ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
நீண்ட ஆயுளுடன் வாழும் நாடுகள் பட்டியலில் இலங்கை உலகில் மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இலங்கை 28வது இடத்தில் இருப்பதாக Happy Planet Index அமைப்பு தெரிவித்துள்ளது. மக்கள் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலை Happy Planet Index அமைப்பு வெளியிட்டுள்ளது. 140 நாடுகள் இதன்கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, சீனா, இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் முதல் 30 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. ஆனால் இப் பட்டியல்…
-
- 0 replies
- 305 views
-
-
'தனிநாடாக தமிழீழம் அங்கிகாரம்' சிறைக்குத் தள்ளி, தன்னை வளர்ப்புப் பிராணியாக்க முடியாதென்றும் பேய்க்குப் பயந்தால், மயானத்தில் ஒருபோதும் வீடமைக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, 'சிது' தொலைக்காட்சித் தொடரில் வரும் சரண என்றழைக்கப்படும் பூனையைப் போன்றவனே இந்தக் கம்மன்பில என்றும் கூறினார். 'சிறைக்குத் தள்ளினாலும், கம்மன்பிலவின் வாய்ப்பேச்சுக் குறையவில்லை என்று, அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். நானும், அதையே சொல்கிறேன். சிறைக்குள் தள்ளி, என்னுடைய வாயை அடைத்துவிட முடியாது. அப்படி நினைத்தால், அது வெற…
-
- 0 replies
- 418 views
-
-
“ புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“ உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார். உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பேராயர் அவர் மேலும் …
-
- 0 replies
- 280 views
-
-
முதலமைச்சா் தலைமையிலான குழுவினா் இரணைமடுவுக்கு நேரடி விஜயம் தடைகள் குறித்து ஆராய்வு வட மாகாண முதலமைச்சா் தலைமையிலான் குழுவினா் இன்று திங்கள் கிழமை இரணைமடு குளத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும்,அதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளனா். திங்கள் மாலை மூன்று முப்பது மணிக்கு இரணைமடுவுக்கு விஜயம் மேற்கொண்ட முதலமைச்சா் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் குறித்தும் அதற்கு தற்போது ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் நீா்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளினால் வழங்கப்பட்ட விளக்கங்களை கேட்டறிந்துகொண்ட பின்னா் நேரடியாக குளத்திற்கு விஜயம் செய்து நிலைமைக…
-
- 1 reply
- 371 views
-
-
டெங்கு பயம் மீண்டும் இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது; தமிழகமும் தப்பவில்லை டெங்கு பயம் மீண்டும் இந்தியாவை ஆட்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் புது டெல்லியில் தொடங்கிப் பல மாநிலங்களில் டெங்கு தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 8 மாதங்களில் கேரளத்தில் 5,192 பேரும், கர்நாடகத்தில் 3,788 பேரும், மேற்கு வங்கத்தில் 5,129 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகமும் தப்பவில்லை. மத்திய அமைச்சகம் தந்திருக்கும் புள்ளிவிவரப்படி, ஜனவரி தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை தமிழ்நாட்டில் மட்டும் 2,357 பேர் டெங்குவால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். இதில் 5 பேர் இறந்திருக்கிறார்கள். சென்ற ஆண்டோடு ஒப்பிடும்போது இது இரு மடங்கு அதிகம். எது டெங்க…
-
- 1 reply
- 414 views
-
-
தமது அதிபரின் பதவி காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்தி யாழ். உடுவில் மகளீர் கல்லூரி மாணவிகள் ஐந்து நாட்களாகத் தொடர்ச்சியாக நடாத்தி வந்த கவனயீர்ப்பு போராட்டம் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாக மாறியது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை (07) மதியம் கல்லூரிக்கு வருகை தந்த தென்னிந்தியத் திருச்சபைக்கு நெருக்கமானவர்களாலும் , கல்லூரியின் ஆசிரியர்களாலும் திட்டமிட்டுக் குழப்பப்பட்டதுடன், இதன் போது மாணவிகள் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. மாணவிகள் மீது தாக்குதல் இடம்பெற்று கொண்டிருந்த வேளையில் மாணவிகள் கொடுமை அனுபவிப்பதை தாங்கிக் கொள்ள முடியாத கல்லூரியை சேர்ந்த ஆசிரியையொருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடசென்ற போது அவரது முறைப்பாட்டை பொலிஸா…
