ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143392 topics in this forum
-
ஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க பிரித்தானியாவில் அறவளிப்போர்: 6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம் தமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்புலவு மக்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களினால் காலவரையறையற்ற தொடர் அறவளி உண்ணாவிரதப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 34 ஆவது அமர்வு இன்று nஐனிவாவில் ஆரம்பமாகின்ற நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவின் வெஸ்மினிஸ்டர் நகரில் இவ்வறவழிப்போராட்டம் நடைபெற்று வருகி…
-
- 0 replies
- 162 views
-
-
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு.! முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், 80க்கு மேற்பட்ட றோலர்கள் வந்ததுடன், கடந்த 19 ஆம் திகதி இரவு, முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் இருவரது வலைகளை இந்திய றோலர்கள் அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள உதவிப் பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கேப்பாப்புலவிலும் புதுக்குடியிருப்பிலும் தமது காணிகளை விடுவிக்…
-
- 0 replies
- 229 views
-
-
மங்கள தலைமையிலான அரசகுழு ஜெனிவா விரைவு அல் ஹுசைனை சந்திக்கும்;காலஅவகாசம் கிடைக்கும்? (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையி லான குழுவினர் நேற்று ஜெனிவா சென்றடைந்தனர். மேலும் அதிகாரிகள் மட்ட குழுவொன் றும் இன்றைய தினம் இலங்கையிலிருந்து பயணிக்கவுள்ளது. நேற்று அதிகாலை ஜெனிவா நோக்கிப் பயணித்த மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று இரவு ஜெனிவாவை சென்றடைந்தனர். இம்முறை அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரெரா…
-
- 0 replies
- 240 views
-
-
கால அவகாசம் வழங்கவேண்டாம் ஐ.நா.விடம் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எண்மர் முறைப்பாடு (ஆர்.ராம்) இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைமீறல் கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர் பில் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை மையப் படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக கால அவகாசம் வழங்கக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்மர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடத்தில் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று…
-
- 0 replies
- 284 views
-
-
கிருஸ்தவ தேவாலய உண்டியலை உடைக்க முற்பட்டவர் சிக்கினார்.! மட்டக்களப்பு வார் வீதியில் உள்ள லூத்து மாதா தேவாலயத்தின் காணிக்கை உண்டியலை உடைத்து திருடமுற்பட்ட சந்தேகநபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இன்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது போன்ற திருட்டு சம்பவங்கள் ஏற்கனவே இரு தடவைகள் இடம்பெற்றுள்ளதாக அருட்த்தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/17093
-
- 1 reply
- 292 views
-
-
மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதாவின் வீட்டில் வெட்டுக் காயங்களுடன் ஒருவர் மீட்பு! கணவர் கைது (ஏ.எச்.ஏ.ஹுஸைன்) மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரனின் வீட்டில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் மேற்படி மட்டக்களப்பு முன்னாள் மேயரின் வீட்டில் வெட்டப்பட்டுக் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அங்கு சென்று காயம்பட்ட நபரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இன்று மாலை 4 இடம்பெற்ற இச்சம்பத்தைத் தொடர்ந்து சிவகீதாவின் வீட்ட…
-
- 5 replies
- 571 views
-
-
பிரபாகரனின் பலம் துப்பாக்கி ரவைகளில் எனது பலம் வாக்குச் சீட்டுக்களில் உள்ளது : மனோ விடுதலைப் புலி கள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் துப்பாக்கி ரவைகளை தனது பலமாக கொண்டிருந்தார். ஆனால் நான் வாக்குச்சீட்டுக்களை மாத்திரமே பலமாகக்கொண்டு அரசியல் செய்கின்றேன் என்று தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் பொருட்டான செயற்பாடுகளின் போது நான் ஒரு தனித்துவமான பிரதிநிதியாகவே செயற்படுவேன். மாறாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அல்லது எதிர்கட்சி தலைவர் சம்பந்தனின் கீழ் செயற்படப்போவதில்லை எனவும் அவர் …
-
- 5 replies
- 620 views
-
-
கிளிநொச்சியில் கர்ப்பவதிகளே அவதானம்!வேகமாக பரவுகிறது பன்றிக் காய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்தில் இம்மாதம் 10ம் திகதி முதல் தற்போது வரை பத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியதுறை தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் மாவட்ட மருத்துவதுறை பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10.02.2017 இலிருந்து 25.02.2017 வரையான காலப்பகுதியில் பத்து கர்ப்பிணிப் பெண்கள் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதி ப்படுத்தப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 230 views
-
-
தீர்மானங்களை நிறைவேற்ற, கால அட்டவணையை இலங்கையிடம் கோருகிறது ஐ.நா! ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையியின் கூட்டத்தொடரில் புதிய தீர்மானமொன்றை இலங்கை முன்வைக்கும்போது, கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கான கால அட்டவணையை இலங்கையிடம் ஐ.நா. கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வின் நிரந்தர தூதரகத்தில் கையளிக்கப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இலங்கை தொடர்பான கடிதத்தின் அடிப்படையிலேயே குறித்த கால அட்டவணை கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தீர்மானத்தில் காணப்படும் 25 உறுதிமொழிகளில் சிலவற்றை செயற்படு…
