Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. செவன் வில்லா இராணுவ ஓய்வு விடுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றம் கிளிநொச்சி - திருநகர் பகுதியில் தனியார் காணியில் செவன் வில்லா (SevenVilla) இராணுவ ஓய்வு விடுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை இராணுவம் தன்னுடைய பயன்பாட்டில் வைத்திருந்தது. எனினும் குறித்த காணி உத்தியோகபூர்வமாக காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட வில்லை என குறிப்பிடப்படுகின்றது. மேலும், இந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் எவ்வித முன் அறிவிப்புமின்றி அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது http://onlineuthayan.com/news/1…

  2. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவில் அதிகளவிலான மக்களின் காணிகளை வன இலாகாவினர் எல்லைக்கல் போட்டு வன இலாகாவிற்கு சொந்தமாக கைப்பற்றியமைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று திருகோணமலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் இராசம்பந்தன், உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகுரூப் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றன. இங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இங்கு காணி சம்பந்தமாக பேசுகையில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தனது கடுமையான ஆட்சேபனையை …

  3. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் அநுராபுரத்தில் வைத்து மதுஷங்க டி சில்வா என்பவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டார். இதனையடுத்து மதுஷங்க டி சில்வாவின் மனைவி மயூரி ஜயசேன, கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி காலி முகத்திடலுக்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். கடத்தப்பட்ட மதுஷ்கவை கண்டுபிடித்து தருமாறும், விசாரணையை விரைவு படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அது மாத்திரமின்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் கடந்த ஜுலை மாதம் 9ஆம் திகதி வழங்கிய வாக்குறுதியை மீண்டும் நினைவுப்படுத்தும் வகையிலேயே அவர் இவ்வாறு உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார். ஒரு வாரத்தில் தனக…

  4. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு திரும்பிய பின்னர். அவரின் விஜயம் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன; ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் போது அங்கு தமிழ் மக்கள் திரண்டெழுந்து ஆர்ப்பாட்டம் செய்வர் என தாம் ஏங்கிக் கொண்டதாகவும் ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரியின் இந்தக் கருத்து, பான் கீ மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் போது, தமிழ் மக்கள் பேரணி நடத்தினால் - அவர் முன்பாக பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தால், அது தொடர்பில் பான் கீ மூனுக்கு தான் பதிலளிக்க வேண்டிவந்திருக்கும். ஆனால் பேரணியோ, ஆர்ப்பாட்டமோ நடக்கவில…

  5. பொறுப்புக்கூறல் பொறிமுறையானது சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த விசாரணை செயற்பாட்டில் இராணுவப்படையினர் பங்களிப்பு செய்யவோ தலையிடவோ முடியாது என்று பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் செயற்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்திருக்கிறது. உடனடியாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச தரத் திற்குட்பட்ட சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்டோரின் சங்கங்கள், சிவில் சமூக நிறுவனங்களுடன் இணைந்து உண்மையைக்கண்டறியும் நிறுவனத்தை உருவாக்குங்கள். இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்றும் ஐ.நா.…

  6. இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு கூட்டம் ஜெனிவாவில் (ரொபட் அன்டனி) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் பசுமை தாயகம் அமைப்பு மற்றும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் ஆகிய அமைப்புக்களே இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடத்தவுள்ளன. இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தின் 27 ஆ…

  7. செப்ரெம்பர் 15ம் திகதியை தமிழர்கள் அவ்வளவு இலகுவில் மறந்துவிட முடியாது. அகிம்சைத் தேச வல்லரசுக்கே காந்தியம் என்றால் என்னவென்று பாடம் புகட்டிய அறத்தின் தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பைத் தொடங்கிய நாள். நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் வடக்கு வீதியில், பட்டினிப்போர் தொடுத்த பார்த்தீபன், மெழுகுதிரியாக தன்னை உருக்கி, தமிழினத்தின் ஒளி விளக்காக மாறிய நாள். பன்னிரு நாட்கள் தன்னையே ஆகுதியாக்கி, கடைசியில் மக்களுக்காகவே பசித்த வயிற்றோடு உயிரைத் துறந்த திலீபனை தமிழினம் அவ்வளவு எளிதில் மறந்து போகாது. ஏனனில் மக்களுக்காகப் போராடிய ஏனைய போராளிகள், சண்டையின் போது மக்களின் ககண்களுக்குத் தூரவாகவே மடிந்தார்கள். அவர்களின் இழப்புக்கள் வெறும் செய்தியாகவே மக்களின் காதுகளை வந்து தாக்கின. …

  8. மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்கும் பொருட்டு நிதி திரட்ட நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை சுட்டுக் கொலை செய்த இராணுவ மேஜர் சிறைக்கு செல்வதனை தடுக்கும்பொருட்டு, கூட்டு எதிர்க்கட்சியினர் நட்ட ஈடு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு முன்னதாக இராணுவத்தில் கடமையாற்றிய போது, இராணுவ முகாம் ஒன்றிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரை மேஜர் விமல் விக்ரமகே சுட்டுக் கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த புலி உறுப்பினரின் உறவினர்களுக்கு 20 லட்சம் ரூபா நட்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நட்டஈட்டுத் தொகையை செலுத்தி இராணுவ மேஜர…