-
- 3 replies
- 401 views
-
-
மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் உலக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் போட்டிகள் ரியோவில் நடந்துவரும் வேளையில், இலங்கை மட்டக்களப்பிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடந்தன. விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட போரில் காயமடைந்த பலர் பங்கேற்றனர். BBC
-
- 0 replies
- 177 views
-
-
வரட்சியின் கொடூரம்... பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக நீர்த் தோக்கங்கள் மற்றும் குளங்களிலுள்ள நீர் வற்றியுள்ளதுடன், அம் மாவட்டத்தில் வாழும் மக்கள் குடிநீருக்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். (படப்பிடிப்பு: துஷார தென்னகோன்) - See more at: http://www.tamilmirror.lk/181715/வரட-ச-ய-ன-க-ட-ரம-#sthash.6WaxDhZa.dpuf
-
- 0 replies
- 389 views
-
-
முன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் ; ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அறிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விஷ ஊசி விவகாரம் குறித்து உரிய வைத்திய பரிசோதணைகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தமிழ் சட்டதரணிகள் ஒன்றியும் ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அறிக்கையினை சமர்ப்பித்துள்ளது. மருத்துவ விஞ்ஞானம் மற்றும் சர்வதேச வைத்திய நிபுணத்துவம் கொண்ட குழுவை ஸ்தாபிக்கவும், பாதிப்பிற்குள்ளான முன்னாள் போராளிகளை சோதணையிட அந்த குழுவிற்கு அனுமதி அளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தவும், நிபுனத்துவ குழுவின் அறிக்கையை சமர்பிக்கவும் ஐக்கிய நாடுகள் பேரவையின் மனித உரிமைகள் ஆணையா…
-
- 0 replies
- 431 views
-
-
20 வருடங்களுக்குப் பின் இலங்கைக்கு விமானசேவையை ஆரம்பிக்கிறது நெதர்லாந்து கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் நெதர்லாந்தின் கேஎல்எம் டச் எயர்லைன்ஸ் சேவை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் மீண்டும் இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.. நெதர்லாந்தின் தலைநகரான அம்ஸ்ரடாமிலிருந்து கொழும்புக்கான நேரடிச்சேவையே ஆரம்பமாகவுள்ளது. முதற் தடவையாக போயிங் 789-900 ரக டிரீம்லைனர் ரக விமானங்கள் இந்தச் சேவைக்கு பயன்படுத்தப்படவுள்ளன. 2009இல் சிவில் யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் உல்லாசப் பயணத்துறை கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.. கடந்த 10 வருடங்களில் இத்துறை இரட்டிப்பு வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. . ஐரோப்பியர்களுக்கு பிடித்…
-
- 0 replies
- 304 views
-
-
உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை நீள்கிறது. வடக்கு முதலமைச்சரிடமும் முறைப்பாடு உடுவில் மகளீர் கல்லூரி பிரச்சனை தொடர்பில் சட்டத்திற்கு உட்பட வகையில் தன்னால் ஆனா சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என தமக்கு முதலமைச்சர் உறுதி வழங்கியுள்ளார் என போராட்டம் நடத்தும் தரப்பினர் தெரிவித்து உள்ளனர். உடுவில் மகளீர் கல்லூரி அதிபரை மற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மாணவிகள் சிலர் , மற்றும் சில பெற்றோர்கள் , பழைய மாணவிகள் போராட்டம் நடாத்தி வருகின்றார்கள். அந்நிலையில் கடந்த 8ம் திகதி கல்லூரிக்கு நேரடியாக வந்த மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன் மாணவர்கள் , பழைய அதிபர் ,, புதிய அதிபர் மற்றும் ஆ…
-
- 3 replies
- 820 views
-
-
“கல்லூரி அதிபரை பலவந்தமாக இளைப்பாறச்செய்ய முன்னெடுத்த செயற்பாட்டை கண்டிக்கின்றோம்“ உடுவில் மகளிர் கல்லூரியின் நிருவாக சபையினாலும், பேராயர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவினாலும் கல்லூரியின் அதிபர் திருமதி ஷிராணி மில்ஸினை பலவந்தமாக இளைப்பாறச் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று சர்வதேச நாடுகளில் இயங்கும் உடுவில் மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை. ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அவுஸ்ரேலியா இருக்கும் உடுவில் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கங்களினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அற…
