Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஓமந்தைப் பொலிஸ் பகுதியில் உள்ள பெரியமடு அரச காட்டுப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டி உழவு இயந்திரம் மூலம் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஒமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தையில் உள்ள பெரியமடு காட்டுப்பகுதியில் இருந்து பெறுமதியான முதிரை மரங்களை வெட்டிக் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலையடுத்து, ஓமந்தை வட்டார வன…

  2. சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரியினால் பல்கலைக்கழகங்கள் "இருண்ட காலம்” ஒன்றை அனுபவிக்கும் நாள் மிக தொலைவில் இல்லை என தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நம் நாட்டில் மருத்துவர் ஒருவராக பணியாற்ற பதிவு செய்ய வேண்டிய இரண்டு அத்தியாவசிய தேவைக ளின் அடிப்படையில் முதலாவது இலங்கை மருத்துவ சபையின் ஒப்புதலின் படி எந்த அரசாங்கத்திற்கும் மருத்துவதுறைப் பயிற்சி குறித்தும் அவர்களது சேவைகள் குறித்தும் நோயாளர்களின் உயிர்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையுள்ளது. இதனை உறுதி ச…

  3. வடக்கு முதல்வர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் இல்லை – வட மாகாண சபை உறுப்பினர் றயிஸ் வடக்கு மாகாண முதலமைச்சர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களை புறக்கணித்து வட மாகாணசபையின் அரசியலை அரங்கேற்றுவதாகவும் சிலர் சமூக வலைத்தளம் ஊடாகவும், பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், தனிப்பட்ட ஊடகங்கள் மூலகமாகவும் விமர்சித்து வருவதை வடக்கு மாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் மறுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது வடக்கு முதல்வர் ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர் கரிசனையுடன் செயற்படுகின்றார் என்பதற்கு பல உதாரணங்களை எ…

  4. மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிராமத்திற்கு அங்கஜன் இராமநாதன் சென்றுள்ளார் தையிட்டி கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று(21) மாலை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிராமத்திற்கு சென்று நிலைமைகளை நேரடியாக அவதானித்தார். குறிப்பாக கிராம மக்களின் குல தெய்வமான தையிட்டி பிள்ளையார் ஆலயத்தை பார்வை இட்டதுடன் மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார். மேலும் அப்பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ளவர்களையும் சந்தித்து அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். 0 http://globaltamilnews.net/archives/14709

  5. பிரதமர் பதவி தேடி வந்தபோதிலும் அதனை மகிந்தவிற்கு விட்டுக்கொடுத்த மைத்திரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பதவிக் காலத்தில் பிரதமர் பதவியை மைத்திரிபால சிறிசே னவுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போது, அந்த பதவியை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன கூறியதாக அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது அவர் அதனை நினைவு கூர்ந்துள்ளார். பீ. திஸாநாயக்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரது பிரத்தியேக செயலா ளராக பணிப்புரிந்தார். …

  6. மகிந்த-முதலமைச்சர்கள் சந்திப்பு நிறைவு முன்னாள் ஜனாதிபதிக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில் இன்று காலை ஆரம்பமான கலந்துரையாடல் நிறைவடை ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலில் ஆறு முதலமைச்சர்கள் கலந்துகொண்டதாக தெரிிவக்கப்படுகிறது.வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரத்ன இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருக்கவில்லையென கூறப்படுகின்றது. அவசியமான தேவையொன்றின் நிமித்தம் தான் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவில்லையென அவர் அறிவித்தல் விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகி ன்றது. இதேவேளை தான் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு முன்னணியிலுள்ள எந்தவொரு நபருடனும் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத…

  7. யாழில் 2.8 மி.மி மழைவீழ்ச்சி -எஸ்.திருச்செந்தூரன் நாட்டின் அனைத்து இடங்களிலும் வரட்சியைத் தொடர்ந்து, மழை பெய்வதுடன் யாழில் 2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி, சனிக்கிழமை பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை முதல் யாழில் மழை பெய்து வரும் நிலையில் குடாநாட்டின் சில பகுதிகளில் சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் மாலை 5.30 வரையில் 2.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி எஸ்.பிரதீபன் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/190115/ய-ழ-ல-ம-ம-மழ-வ-ழ-ச-ச-#sthash.mtvWrzlu.dpuf

