ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்' -எஸ்.நிதர்ஸன் “எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது. அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றத…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள 1600 ஏக்கர் நிலங்களை நிரந்தரமாகச் சுவீகரிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க அண்மையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்துக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார் வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் ச.சஜீவன். குறித்த கருத்துத் தொடர்பில் அவரிடம் வினாவிய போது, இலங்கை இராணுவம் தமிழ்மக்களின் காணிகளைத் தொடர்ச்சியாக அடாத்தாகச் சுவீகரிப்பதும், அந்தக் காணிகளை இராணுவ உறுப்பினர்கள் தங்களுடைய நலன்களுக்காகப் பாவிப்பதும் தொடர் கதையாகவுள்ளது. வலிகாமம் வடக்கில் எங்கள் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆண்ட உரித்துக் காணிகள் அனைத்தும் மீண்டும் எமக்கு …
-
- 0 replies
- 300 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள விசாகப்பண்டிகை (வெசாக்) நிகழ்வில் பங்கேற்பதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்துள்ளார். இலங்கையின் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை கோடிட்டு இதனை சீனாவின் சிங்வா ஊடகம்தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வு எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளது. புத்தபெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் இறப்பு என்பவற்றை நினைவுகூரும் நிகழ்வாகவிசாகப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. http://www.tamilwin.com/politics/01/135905 மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக…
-
- 0 replies
- 280 views
-
-
கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார். கப்டன் அசோக் ராவ், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றதையடுத்து, சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடி வருகிறார். இவர் நேற்று முன்தினம் சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இரதரப்பு உறவுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பில் கலந்துரையாப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 217 views
-
-
யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய மட்டத்தில் சாதித்த வீர, வீராங்கனைகள் கௌரவிப்பு கடந்த வருடம் நடைபெற்ற இளைஞர் கழக அணிகளுக்கிடையிலான தேசிய மட்டப் பேட்டிகளில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும நிகழ்வு யாழ் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் திருநெல்வேலி லக்ஸ்மி திருமண மண்டபத்தில் நேற்று 17.02.2017 மாலை நடைபெற்றது. கடந்த வருடம் சம்பியனான பெண்கள் கூடைப்பந்தாட்ட அணி, கிரிக்கெட், வலைப்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் அணியினர், ஆண்களுக்கான வலைப்பந்தாட்…
-
- 0 replies
- 387 views
-
-
இலங்கை அரசாங்கம் நேரடியாக எம்மை அழைத்தால் முதலீடு செய்யத்தயார் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தர்மகுலசிங்கம் உடனான நேர்காணல் புலம்பெயர் தமிழர்களை முதலீடு செய்வதற்கு அழைக்கும் நல்லாட்சி அரசாங்கம் உள்நாட்டில் அதற்கான முறையான நிறுவன வழிமுறை களை கையாள வேண்டும். அரசாங்கம் நேரடியாக எம்மிடம் முதலீடுகளை வழங்க கோருமாயின் நாம் உதவிகளை வழங்கத் தயாராக இருக்கின்றோம். இங்கு உள்ள அனைத்து அரசியல் தலைவர்களுக் கும் இதனை நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் என்று புலம்பெ யர்ந்து டென்மார்க்கில் வசித்துவ ரும் அரசியல், சமூக செயற்பாட்டாள ரும் உலக தமிழர் பண்பாட…
-
- 0 replies
- 315 views
-
-
தீர்வு கிட்டுவதற்கு இதுவே தக்க தருணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானிய கிளை பிரதி தலைவர் ஜெயவீரசிங்கம் செவ்வி நீண்டகாலமாக புரையோடிப்போயுள்ள தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத்தீர்வு கிட்டுவதற்கான தக்க தருணம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்(பிரித்தானியாக் கிளை) பிரதி தலைவர் க.ஜெயவீரசிங்கம்(ராசா) கேசரி நாளேட்டிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் காணப்படும் தற்போதைய அரசியல் சூழமைவுகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டம் திகதி இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் நீதி, சட்டம், ஒழு…
-
- 0 replies
- 169 views
-
-
ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் புலிகளுக்கு எதிராக முறைப்பாடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யும் நோக்கில் முன்னாள் கடற்படை உயர் அதிகாரி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட 340 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த விபரங்கள் மனித உரிமைப் பேரவையிடமும் ஒப்படைக்கப்பட உள்ளது. சரத் வீரசேகரவுடன் இலங்கையின் இரண்டு சிரேஸ்ட சட்டத்தரணிகள் இந்த விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளனர். தமிழீ…
-
- 0 replies
- 273 views
-
-
