ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143414 topics in this forum
-
இரகசியமாக இந்தியாவிற்கு சென்ற இராணுவத் தளபதி இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இந்தியாவுக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு, இந்தியா வின் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்திய இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில், கடந்த 24ஆம், 25ஆஆம் திகதிகளில் இராணுவத் தளபதி இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 24ஆம் திகதி புதுடெல்லி சென்றிருந்த இராணுவத் தளபதிக்கு இந்திய இராணுவத் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு அமைந்துள்ள சவுத் புளொக்கில், அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங்குடன் …
-
- 0 replies
- 215 views
-
-
‘சபைக்குள் பாலியல் தொந்தரவுகள்’ 'இலங்கையில், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபையிலுள்ள அமைச்சர்களாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களினாலும், பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர்" என்று, முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தினால் (IPU) நடத்தப்பட்ட புதிய சாதனை எனும் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், “தேவையற்ற அழுத்தங்களை, சிலர் என்மீதும் திணித்தனர். காதலை வளர்த்துக்கொள்ளல், அவர்களுடைய அலுவலகங்களுக்கு அழைத்துக்கொள்ளல், உதவிகளைச் செய்தல், வெள…
-
- 1 reply
- 389 views
-
-
'நாட்டை விட்டு அர்ஜுன மகேந்திரன் வௌியேறிவிட்டார்' மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், நாட்டைவிட்டுத் வௌியேறிவிட்டதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் சொய்சா, நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். “மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழு அறிக்கை, நாடாளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அதில் பிரதானமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அவர் இவ்வாறு நாட்டைவிட்டு வௌியேறிவிட்டார்” என அவர் மேலும் கூறினார். http://www.tamilmirror.lk/184897/-ந-ட-ட-வ-ட-ட-அர-ஜ-ன-மக-ந-த-ரன-வ-ய-ற-வ-ட-ட-ர-
-
- 2 replies
- 362 views
-
-
கடற்படைவசமுள்ள விவசாயநிலங்களை மீள ஒப்படைக்க பணிப்பு கடற்படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் மன்னார் முசலிப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி பணிப்புரை விடுத்துள்ளார். முசலிப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட பாலைக்குழி மற்றும் மறிச்சுக்கட்டி பிரதேசங்களில், பூர்வீகமாக வாழ்ந்த விவசாயிகள் 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வேறு பகுதிகளில் மீள்குடியேறிய நிலையில் அவர்கள் தமது காணிகளில் விவசாய நடவடிக்கை களை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது. குறித்த விவசாயிகளின் காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள நிலையில் தமது சொ…
-
- 0 replies
- 241 views
-
-
வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் தொடரும் படையினரின் கெடுபிடிகள்-அமைச்சர் ஹக்கீம் விசனம் யுத்தத்தால் வடக்கு, கிழக்கு பகுதிகள் மிகவும் மோசகமாக பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை, தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கு கடற்பகுதிகளில் படையினரின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. பாதுகாப்புத் தரப்பின் இவ்வாறான கெடுபிடிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம் கோரியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஒழுங்கு விதிகளை அதிகரிப்பது தொடர்பான சட்டமூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு த…
-
- 0 replies
- 161 views
-
-
லண்டன் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் (நமது நிருபர்) லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாளை ஞாயிற்றுக்கிழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்பாடாகி உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். 'இரட்டை நகர்' உடன்படிக்கை கடந்த செய்வாய்க்கிழமை கைச்சாத்தான பின்னர் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் முதலமைச்சர் தாயகம் திரும்புவதற்கு முன்னர் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதால் இந்த கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL எ…
-
- 6 replies
- 781 views
-
-
