குபோடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியாது : மஹிந்த ஆவேசம் சிங்கள தேசம் பங்குபோட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டை நேசிக்கும் நாம் எவ்வாறு நாட்டை துண்டாடும் நகர்வுகளுக்கு ஆதரவாக கை தூக்க முடியுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டை துண்டாடும் பௌத்தத்தை அழிக்கும் அரசியல் அமைப்பிற்கு எம்மால் எந்த சந்தர்ப்பத்திலும் கை தூக்க முடித்து. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் துணை போகும் கொள்கையில் நாம்…
-
- 1 reply
- 309 views
-
-
இலங்கை தம்பதியினரை கைது செய்துள்ள இந்தியாவின் கியூ பிரிவு காவல் படையினர்..! இலங்கையிலிருந்து, இந்தியாவின் தமிழ் நாட்டிற்கு கடல் மார்க்கமாக சென்ற தம்பதியினரை தமிழக கியூ பிரிவு காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலு சம்பவம் தொடர்பாக இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள தகவலானது, மட்டக்களப்பை சேர்ந்த 37 வயதான தர்மகுமார் மற்றும் 33 வயதான நைன்னுருஷா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். குறித்த தம்பதியினர் சட்டவிரோதமான முறையில், படகொன்றின் மூலம் ராமநாதபுரத்திலுள்ள தங்கச்சிமடத்தில் இறங்கியுள்ளநிலையில், இருவரும் திருமங்கலத்திலுள்ள உச்சபட்டி இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழக கியூ பிரிவு காவல் படையினரால் கைத…
-
- 0 replies
- 412 views
-
-
யாழ் நெல்லியடி குழு பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு எதிரிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் திங்களன்று தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கில் மூன்றாம் எதிரி ஆரம்பத்தில் இருந்தே கைதாகாமல் தலைமறைவாக இருந்ததையடுத்து, அவர் இல்லாமலேயே கைது செய்யப்பட்ட இரண்டு எதிரிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் 2014 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் த…
-
- 0 replies
- 330 views
-
-
ஜனாதிபதியின் நன்றிக்கடன் இதுவா? -எஸ்.நிதர்ஸன் “போராடிக் கொண்டிருக்கும், காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறவுகளையும், வேலையற்ற பட்டதாரிகளையும் ஜனாதிபதி, யாழ். விஜயத்தில் சந்திக்காமை கண்டிக்கத்தக்கது. தன்னை பதவிக்குக் கொண்டுவந்த தமிழ் மக்களின் பிரச்சினையில் அவரது கரிசனை கேள்விக்குட்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் அச்சுறுத்தல்களையும் தாண்டி, வாக்களித்த சமூகங்களுக்கு, ஜனாதிபதி செய்யும் நன்றிக்கடன் இதுவா?” என, வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். காணாமற் போனோரின் உறவினர்கள் மற்றும் வேலையற்ற பட்தாரிகளை , கடந்த சனிக்கிழமையன்று யாழ்ப்பாணத்துக்கு வ…
-
- 0 replies
- 370 views
-
-
கிளிநொச்சியில் இறுதி 21 நாட்களில் 244 பேர் பன்றிக் காச்சல் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகம் கிளிநொச்சி மாவட்டப்பொதுவைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான 10.02.2017 தொடக்கம் 03.03.2017 வரையான 21 நாட்களில் 244 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கிளிநொச்சி மற்றும் அயல் மாவட்டங்களைச் சார்ந்தவர்களாவர். இவர்களுள் 25 கர்ப்பவதிகளும் 9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு ம…
-
- 1 reply
- 204 views
-
-
நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் : மகிழ்ச்சியில் மீனவர்கள் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசமான நாவலடி கடலில் பெருமளவு நெத்தலி மீன்கள் இன்று காலை பிடிபட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர். காலநிலை மாற்றத்தினால் மீன்பிடித் தொழிலின்மையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த மீனவர்கள், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இன்று இவ்வாறு அதிகளவில் மீன்கள் பிடிப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி தெரிவித்தனர். பிடிக்கபட்ட அதிகமான நெத்தலி மீன்களை உடனடியாக விற்பனை செய்யமுடியாமையினால் கடற்கரையேரத்தில் கருவாடாய் மாற்றும் நடவடிக்கைகளில் மீனவர்கள் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இம் மாவட்டத்தில் வழமைக்கு மாறாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரண…
-
- 0 replies
