Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினரின் மகன்கூட கும்பல்களுடன் தொடர்புள்ளதாக தகவல் : டக்ளஸ் ( ஆர்.கே.வி.) ஆவா குழுவென்பது சொல்லிக்கொள்ளத்தக்கதான கும்பலல்ல.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது மகன் கூட இத்தகைய கும்பல்களுடன் தொடர்புபட்டதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. இதை நான் சொன்னால் அந்த பாராளுமன்ற உறுப்பினர் வாளினை தூக்கியவாறு தன்னை தாக்க வந்துவிடுவார் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவா போன்ற குழுக்களிடம் இராணுவ கைக்குண்டுகள் இருப்பதாக கூறப்படுகின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் யுத்தம் நடந்த பிரதேசத்தில் அவ்வாறு…

  2. ‘உயிர் அச்சுறுத்தல்களுக்கு ஊடகவியலாளர்களே காரணம்’ “எனது உயிருக்கு, பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், மேலதிக பாதுகாப்பை அரசாங்கத்திடம் கோரவேண்டிய நிலைமைக்கு நான் தள்ளப்பட்டேன், இவற்றுக்கெல்லாம் சில ஊடகவியலாளர்கள் தவறாகவும் மற்றும் திரிவு படுத்தியும், செய்திகளை வெளியிட்டமையே காரணமாகும்” என்று, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிரேஷ்ட ஊடகவியலாளரான நடேஷபிள்ளை வித்தியாதரனினால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகையின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய முதலமைச்சர், “ஊடகவியலாளர்கள் ஒவ்வொரு நிமிடமும், உண்மையான மற்றும் சரியான தகவல்களை …

  3. வெள்ளவத்தையில் பொலிஸ் பதிவு வௌ்ளவத்தையில் சில பகுதிகளில் பொலிஸ் பதிவு மேற்கொள்வதற்காக, பொலிஸாரால் படிவங்கள், நேற்றுத் திங்கட்கிழமை விநியோகிக்கப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. ஏற்கெனவே, யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும் அதற்குப் பின்னரான காலப்பகுதிகளிலும், இவ்வாறான பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று, அதன் மூலமாக மக்களுக்கு இடர்கள் ஏற்பட்டிருந்த நிலையில், மீண்டும் பொலிஸ் பதிவு மேற்கொள்ளப்படுகிறதா என, மக்கள் அங்கலாய்த்தனர். குறிப்பாக, பொலிஸ் பதிவு இனிமேல் இடம்பெறாது என்றவாறான வாக்குறுதிகள், இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நிலையிலேயே, இவ்வாறான படிவங்கள் விநியோகிக்கப்பட்டன. வெள்ளவத்தையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்புகள் சில…

  4. மகிந்தவை அழைக்கிறது சீனா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த மாத பிற்பகுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவு ள்ளார் என்று கூட்டு எதிரணி வட்டாரங்களை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மகிந்த ராஜபக்ச இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 23ஆம் திகதி மகிந்த ராஜபக்சவின் சீனப் பயணம் இடம்பெறவுள்ளது.இதன்போது, அவர், சீன அரச தலைவர்கள் மற்றும் சீனாவில் உள்ள இலங்கை சமூகத்தினரைச் சந்திக்கவு ள்ளதாகவும் கூட்டு எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் எத்தனை நாட்கள் மகிந்த ராஜபக்ச சீனாவில்…

  5.  'நீ, என்னை பல தடவைகள் வன்புணர்ந்துவிட்டீர்' பிரதான விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக சேவையாற்றுகின்ற பெண்ணை, ஒருசில மணிநேரத்துக்குள் பல தடவைகள் வன்புணர்ந்தவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெலிக்கடை பொலிஸ் பிரிவிலேயே இடம்பெற்றுள்ளது. இராணுவ சேவையை கைவிட்டுவிட்டு, இராணுவத்திலிருந்து தப்பியோடியிருந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில், அந்த விமானப் பணிப்பெண், தனியாகவே வசித்து வந்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர், அந்தப்…

