ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143423 topics in this forum
-
கிளிநொச்சி தீ அனர்த்தத்திற்கு அரசு நட்டஈட்டைத் தரவி்ல்லை-வர்த்தகர்கள் கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீயினால் பாரிய நட்டத்தை எதிர்நோக்கி யுள்ள வர்த்தகர்கள் தமக்குரிய நட்டஈட்டை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர். போரினால் அனைத்தையும் இழந்து தமது சொந்தக் காலில் நிற்க முயற்சித்த தாம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாத துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவி க்கும் கிளிநொச்சி சந்தைக் கட்டட வியாபாரிகள் தமக்கு உதவுமாறு மன்றாட்டமாக கோரி க்கை விடுத்துள்ளனர். சாம்பல் மேட்டிலிருந்து முதலீடுகளை இழந்தவர்களின் உருக்கமான வேண்டுகோள் என்ற தொனிப்பொருளில் கடந்த 16 ஆம…
-
- 0 replies
- 322 views
-
-
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தி ற்கு, நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ அழுத்தம் கொடுக்க வேண்டும் என நியூஸிலாந்து சர்வ தேச மன்னிப்புச் சபையின் நிர்வாக பணிப்பாளர் கிராண்ட் பேல்டன் வலியுறுத்தி உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இலங்கையின் மனித உரிமை செயற்பாடு களில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கிறோம். ஆனால், இலங்கையில் இன்னும் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. அவை தொட ர்பில் பிரதமர…
-
- 0 replies
- 220 views
-
-
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமைக்கு எவ்வித குந்தகமும் ஏற்படாது என்பதனை உறுதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ள அவர் தேசிய இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் சர்வதேச சமூகத்தினதும், உள்நாட்டின் அனைத்து இன சமூகங்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் அமையும் எனவும் புதிய அரசியல் சாசனம் நாட்டை பிளவுபடுத்தும் என்ற கருத்து பிழையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் …
-
- 2 replies
- 367 views
-
-
பொதுமகன் மீது தலைக்கவச தாக்குதல் 50ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றத்திற்காக 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு இரண்டு பொலிசாரு க்கு யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ் சதீஸ்குமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிசார், மதுபோதையில் சென்று கடையொ ன்றில் 100 ரூபாவை கொடுத்து 04 சிகரட் தருமாறு கோரியுள்ளனர். அதற்கு கடை உரிமையாளர் 04 சிகரட்டுக்கள் 100 ரூபாவுக்கு வழங்க முடியாது என தெரிவித்ததை தொடர்ந்து, கடை உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தலைக்கவசத்தால் தாக்கியு ள்ளனர். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதை…
-
- 1 reply
- 315 views
-
-
தொழிலுக்காக வெளிநாடு செல்வோருக்கு ஆங்கில மொழியறிவு கட்டாய தகுதியாக கொள்ளப்படும் 2016-09-30 17:33:31 2018 ஆம் ஆண்டிலிருந்து தொழிலுக்காக வெளிநாடு செல்லும் அனைத்து தரப்பினர்களுக்கும் ஆங்கில மொழியறிவினை கட்டாய தகுதியொன்றாக உள்ளடக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினூடாக வெளிநாடு செல்பவர்களுக்காக ஆங்கில பாட நெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தின் முதல் 8 மாதங்களினுள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 200 மில்லியன் அமெரிக்க டொலரினை வருவாயாக ஈட்டியுள்ளதாக அமைச்சர் தலதா அத்துகோரள மேலும் தெரிவி…
-
- 0 replies
- 139 views
-
-
விக்கியின் செயற்பாடுகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இலங்கையில் கடமையாற்றி வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஆகியோருக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கப்படவுள்ளது. விக்னேஸ்வரனின் நிகழ்ச்சி நிரல் தெற்கின் இனவாத சக்திகளின் தேவைக்கு அமைய மேற்கொள்ளப்படுவதாக அறிக்கை கிடைத்துள்ளதாகவும் இது குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் பாரியளவில் கடமையாற்றி வரும் நிலையில் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் தெற்கின் இனவா…
-
- 2 replies
- 418 views
-
-
மஹிந்தவின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படும் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக, அவரால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மஹிந்த கதைத்தாரா? என்று, சில அமைச்சர்களிடம் விசாரணை நடத்தப்படுவதிலிருந்தே, தனக்கு அந்தச் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமை (30), அவன் காட் ஆயுத கப்பல் தொடர்பான வழக்கு இடம்பெற்றது. இந்த வழக்கில் ஆஜராவதற்காக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த போது, மஹிந்த ராஜபக்ஷவும் வந்திருந்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு…
-
- 0 replies
- 319 views
-
-
கைதடி நவீல்ட் பாடசாலையில் முதியோருக்கு விளையாட்டுபோட்டிகள் சர்வதேச முதியோர் தின விளையாட்டு விழா கைதடி நவீல்ட் பாடசாலை மைதானத்தில் நேற்று இடம்பெற்றது சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்துக்குட்பட்ட 15 பிரதேச செயலர் பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.இப் போட்டிகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற முதியவர்கள் நேற்று நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்குபற்றினர். இவ் விளையாட்டு விழாவில் பிரதமவிருந்தினராக சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட முதியோர் சங்க செயலாளர் கைலைநாதன் கமலாதேவி , சமூகசேவை அலுவலர் செல்வம் , கைதடி முதியோர் இல்ல கிருபாகரன் …
