ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்பு பயிற்சி அணியினர்,இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவுக்கு பயிற்சிகளை அளித்துள்ளனர். பூஓயாவில் உள்ள பொறியியல் படைப்பிரிவுத் தளத்தில், இலங்கை படையினருக்கு முன்னாயத்தமற்ற வெடிபொருட்களை கண்டுபிடித்து, அழிக்கும் பயிற்சிகளை அமெரிக்க இராணுவ நிபுணர்கள் அளித்துள்ளனர். முன்னாயத்தமற்ற வெடிபொருட்கள் தொடர்பான சான்றிதழ் பயிற்சிநெறியாக இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 14ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வார காலப் பயிற்சி, கடந்த 20ஆம் நாள் நிறைவடைந்தது. …
-
- 0 replies
- 188 views
-
-
ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், 1980ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை சிறிய குழுவாக பிரபாகரன் உருவாக்கினார். அது காலப்போக்கில் மிகப்பெரிதாக வளர்ந்து விட்டது. அப்போது விடுதலைப்புலிகள் உருவாகும் போது யாரும் தடுக்கவில்லை அப்போதைய ஆட்சியாளர்களின் கவனயீனத்தினால் பிரபாகரனும், விடுதலைப்புலிகளும் வளர்ந்தார்கள். பின்னர் அவர்கள் அழிக்கப்பட்டனர், ஆனாலும் 30 வருடங்கள் இரத்தம் கொட்டியது புலிகளை அழிக்கப்பட்ட பின்னரும் நாடு பின்னோக்கி…
-
- 0 replies
- 333 views
-
-
ஐ.எஸ். விவகாரத்தில் அரசுக்குள் முரண்பாடு இலங்கையர் எவரும் இல்லை என்கிறார் ராஜித : ஐ.எஸ்.சர்ச்சை, ஆவா குழுவை பயன்படுத்தி தமிழ்,முஸ்லிம் வாக்குகளை இல்லா தொழிப்பதற்கு பாரிய சதி (ரொபட் அன்டனி) இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ். அமைப்பில் இருப்பதாக எவ்விதமான புலனாய்வு அறிக்கையும் பாதுகாப்புப் பேரவையினால் வெளியிடப்படவில்லை. இது முற்றிலும் தவறான தகவலாகும் என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன். அதன்படி அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ முன்வைத்த தகவ லானது அவருடைய தனிப்பட்ட தகவலாகும். அது அரசாங்கத் தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு அல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். …
-
- 0 replies
- 185 views
-
-
‘தமிழ் மன்னர்களின் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன’ பாடப் புத்தகங்களில், இலங்கையை ஆட்சி செய்த தமிழ் அரசர்கள் பற்றிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், நேற்றுப் புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “பாடசாலை பாடப் புத்தகங்களில், இலங்கையில் ஆட்சி செய்த மன்னர்கள் சம்பந்தமான வரலாறு, திரிபுப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று பாடப்புத்தகத்தில் துட்டகைமுனு மன்னன் பற்றி குறிப்பிடப்ப…
-
- 0 replies
- 279 views
-
-
யாழ். பிள்ளைகள் ஆர்வம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிள்ளைகள், கல்விகற்ற ஆர்வமாக உள்ளனர். அதனால் தான், யாழ்ப்பாணத்தில் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளை நியமிக்குமாறு, அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று, சபை முதல்வரும் உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்றத்தில் சற்றுமுன் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/186758/ய-ழ-ப-ள-ள-கள-ஆர-வம-#sthash.1jRzi3Yl.dpuf
-
- 1 reply
- 418 views
-
-
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுவரும் புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகளால் இந்துமதத்துக்கு சிக்கல்கள் ஏற்படாவிட்டால் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லையென மீள்குடியேற்றஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அனைத்து மத மக்களினதும் வழிபாட்டுத் தலங்கள் இருக்கையில் வடக்கில் புத்த விகாரைகள் அமைப்பதில் எந்தத் தவறும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்கு காங்கேசன்துறைப்ப பிரதேசத்திற்குட்பட்ட குமாரகோவில் ஆலய வளாகத்தில் விகாரை கட்டப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்டகேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் புத்த விகாரைகள் அமைக்கப்படுவதில் என்ன தவறுள்ளது எனவும் கேள்வி…
