Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. துணுக்காயில் குளங்கள் புனரமைப்பு முலலைத்தீவு துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள ஆறு குளங்களின் புனரமைப்பு பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை மத்திய விவசாய அமைச்சு வழங்கியுள்ளதாக இந்த அமைப்பின் பிராந்திய அலுவலர் சி.பிரபாகரன் தெரிவித்தார். புதுக்குளம் 6.17 மில்லியன் ரூபா செலவிலும், கோட்டைகட்டிய குளம் 5மில்லியன் ரூபா செலவிலும் பட்டன்கட்டிக் குளம் 2.67 மில்லியன் ரூபா செலவிலும், அனிஞ்சயன் குளம் 4.37மில்லியன் ரூபா செலவிலும், மணல்குளம் 1.5மில்லியன் ரூபா செலவிலும் உடும்பன்குளம் 4.96 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைக்கப்படுகின்றன. http://onlineuthayan.com/news/17667

  2. பரிசளிப்பு விழாவில் தலைமை நீததியரசர் பங்கேற்பு யாழ் இந்துகல்லுரியின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர் வெறும் 19 ம் திகதி நடை நடைபெறவிருப்பதாக கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது. குறித்தப் விழாவானது கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக தலைமை நீதியரசர் க.சிறிபவன் கலந்து சிற்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/17668

  3. இந்திய நன்கொடை நிதித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம் 1.7 பில்லியன் ரூபாய் கிரயத்தில் நிர்மாணிக்கப்படுகின்றது. இக்கலாசார மண்டபமானது யாழ்.பொது நூலகம் மற்றும் புல்லுக்குளம் நீர் நிலையை அண்மித்ததாக அமைவதுடன் இந்தியாவின் பீ.என்.சீ நிறுவனத்தினரால் கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் அரின்டம் பக்க்ஷி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி ஆகியோர் முன்னிலையில் கொழும்பில் நேற்று வியா ழக்கிழமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.valampurii.lk/…

  4. சம்பூர் மஹா வித்தியாலயத்தில் விவசாய திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கின் எழுச்சி எனும் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெறும். இதன் ஆரம்ப நிகழ்வான இன்று கிழக்குமாகாணசபை விவசாய அமைச்சர், பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் எனப்பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். http://battinaatham.com/description.php?art=5473

  5. பயந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் நடந்துமுடிந்த உள்நாட்டு யுத்தத்தின்போது உருவான மனிதப் புதைகுழிகளின் சரியான இடத்தினைச் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சில நாட்களுக்கு முன்னர் கண்டியிலுள்ள மல்வத்த பீடாதிபதியின் குருமுதல்வர் திப்பட்டுவாவ சிறீ சித்தார்த்த சுமங்கல தேரரைச் சந்தித்தபோது இந்த இடத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், இந்த அரசாங்கத்தின் கொள்கைகளின் கீழ் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ, போர் வெற்றியை அறிவித்த அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் உயர் மட்ட இராணுவ அதிகாரிகள் போர்க்குற்றச்சாட்டுக்களுக்காக கைதுசெய்யப்படலாம் என விமல் வீரவன்ச அச்சங்கொள்கின்றார். விமல் வீரவன்சவைப் பொறுத்…

  6. ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று பிரதான அரசியல் கட்சிகளும் மேற்படி மக்களெழுச்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதுடன் அதற்கான செயற்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தியிருக்கின்றனர். மேலும் வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கிவரும் புத்திஜீவிகள் ஆகியோரும் இதற்கான ஆதரவை வழங்கிவருகின்றனர். விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் பலமாக இருந்தவரைக்கும் உள்ளுக்குள்ளும், ச…

  7. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பல சவால்களை எதிர்கொள்கிறோம் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான ஐ.நா. செயற்­கு­ழுவின் சில பரிந்­து­ரை­களை அர­சாங்கம் ஏற்­க­னவே அமுல்­ப­டுத்த ஆரம்­பித்­துள்­ளது. தொடர்ந்து இந்த செயற்­கு­ழு­வுடன் நாம் ஈடு­பாட்­டுடன் செயற்­ப­டுவோம் என்று இலங்­கையின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரவிநாத ஆரி­ய­சிங்க தெரி­வித்தார். மேலும் சர்­வ­தேச சமூகம் இலங்­கைக்கு தொடர்ந்து உத­வி­களை பெற்றுக் கொடுக்கும் என நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம் என்றும் இலங்­கையின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரவிநாத் ஆரி­ய­சிங்க சுட்­டிக்­காட்­டினார். நேற்று நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 33 ஆவது …

