Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓய்வு விடுதியில் உல்லாசம் யாழ் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயலால் விசனம். யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் பெண்களுடன் தகாத செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பிரபல சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிவிக்கப்படுவதாவது யாழ்ப்பாணத்தின் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரி ஒருவரும் அப் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் விடுமுறையில் கதிர்காமம் சென்றுள்ளனர். கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் இவர்கள் தங்கிருந்தனர். பொலிஸாருக்கான ஓய்வு விடுதியில் பொலிஸார், மற்றும…

  2. யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார். உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது. சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அரசியல் மாற்றங்களை கேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்திய அஸ்வின் இலங்கை ஊடக அமைச்சினால் விருதினை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கேலிச்சித்திரங்களினால் ஊடகப்பரப்பில் அண்மை காலங்களில் பிரபல்யம் பெற்றிருந்த அஸ்வின் முன்னதாக சுடரொளி மற்றும் வீரகேசரியில் பணியாற்றியிருந்ததுடன் இறுதி காலங்களினில் தினக்குரல் பத்திரிகையில் கேலிச்சித்திரவியளாலராக பணியாற்றிய…

  3. கடற்படை தளபதியை சந்திக்கிறார் நீஷா பிஷ்வால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வால் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. குறித்த சந்திப்பானது அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள இராஜாங்க திணைக்களத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11815

    • 3 replies
    • 449 views
  4. பலாலி விமானநிலையத்தை புனரமைப்பது அவசியம்-விமானப்படைத்தளபதி யுத்தம் முடிவடைந்த நிலையில் விமானப் படையினரின் விமானங்களை சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும், போக்குவரத்தி ற்கும் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளதுடன் வடக்கில் உள்ள பலாலி விமானதளத்தையும் அதன்ஓடுதளத்தையும் பராமரிக்க வேண்டியுள்ளதாகவும் இலங்கை விமானப்படைத் தளபதி வைஸ் எயார் சீப் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பாதுகாப்பு ஏற்பாட்டில் எந்தவொரு குறைபாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள விமானப்படையின் புதிய தளபதி, யுத்தமொன்று ஏற்பட்டாலும் அதற்கு முகங்கொடுப்பதற்காக விமானப் படை எப்போதும் தயார் நிலையிலேயே வைத்திருப்பதாக வும் கூறியுள்ளார். …

  5. முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேர­ணிக்கு தலைமை தாங்­கிய வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் மீது தென்­ப­கு­தியில் வசை­மாரி பொழி­யப்­பட்­டு ­வ­ரு­கின்­றது. அர­சாங்க அமைச்­சர்­களும், இன­வாத அமைப்­புக்­களின் தலை­வர்­களும் முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள், பிரச்­சி­னைகள் என்­ப­வற்றை வெளிக்­கொண்­டு­வரும் வகை­யி­லேயே முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் எழுக தமிழ் பேரணி நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இதற்கு பல கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்­தன.…

  6. நாய் தோண்டிய குழியிலிருந்து 3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம் (ரி.விரூஷன்) யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று குட்டி ஈனுவதற்காக நிலத்தில் குழி தோண்டியுள்ளது. இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனைய…

  7.  நீர்வேலி இரட்டைக் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை -சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைக் கொலை வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட அருணாச்சலம் குகணேஸ்வரன் என்பவருக்கு, மரண தண்டனை வழங்கி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், இன்று வியாழக்கிழமை (29) தீர்ப்பளித்தார். - See more at: http://www.tamilmirror.lk/182845/ந-ர-வ-ல-இரட-ட-க-க-ல-க-க-ற-றவ-ள-க-க-மரணதண-டன-#sthash.lv42UTlj.dpuf

  8. யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி கடந்த 22 ம் திகதி இரவு 11.45 மணியளவில் அளவெட்டி கும்பிளாவளையடி பகுதியில் நீதீமன்ற வழக்குகளுக்கு சமூகமளிக்காத காரனத்துக்காக தெல்லிப்பழை பொலிசாரினால் ஓருவரை கைது செய்ய சென்ற வேளை அவரின் வீட்டிற்குள் அடாவடியாக நுலைந்து தகாத வார்தைகளை பிரயோகித்து வீட்டின் உறிமையாளரை அவரின் ஆடையை பற்றி இழுத்து எந்த கேள்வியும் இன்றி தகாத வார்த்தையில் பேசி மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் தேடிய நபர் வேரு அவரை வந்த பொலிசாருக்கு நன்கு தெரியும் அப்படி இருந்தும் இரவில் பெண்கள் இருக்கும் வீட்டில் தமது அடாவடித்தனத்தை காட்டியுள்ளார்கள் யாழ் தெல்லிப்பழை பொலிசார் அது மட்டுமன்றி அந்த பொலிஸ் குழுவிற்கு தலைமை தாங்கி வந்த இரண்டு நட்சதிர பதவியுடையவர் உட்பட சாஜன்…