- 237 views
-
-
கால அவகாசத்தை வழங்காதீர்கள் ஜெனிவாவில் இன்று பாரிய பேரணி (நமது விசேட நிருபர்) இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்தியும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை கொண்டு வரப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் பாரிய பேரணி இடம்பெறவுள்ளது. ஜெனிவா நகரின் பிரதான புகையிரத நிலையத்தில் ஆரம்பமாகவுள்ள இப்பேரணியானது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடைபெறும் வளாகத்தை நோக்கிச் செல்லவுள்ளது. அங்கு நீதிக்கான நியாயமான கோஷத்தை பேரணியில் கலந்து கொள்பவர்கள்…
-
- 0 replies
- 321 views
-
-
வட-க்கு,கிழக்கு இணைப்புக்கு நாம் எதிரானவர்கள் அல்ல புதிய நகர அபிவிருத்தித் திட்டம் ஒருதலைப்பட்சமாக நடக்காது கல்முனை தமிழ் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஹக்கீம், ஹரீஸ் ஒப்புதல் (காரைதீவு நிருபர் ) வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு நாம் எதிரானவர்களல்ல.கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கும் எதிரானவர்கள் அல்ல. எனினும் கரையோர மாவட்டம் நிலத்தொடர் பற்ற முஸ்லிம் அலகு தொடர்பில் நிபந்த னையுடன் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர் பாக சம்பந்தன் ஐயாவோடு பேசிவருகின் றோம். அதற்கான நியாயமான தீர்வு எட்டப் படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்…
-
- 0 replies
- 738 views
-
-
‘அம்மாவை விற்போர் உள்ளனர்’ “மனித நேயம் இல்லாமல் போய்விட்டது. விசேடமாக, அரசியல்வாதிகள் தங்களுடைய அம்மாவை கூட தட்டில் வைத்து விற்பனை செய்வதற்கு தயாராகும் யுகமொன்று உருவாகியுள்ளது” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். மனித நேயத்தையே விழுங்கும் சமூகமே இன்று உருவாக்கியுள்ளது. பணத்துக்கும், இன்னுமின்னும் பணத்துக்காகவும் எவற்றையும் காட்டிக்கொடுப்பதற்கு தயாரானவர்கள், நமது நாட்டில் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். நிட்டம்புவ, ஹொரகொல், ஒடிச்சிவத்த முஸ்லிம் வித்தியாலயத்தின் 25ஆவது வருடநிறைவை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலைநி…
-
- 1 reply
- 508 views
-
-
தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்க்க முயன்ற முதியவர் காப்பாற்றப்பட்டார் யாழ். இந்து மகளிர் கல்லூரி சாலையில் உள்ள தொடருந்துக் கடவையில் நேற்றைய தினம் தொடருந்தில் வீழ்ந்து உயிர் துறக்க முற்பட்டதாகக் கூறப்படும் முதியவர் ஒருவர் காப்பாற்றப்பட்டு யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். இந்து மகளிர் கல்லூரி சாலையில் உள்ள தொடருந்துக் கடவையில் நேற்றுக் காலை 10 மணியளவில் தொடருந்தில் வீழ்ந்து உயிரை மாய்க்கும் நோக்கினில் 72 வயது முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் படுத்துள்ளார். அந்த முதியவரை பாதுகாப்புக் கடவைக் காவலாளி அவதானித்துள்ளார். உடனே ஓடிச் சென்று சாலையால் பயண…
-
- 0 replies
- 295 views
-
-
வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தை எதிர்த்து போராட்டம் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானத்துக்கு எதிராக இன்று காலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. உனது உறவினருக்காக கல்லூரியை சீரழிக்காதே எனக் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்களும் பழைய மாணவர் சங்கத்தினருமாகச் சிலர் இணைந்து கல்லூரிக்கு முன்பாக பதாதைகளைத் தாங்கியபடி போராட்டம் நடத்தினர். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் நியமனத்தை இடை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண கல்விக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தற்போது பதவியில் உள்ள அதிபரை அந்தப் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் பல பெற்றோர…
-
- 0 replies
- 335 views
-
-
தமிழ்க் கிராமத்தில் சிங்களப் புள்ளடிகள் - க. அகரன் வவுனியா- வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வெடிவைத்தகல் கிராமம் 100 சதவீதம் தமிழ் மக்களுக்குரிய கிராமமாகும். இந்தக் கிராமத்தில், சிங்கள வாக்காளர் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என வவுனியா பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் கி. தேவராசா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட 221ஏ வெடிவைத்தகல், 221பி மருதோடை, 221 சி பட்டிக்குடியிருப்பு என்ற எல்லையோர கிராம சேவகர் பிரிவுகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் யுத்தக்காலத்தில் இடம்பெயர்ந்திருந்த நிலையில், தற்போது மீளக்குடியேறியுள்ளனர். …