-
- 8 replies
- 650 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்கு தெற்கிக்கான உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் அஞ்சலி செலுத்துவது தவறு என கூற முடியாது. மக்கள் தங்களது பிள்ளைகள் உயிரிழந்ததினை நினைவுப் படுத்தி அஞ்சலி செலுத்தினால் மீண்டும் விடுதலைப்புலிகள் வந்துவிடுவார்கள் என்று இவர்களுக்கு பயம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கின் சீரழிவுகள்... …
-
- 7 replies
- 615 views
-
-
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும், தூதுவராகப் பணியாற்றியவர் ஸ்டீபன் ஜே ராப். ஹேக்கில் நடைபெறும், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கான அரசதரப்புகளின் அவைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள இவர், கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள போதே இதனைக்…
-
- 1 reply
- 254 views
-
-
'வடக்கில் கைதாவோரை கொழும்பில் நிறுத்த முடியாது' எஸ்.ஜெகநாதன் 'வட மாகாணத்தில் வாள்வெட்டுக்களில் ஈடுபடுகின்றவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள், அவர்கள் கைது செய்யப்பட்ட பிரதேசத்துக்கு அருகில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்தப்படாது, வெளியிடங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் முற்படுத்துகின்ற செயற்பாடானது அரசியலமைப்பு சட்டத்தினையும் சர்வதேச மனிதவுரிமை சட்டத்துக்கும் அரசியல் சிவில் சட்டத்தினையும் மீறிய செயற்பாடு' என, யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு ஊர்காவற்துறை பிரதேசத்துக்கு தேர்தல் பிரச்சாரத்துக…
-
- 1 reply
- 245 views
-
-
வட மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிரான ஆணைக்குழு தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வடமாகாண சபையிலுள்ள 4 அமைச்சர்களுக்கும் எதிராக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு தொடர்பில் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு முதலமைச்சர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார். காணொளியில் காண்க… Share This http://newsfirst.lk/tamil/2016/11/வட-மாகாண-சபை-அமைச்சர்களு/
-
- 1 reply
- 298 views
-
-
வடக்கு மாகாண சபைக்குள் இடம்பெறும் செயற்பாடுகள் எவையும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லையெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களே வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையில்லை என பொதுமக்கள் தெரிவிப்பதற்கான முக்கிய காரணம் என வடக்கு மாகாணசபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ம. தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையால் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்கமளிக்கையில், மாகாணசபை அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் கையாள்வதில் நெருக்கடி நிலமைகள் ஏற்பட்டால் அவற்றை மாகாணசபை உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணசபை அமைச்சர்கள் மாகாண சபை உறுப்பினர்களுக்கு அதனைப் ப…
-
- 2 replies
- 347 views
-
-
திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் ஏ.எம்.ஏ.பரீத் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு இன்று புதன்கிழமை (23) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 'யு.எஸ்.எஸ் பேர்ள் ஹாபர்' என்ற இந்தப் போர்க்கப்பல் 186 மீற்றர் நீளமும் 11 ஆயிரத்து 251 தொன் நிறையும் கொண்டதுடன் துருப்புக்களைத் தரையிறக்கும் வகையைச் சேர்ந்ததாகும். 24 அதிகாரிகள் மற்றும் 328 மாலுமிகள் பணியாற்றும் இந்தப் போர்க்கப்பல் 500 படையினரைத் தரையிறக்கும் சிறிய மற்றும் நடுத்தர தரையிறங்கு கலங்களையும் கொண்டுள்ளது. திருகோணமலைத் துறைமுகத்தை வந்தட…
-
- 0 replies
- 484 views
-
-