-
- 1 reply
- 288 views
-
-
இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் – அனந்தி சசிதரன் இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்தும் காப்பாற்றிவரும் நாடுகளின் தூதுவராலயங்களை எதிர்வரும் கிழமைகளில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளனார். வடக்கு மக்களின் நில மீட்புப் போராட்டம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவாக யாழில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு ம…
-
- 0 replies
- 219 views
-
-
பொலன்னறுவை 2ஆம் இலக்க சிவன் கோயிலில் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சிறப்பான வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் பொலன்னறுவையில் அதிகம் காணப்படுகின்றன. அந்த வகையில் 2ஆம் இலக்க சிவன் கோயிலானது வரலாற்றுக்கு முட்பட்ட காலத்தில் கட்டப்பட்டுள்ளது. குறித்த கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு பல பொருட்களைக் கொண்டு அபிசேகம் செய்யப்பட்டது. மேலும், இந்த கோயிலில் பௌத்த மாணவர்கள் உட்பட இந்து மாணவர்களும் திரண்டுவந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/religion/01/136772?ref=home
-
- 1 reply
- 918 views
-
-
முஹம்மத்- கேப்பாபுலவில் வாழ்ந்த 84 குடும்பங்களின் காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப் படவில்லை என்று கேப்பாப் புலவு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களும் தமது ஆதர்வுகளை வழங்கியிருந்தனர். போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்காக உணவு ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருந்தனர். அதேவேளை இந்த போராட்டத்துக்கு யாழ்ப்பாண முஸ்லிம்களும் தமது ஆதரவை தெரிவித்து மாணவர்களை வீதியில் இறக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். ஒஸ்மானியா கல்லூரி மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர். இவ்வாறு தமிழர் தரப்பு நியாயமான போராட்டங்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுத்து வந்தாலும் முஸ்லிம்கள் விடயத்தில் தமிழ் அதிகாரிகள் அரசிய…
-
- 6 replies
- 882 views
-
-
வட, கிழக்கில் 130,000 வீடுகள் தேவை எம்.எஸ்.எம்.நூர்தீன் “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 130,000 வீடுகள் தேவையாக உள்ளன” என, மீள்குடியேற்ற புனர்வாழ்வு புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிப்புற்றோருக்கான காசோலைகளை வழங்கல் மற்றும் புனர்வாழ்வு அதிகார சபையின் கடன் திட்டத்தின் கீழ், கடன் பெற்றவர்களின் வாழ்வாதார உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியினை இன்று (26) ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். யுத்தத்தினால் பாதிப்புற்ற 105 பேருக்கு 75.43 மில்லியன் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டதுடன், யுத்தத்தினால் சேதமடைந்த வழிபாட்டுத் …
-
- 0 replies
- 273 views
-
-
78 வெடிபொருட்கள் மீட்பு - கே.மகா நெல்லியடி - புலவரோடை பகுதியில், அதிசக்தி வாய்ந்த 78 ரி.என்.ரி ரக வெடிபொருட்கள், இன்று (26) மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். புலவரோடை பகுதியில், சனிக்கிழமை (25) தென்னைகளுக்கு பசளை இடுவதற்காக நிலத்தை வெட்டிய போது, வெடிபொருட்கள் தென்பட்டதையடுத்து, பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசேட அதிரடிப்படையின் உதவியுடன், நெல்லியடி பொலிஸார், குறித்த வெடிபொருட்களை இன்று மீட்டுள்ளனர். இப்பகுதியில் கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று அமைந்திருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்ற…
-
- 0 replies
- 302 views
-
-
வவுனியாவில் மூன்றாவது நாளாக தொடரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.! கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. வவுனியா - கந்தசாமி ஆலயத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (24) காலை 11.30 மணியளவில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவு வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் இட…
-
- 1 reply
- 322 views
-
-
யாழில் அண்மைக்காலமாக நிலவும் வாள்வெட்டு, மோசடி சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுக்கு பின்னால் தொடர்புபட்ட அனைவரையும் தனக்கு தெரியும், இது தொடர்பிலான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், தொழிலதிபருமான தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த இரண்டு வருட காலமாக எந்தக் காலத்திலுமில்லாத வகையில் இணையத் தள மோசடி குறித்ததொரு விமர்சனம் யாழில் காணப்படுகின்றது. அதனை இயக்கி வருகின்ற நபருடனான தொடர்பை இன்றிலிருந்து யாழ்.பலாலி படைத் தலைமையகம் கைவிட வேண்டும…
-
- 14 replies
- 1.1k views
-
-
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக உரும்பிராயிலும் கவனயீர்ப்பு போராட்டம் கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிடக்கோரியும் யாழ். உரும்பிராயில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்க ப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது உரும்பிராய் பலாலி வீதியில், இன்று காலை உரும்பிராய் பங்கு திருச்சபை மக்களால் ஒழுங்கு செய்யப்ப ட்டிருந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் “அரசே பூர்வீக நிலத்தில் குடியேறி எம்மை வாழ விடு, எங்கள் கோரிக்கைகளுக்கு முடிவே வராதா?, இன்னும் எத்தனை காலம் தான் நாங்கள் அகதியாக வாழ்வது!, நல்லாட்சி அரசில் நல்லதைச் செய்யுங்கள், காணா மல் ஆக்கப்…