கலர்கலராய் வந்த எம்.பி வெளியேறினார் அவைக்குப் பொருத்தமில்லாத வர்ணங்களைக் கொண்ட ஆடையணிந்து வந்த ஆளுங்கட்சியின் பதுளை மாவட்ட எம்.பியான அ.அரவிந்தகுமார், அவைக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே அவையிலிருந்து வெளியேறிவிட்டார். நாடாளுமன்றம், குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கூடியது. வாய்மூல வினாக்கான கேள்வி நேரத்தின் போதே, அவர் அவைக்குள் பிரவேசித்தார். செவ்விளநீர் நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான சாரத்தையும் அணிந்திருந்தார். இதனை அவதானித்த சபையில் இருந்த உதவியாளர் ஒருவர், அது தொடர்பில், எம்.பிக்கு தெளிவுபடுத்தினார். இதனையடுத்தே, அவர், அவையை விட்டு வெளியேறினார். ht…
-
- 0 replies
- 184 views
-
-
வாராந்த சந்தை தோற்கும் அளவுக்கு வடமாகாண சபை அமர்வு நடக்கிறது. – பா.டெனிஸ்வரன் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடமாகாண சபையில் தான் அவைத்தலைவராக இருக்கும் வரை எந்த சந்தர்ப்பத்திலும் எந்த விடயத்திற்காகவும் வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க மாட்டேன் என கூறி வந்த அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வியாழக்கிழமை பிரதி அவைத்தலைவர் தெரிவுக்காக வாக்கெடுப்பு நடாத்தினர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முதலில் உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கோரி வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர…
-
- 0 replies
- 329 views
-
-
உதவிக்கு அழைத்து சென்று அடிவாங்க விட்டு வேடிக்கை பார்த்த பொலிஸ். – முல்லைத்தீவில் சம்பவம்:- முல்லைத்தீவில் தமது உதவிக்கு அழைத்து சென்றவர்கள் தாக்கப்படும் போது பொலிசார் வேடிக்கை பார்க்கின்றார்கள். ஆனால் யாழ்ப்பணத்தில் பல்கலைகழக மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து மாணவர்களை படுகொலை செய்கின்றார்கள் என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. குறித்த அமர்வில் முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் குடாத்துறை , மற்றும் புளியமுனை , ஆகிய மீனவர்கள் மீது கடந்த மாதம் 17ம் திகதி பொலிசார் முன்னிலையில் பிற மாவட்ட மீனவர்கள் தாக்குதல் நடாத்தியமை தொடர்பில் பொலி…
-
- 0 replies
- 248 views
-
-
நாட்டில் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமையை காண முடியவில்லை – கோதபாய குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நாட்டில் தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமையை காண முடியவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் முக்கிய தீர்மானங்கள் தீர்க்கமாக எடுக்கக்கூடிய தலைமையொன்றை காண முடியவில்லை எனவும் சில தீர்மானங்கள் எடுக்கப்படும் போது ஒன்றுக்கு ஒன்று முரணான வகையில் தலைமைத்துவங்கள் தீர்மானங்கள் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தில் எந்தவொரு நபரும் அர்ப்பணிப்புடன் கடமையாற்றுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத்…
-
- 0 replies
- 199 views
-
-
மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் தேடுதல் வேட்டை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு மோட்டார் சைக்கிள் குழுக்களை தேடி யாழ்ப்பாணத்தில் விசேட தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட உள்ளது. மூன்று காவல்துறைக் குழுக்கள் இந்த தேடுதல் வேட்டைக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். சுன்னாகம், மன்னாய், கோப்பாய் போன்ற பகுதிகளில் இந்த மோட்டார் சைக்கிள் குழுக்கள் சஞ்சரிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் வடக்கு மாகாணத்தில் சகல காவல்துறை உயர் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹர்த்தால் நடைபெற்ற அன்று கிளிநொச்சியில் பாதுகாப்பு சீர்குலைந்தமை குறித்தும் காவல்துறைத் திணைக்களம் உள்ளக விசாரணை ஒன்றை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 168 views
-
-
இருவர் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், பின்னால் இருந்தவருக்கு சூட பட்டிருக்க வேண்டும்.எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார். 23/2 நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வீதி விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மறுநாள் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்தது. மோட்டார் சைக்க…
-
- 15 replies
- 878 views
-
-