  8. பார்க்கத் தவறாதீர்கள் ! இன்றைய சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்க்கலாம் இன்று தென்படவுள்ள சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் பார்வையிடுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சந்திரகிரகணம் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது. சந்திரகிரகணத்தை இலங்கை மக்கள் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/11387

  9. 6மாணவர்களுடன் இயங்கும் பாடசாலை இலங்கையில் 6 மாணவர்களை மாத்திரம் கொண்ட பாடசாலையொன்று தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. மாத்தளை நாவுல பகுதியில் அமைந்துள்ள தெமதஓய ஆரம்ப பாடசாலையே இவ்வாறு 6பேருடன் இயங்குவதாக தெரியவந்துள்ளது. இந்த பாடசாலையில் 5ஆம் தரம் வரை வகுப்புகள் உள்ள போதும் 6 மாணவர்கள் மாத்திரம் தற்போது அங்கு கல்வி கற்பதாகவும் அவர்களுக்கு 4 ஆசிரியர்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அந்தப் பிரதேசத்தை சேர்ந்த பெற்றோர்கள் அந்தப் பாடசாலையில் தமது பிள்ளைகளை அனுமதிப்பதை கடந்த காலங்களாக தவிர்த்து வந்த நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. http://onlineuthayan.com/news/17653

  10. முகவர்களை பயன்படுத்தி தமிழர் அபிலாஷைகளை திசை திருப்ப அரசாங்கம் முயற்சி

  11. சர்வதேச பங்களிப்பை பெற்றுக்கொள்ளுங்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்­கு­வ­தற்­கான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை யில் சர்­வ­தேச பங்­க­ளிப்பை பெற்­றுக்­கொள்வ­தற்கு அர­சாங்கம் ஆர்வம் காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக நீதி வழங்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் தெளி­வான முன்­னேற்­றத்தை வெளிக்­காட்ட வேண்­டுமென பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பான ஐக்­கி­ய­நா­டுகள் செயற்­கு­ழுவின் பிர­தி­நிதி எஸ் ஸ்லாமி தெரி­வித்தார். அது­மட்­டு­மன்றி நிலை­மா­று­கால நீதி மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் சிவில் சமூ­கத்தின் பங்­க­ளிப்பை அதி­க­ள வில் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம் என்றும் ஐ.நா.செயற்­கு­ழுவின் பிர­தி­நிதி ச…

  12. மாத்தளை, கஹல்ல மில்லேகொட பிரதேச கிராமம் ஒன்று நாட்டுக்கே மிளகாய் விநியோகம் செய்யும் அளவுக்கு விளைச்லை மேற்கொண்டு வருவதாக அறிய முடிந்தது. ஒரு தடவையில் சுமார் இருபதாயிரம் கிலோ மிளகாய் இங்கு விளைச்சல் செய்யபடுவதகவும், இலங்கையில் காய்ந்த மிளகாய் மத்திய நிலையமாக இந்த கிராமமே காணபப்டுவதகவும் தெரிவிக்கபடுகிறது. http://www.madawalanews.com/2016/09/Chilli.html

    • 3 replies
    • 583 views
  13. யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவின் ஆரம்பநாள் இன்று முன்னெடுக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிதைவுற்றுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11358

  14. நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சீர்திருத்தம் திருப்திகரமானதாக அமையும் என தான் நம்புவதாக தெரிவித்த பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாட்டின் மிக முக்கியமான இரண்டு கட்சிகளும் சேர்ந்து கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இலங்கையிலுள்ள சகல இன மக்களும் நல்லிணக்கத்துடனும் புரிந் துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கி ழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத் தில் இணைத் தலைவர்களுள் ஒருவராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர…

  15. இலங்கை: கிழக்கு மாகாணத்தில் காணி உரிமை தொடர்பாக முரண்பாடுகள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் போருக்கு பின்னர் காணி உரிமை தொடர்பாக வனத்துறையினருக்கும், பொது மக்களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளன. காணி உரிமை தொடர்பான போராட்டம் வன இலாகாவிற்குரிய காணிகளின் எல்லைகள் வனத் துறையினரால் தற்போது அடையாளமிடப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அம்பாரை மாவட்டத்தில் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் இது தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சனையை முன் வைத்து, வியாழக்கிழமை (இன்று ) விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் தங்களின் நெல் வேளாண்மை செய்கைக்குரிய சுமார் 2000 ஏக்கர் காணி வன …