  9. யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் விரைவில் முடிவுறுத்தப்படும் : யாழ் குடாநாட்டில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் விரைவில் முடிவுறுத்தப்படும் ஜனாதிபதியுடனான நீதிபதிகளின் சந்திப்பில் நீதிபதி இளஞ்செழியன் உறுதிமொழி யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற போதைப் பொருள் கடத்தல் போதைப் பொருள் வியாபாரம் மற்றும் அடாவடித்தனமான குற்றச் செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். போதைப் பொருளை ஒழித்தல், யாழ் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு …

  10. உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேச கண்காணிப்பு-மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரை இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்படவுள்ள நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு சர்வதேசத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பையும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடாத்திய மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. பொறுப்புக்கூறலுக்கான விசாரணைப் பொறிமுறையில் எந்தவித சர்வதேச தலையீடுகளும் இருக்காது என்றும் அது ஒட்டுமொத்தமாக உள்ளக நீதிமன்றப் பொறிமுறையாக மாத்திரமே அமையும் என்றும் அரசாங்கம் அறிவித்துவரும் நிலையிலேயே ஓய்வுபெற்ற நீ…

  11. உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் : சு. நிஷாந்தனிடம் விசாரணை யாழ் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டத்தின் எதிரொலியாக விளங்கும் தமிழ்த் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவர் சு. நிஷாந்தன் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று மாலை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்டுபட்டுவருகின்றார். நேற்று பிற்பகல் - 02.30 மணியளவில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொலிஸ் உத்தியோகத்தரொருவர் உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம் தொடர்பாக உங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்திலேய…

  12. வௌ்ளை வானில் மூவர் கடத்தல்: யாழ் நீதிமன்ற வளாகத்தில் பதற்றம் யாழ். நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையில் ஆஜராகி, பின்னர் வெளியில் வரும்போது வெள்ளை வானில் வந்தவர்கள், மூவரை பலவந்தமாக பிடித்து இழுத்து வானுக்குள் பலவந்தமாக தள்ளி , ஏற்றிக்கொண்டு சென்றமையால் அந்த வளாகத்தில் ஒருவகை பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பின்னர், யாழ். நீதிமன்ற கட்டிடத் தொகுதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பான வழக்கு, யாழ். நீதிமன்றில் இன்று இடம்பெற்றது. குறித்த வழக்கு விசாரணையில் 74 பேர், நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அவ்வாறு ஆஜராகிவிட்டு, நீதிமன்றத்தை விட்டுவெளியேறும் போத…

  13. கொலையா? தற்கொலையா? குழப்பத்தில் கிளிநொச்சி பொலிஸார் (எஸ்.என்.நிபோஜன்) கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு மாடு கட்டச் சென்ற பெண் ஒருவர் வழங்கிய தகவலின் பிரகாரம், குறித்த சடலம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த சடலம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு உருக்குலைந்துள்ளதாக தெரிவித்துள்ள கிளிநொச்சி பொலிஸார், கொலையா அல்லது தற்கொலையா என பல கோணங்களில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://www.virakesari.lk/article/11275

  14. மலேரியா விடயத்தில் அனைத்து நாடுகளும் இலங்கையை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் இலங்கை மலேரியா அற்ற நாடாக முன்னேறியுள்ளமையை அனைத்து நாடுகளும் பாடமாக எடுத்துச் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தினை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மலேரியா வேலைத்திடத்தின் பெட்ரோ எல் அலோன்சோ தெரிவித்துள்ளார். 1940 ஆண்டு இலங்கையில் மில்லியன் கணக்கான மக்கள் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் 1963 ஆம் ஆண்டு 17 மலேரியா நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர். இலங்கை மலேரியா நோயை கட்டுபடுத்தும் செயற்பாட்டில் வெற்றிக்கண்டுள்ளது. இதன் பயனாக மலேரியா அற்ற நாடாக இன்று தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திக…

  15. இலங்கை யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் சரண் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையர்கள் உள்ளிட்ட யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் பிரித்தானியாவில் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் சில குறைபாடுகளினால் இவ்வாறான யுத்தக் குற்றவாளிகளை நாடு கடத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வறிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 135 பேர் இவ்வாறு சரணடைந்துள்ளதாகவும் யுத்த குற்றவாளிகள் தங்களது ஓய்வு காலத்தை பிரித்தானியாவில் கழிக்கும் ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இலங்கை, ருவன்டா, ச…