  6. ஆவாகுழுவுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தில் உடுவிலில் சகோதரர்கள் இருவர் கைது-மருதனார்மடத்தில் பதற்றம் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உடுவில் பகுதியில் சகோதரர்கள் இருவரை பயங்கரவாத தடைச்சட்ட ப்பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரால் இந்திரகுமார் கபில் மற்றும் இந்திரகுமார் விதுசன் என்ற சகோதரர்களே கைது செய்யப்பட்டவர்களாவர். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றிற்கு சென்ற பயங்கரவாத தடைச்சட்டப் பிரிவினர் வீட்டில் இருந்த சகோதரர்கள் இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்த வேளையில், வீட்டில் இருந்தவர்க…

  7. முதலமைச்சர் அவர்கள் நேற்றைய காலைக்கதிர் நிகழ்வில் தெரிவித்த கருத்து தனது மனதைப் பாதித்துவிட்டதாகத் தெரிவித்த மாவை சேனாதிராஜா பதவிகிடைத்தால்தான் நாங்கள் அரசியலில் ஈடுபடுகிறோம் என்ற வரலாறு எமக்கு இல்லை என்றார். இன்று (06-11-2016) தமிழரசுக் கட்சியின் தென்மராட்சிக் கிளைத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழரசுக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தாவது, முதலமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் எனது முதல்வர் பதவியை தான் தட்டிப்பறித்துவிட்டேன் என சங்கடப்படுவதாக சொல்லிவருகின்றார். அப்படி சொல்வதன் மூலம் அவர் என்னை வேதனைப்படுத்துகின்றார்.நான் நினைத்திருந்தால் முதல்வர் பதவியில் இருந்திருக்கமுடியும். நான்தான் நிற்கபோகின்றேன் என சொல்லியிருந்தால் அதனை ஒருவரும் தடுத்திருக்கமாட்டார்க…

  8. கண்ணீர் புகை வீச்சு... அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது, கலகம் அடக்கும் பொலிஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, அவ்வார்ப்பாட்டத்தை கலைத்துள்ளனர். (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண) - See more at: http://www.tamilmirror.lk/185557/கண-ண-ர-ப-க-வ-ச-ச-#sthash.3hwVxA3l.dpuf

  9. விடுதலைப் புலிகளுக்கும் தெற்கு இனவாதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை – சந்திரிக்கா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தெற்கின் இனவாதிகளுக்கும் இடையில் வித்தியாசம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதத்திற்கும், தெற்கின் இனவாதத்திற்கும் இடையில் வித்தியாசம் எதுவும் கிடையாது எனவும் இரு தரப்பிற்கும் அழிவினை ஏற்படுத்தும் நோக்கமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். ஹாவா குழுவுடன் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு தொடர்பு உண்டா என்பதனை தாம் உறுதிபடக் கூற முடியாது எனவும் அதற்கான ஆதாரங்…

  10. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் குறித்த அறிக்கை தருமாறு பிரித்தானிய அமைச்சர் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், பெண்கள் மற்றும் கணவனை இழந்தோருக்கு எத்தகைய உதவிகள் தேவைப்படுகின்ற என்பது குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் பார்னோஸ் அனேலி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றுள்ள அவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து உரையாடிய போதே இதனைத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.டெனீஸ்வரன், த.குருகுலராசா மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர…

  11. சமஸ்டியுடன் , சுயாட்சி கூடிய அரசியலமைப்பே தேவை. – சி.வி. விக்னேஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் எமக்கு சமஷ்டியுடன் கூடிய அரசியல் யாப்புத் தேவை. அது எமக்கு ஒரு விதத்தில் சுயாட்சியை தரும் வகையில் அமைய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட கனடாவின் உயர் அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். அக் கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கணவரை இழந்த பெண்கள் மற்றும் முன்னாள் போராளிகள், தாய் தந்தையை இழந்த சி…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அதிருப்தி தெரிவிப்பது எந்த விதத்திலும் கூட்டமைப்பை பாதிக்காது என்றும், அரசியல் கட்சிக்குள் ஜனநாயகம் முழுமை பெறுவது நல்ல விடயம்;தான் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்திய - இலங்கை அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பங்கேற்க புது டில்லி சென்றடைந்த அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிபிசி தமிழோசையின் ஃபேஸ் புக் நேரலையில் பங்கேற்றார். இதன் போது அங்கு கருத்துரைத்த சுமந்திரன், மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை ஏற்படாமல் இருப்பது நியாயமான விடயம் தான் அதற்காக மக்களுடைய கருத்தை முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் கூறுவதால் த.தே.கூட்டமைப்பு…