  16. இலங்கை: பிச்சை எடுப்பவர்களையும் வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை இலங்கையில் பிச்சை எடுப்பவர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கும் வாக்கு - தேசப்பிரிய வறுமை காரணமாகவும், வசதியற்ற நிலை காரணமாகவும் வீடுகளின்றி தெருக்களில் வசித்து பிச்சையெடுத்து வாழ்பவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்கும் ஜனநாயக உரிமை இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதே போல் ஆதிவாசிகளாகிய வேடர்களையும் வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்குத் தீர்மானிக்…

  17. போதைப் பொருள் அச்சுறுத்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைவர் ஒருவருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். இக்குறித்த நபர் கேரளக் கஞ்சா விநியோகம் செய்யும் குழுவினருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் அவரையும் கைதுசெய்யக்கூடும். யாழ்ப்பாண நகரம், சட்டத்துக்குக் கீழ்ப்படியும் அறிவார்ந்த தமிழ்ப் பாரம்பரியத்தைக் கொண்ட தும் பெரும்பான்மையாக தமிழ் மக்களைக் கொண்டதுமான நகரமாகும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்திலும்கூட அதன் கட்டுக்கோப்பு குலையவில்லை. யுத்தம் நிறைவடைந்து இன்று ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இங்கு ஆயுத தாரிகளாலும், உட்பகைக் கும்பல்களாலும், பாலியல் வல்லுறவுகள், பெண்களைக்…

    • 2 replies
    • 792 views
  18. கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரைநிகழ்த்துகையில், இந்திய கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகின்றார்கள், உயிர்களுக்கும் உடமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய தமிழர்கள் தாக்கப்படும் போது இலங்கைத் தமிழர்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இலங்கைத் தமிழர்களும் கர்நாடக தமிழர்களும் பண்பாடு மற்றும் தொப்புள்கொடி உறவுகள். இவ்வாறான உறவுகள் …

    • 10 replies
    • 1.5k views
  19. யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது – கமால் குணரட்ன யுத்தம் பற்றிய இரகசியங்கள் எம்முடன் மண்ணோடு புதைந்து போகுமே தவிர வெளியிடப்படாது என மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தெரிவித்துள்ளார். படை வழியாக நந்திக்கடல் என்னும் தலைப்பிலான நூல் ஒன்றை அண்மையில் கமால் குணரட்ன வெளியிட்டிருந்தார். இந்த நூலில் யுத்த இரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியிருந்தார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள கமால் குணரட்ன தாம் எந்தவொரு காலத்திலும் யுத்த இரகசியங்களை வெளியிடப்போவதில்லை என தெரிவித்துள்ளார். பிரபல்யத்தை தே…

  20. விசா விண்ணப்பிக்கக்கூடிய நாடுகளில் ஒன்றாக தமிழீழத்தை அங்கீகரித்தது தொடர்பாக டென்மார்க் சிறீலங்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. குறித்த அங்கீகாரத்தை நீக்குவதாக டென்மார்க் உறுதியளித்துள்ளதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விசா விண்ணப்பத்தை நிரப்பும் படிவத்திலுள்ள நாடுகள் தொடர்பான பிரிவில் தமிழீழமும் ஒன்றாக டென்மார்க் குடிவரவு திணைக்கள இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய இந்த விடயம் டென்மார்க்கிலுள்ள சிறீலங்காத் தூதுவரூடாக டென்மார்க் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. அவுஸ்திரேலிய சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும்…

  21. நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து சந்திரிக்கா வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து அவர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135978/language/ta-I…

  22. நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்க எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான நீதிபதிகள் குழு, இன்று உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமுகமளிக்காமையினால், ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில், ஜூன் மாதம் 30ஆம் திகதி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்…

  23. யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டும்- தர்மலிங்கம் சித்தார்த்தன்:- தமிழ் மக்கள் பேரவை எதிர்வரும் 24ஆம் திகதி நடத்தவுள்ள பேரணி பாரிய மக்கள் எழுச்சியாக அமைய வேண்டுமெனத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இதில் அனைத்து தமிழ் மக்களுகம் பங்கெடுக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் பேசுகையில், தமிழ் மக்கள் தற்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இத்தருணத்தில் மி…

  24. கிளிநொச்சியில் கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவா் பலி, ஆறு போ் காயம் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஜவா் பலியாகியுள்ளதுடன் ஆறுபோ் காயமடைந்துள்ளனா். பளை புதுக்காட்டுச் சந்திக்கும் தர்மக்கேணி பிரதேசத்ததிற்கும் இடையில் ஏ-9 வீதியில் இத்துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வுவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த வான் ஒன்றும் நேருக்கு நோ் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்று…

  25. பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/11345

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.