-
- 0 replies
- 291 views
-
-
கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதியுடன் தீடீர் சந்திப்பு கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதி நிதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் முன்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் எதிர்கால அரசியல் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழ…
-
- 0 replies
- 164 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருக்கின்றது. 2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் பேரவையினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை 2ஆண்டுகள் கால அவகாசம் கோரியுள்ளது. இதனடிப்படையில், இந்த கூட்ட தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் ஒன்றாக இருக்கின்றது. எனினும், புலம் பெயர் அமைப்புகளினது அழுத்தங்களினாலும், தமிழர்களின் கேள்விகளினால் இலங்கை தற்போது நெருக்கடியை சந்தித்துள்ளது. குறிப்பாக போர் குற்றம், மனித உரிமை மீறல்கள், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில் இலங்கை பிரதிநிதிகளிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளன. அவை குறித்த தொகுப்பை இங்கே காணலாம்...... 01. தமிழர் பகுதியின் காணிகளின் நிலை …
-
- 6 replies
- 720 views
-
-
கேப்பாபுலவு இராணுவ பாசறை அல்ல! அது நம் பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி!எம் சொந்த மண்ணில் நாம் வாழ ஏன் இந்த தடை? 5வது நாளாக தொடரும் கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்களின் மண் மீட்பு போராட்டம்.! கேப்பாபுலவு மண் எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் ஆண்ட பூமி அந்த மண் இராணுவத்தின் பாசறை என எமது ஊரின் பிரதான வீதியை மறித்து பிரம்மாண்டமாக வாசல் அமைத்து பாரிய படைத்தலைமையகத்தை அமைத்து அங்கே பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினரை நிலை நிறுத்தி எமது மண்ணில் உள்ள வருமானம் தரும் வளங்களை எல்லாம் சூறையாடி வருகின்றனர். நாமோ மாதிரிகிராமம் என்னும் போர்வையில் அகதிமுகாமில் வாழ்ந்து வருகின்றோம். எமது சொந்த மண்ணில் என்ன வளம் இல்லை ஏன் இப்படி எம்மை இந்த அரசும் இராணுவம…
-
- 0 replies
- 230 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்க சென்று, பட்டதாரிகளின் போராட்டத்திற்கு தடையுத்தரவு வாங்கி வந்த காவல்துறை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள பட்டதாரிகளின் போராட்டத்திற்கு யாழ்.காவல்துறையினர் தடையுத்தரவு வாங்கி இருந்தமை தெரிய வந்துள்ளது. யாழ்ப்பணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்குமுகமாக மாவட்ட செயலகம் முன்பு வேலைகோரி பட்டதாரிகளும் . காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூற கோரி அவர்களின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஜனதிபதி தம்மை சந்திக்காது மாற்று பாதையூடாக சென்றமையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்…
-
- 0 replies
- 241 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் திருகோணமலையிலும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கு நியாயம் கிடைக்கும் வரை, சுழற்சி முறையில் தாம் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர்கள் அ றிவித்துள்ளனர். இன்றையதினம் காலை 9 மணி முதல், கிழக்கு மாகாண ஆளுனரின் அலுவலகத்தின் முன்னால், இன்று இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டள்ளது https://globaltamilnews.net/archives/20110
-
- 0 replies
- 178 views
-
-
சில நிமிடங்கள் பேசிவிட்டு ஆதரவளிப்பதாக கூறிவிட்டுச் செல்வது ஏமாற்றமளிக்கிறது -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவலை கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று(05) பதின்நான்காவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் பல்வேறு அ ரசியல் தரப்பினர்களும் தங்களிடம் வந்து சில நமிடங்கள் பேசிவிட்டு உங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருகின்றோம் எனக் கூறிவிட்டுச் சென்று விடுகின்றனர்இது தமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. நாம்அவர்களிடம் எதிர்பார்த்தது ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையே ஆனால் அவ்வாறான எந்த நடவடிக்கையும் எவராலும் மேற்கொள்ளப்படவில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் …