-
- 0 replies
- 505 views
-
-
42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது. நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அத்துடன், விருந்தினர்களாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும…
-
- 7 replies
- 1.3k views
-
-
பேரூந்தில் மரக்குற்றி கடத்தல் ; மூவர் கைது (எஸ்.என்.நிபோஜன்) பேரூந்து ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளுடன் மூவர் இன்று அதிகாலை கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசேட பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கிளிநொச்சி, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ரகசிய தகவான்று கிடைத்தது. இதையடுத்து கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனையின்படி உதவிப்பொலிஸ் பரிசோதகர் இந்து பிரதீபன், லால் குமார, சிறி ஏக்கநாயக்க, சோமரட்ன, சியாம், சிவஐங்கரன் ஆகியோர் கொண்ட சிறப்புக் குழுவினர் சோதனை நட…
-
- 0 replies
- 466 views
-
-
தயா மாஸ்டரின் குற்றப்பத்திரிகையில் ‘குற்றம் பிழையாக சொல்லப்பட்டுள்ளது’ -க.அகரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரிடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலே சொல்லப்பட்டுள்ள குற்றம், 7ஈ என்ற குற்றமாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அது பிழை” என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்ததாக தயா மாஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா மேல் நீதிமன்றத்தில், தயா மாஸ்டருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை அடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சுமந்திரன், மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துரைத…
-
- 0 replies
- 262 views
-
-
நம்பிக்கையின் நாயகர்களாக தமிழர்களை பார்க்கும் சபாநாயகர் நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை தான்பார்ப்பதாக பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய 76 ஆவது பிறந்த தினத்தினை நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநரின் வாசஸ்தலத்தில் கொண்டாடினார். இதன்போது கரு ஜயசூரிய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நம்பிக்கையின் நாயகர்களாக தமிழ் மக்களை நான் பார்க்கின்றேன். அந்த வகையில் நாங்கள் எடுக்கும் பல்வேறு செயற்றிட்டங்களை தமிழ் மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பல்வேறு நல்லிணக்க புரிந்துணர்வுகளை எற்படுத்துகின்றது. குறிப்பாக அவ்வாறான நல்லிணக்க புரி…
-
- 0 replies
- 319 views
-
-
வடக்கில் 2,291 டெங்கு நோயாளர்கள்: யாழில் உச்சம் -ரொமேஸ் மதுசங்க “2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், வடக்கிலிருந்து 2,291 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” என்று, வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். இதில் அதிகளவான நோயாளர்கள், யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் எண்ணிக்கை, 1,753ஆகப் பதிவாகியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார். “அத்துடன், வவுனியாவில் 212, முல்லைத்தீவு மாவட்டத்தில் 150, மன்னாரில் 108, முல்லைத்தீவில் 68 பேர் என, டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்” எனவும…
-
- 3 replies
- 671 views
-
-
வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தினை இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்திட்கு எவ்வாரு மாற்றுவது என்பது சம்மந்தமாக பார்போம். இந்த பதிவு இலங்கை போக்குவரத்து தினைக்களத்தினால் 4 ஆம் திகதி மார்ச் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டக்கோவையை அடிப்படையாக கொண்டது. வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தின் அடிப்படையில் உள்நாட்டு சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளல். இதன் கீழ் இலகு ரக வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை மாத்திரம் பெற்றுக் கொள்ள முடியும். தேவையான ஆவணங்கள் : ஆகக் குறைந்தது அடுத்துவரும் 06 மாதங்களுக்கேனும் செல்லுபடியானதாக உள்ள வெளிநாட்டு சாரதி அனுமதிப் பத்திரம். விண்ணப்பதாரர் வெளிநாட்டவராயின் ஆகக் குறைந்தது ஒரு மாதகாலப் பகுதிக்கான வீசா அனுமத…
-
- 0 replies
- 681 views
-
-
அரசியல் இருப்புக்காக இனவாதத்தையும் விஷங்களையும் கக்கிவரும் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிந்து, எதிர்காலத்தையும் நலன்களையும் வீணடிக்க வேண்டாம் என்று, மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார். அமைச்சின் ஒதுக்கீட்டில், வடபிராந்திய தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிப்பாளர் முனவ்வரின் தலைமையில், மன்னார் மாவட்ட இளைஞர் கூட்டுறவுச் சங்கத்தினால் (நிஸ்கோ), இளைஞர்களுக்கு சுயதொழில் திட்டங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். மன்னார் நகரமண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து கூறியதாவது, “அபி…
-
- 1 reply
- 424 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார். இந்தத் தகவலை வாசித்த கெரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நிலவரம் தொடர்பாக மைத்திரியிடம் வினவினார். ஜோன் கெரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தொடர்பாக வினவுமாறு நிஷா பிஸ்வால் கேட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மைத்திரி சந்தேகம் கொண்டிருந்தால் அது நிய…
-
- 0 replies
- 337 views
-
-