  9. “புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதென்பது, இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யும் மோசடி நடவடிக்கையாகும்” என, முன்னாள் அமைச்சரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணியினால் கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை (28) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “தற்போதுள்ள அரசியலமைப்பைத் திருத்தியமைக்கக்கூடிய நிலைமை இருப்பினும், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கவேண்டிய அவசியம் இல்லை. புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் தோரணையில், இனவாதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவே, இந்த நல்லாட்சி அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கல…

  10.  எழுக தமிழும் இனவாதக் கூச்சல்களும் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள வீதிகளில் தேனும் பாலும் ஓடப் போவதாக ஒரு தரப்பினர் தெரிவித்து வர, மறு தரப்பினரோ, இனவாதச் சந்திப்பொன்று இடம்பெற்று வந்துள்ளதாகவும் நாட்டின் அமைதி பாதிக்கப்படக்கூடும் என்றவாறும் கருத்துகளை எழுப்பி வருகின்றனர். முதல்வகையான கருத்துகளைத் தெரிவிக்கும் தமிழர்களில் ஒரு தரப்பினரின் எண்ணம் நிறைவேற வேண்டுமாயின், தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளினதும் மக்களினதும் மனங்களில், இந்தப் பேரணி தொடர்பாக நல்லெண்ணம் ஏற்பட வேண்டும். அதற்காக, இந்தப் பேரணி, இனவாதப் ப…

  11. முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும்-சுமந்திரன் வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா நீதிமன்றத்திற்கு இன்று வந்த நிலையில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது 1957ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தில் இருந்து வருகின்ற…

  12. முல்லை மாந்தை கிழக்கில் 2032 குடும்பங்கள் மீள்குடியமர்வு முல்லைத்தீவு மாந்தைக் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள 15 கிராம சேவகர் பிரிவில் 2,032 குடும்பங்களைச் சேர்ந்த 9,396 பேர் மீளவும் குடியமர்த்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கிழக்கிலுள்ள பிராந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இந்தப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கப்பட்டன. 1,570 புது வீடுகள் கட்டப்பட்டதோடு, மேலும் 914 வீடுகள் கட்டியெழுப்பப்படவுள்ளன.இதைவிட, 455 வீடுகள் பகுதிப் புனரமைப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 2334 வீடுகளுக்கு மலசலகூட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. http://onlineuthayan.com/news/18269

  13. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த 24ஆம் திகதி நடந்த எழுக தமிழ் எழுச்சிப்பேரணி சிலருக்கு தாங்கொணா அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு தியாகி திலீபனின் நினைவுதினம் சற்று ஆற்றுப்படுத்தியிருக்கும் என நம்பலாம். கடந்த ஆண்டும் தியாகி திலீபனின் நினைவு தினம் நடந்தபோது, அதனை அனுஷ்டிப்பதில் ஆர்வம் காட்டாத சில தமிழ் அரசியல்வாதிகள் இந்த வருடம் முண்டியடித்து நின்றதைக் காணமுடிந்தது. எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்காத தோசம் நீங்க தியாகி திலீபனை விட்டால் வேறு யாருளர் என்றவகையில் அவர்கள் தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முற்பட்டிருக்கலாம். தன் உயிரை தமிழ் மக்களுக்காக ஈகை செய்த ஒரு உத்தம தியாகியின் புனித நாளில் …

  14. பிரான்சு தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழத்துடன் சேர்ந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் புலம்பெயர் மண்ணில் பிறந்த மாணவிகள் உலக சாதனை படைத்துள்ளனர். 2016 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி. பரமேஸ்வரன் சுசானி ,எழுத்துப் பகுதி மற்றும் இணைய வழி வினாக்கள் என இரண்டு பகுதிக்கும் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்றுள்ளார். இதேவேளை 2015 ஆண்டில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் செல்வி தட்சாயணி தங்கதுரை இணைய வழித் தேர்வில் 100 புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த தமிழியல் இளங்கலைமாணி பட்டப்படிப்பு கடந்த மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பட்டப்படிப்பை முடித்து இரண்ட…

  15. புலி சந்தேகநபர்களை யாழ். சிறைச்சாலைக்கு மாற்றுவது ஆபத்து விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென யாழ்ப்பாண பாதுகா ப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றினால் அவர்கள் தப்பிச் செல்லக் கூடுமென பாதுகாப்புப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வர…