  16. பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டது இலங்கைப் பெண்கள் பியர் குடிப்பது அதிகரித்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த சில வருடங்களில், புகைப்பிடிப்பது குறைந்துவிட்டது. எனினும், மதுபானம் பாவித்தல் அதிகரித்துவிட்டமை, புள்ளிவிவர தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/181698/ப-ண-கள-ப-யர-க-ட-ப-பத-அத-கர-த-த-வ-ட-டத-#sthash.fo4x4pNz.dpuf

    • 3 replies
    • 569 views
  17. சம்பூரில் அனல் மின் நிலையம் கட்டப்படாது சம்பூரில் நிர்மாணிப்பதற்கான முன்மொழியப்பட்டிருந்த அனல் மின் நிலையம், சம்பூரில் நிர்மாணிக்கப்பட மாட்டாது என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இன்று செவ்வாய்க்கிழமை (13) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/181776/சம-ப-ர-ல-அனல-ம-ன-ந-ல-யம-கட-டப-பட-த-#sthash.ILLCmmwA.dpuf

  18. செயற்கை உரங்கள், கிருமிநாசினிகள் மூலம் மண் வளம், நீர் வளம் பாதிக்கப்படுவதுடன் மரக்கறி, பழங்கள் நஞ்சுத்தன்மையாகி வரும் சூழலில் இயற்கை உரங்கள், இயற்கை கிருமி நாசினிகள் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தியை மேற்கொண்டு வருகிறார் அல்லைப்பிட்டி விவசாயி ஒருவர். அண்மையில் யாழ் . பல்கலைக்கழகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் கண்காட்சியில் இயற்கை உரம், இயற்கை கிருமிநாசினி, இயற்கை பசளை போன்றவற்றை காட்சிப்படுத்திய அல்லை விவசாயி கிரிசன் அவைகளை உற்பத்தி செய்யும் வழிமுறைகளையும் விளங்கப்படுத்தினார் . இயற்கை வள உற்பத்தியை குறித்து விவசாயி கிரிசன் தெரிவிக்கையில் நாம் இன்று எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சனைகளாக சுத்தமான நீர், நஞ்சற்ற உணவு , தூய்மையான சுற்றாடல் என்பன கருதப்படுகின்றன. அந்த வக…

  19. 90 இலங்கை அகதிகள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.! தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 45 பெண்கள் உட்பட 45 பேர் இன்று இலங்கை திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படுவதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2015ஆம் ஆண…

  20. உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் வீட்டின் மீது தாக்குதல் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவரது வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்டம் வீதியில் அமைந்துள்ள இவரது வீட்டின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று இது குறித்து முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலால் வீட்டின் கூரை மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பல பொருட்கள் சேதடைந்துள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்…

  21. கொழும்பில் காசநோய் யொஹான் பெரேரா காற்றுமூலம் பரவும் காசநோய், தற்போது கொழும்பிலுள்ள சில நகர்ப்பகுதிகளில் பரவி வருவதாக, கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி, டொக்டர் ருவான் விஜேமுனி, நேற்றுத் திங்கட்கிழமை (12) தெரிவித்தார். கொழும்பின் வடக்கு பகுதியிலும் மாளிகாவத்தை பகுதியிலும் இந்நோய் பரவி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வருடத்துக்குள் மாத்திரம் குறித்த பகுதியில் இருந்து 20 காசநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது கடந்த வருடத்தை விட அதிகமான தொகையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்நோய் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு, குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்படுவ…

  22. நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கை உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 28வது இடத்தில் இருப்பதாக Happy Planet Index அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலை Happy Planet Index அமைப்பு வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. ஆனால் இப் பட்டியல்…

  23.  'தனிநாடாக தமிழீழம் அங்கிகாரம்' சிறைக்குத் தள்ளி, தன்னை வளர்ப்புப் பிராணியாக்க முடியாதென்றும் பேய்க்குப் பயந்தால், மயானத்தில் ஒருபோதும் வீடமைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, 'சிது' தொலைக்காட்சித் தொடரில் வரும் சரண என்றழைக்கப்படும் பூனையைப் போன்றவனே இந்தக் கம்மன்பில என்றும் கூறினார். 'சிறைக்குத் தள்ளினாலும், கம்மன்பிலவின் வாய்ப்பேச்சுக் குறையவில்லை என்று, அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நானும், அதையே சொல்கிறேன். சிறைக்குள் தள்ளி, என்னுடைய வாயை அடைத்துவிட முடியாது. அப்படி நினைத்தால், அது வெற…

  24. “ புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“ உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பேராயர் அவர் மேலும் …

  25. முதலமைச்சா் தலைமையிலான குழுவினா் இரணைமடுவுக்கு நேரடி விஜயம் தடைகள் குறித்து ஆராய்வு வட மாகாண முதலமைச்சா் தலைமையிலான் குழுவினா் இன்று திங்கள் கிழமை இரணைமடு குளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும்,அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனா். திங்கள் மாலை மூன்று முப்பது மணிக்கு இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சா் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நீா்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விளக்கங்களை கேட்டறிந்துகொண்ட பின்னா் நேரடியாக குளத்திற்கு விஜயம் செய்து நிலைமைக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.