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் 13.1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது ! புதுக்குடியிருப்பு கைவேலிப்பகுதியில் நேற்று 15 இலட்சம் ரூபா பெறுமதியான 14 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கேரள கஞ்சாவினை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வடபிராந்திய உயர் பொலிஸ் அதிகாரியின் பணிப்பிற்கு அமைய புதுக்குடியிருப்பிற்கு விரைந்த பொலிஸ் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் குறித்த கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். மீட்கப்பட்ட கேரள கஞ்சா 7 பொதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவரையும் மீட்கப…
-
- 0 replies
- 153 views
-
-
குழந்தையை ஏரியில் வீசியெறிந்த தாய் : தாயாக மாறிய பெண் பொலிஸ் அதிகாரி : மொனராகலையில் நெகிழ்ச்சி சம்பவம் மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட நிலையில் மக்களால் காப்பாற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையை புத்தல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே ஏரியில் வீசியுள்ளார். அந்தப் பெண் குழந்தையின் தாய் எனவும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏரியில் மீட்கப்பட்ட குழந்தையை மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலைய…
-
- 0 replies
- 445 views
-
-
சி.வி. விக்னேஸ்வரன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் உடல் நலகுறைவால் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://globaltamilnews.net/archives/18069
-
- 9 replies
- 836 views
- 1 follower
-
-
http://www.tamilkingdom.com/2017/02/567_18.html புதிய பூங்காவின் ஊஞ்சல் பாறி விழுந்தது சிறுவர்கள் காயம்(படங்கள்) புதிய பூங்காவின் ஊஞ்சல் பாறி விழுந்தது சிறுவர்கள் காயம்(படங்கள்) அண்மையில் வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட பொதுப்பூங்காவின் சிறுவர் ஊஞ்சல் ஒன்று சிறுவர்கள் ஊஞ்சல் ஆடியபோது அது பாறி விழுந்துள்ளது. இந்த பூங்கா ஊஞ்சல் விழுந்ததால் இரு சிறுவர்கள் காயமடைந்ததாகவும் மேலும் பல சிறுவர்கள் அந்தவேளையில் தெய்வாதீனமாக தப்பிவிட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூங்கா நெல்சிப் திட்ட நிதியுதவியுடன் வவுனியா நகரசபையில் பங்களிப்பு நிதியுடனும் ஒன்பது மில்லியன் ரூபா செலவில…
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
'வாங்களே வாங்களே..' என ஜனாதிபதியை போகவிடாமல் பிடித்துக்கொண்ட விசேட தேவையுடைய யுவதி : கோகாலையில் நெகிழ்ச்சி சம்பவம் (காணொளி இணைப்பு) கேகாலை, நாபே ஸ்ரீ போதிருக்காராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்த பிரானின் 36 உருவச்சிலைகளை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று (17) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டிருந்தார். குறித்த நிகழ்வின் போது நெகிழ்ச்சியான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது விசேட தேவையுடை பெண்ணொருவர் ஜனாதிபதியின் கையை விடாமல் பிடித்துக்கொண்டு, “வாங்களே...! வாங்களே...! என தனது பாசத்தை வெளிப்படுத்தியமை அனைவரது மனதையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜனாதிபதி கையை விடு…
-
- 0 replies
- 171 views
-
-
யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில் உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்…
-
- 7 replies
- 970 views
-
-
தமிழ் பெண்களுக்கு பாலியல் துன்பம்: இராணுவம் மறுப்பு தமிழ் பெண்கள் மீது இராணுவ வீரர்களால் பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ளப்படுவதாக நல்லிணக்க அலுவலகம் ஊடகங்களுக்கு வௌியிட்ட அறிக்கையை இராணுவம் மறுத்துள்ளது. 2010ஆம் ஆண்டு வடக்கில் சிவில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர் சிவில் நடவடிக்கைகளிலிருந்து விலகிவிட்டதுடன், நல்லிணக்க அலுவலகத்தால் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் முழுமையான பொய் என, இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இராணுவ வீரர்கள் பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகளில் குற்றவாளிகளாக காணப்பட்டால், அவ்வாறானவர்களுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 448 views
-
-
கிளிநொச்சியில் கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் : அவதானம் கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது சுகாதார அமைச்சின் வைத்திய ஆராய்ச்சி நிறுவகத்தினால் இன்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மூன்று குழந்தைகள் உட்பட அறுவர் பன்றிக்காய்ச்சல் நோயினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே கிளிநொச்சிப் பிரதேசத்தில் பன்றிக்காய்ச்சல் மிக விரைவாகப் பரவிவருவதை உணர்ந்துகொண்டு மக்கள் கூடும்இடங்கள், கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பஸ் பயணங்கள், ரயில் பயணங்கள் மற்றும் இந்தநோயினால் பாதிப்புற்றோரைப் பராமரித்தல்…
-
- 0 replies
- 263 views
-
-
கொழும்பு புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து கொழும்பு புறக்கோட்டை பிரின்ஸ் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். தோல் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலேயே சற்றுமுன்னர் தீபரவல் ஏற்பட்டுள்ளதாகவும் தீக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/
-
- 0 replies
- 284 views
-
-
அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கள் புனையப்படுகின்றன சொத்துக்களை சேர்க்கவில்லை; வங்கிக்கணக்கும் எனக்கில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக் ஷ (பா.ருத்ரகுமார்) வங்கிக்கணக்கு என்று எனக்கு எதுவும் கிடையாது. காணியையும் வீட்டையும் சொத் துக்களையும்கூட நான் சேர்க்கவில்லை. திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட் டுக்கள் புனையப் படுகின்றன. எவ்வாறாயினும் அரச அதிகாரி எனும் பொறுப்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் விசாரணைகளுக்கு பதிலளிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். சந்தஹிருசேயா என்ற விஹாரையின் தங்க புத்தர் சிலை விவகாரம் தொ…
-
- 0 replies
- 184 views
-
-
வடக்கு,தெற்கு அடிப்படைவாதிகளிடம் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுகிறது இனவாதத்திற்கு ஒருபோதும் இடமில்லை என்கிறார் மனோ (ஆர்.ராம்) வடக்கிலும் தெற்கிலும் உள்ள அடிப்படைவாதிகளுக்கிடையில் எழுதப்படாத ஒப்பந்தம் காணப்படுவதாக குற்றம் சாட்டிய தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் இன வாதத்திற்கு ஒருபோதும் இட மளிக்கப்போவதில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தேசிய சகவாழ்வை மேம்படுத்தும் வகையில் 'இலங்கையர் எம் அடையாளம் பல இனங்கள் எம் சக்தி' எனும் தொனிப்பொருளிலான தேசிய வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக கொழும்பு பிரதான பஸ் தரிப்பிடத்தில் இலங்கைப் ப…
-
- 0 replies
- 264 views
-
-
பாதிக்கப்பட்டோர், சாட்சியாளர்களை பாதுகாப்பதற்கு கட்டமைப்பு தேவை இலங்கைக்கு ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் செய்ட் அல் ஹுசைன் (ரொபட் அன்டனி) பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பொறிமுறையில் பங்கெடுக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் நோக்கில் கட்டமைப்பொன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் நம்பகரமான செயற்றிறன்மிக்க விரிவான நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை உருவாக்குவதற்கு இலங்கை நல்லிணக்க ச…
-
- 0 replies
- 228 views
-
-
அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது எல்லையை மீறி செயற்பட முயற்சி அனுமதிக்க முடியாது என்கிறார் ஜனாதிபதி (எம்.எம்.மின்ஹாஜ்) எனது சொத்து விபரங்களை தேர்தல்கள் ஆணையாளரிடம் பெறலாம் தகவல் அறியும் உரிமையை பயன்படுத்தி அரச சார்பற்ற அமைப்பொன்று எனது சொத்து விபரங்களை கோரி யுள்ளது. எனது சொத்து விபரங்களை மறைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் எனக்கு இல்லை. ஜனாதிபதியின் சொத்து விபரங்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு அதிகாரம் இல்லாத போதும் ஜனாதிபதியாக பொறுப்பேற்று 2வருடங்களுக்குள் சொத்து விப ரங்களை சமர்ப்பித்த நாட்டின் ஒரே ஜனாதிபதி நான்தான் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே…
-
- 0 replies
- 318 views
-
-
விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாக பாகிஸ்தானில் விரிவுரை நிகழ்த்திய கடற்படைத் தளபதி! விடுதலைப் புலிகளின் கடற்படை தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் இலங்கையின் கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ன, கடந்த புதன்கிழமை (15) லாகூரில் உள்ள பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லுரிக்குச் சென்றிருந்தார். பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் மற்றும் இங்கை கடற்படை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கடற்படை அதிகாரிகள், இந்த லாகூர் கடற்படை போர்க் கல்ல…
-
- 0 replies
- 448 views
-
-
''உங்களின் போராட்டம் நியாயமானது தென்னிலங்கைக்கு தெளிவுபடுத்துவேன்'' சொந்த மண்ணில் மீளவும் குடியேறுவதற்காக கேப்பாபிலவு பிலவுக் குடியிருப்பு மக்களின் தொடர்ச்சியான போராட்டம் நியாயமானது. ஊங்களின் கோரிக்கைகளை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசியல் பிரதிநிதிகளிடத்தில் எடுத்துரைப்பேன் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தலைமையிலான குழவினர் உறுதியளித்துள்ளனர். தமக்குச் சொந்தமான காணிகள் விமானப்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்…
-
- 0 replies
- 332 views
-
-
திருகோணமலையில் கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் மீட்பு திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோயிலுக்குள் இருந்து 4 கைக்குண்டுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தக் கூடிய நிலையில் காணப்பட்ட அந்தக்குண்டுகள் கோயிலின் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தலைமை காவல்துறை காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டுள்ள இந்தக் குண்டுகளில் குசுயுபு- ளுகுபு-87 என பெயரிடப்பட்டிருந்த அடிச்சட்ட இலக்கம் அழிக்கப்பட்டுக் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 420 views
-
-
டெங்கு பலியெடுத்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி : கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மாணவி ஒருவர் இறந்துள்ளார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவி செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பலதரப்பட்ட சமூக…
-
- 2 replies
- 1.5k views
-