கைதான முன்னாள் போராளிக்கு சித்திரவதை -மனைவி தகவல் இந்தியா சென்ற நிலையில், திருப்பி அழைக்கப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான நடராஜா சபேஸ்வரன் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி விவேதனி சபேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாகவும், கிளிநொச்சியில் வைத்து முன்னாள் போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார் என்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் சபேஸ்வரன் மீது குற்றம்சாட்டியே சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பி ட்டார். கடந்த …
-
- 0 replies
- 393 views
-
-
போரில் உயிர்நீத்த உறவினர்களை நினைவு கூரலாம் மாவீரா்களை அல்ல-அரசாங்கம் போரில் உயிர்நீத்த தமது உறவினர்களை எந்த பெயரைக் கொண்டு நினைவுகூர்ந்தாலும் பிர ச்சினை இல்லை. ஆனால் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனஅரசாங்கம் அறிவித்து ள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் கடந்த முறை முன்னெ டுக்கப்பட்ட மாவீரர் தினத்தில் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே கலந்து கொண்டதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன, இம்முறை எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் என்பதை தாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நாடாளுமன்றக் கட்டிடத் தொகு…
-
- 0 replies
- 250 views
-
-
அசோகா விடுதியை விடுவிக்க பொலிஸ்மா அதிபருடன் பேச்சு யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி, பொலிஸ் மாஅதிபருடன் விரைவில் பேசவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொலிஸாரின் வசமுள்ள வீடுகள் மற்றும் காணிகளை மீள மக்களிடம் கைய ளிப்பது தொடர்பிலும் பொலிஸ் மாஅதிபருடன் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த ஒருபகுதி காணி, அண்மையில் பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான பல வ…
-
- 0 replies
- 314 views
-
-
காவி உடை அணிந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது (எம்.ஆர்.எம்.வஸீம்) காவி உடை அணிந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைப்பாட்டை நிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது. அத்துடன் இராணுவ சதி நடவடிக்கை தொடர்பாக தெரிவித்துள்ளமையானது சதிகாரர்களை தூண்டும்வகையிலேயே இருக்கின்றது என நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஒன்…
-
- 0 replies
- 285 views
-
-
குற்றவாளிகளைத் தேடி கொழும்பில் தேடுதல் வேட்டை (எம்.எப்.எம்.பஸீர்) தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளையும், போதைப்பொருள் சந்தேக நபர்களையும் தேடி கொழும்பின் தோட்டப் பகுதிகளில் திடீர் தேடுதல் வேட்டைகளை நடத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி அதன் முதல் கட்ட நடவடிக்கையானது நேற்று மட்டக்குளி, சமித் புர பகுதியில் முன்னெடுக்கப்ப்ட்டுள்ளது. நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்ப்ட்ட இந்த தேடுதல் வேட்டையில் 10 பேர் வரையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையின் …
-
- 0 replies
- 243 views
-
-
வவுனியாவில் சினிமாப்பாணியில் கொள்ளை: மேலும் ஆயுதங்கள் மீட்பு வட மாகாணத்தில் பரவலாக சினிமாப்பானியில் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நால்வரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட மேலும் சில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனா. அண்மையில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களிடம் இருந்து கைக்குண்டு 02, கத்திகள் 04, தங்க நகைகள் 28 பவுண், முகத்தை மூடி மறைத்து கட்டும் கறுப்பு துணிகள், முச்சக்கர வண்டி ஒன்று, மோட்டர் சைக்கிள் ஒன்று என்பனவும் கைப்பற்றப்பட்டிருந்தன. இந் நிலையில் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பயங்கரவாத தடுப்புச்சட்டத்திற்கு அமை…
-
- 0 replies
- 267 views
-
-
மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் : வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே (ஆர்.வி.கே.) வடமாகாண முதலமைச்சர் தனது பிள்ளைகளை பௌத்த மதத்தினருக்கு திருமணம் முடித்து கொடுத்துள்ளார். அதேபோல நடேசன் நிருபமா ராஜபக்ஷவை திருமணம் முடித்துள்ளார். நிருபாமா முன்னைய ஜனாதிபதி மகிந்தவின் சகோதரி. அப்படியானால் மகிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் மச்சான் தானே ஏன் சண்டை போடுகிறீர்கள். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கேட்டுக்கொண்டுள்ளார். இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முப்பது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் ஆறுமுகநாவலர் மாநாட்டின் மூன்றாம் நாள் மாலை நேர நிகழ்வு நேற்றைய தினம் நல்லூர் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.அதில் …