-
- 0 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டமும் தொடர்கிறது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராம மக்களும் இன்று ஞாயிறு இரண்டாவது நாளாக தொடர்கிறது.1990 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை குறித்த பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்ற நிலையிலும், தங்களுக்கு காணி அனுமதி பத்திரம், மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன கிடைக்கவில்லை என்றும் மீள்குடியேற்றம் தொடக்கம் தற்போது வரை மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ,அதிகாரிகள் ஆகியோரிடம் எழுத்து மூலமும் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடும் பொது மக்கள் தங்களுக்கு உறுதியாக தீர்வு கிடை…
-
- 0 replies
- 293 views
-
-
சுமந்திரனை இருத்திவைத்து போட்டுத்தாக்கும் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள்(காணொளி) "இலங்கை தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய அரசியல் ஆளுமையை இன்றைய தமிழ் தலைமைகள் கொண்டிருக்கின்றன எனவும் அதற்கெதிராக அவ்வாறு இல்லை எனவும் சொல்லாடல் களம் அமைந்திருந்தது. அரங்கு நிறைந்த கூட்டம். வெற்று வார்த்தை ஜாலத்துக்காக அல்ல, இருப்பதற்கு இருக்கைகள் இன்றி நின்றபடி பலரும் விவாத சமரினை மெய் மறந்து ரசித்து கொண்டு இருந்தனர். இப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து இரு இந்துக்கல்லூரி விவாதிகளின் அரசியல், சமூக விழிப்புணர்வையும் வெளிக்கொண்டுவரும் முகமாக அமைந்திருந்தது. கொழும்பு இந்து வாதிகளாகவும் யாழ் இந்த…
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் இனம் தெரியாத இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயோதிப பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்மனியை சிறீதரன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வரன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிப பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கத்தியால் குத்தியிருந்தார். இதயைடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற…
-
- 1 reply
- 645 views
-
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து ”முற்றுப்புள்ளியா” என்ற படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக த டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 105 நிமிடங்களைக் கொண்ட திரைப்படத்தை யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட படத் தயாரிப்பாளரான Sherine Xavier என்ற பெண்ணே இயக்கியுள்ளார். இது தொடர்பில் இயக்குனர், தெரிவித்தததாவது, இந்த படத்தை திரையிடுவதால் இலங்கையின் அச்சுறுத்துலுககு முகங்கொடுக்கு நேரிடும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் நிறைவடைந்தப் பின்னர், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தன் கணவனைத் தேடி மூன்று பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுப்படும் பெண் தொடர்பான கதையே முற்றுப்புள்ளியா என திரைப்படமாக்கப்பட்டுள்ளது. இந்…
-
- 0 replies
- 413 views
-
-
கட்டுரைகள் Mar 2, 2017 932 புலிகளின் பெயரை தாங்கிவந்த போலியான மொட்டை அறிக்கை! தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னம் அடங்கிய அவர்களால் முன்பு மதிப்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட மாமனிதர்களுக்கான மதிப்பளிக்கும் அதிகாரபூர்வ அறிக்கையொன்றை TCCஎனும் புலம்பெயர் கட்டமைப்புக்குள் ஊடுருவியுள்ள இலங்கை புலனாய்வாளர்கள் “பிரதிசெய்து” சில கருத்துமாற்றங்களை ஏற்படுத்தி அதை புலிகளின் பாணியில் ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளார்கள் என்பது தற்பொழுது நூறுவீதமும் நிரூபணமாகிவிட்டது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட எமது தேசப்பற்றாளர்களுக்கான மதிப்பளிக்கும் தமது சின்னம் தாங்கிய அறிக்கைகளில், அந்த அறிக்கை…
-
- 0 replies
- 616 views
-