  16. பாடசாலை செல்லும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு அக்கரைப் கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்று, மாணவனை மதுபானம் அருந்த வைத்து ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களை நிபந்தணை பிணையில் செல்ல பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (28) அனுமதியளித்தார். சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசுப்பிணையில் செய்ய அனுமதியளித்த நீதிவான், வதிவிடத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேசத்துக்கு உரித்தான கிராமஅலுவலரின் அத்தாட்சிபடுத்திய விண்ணபத்தினை 1 வாரத்துக்குள் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், சாட்சிக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தல் விடுக்ககூடாது. அப்படி அச…

  17. ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தெரிவுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமென கருத்துக்கணிப்பொன்றை நடாத்தியிருந்தது. இக்கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போத…

  18. ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுத்தினால், தொழில்மட்ட கொலைகாரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆடுகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஆயுதத்தை பயன்படுத்தி தொழில் ரீதியாக கொலை செய்யும் கொலைக்காரர்களினால் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தவிர வேறு யார் உத்தரவிட்டிருக்க…

  19. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட வளங்கள் யாவும் சட்டவிரோதமான முறையில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற நிலையிலேயே பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள பெறுமதி வாய்ந்த காட்டுமரங்கள், மணல், கிரவல் என அபிவிருத்திக்கு தேவையான வளங்கள் தமது பகுதியில் இருந்து வகை தொகையின்றி வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றதாகவும். குறிப்பாக வீட்டுத்தேவைக்கு மணல் பெற…

  20. ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் தமிழகத்திற்குசெல்ல தயாராகுங்கள் -கூறுகிறார் கலகொட அத்தே ஞானசார தேரர் விக்னேஸ்வரன் உட்பட ‘எழுக தமிழ்’ நடத்தியவர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு போவ தற்கு தயாராகவும் என பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார். இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்…

  21. வடக்கு ,கிழக்கு இனவாத சக்திகளால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தடங்கல் -அமைச்சர் ஹக்கீம் கவலை இனப்பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. ஆனால், வடக்கிலும் தெற்கிலும் உருவாகியுள்ள இனவாத சக்திகளின் செயற்பாடுகளே எமக்கு சவாலாக உள்ளன என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த கால அனுபவங்களுடன் பார்க்க…

    • 8 replies
    • 455 views
  22. வட மாகாணத்தில் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு பொருத்து வீடுகளுக்குப் பதிலாககொங்கிறீட் வீடுகளை அமைத்து வழங்குமாறு மத்திய அரசைக் கோருவதென யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்படடது. 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்காக அரசாங்கம் செலவழிக்கும் பணத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் கல் வீடுகளை அமைக்க முடியும். அவ்வாறு அமைத்து வழங்கத் தயாரென 5உள்நாட்டு வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒருங்கி;ணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழ்த்தேசியக் கூடட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மீள்குடியேற்றஅமைச்சின் ஊடாக வடக்கில் 65 …

    • 4 replies
    • 625 views
  23. இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தெளிவான கொள்கையை கொண்டிருக்கிறது. இதனைபல அறிக்கைகளின் ஊடாக அது தெரியப்படுத்தியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் செயலாளரின்உதவிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக், இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒருவரின்கேள்விக்கு பதிலளிக்கும் போது எவரும் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிலைப்பாடுகுறித்து அறிக்கைகளை வெளியிடலாம். எனினும் ஐக்கிய நாடுகள் சபை தமது அறிக்கைகளின் மூலம் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டைதெளிவுபடுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார். அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகளின்பொதுச்செயலாளர் பான் கீ மூனை சந்தித்த பின்னர், இலங்கை ஜனாதிபதி …

  24. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களை நந்திக்கடலுக்கு இழுத்துச் சென்றதாகவும், மீண்டுமொரு தடவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் தமிழ் மக்களை நந்திக்கடலுக்கு இழுத்துச் செல்கிறார் எனவும் ஜாதிக கெல உறுமய குற்றம் சுமத்தியுள்ளது. ஜாதிக கெல உறுமயவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் பேச்சாளராரன நிசாந்த வர்ணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியின்போது தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் தான் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலை…

  25. குருனாகல் மாவட்டத்தில் இருந்து இவ்வருடம் 16 லட்சம் இளநீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தென்னை ஊக்குவிப்பு சபை தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் இளநீருக்கு ஐரோப்பா உள்ளிட்ட வெளிநாடுகளில் நல்ல கேள்வி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை போத்தலில் அடைக்கப்பட்ட இளநீர் ஒன்று இலங்கை ரூபாவில் 135 க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.theevakam.com/2016/09/20/வெளிநாடு-செல்லும்-இலங்கை/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.