  8. அரச வங்கியில் 57 இலட்சம் ரூபா கொள்ளை மொனராகலை மேதகமவில் அரச வங்கியில் ஒன்றில் 57 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வங்கியின் ஏ.டி.எம் இணை உடைத்து கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். http://www.virakesari.lk/article/15675

  9. புளியங்குளம் வீதியில் பாரிய பஸ் விபத்து, நால்வர் படுகாயம்! முல்லைத்தீவு புளியங்குளம் பிரதான வீதியில் கோடாலிக்கல்லு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ........ முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று நெடுங்கேணி பிரதேசத்துக்கு அண்மையாகவுள்ள கோடாலிக்கல்லு பிரதேசத்திலுள்ள வளைவு ஒன்றில் வைத்து வேககட்டுப்ப்பாட்டையிழந்து அருகிலிருந்த பனைமரம் ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. இதில் பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் நால்வர் படுகாயமடைந்ததோட…

  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர மத்தியில் மகாத்மா மாகாந்தி சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. குறித்த சிலை கடந்த 26ஆம் திகதி இரவு அடையாளந் தெரியாதோரால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தவிடம் குறித்து மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்…

  11. மக்கள் ஏற்கும் பட்சத்தில் மாகாண சபைகளை பிராந்திய அரசாக மாற்றத் தயார் லக் ஷ்மன் யாப்பா க.கம­ல­நாதன் பிராந்­திய அர­சு­க­ளாக மாகாண சபை ­களை மாற்­று­வது மற்றும் 13 க்கு அப் பால் சென்­று­ அ­தி­காரப் பகிர்வை மேற் ­கொள்­வது உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்­பாக உத்­தே­சிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவற்றில் மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய திருத்­தங்கள் அனைத்தும் புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்­கப்­பட்டு அமுல்­ப­டுத்­தப்­படும் என நிதி இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன தெரி­வித்தார். மாகாண சபைகள் பிராந்­திய அர­சு­க­ ளாக மாற்­றப்­பட வேண்டும் என்ற தமிழ் அர­சியல் தரப்­பு­களின் நிலைப்­பாடு குறித்து வின­விய போதே அவர் மேற்­கண்…

  12. அன்பான‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! த‌ய‌வுசெய்து, இந்த‌ இட‌ம் எத்தியோப்பியாவில் இருக்கிற‌தா என்று கேட்டு விடாதீர்க‌ள். தஞ்சாவூரின் காவிரி நதியோர வயல்கள் காய்ந்து போய், அந்தப் பகுதிகள் வறண்ட பிரதேசமாக காணப் படுகின்றன. வரலாறு காணாத கடும் வரட்சி காரணமாக, த‌மிழ் நாட்டின் விவ‌சாய‌ நில‌ங்க‌ள் கடுமையாக பாதிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌. அத‌னால், கடன்களை கட்ட முடியாமல் விவ‌சாயிக‌ள் த‌ற்கொலை செய்வ‌தும் அதிக‌ரித்துள்ள‌து. த‌மிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ ஒரு வ‌ருட‌த்தில் ம‌ட்டும் 144 விவ‌சாயிக‌ள் அகால‌ ம‌ர‌ண‌ம் அடைந்துள்ள‌தாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. இந்தியா முழுவதும் பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டும். (Tamil Nadu Fa…

  13. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-01-22#page-5

  14. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விடுவிப்பதுபற்றி இவ்வாரம் பேச்சுவார்த்தை எஸ்.கணேசன் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­மு­கத்தை விடு­விப்­பது தொடர்­பாக இவ்­வாரம் கடற்­தொழில் நீரி­யல் வள அமைச்சர் மஹிந்த சம­ர­வீ ­ரவை பாரா­ளு­மன்­றத்தில் சந்­தித் துப் பேச்சுவார்த்தை நடத்­த­வுள்­ள­தாக யாழ்.மாவட்ட மீன்­பிடி சம்­மே­ள­னங்­களின் தலைவர் வேலுப்­பிள்ளை தவச்­செல்வம் நேற்று வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்குத் தெரி­வித்தார். மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றை­முகம் தொடர்­பாக பல­முறை அமைச்­சரைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். அப்­போ­தெல்லாம் மயி­லிட்டி மீன்­பி­டித்­து­றையை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென உறு­தி­ய­ளித்த போத…