  13. ஏற்கனவே இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில் புத்தகம் ஒன்றினை வெளியிட்டு பல்வேறு விதமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன மீண்டும் வெளிவந்துள்ளார். அண்மையில் குளோபல் இலங்கையர்கள் கருத்துக்களம் எனும் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட இவர் உரையாற்றும் போது, இலங்கையில் தற்போது நல்லிணக்கம் இருக்கின்றதா என்பது சந்தேகமே. வடக்கிற்கு ஒரு நீதியும் தெற்கிற்கு ஒரு நீதியும் காணப்படுகின்றது. அதிகாரப்பகிர்வு வேண்டும் என தமிழ் மக்கள் கேட்கின்றார்கள், அவர்களிடம் நான் ஒன்று கேட்கின்றேன் எமக்கு கிடைத்து உங்களுக்கு கிடைக்காதது என்ன? எதற்காக வடக்கிற்கு புதிய அதிகார பகிர்வு கொடுக்கப்பட வேண்டும் தற்போது …

  14. யாழிற்கு இன்று(07) விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சர் பரோனெஸ் அனெலி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். போர்க்குற்ற சட்டம் எமது சட்டத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் அடுத்த வருட மார்ச் மாதம் வரவேண்டிய செயலாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் நடைபெறுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக வந்தார். நாங்கள் ஜெனிவா தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் போதே பல கடிதங்களை எழுதியிருதேன்.அந்த கடிதங்களில் கூறிய விடயங்கள் தற்போது ந…

  15. தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானாகவே பிரதேச செயலகம் சென்று மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கிறார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.வாகரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்! வாகரைப் பிரதேசத்திலிருந்து கடந்த கால யுத்த சூழலின் போது இடம்பெயர்ந்தவர்கள் தகுந்த ஆதாரத்துடன் வந்தால் அவர்களை மீளக்குடியேற்றுவதில் எந்த தடையும் இல்லை. தமிழ் மக்கள் மீள்குடியேறும் போது பாராபட்சம் காட்டிய இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தங்கள் இனம் சார்ந்தவர்களை குடியேற்றுவதற்கு தானா…

  16. யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா எனக் கூறப்படும் குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இராணுவச் சிப்பாய் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருபவர் என அந்த தகவல்கள் கூறுகின்றன. பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த 6 சந்தேக நபர்களில் இராணுவச் சிப்பாய்க்கு மேலதிகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அடங்குகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர். ஆவா குழு தொ…

  17. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது நடைபெற்ற விசாரணையின் இடையில் அவர் திடீரென சுகயீனமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் 90 கேள்விகளை விமல் வீரவன்சவிடம் கேட்டுள்ளனர். இதனால் அவரால் பதிலளிக்க முடியாமல் தலை வலிக்கின்றது, தலை சுற்றுகின்றது என கூறி மயக்கமடைந்ததன் பின்னர் விசாரணை பிரிவின் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் விமல் வீரவன்சவுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைய இன்று காலை 9.39 மணியளவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் விமல் வீரவன்ச ஆஜராகியிருந்தா…

  18. Started by நவீனன்,

    சந்திப்பு... போதைப்பொருள் தடுப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இந்தியா - புதுடெல்லிக்குச் சென்றுள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான, இலங்கைத் தூதுக் குழுவினர், இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துக்கொண்டனர். (படப்பிடிப்பு: ஜனாதிபதி ஊடகப் பிரிவு) http://www.tamilmirror.lk/185511/சந-த-ப-ப-