வேலை நிமித்தம் சவுதி அரேபியாவுக்கு சென்ற 16 பணிப் பெண்கள் தொடர்பில் இது வரை எந்த தகவலும் இல்லை என வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. குறித்த பதினாறு பெண்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தொடர்புகொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. இதன்படி, 011 43 79 328 என்ற தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு இது சம்பந்தமான தகவல்களை அறிவிக்க முடியும் எனவும் குறித்த 16 பெண்களும் 1993, 2004, 2008, 2009, 2011 ஆம் ஆகிய ஆண்டுகளில் சவுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களினது தொடர்புகள் கிடைக்கவில்லையென இவர்களது உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே வெளிநாட்டுப் பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. http://thuliyam.…
-
- 0 replies
- 313 views
-
-
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு ஆதரவாக வடக்கு மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப. டெனீஸ்வரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் வவுனியா மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் தற்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் குருகுலராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் றிசாட் பதியுதீன் இணைத் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் கூடி வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பாகத் தீர்மானம் எடுத்தனர். அதன்படி பொருளாதார மத்தியம் நிலையம் ஓமந்தையில் அமைக்கவேண்டுமெனவும்…
-
- 0 replies
- 671 views
-
-
சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை ; பிரதி பொலிஸ்மா அதிபர் (எம்.ஆர்.எம்.வஸீம்) சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். வகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது. இந்த வேலைத்திட்டத்துக்கு பொலிஸாரின் பங்களிப்பு தொடர்பாக கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில…
-
- 1 reply
- 216 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் உலகில் பழமையான கப்பல் உலகிலேயே மிகவும் பழமையான “தி பேர்ல் ஒஃப் நோர்வே” என்ற புனைப்பெயர்க் கொண்டு அழைக்கப்படும் “சோலன்டெட்” (Sørlandet) என்றக் கப்பல், கொழும்பு துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை (23) வந்தடைந்தது. எதிர்வரும் 30ஆம் திகதி வரை கொழும்பில் நங்கூரமிடப்பட்டிருக்கும் இந்தக் கப்பல், உலகம் முழுவதுக்குமான 2 வருடகால பயணத்தை மேற்கொண்டு 70 உயர்பள்ளி மாணவர்களுடன் இலங்கைக்கு வந்துள்ளது. கடந்த 1927ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கப்பல், பயணிக்கவுள்ள 22 நாடுகளின் 44 துறைமுகங்களுக்குள் கொழும்பு துறைமுகமும் அடங்குகின்றது. இலங்கைக்கான இந்தக் கப்பலின் விஜயத்தின் போது, இலங்கையிலுள்ள கடல்சார…
-
- 1 reply
- 923 views
-
-
தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படை தடுமாற்றம் அறுவருக்கு பிணை வழங்கியது மன்னார் நீதிமன்று மன்னார் - முத்தரிப்புத்துறையில் கடற்படை சிப்பாய்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடையாள அணிவகுப்பில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களை அடையாளம் காட்டுவதில் கடற்படையினர் தடுமாற்றம் அடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் முத்தரிப்புதுறையைச் சேர்ந்த ஆறு பேர் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தனர். இதனையடுத்து குறித்…
-
- 0 replies
- 262 views
-
-
பண்பாட்டுத் திருவிழா ரீ.கே.ரஹ்மத்துல்லா சமூக நல்லுறவுக்கான கலை பண்பாட்டுத் திருவிழா, இன்று வியாழக்கிழமை அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் ஆரம்பமானது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்துகொண்டார்., இந்நிகழ்வானது நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 03 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. தேசிய ஒற்றுமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம், ஐரோப்பிய ஒன்றியம், கெயார் நிறுவனம் ஆகியவற்றின் அனுசரணையில், கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் …
-
- 1 reply
- 289 views
-
-
யாழில் தீபாவளி வியாபாரத்தில் ஈடுபடும் சிங்கள மாணவர்கள் தீபாவளி திருநாளை முன்னிடட்டு யாழ்.முனியப்பர் வீதியில் நடைபாதை வியாபாரிகள் கடைகள் அமைப்பது வழமையானது. அதிலும் குறிப்பாக தென்னிலங்கை வியாபாரிகள் அங்கிருந்து வந்து யாழில் வியாபாரம் செய்து வருகின்றனர். இம்முறை இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரத்தில் கொழும்பில் அமைந்துள்ள பிரபல கல்லூரியின் சிங்கள மாணவர்கள் புடவை வியாபார கடை அமைத்து புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். புடவை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள மாணவர்கள் தமது கல்லூரியால் பெயர் பதிக்கப்பட்ட சீருடையுடன் நின்று வியா பாரம் செய்கின்றனர் http://onlineuthayan.com/news/19444