  15. போஷாக்கின்மையிலிருந்து நுவரெலியா மக்கள் காப்பாற்றப்படுவர் -தலவாக்கலையில் ஜனாதிபதி உரை ஹட்டன், மஸ்­கெ­லியா நிரு­பர்கள் போஷாக்­கின்­மையில் நுவ­ரெ­லியா மாவட்டம் முத­லி­டத்தில் இருக்­கின்­றது, இந்த நிலையை மாற்றி அமைத்து நுவ­ரெ­லியா மக்­களை போஷாக்­கு­மிக்­க­வர்­க­ளாக ஆக்­கு­வ­தற்கு உடன் நட­வ­டிக்கை எடுப்பேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். இலங்­கையின் தேயிலைக் கைத்­தொ­ழி­லுக்கு 150 ஆண்டுகள் நிறைவு மற்றும் தல­வாக்­கலை சென் கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிறு­வ­னத்தின் 92 ஆண்­டு­ கால சேவையைப் பாராட்­டும் ­மு­க­மாக நேற்று முற்­பகல் தல­வாக்­கலை தேயி லை ஆராய்ச்சி நிறு­வனத்தில் நடை­பெற்ற நிகழ்வில் உரை­யாற்­றும்­போதே …

  16. முகாம்களில் வாழ்ந்த மக்களுக்கு படையினரால் வீடுகள் நிர்மாணம்! 100 பேருக்கு வீடுகள் கையளிப்பு; புதிதாக 224 வீடுகள் அமைப்பு எஸ்.கணேசன், ரி.விருஷன் இரா­ணுவ வீட்டுத் திட்­டத்தை கீரி­ மலை வடக்­கி­லி­ருந்து நாம் ஆரம்­பித்து நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கிறோம். இது நிறைவு பெற்ற பின்னர் மாவை கலட்­டி யில் 224வீடு­களை நிர்­மா­ணிக்கும் பணி­ களை நாம் ஆரம்­பிக்­க­வுள்ளோம். ஏலவே, நாம் கீரி­மலை வடக்கில் நிர்­மா­ணித்த 100 வீடுகள் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும், 33 வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றன என்று யாழ். மாவட்ட கட்­டளைத் தள­பதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேன­நா­யக்க தெரி­வித்தார். நாம் நிர்­மா­ணித்த வீடுகள் யாழ். மக்­களின…

  17. சீனக்குடா எண்ணெய் குதங்களை வழங்க மறுக்கும் இந்திய எண்ணெய் நிறுவனம் சீனக்குடா எண்ணெய் குதங்களை இந்திய எண்ணெய் நிறுவனம் வழங்க மறுத்து வருவதால் இலங்கை பெற்றோலியக் கூட்டு த்தாபனம், 1 பில்லியன் ரூபா செலவில் நான்கு எண்ணெய் தாங்கிகளை அவசரமாக அமைக்கவுள்ளது. வறட்சியை எதிர்கொள்வதற்காக மின்சார உற்பத்திக்குத் தேவைப்படும் எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு, இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் உள்ள சீனக்குடா எண்ணெய்க் குதங்களில் மூன்றை மீளப் பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டிருந்த போதும், இந்திய எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எண்ணெய்க் குதங்களை மீள வழங்க மறுத்து வருகின்றனர். …

  18. சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை – டிலான் பெரேரா சில தமிழ்த் தலைவர்கள் அதிகாரம் பகிரப்படுவதனை விரும்பவில்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் செயற்பாடு அல்ல எனவும், எனினும் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைக்கு தமிழ்த் தலைவர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் எனவும் மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும் என கோரி நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கொண்ட அரசாங்கத்திற்கு மக்கள் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டிய அவசியம் இ…