  19. மன்னார்-வங்காலையில் ஹெரோயின் போதைப் பொருட்களுடன் 5 பேர் மன்னார் பொலி ஸாரால் இன்று(7) காலை கைது செய்யப்பட்டனர்.. மன்னார் பொலிஸ் நிலையத்தின் குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட குறித்த ஹெரோயின் போதைப் பொருட்களின் நிறை 2 கிலோ கிராம் எனவும் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியெனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/news/19856

  20. வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பிரதேசத்தில் நின்ற பல நூறு கால் நடைகளும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட பின்பே பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை தைரிவிக்கின்றனர். வலி. வடக்கின் சில பகுதிகள் நேற்று முன்தினம் மக்கள் பாவனைக்காக அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் பல நூறு ல்நடைகள் தங்கி வாழ்ந்துள்ளமைக்கான அடையாளங்களும் கால் தடங்களும் கானப்படுவதாகவும். இவை தாம் யுத்தம் ஆரம்பித்தவேளையில் 1990ம் ஆண்டில் இப்பகுதியில் கைவிட்டுச் சென்றவைகள். எமது பகுதியில் இவ்வளவு காலம் குந்தியிருந்த இராணுவத்தினர். பிரதேசங்களை கைவிட்டுச் செல்லும்போது இருப்பிடங்களை அழித்தும், சொத்துக்களை அபகரித்துச் சென்றதும் இல்லாமல் எமது வாழ்வாதார…

  21. அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் தாம் சார்ந்த மக்களின் குரலாகவே தமிழ்பத்திரிகைகள் ஒலித்தன-முதல்வர் விக்கி பாராட்டு பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தைக்கை விட வில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும்,மறைமுகமான யுத்தம் ஒன்றை,ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கி ன்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஒரு க…

  22. மீனவர்கள் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தையில் பெறப்பட்ட முடிவு.! இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி முறைமை கையால்வது தடுக்கப்பட எனவும் இழுவை படகு மீன்பிடி முறைமையை தமிழக மீனவர்கள் தடைசெய்ய வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வலியுறுத்தியுள்ளது. மீனவர்களை விடுவிப்பதில் இருநாட்டு அரசாங்கமும் தயாராக இருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும் இந்திய படகுகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை எனவும் குறிப்பிட்டார். சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடியில் ஈட…

  23. கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் நூறு கிலோ கேரள கஞ்சா மீட்பு (வீடியோ இணைப்பு) கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று சுமாா் நூறு கிலோ வரையான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஆறு மணியளவில் சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா கொண்டுவரப்படுவதாக தா்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கிளிநொச்சி முல்லைத்தீவு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபா் மகேஸ் வெலிகண்ணவின் வழிகாட்டலில் தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம். சத்துருங்க தலைமையிலான விசேட பொலீஸ் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு 72 கிலோ கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா். இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு பொலிஸ் குழுவினரை அவதானித்த கடத்தல்காரர்கள் படகி…

  24. மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு தீர்வையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை-இரா.சம்பந்தன்

    • 3 replies
    • 281 views
  25. மீனவர்கள் போன்று வேடமிட்டு தங்கம் கடத்திய இருவர் கடற்படையினரால் கைது மீனவர்கள் போன்று வேடமிட்டு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கங்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் சுமார் 5 கிலோ கிராமிற்கு மேற்பட்ட தங்க கட்டிகளை தலைமன்னாருக்கு மேற்கு பகுதியிலுள்ள கடற்பரப்பில் வைத்து மீன்பிடி படகொன்றின் மூலம் கடத்தும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மன்னாரைச் சேர்ந்தவரென்றும் மற்றையவர் சிலாவத்துறையைச் சேர்ந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினருக்கு கிடைத்த விசேட தகவலினடிப்படையில் குறித்த இருவரும் கைதுசெய்யப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.