-
- 4 replies
- 582 views
-
-
ஏ -32 வீதியின் போக்குவரத்து தடைப்படும் அபாயம் நடராசா கிருஸ்ணகுமார் தற்போது பெய்து வரும் கடும்மழை காரணமாக, பூநகரி, மண்டைக்கல்லாறு ஏ - 32 (யாழ்ப்பாணம் - மன்னார்) வீதியை ஊடறுத்து, நீர் பாய்வதால் அவ்வீதியினூடான போக்குவரத்து தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பகுதியூடாக 1 அடிக்கும் மேலாக நீர் பாய்கின்றது. இதனால் இப்பகுதியூடாக கனரகங்களைச் செலுத்திச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்த வீதியினூடாக செல்வதற்கு பஸ்களுக்க அனுமதி வழங்கப்பட்டள்ளதாகவும் இதர சிறிய வாகனங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். மேலும், நீரின் மட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் பஸ் சே…
-
- 0 replies
- 258 views
-
-
அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொல்லுப்பிட்டி பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/13761
-
- 1 reply
- 284 views
-
-
புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த முடியுமென மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரைக் குறிப்பிடாமல் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த முடியும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். உயிரிழந்த தமது சொந்தங்களை நினைவு கூர்ந்து நிகழ்வு நடாத்துவது மனித உரிமைகளில் ஒன்று எனவும் அதனை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் எனினும், இந்த மாவீரர் தின நிகழ்வுகளை அரசியல் நோக்கத்துடன் மேற்கொண்டிருந்தால் அது தவறானது எனவும் தெரிவித்துள்ளார். ஜே.வி.பி கட்சி தெற்கில் உயிரிழந்த தமது உறுப்பினர்களை நினைவு கூர்ந்து நிகழ்வுகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர்; ஜே.வி.பி கட்சி தடை செய்யப்பட்ட ஓர் க…
-
- 0 replies
- 329 views
-
-
ஐங்கரநேசன் – அவுஸ்திரேலிய பினாமிகளின் களையெடுப்பின் பின்னணியில் வடக்கின் அப்பட்டமான ஊழல் அரசியல்வாதிகள் என்ற பட்டியலின் உச்சத்திலிருப்பவர்களில் இருவர் வட மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர். பிரித்தானியாவிலிருந்து விதவைப் பெண்களுக்கு உதவி நிதி வழங்குவதற்காக சென்ற புலம்பெயர் தமிழர்களிடம் உதவிப்பணத்தில் தனக்கு 20 வீதம் வழங்குமாறு அடம்பிடிக்கும் அளவிற்கு சிறீதரனின் ஊழல் மலிவடைந்துள்ளது. 80 களின் ஆரம்பத்தில் ரெலோ அமைப்பின் விசுவாசியான ஐங்கரநேசன் சுன்னாகம் நிலக்கீழ் நீரை நஞ்சாக்கிய நிறுவனத்தின் எலும்புத்துண்டுகளுக்காக இரண்டு லட்சம் மக்களின் வாழ்க்கையை கேள்விக்கு உள்ளாக்கினார். விக்னேஸ்வரனுடன் இணைந்…
-
- 0 replies
- 323 views
-
-
தொடர் மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களின் தாழ் நி லங்களில் வெள்ளப்பெருக்கு... தொடர் மழைகாரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களின் தாழ் நி லங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை படங்களில் காணலாம். இதனால் பாடசாலை மாணவர்கள்,பொது மக்கள் என பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-23#page-2
-
- 1 reply
- 268 views
-
-
முதலமைச்சர்கள் - ஜனாபதி சந்திப்பு அடுத்த வருடம் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக, அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) கலந்துரையாடினர். நாடாளுமன்றத்தில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார். மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான விரிவான கலந்துரையாடல் இங்கு இடம்பெற்றது. அதேபோன்று, மாகாண அமைச்சர்கள் தமது பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கும் எதிர்கால அபிவி…
-
- 0 replies
- 208 views
-