திருகோணமலை கடற்படைத் தளத்தில் பாரிய கப்பல்களை நிறுத்துவதற்கு புதிய இறங்குதுறைமுகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. புதிய இறங்குதுறைமுகத்தைக் கட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தார். இதற்கமைய, திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் 220மீற்றர் நீளமும் 20 மீற்றர் அகலமும் கொண்ட இறங்குதுறையை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் பாரிய கப்பல்கள் தங்கும் வசதி ஏற்படுத்தப்படும். டொக்யார்ட் கடற்படைத் தளமானது சிறீலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தலைமையகமாகச் செயற்படுகின்றது. இங்கு பாரிய கப்பல்கள் தரித்து நிற்பதற்கான இறங்குதுறையை…
-
- 0 replies
- 269 views
-
-
வவுனியா மாவட்டம் கொக்குவெளிக் கிராமத்தில் வசிக்கும் சிங்களவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தமிழ் இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அக்கிராமத்து சிங்கள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொக்குவெளிக் கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் என்ற நபரும் அவரது நண்பர்களும் இணைந்து தம்மை வெளியேறுமாறு கோரியுள்ளதாக அப்பகுதியில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கே வசித்த 30 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் ஏ-9 வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் வெளியேறச் சொன்ன நபர்களைக் கைது செய்வதாக வழங்கிய வாக்குறுதியை அடுத்தே போராட்டம் கைவிடப்பட்டது. இதனையடுத்து, அப்பிரதேசத…
-
- 0 replies
- 305 views
-
-
கொழும்பு துறைமுகத்தில் கார் மழை... பெருந்தொகையான கார்களுடன், இந்தியாவின் இனோரா பிராந்தியத்திலிருந்து, “ஸ்பிரிங் ஸ்கை” என்ற கப்பல், கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 1,539 கார்கள், பயன்பாட்டுக்கமைவாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபையில், ECTக்குச் சொந்தமான துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருக்கும் 165 அடி நீளமுள்ள இந்தக் கப்பலே, இவ்வருடத்தில் கொழும்புத் துறைமுகத்துக்கு கார்களை ஏற்றிவந்த விசேட கப்பலாகும் என, இலங்கைத் துறைமுகங்கள் அதிகார சபையின் இயக்குநர் ஜயந்த பெரேரா தெரிவித்தார். - See more at: http://www…
-
- 0 replies
- 352 views
-
-
பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் பயணமாகியுள்ளனர். http://www.virakesari.lk/article/11909
-
- 0 replies
- 232 views
-
-
தேசிய செயற்பாடுகளிலிருந்து வடக்கு மக்கள் புறக்கணிப்பு தேசிய செயற்பாடுகளிலிருந்தும் தேசிய நீரோட்டத்திலிருந்தும் வடக்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தேசிய கலந்துரை யாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.இதனாலேயே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு 60 ஆண்டுகள் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். ஒதுக்கி வைத்தால் ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள் சேர்த்துக் கொண்டால் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற செய்தியை வடபகுதி தமிழ் மக்கள் தற்போது வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார…
-
- 0 replies
- 212 views
-
-
“உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும்” வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிலம் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை…
-
- 3 replies
- 699 views
-
-
கிளிநொச்சியில் டிரக்டர் சாரதியை சங்கிலியால் தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் கிளிநொச்சியில் டிரக்டர் சாரதி ஒருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரால் தாக்கப்படும் காட்சிகளை அங்கிருந்த ஒருவர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளார். ஏ9 வீதியில் 156 ஆம் மைல்கல் பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தக் காட்சிகளைப் பதிவு செய்ததாக சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, வாகன விபத்து தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்யவே பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் அங்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. வேன் ஒன்றை மோதிவிட்டு …
-
- 15 replies
- 1.2k views
-
-
வடக்கு முதல்வர் தொடர்பில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? அரசைக் கே்ட்கிறார் மகிந்த இனவாதம் பேசிய வடமாகாண முதலமைச்சர் சி.வி தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்காது ஏன்? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 57ஆவது நினைவுதின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘மீண்டும் இந்த நாட்டில் விசித்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வடக்கு கிழக்கினை இணைத்து இரண்டு மாகாண சபைகளையும் ஒன்றாக்கும் முயற்சிகள் இடம்பெறு கின்றன. அதற்காக அரசியலமைப்பினை மாற்றி அந்த இரண்டு ம…
-
- 1 reply
- 370 views
-
-
அதிகளவு இராணுவமுகாம்கள், புத்தர்சிலை அமைப்பிற்கெதிராக போராட வடக்கு மக்களுக்கு உரிமையுண்டு வடமாகாணத்தில் அளவுக்கு அதிகமாக இராணுவ முகாம்கள் அமைத்துள்ளதற்கும், பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு வட மாகாண முதலமைச்சர் மற்றும் அங்குள்ள மக்களுக்கு முழு உரிமையும் இருப்பதாக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வட பகுதி மக்களுக்கும் உரிமை இருப்பதாகவும் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய கலாநிதி விக்கிரமபாகு கரு…
-
- 2 replies
- 411 views
-