-
- 0 replies
- 524 views
-
-
வடமாகாண பிரதி அவைத்தலைவராக க.வ.கமலேஸ்வரன் தெரிவாகியுள்ளார். குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடமாகாண சபையின் 64 ஆவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து யார் அடுத்த பிரதி அவைத்தலைவர் எனும் சர்ச்சை சபையில் உருவானது. முதலமைச்சர் தான் வெளிநாட்டில் இருப்பதனால் , தான் சபைக்கு வந்த பின்னர் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யலாம் என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்து இருந்தார். அதனால் முதலமைச்சர் வந்த பின்னர் பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யலாம் என ஒரு தரப்பும் இல்லை இன்றைக்கே தெரிவு செய்ய வேண்டும் என மற்றொரு தரப்பும் விவாதித்தது. சுமார் 2 மணி நேர விவாதத்தின் பின்னர்…
-
- 0 replies
- 279 views
-
-
கிளிநொச்சியில் மனித எலும்புக் கூடு (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி, உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனித எலும்புக் கூடு ஒன்று இன்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்ற பொது மக்களால் அவதானிக்கப்பட்டு அவர்களால் பொலிஸ் அவசர இலக்கமான 119 இற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி பொலிஸார் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மண்டையோடு மற்றும் எலும்புக் கூடு மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு இடம்பெற்ற மரணமாக அது இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். http://w…
-
- 0 replies
- 297 views
-
-
“ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த வருகிறது ராவணா பலய வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த தாம் புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாக ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. ஆவா குழுவின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவோ, அந்த குழுவின் உறுப்பினர்களை கைது செய்யவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் பொலிஸாரின் நடவடிக்கைகளை தாம் நிறைவேற்றப் போவதாகவும் “ஆவா“ குழுவினை கட்டுப்படுத்த புதிய குழு ஒன்றை உருவாக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் ஆவா குழுவ…
-
- 0 replies
- 391 views
-
-
குரேயின் கடிதத்தை திருப்பி அனுப்பிய யாழ். பல்கலை மாணவர்கள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம், மாணவர்களால் ஆளுநருக்கே திருப்பிய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எழுதிய இந்தக் கடிதத்தின் ஊடாக எதனைக் கூற விரும்புகின்றீர்கள் என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியாது எனவும் இலங்கையின் அரச கரும்மொழிகள் சிங்கள, தமிழ் மொழிகள் என நினைவுபடுத்த விரும்புவதாகத் தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் வட மாகாண ஆளுநர் அனுப்பி வைத்த கடிதம், திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து,…
-
- 6 replies
- 885 views
-
-
ஹெரோயினுடன் பிடிபட்ட மன்னார் வாசிக்கு மரணதண்டனை மன்னாரில் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவருக்கு 4 வருடங்கள் கழிந்த நிலையில் நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மன்னார் பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருக்கே நேற்று புதன்கிழமை மன்னார் மேல் நீதிமன்றம் 4 வருடங்கள் கடந்த நிலையில் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி மன்னார் நடுக்குடா பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளு…
-
- 1 reply
- 392 views
-
-
மன்னாரில் 71 மீனவர்கள் கைது 13 படகுகளும் பறிமுதல் மன்னார் – முத்தரிப்புத்துறைகடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 71 மீனவர்களை சிலாவத்துறை கடற்படையினர் கைது செய்து ள்ளதுடன், 13 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இன்று காலை 7 மணிக்கு குறித்த மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது காப்புறுதி பற்றுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை பிரதி ஆகியவற்றை பரிசீலித்த சிலாவத்துறை கடற்படையினர் அவை இல்லையெனத் தெரிவித்து குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர். நறுவிலிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 60 பேரும், வங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேரும், சிலாவத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளன…
-
- 2 replies
- 339 views
-