  19. மஹிந்தவின் பாதையில் மைத்திரி அரசாங்கம் - கே.சஞ்சயன் அரசாங்கம் வெளியிட்டு வரும் பல்வேறு செய்திகள், தகவல்கள் உண்மைக்கு முரணானதாகவும் மக்களை ஏமாற்றும் விதத்திலும் இருக்கின்றன. ஹம்பாந்தோட்டைத் துறைமுக விவகாரத்தில், ‘வொக்ஸ்வெகன்’ கார் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலை, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை போன்ற விவகாரங்களில் தற்போதைய அரசாங்கம் வெளியிட்டு வரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவையாகவே இருந்திருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் செயற்பாடுகளை நினைவுபடுத்துகின்ற அளவுக்குத் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளும் மாறத் தொடங்கியிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷஅரசாங்கத்தின் முதலாவது பதவிக்காலம், போருடனும் போர் சார்ந்த சூழலுடனும் கழி…

  20. ‘ராஜபக்ஸக்களுக்கு தெரிந்தே லசந்த கொலை செய்யப்பட்டுள்ளார் என நம்புகிறேன்’ – சரத் பொன்சேகா: சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை குறித்து தனக்கு தெரிந்தவற்றை தாம் கூறியதாக முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். லசந்த கொலை தொடர்பில் சரத் பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் ஐந்து மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த கொலை தொடர்பில் விசாரணைகளுக்காக சரத் பொன்சேகா அழைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமக்கு தெரிந்த விடயங்கைள கூறியதாகவும் இது குறித்து தம்மை அழைத்து…

  21. இலங்கையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் விடுதி வசதி உரிமைப் போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் விரிவுரைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் நடமாட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் விடுதி வசதி கோரி பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு மாணவர்கள் தங்கியிருப்பதால் எழுந்துள்ள நெருக்கடி நிலை காரணமாகவே பல்கலைக்கழக பேரவை கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. பல்கலைக்கழக பேரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பாக பதில் துணை வேந்தர் டாக்டர் கே. ஈ. கருணாகரன் விடுத்துள்ள அறிவித்தலில் அனைத…

  22. தமிழகத்தின் பண்பாட்டுப் புரட்சி இலங்கைக்கும் அச்சமூட்டியிருக்கும்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:– இரண்டாயிரம் வருட தொன்மை கொண்ட ஜல்லிக்கட்டு என்ற பண்பாட்டு உரிமைக்காக தமிழமே வெகுண்டெழுந்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இரவு பகல் பாராமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றில் குறித்துக் கொள்ளுமொரு பண்பாட்டுப் புரட்சியே இது. ஒரு இனம் தனது பண்பாட்டு அடையாளங்களை இழக்க நேர்ந்தால் அந்த இனம் அழிந்து விடும் என்பார்கள். உலகமயமாதல் சூழல், அந்நிய சக்திகளின் தலையீடுகள், வணிக ஆதிக்க சக்திகளின் நடவடிக்கை போன்றவற்றால் தமிழ் இனம் தனது பண்பாட்டு அடையாளங்கள் பல…

  23. அரசாங்கம் பலவீனமடையும்போது எதிரணியினரை சிறையிலிடுகின்றனர்: மஹிந்த ராஜபக்ஷ குற்றச்சாட்டு (எம்.நேசமணி) அரசாங்கம் பலவீனமடையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையிலடைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் தன்னை சந்திக்கவுள்ளதாகவும், அந்த சந்திப்பானது நல்ல முறையில் இருக்குமா என்பதை ஊகிக்க முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு எதிராக இன்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆகையால் அவர்க…

  24. துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை வழங்குவாரா? வடமாகாண சபை போக்குவரத்து அமைச்சர் முல்லைத்தீவு துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம் கிராமம் வரை பஸ் சேவையினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் வ.கமலேஸ்வரனிடம் ஆரோக்கியபுரம் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நேற்று 19.01.2017 குடிநீர்த்திட்டத்தினை தொடக்கி வைப்பதற்கு வருகை தந்த பிரதி அவைத் தலைவரிடமே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 125 வரையான குடும்பங்கள் தமது கிராமத்தில் வாழ்வதாகவும் ஆரோக்கியபுரத்திற்கும்; துணுக்காயுக்கும் இடையிலான இருபத்தியிரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக பஸ் சேவை இடம்பெறு…

  25. நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யா ட்ராம்பின் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது – மஹிந்த அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ள டொனால்ட் ட்ராம்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் ட்ராம்பின் பதவிப்; பிரமாணம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பதிவு ஒன்றை இட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யா ட்ராம்ப்பின் வெளியுறவுக் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். http://globaltamilnews.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.