-
- 0 replies
- 175 views
-
-
தனிப்பட்ட பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் மறுத்ததால் நாடு திரும்பிய மகிந்த அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு, தனியான பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் அர சாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். அவருடன் சென்றிருந்த தனிப்பட்ட உதவி யாளரான நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு தொலைபேசி அழை ப்பை ஏற்படுத்தியிருந்தார். அப்போது அவர் வெளிவிவகார அமைச்சில் இருக்கவில்லை. அவர் திரும்பி வந்த பின்னர், தொலைபேசி அழைப்பு பற்றிய …
-
- 0 replies
- 289 views
-
-
ஐந்தாவது நாளாக தொடரும் காணி மீட்பு போராட்டம்.! வவுனியா - இராசேந்திர குளம் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 5வது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தாம் வாழும் காணிகளையே தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் 5வது நாளாக போராட்டம் தொடர்கின்றது. இவ் தொடர் போராட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் எனப்பலரும் இணைந்து இரவிரவாக பனியின் மத்தியிலும் தொடர்கின்றனர். தற்போது ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் எம்மால் இனங்காணப்பட்ட பகுதியில் 47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 மாதகால அவகாசத்…
-
- 0 replies
- 180 views
-
-
சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி விநியோக வர்தமானியில் மஹிந்தவின் கையெழுத்து.? நாளை விசாரணை ஆரம்பம் (க.கமலநாதன்) 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியன்று மத்திய வங்கி பிணை முறி விநியோகத்தின் நிமித்தம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து சகிதம் வெளியிடப்பட்டுள்ளதா என்பது குறித்த விசாரணைகள் அரச அச்சகத்தின் பணிப்பாளரிடத்தில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் நிதி அமைச்சின் செயலாளரிடத்திலும் இது குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன. மேற்படி திகதியில் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கி பிணைமுறி விநியோகம் தொடர்பிலான வர்தமானி அறிவித்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கையெழுத்து இடப்பட்டுள்ளதா…
-
- 0 replies
- 275 views
-
-
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் மார்பு இடர்பாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சில தினங்களுக்கு முன்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்கியுள்ள அவருக்கு மற்றொரு சத்திரசிகிச்சை செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பிட்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, குடும்ப உறுப்பினர்கள் தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும் சில தினங்கள் அவர் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ளார். http://www.tamilwin.com/community/01/136832?ref=home
-
- 0 replies
- 272 views
-
-
இந்துக்களின் மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் ஜனாதிபதி மைத்திரி (நமது நிருபர்) இலங்கைவாழ் இந்துக்கள் போன்றே உலக வாழ் இந்துக்களும் ஆன்மீகத்தினூடாக தமது மனதை பக்குவப்படுத்துவதற்காகவே மகா சிவாராத்திரி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். இப் புனிதமான சிவராத்திரி நாளில் அவர்களது மன இருள் அகன்று ஒளிபிறக்க வேண்டும் என பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நன்நெறி கொண்ட மக்களாக அனைவரும் வாழ வேண்டும் என்ப…
-
- 14 replies
- 914 views
-
-
வடக்கு , கிழக்கு அபிவிருத்திக்கு" புலம்பெயர் அமைப்பு "உதவக்காத்திருக்கிறது வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக கனடாவின் புலம் பெயர் அமைப்பு கடந்த ஜனவரி மாதத்தில் கருத்துப் பரிமாறல்களுக்கான சில ஒன்று கூடல்களை கனடாவில் ஒழுங்கு செய்திருந்தது. இவ் ஒன்று கூடலில் பங்கு பற்றுவதற்காக கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசனும் ஒருவர். அவர், கனடாவின் ஒன்றுகூடலில் பங்குபற்றியதன் பின்னர் அதன் விளைவுகளும் அதன் தாற்பரியங்களும் பற்றி மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமை…
-
- 0 replies
- 528 views
-
-
துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வர்த்தகருமான தி.துவாரகேஸ்வரனுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களால் இன்று மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தொடர்பில் தனது முகநூல் ஊடாக வசைபாடுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வைரத்தை பெற்ற தியாகராசாவே ஏன் இந்த வைரஸை பெற்றாய், கொள்ளைக்காரனே உனக்கு பேஸ்புக் எதற்கு?,துவாரகேஸ்வரனின் பேஸ்புக்கை தடை செய்,போன்ற பதாகைகளை தாங்கியிருந்ததுடன் கோஷங்க ளையும் எழுப்பினர். யாழ்.பண்ணை சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் யாழ் பொதுநூலக வீதி வழ…
-
- 0 replies
- 319 views
-
-
மக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம் கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை துப்புரவு செய்யும் நோக்கில் மக்கள் இராணுவத்தின் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நே…
-
- 4 replies
- 710 views
-