-
- 1 reply
- 305 views
-
-
தமிழன் என்றால் அவன் பண்பாடு மிகுந்தவன் என்றுதான் நாம் அறிந்திருந்தோம். அதனால் தமிழ்ப் பண்பாட்டை பிற இனத்தவர்களும் வியந்து போற்றியுள்ளனர். இல்வாழ்வின் ஒழுங்கு முறை முதல் வாழ்வியல் ஒழுக்கம் வரை தமிழ்ப் பண்பாடு உயர்வுற்றிருந்தது. இருந்தும் யுத்தத்தின் கொடூரம் எங்கள் தமிழ்ப் பண்பாட்டை சின்னாபின்னமாக்கி விட்டதென்பதே உண்மை. இன்று பல்வேறு தளங்களில் எமது பண்பாட்டு கோலங்களை நாம் இழந்து வருந்துகிறோம். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதையற்ற நாடு என்ற தொனிப்பொருள் கொண்ட நிகழ்வில் பங்குபற்றியிருந்தார். அங்கு உரையாற்றிய அவர், மதுபான விற்பனையில் யாழ்ப்பாண மாவட்டம் முன்னிலையில் இருப்பதாக தெரிவித்த போது நெஞ்சு…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழில் இராணுவமும் குறைக்கப்படமாட்டாது காணிகளும் விடுவிக்கப்படமாட்டாது-தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவிப்பு யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்பதுடன் இராணுவத்தின் எண்ணிக்கையும் குறைக்கப்படமாட்டாதென யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாகத் தகவல் வெளியிட்டுள்ள அவர், 2010ஆம் ஆண்டு வரை பலாலி உயர் பாதுகாப்பு வலயம், 11,269 ஏக்கர் பிரதேசத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அதன் பின்னர், அரசாங்கத…
-
- 1 reply
- 456 views
-
-
கடந்த முதலாம் திகதி பாலமுனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் மு.கா கட்சிப் போராளிகள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசீமினால் வழங்கப்பட்ட தொழில் விடயத்தினால் மு.கா மீது வெறுப்புற்று மு.கா தலைவரும் முரண்பட்ட போது அமைச்சர் ஹக்கீம் அவ்விடத்தில் பஷீருடைய கதையை கூறியிருந்தார். குறித்த இடத்திற்கும் நிகழ்விற்கும் பஷீரிற்கும் எதுவித சம்பந்தமுமில்லை. அவ்விடத்தில் பஷீரின் கதையை இழுத்துப் போட்டுக் கதைப்பது அமைச்சர் ஹக்கீம் பஷீரினால் உள ரீதியாக பாதிப்புற்றுள்ளதை அறிந்து கொள்ளச் செய்கிறது. இதனை நோக்கும் போது அமைச்சர் ஹக்கீம் கனவிலும் பஷீரின் பெயரை உச்சரிக்கலாம். இதுவரை காலமும் அமைச்சர் ஹக்கீமுடன் மு.காவின் தவிசாளர் முரண்படும் போது அமைச்சர் ஹக்கீமின் அந்தரங்கள் தான் வெளிவருமென பலராலும் …
-
- 0 replies
- 1k views
-
-
எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து ஒன்று இராஜதந்திர வட்டாரங்களில் பெரிதும் கவனத்தைப் பெற்றிருக்கின்றது. பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுடனான பேச்சுக்களின் போது தன்னுடைய வழமையான ‘தொனி’யை மாற்றி கடுமையான தொனிக்கு சம்பந்தன் மாறினார். “அரசியலமைப்புச் சட்ட வரைபில் அரசாங்கம் தவறு விடுமாக இருந்தால், இதில் எமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமல் இருக்குமாக இருந்தால் நாம் மீண்டும் ஒரு முறை ஆயுதம் எடுக்கமாட்டோம். ஆனால் எம்மை அவர்கள் ஆள முடியாத நிலையை ஏற்படுத்துவோம்” என எச்சரிக்கும் வகையில் அவர் தெரிவித்திருப்பது பான் கீ மூனையே திடுக்கிட வைத்திருக்கும். புதிய …
-
- 0 replies
- 538 views
-
-
அரசின் செயற்பாடுகளால் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதிருப்தியில் -சர்வதேச மன்னிப்புச் சபை சாடல் பொறுப்புக்கூறல் தொடர்பாக அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் இருக்கும் வெளிப்படையற்ற தன்மைகள் காரணமாக பாதிக்க ப்பட்ட மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடருக்காக சர்வதேச மன்னிப்புச் சபை எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இறுதிக்கட்ட போரின் போதும் அதற்குப் பின்னரும் சர்வதேச சட்டங்களை மீறும் மிகவு…
-
- 0 replies
- 291 views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச கைதிகள் தினத்தை முன்னிட்டே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135875/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 177 views
-
-
யாழில், புதுமைக்கவி பாரதியாரை நினைவுகூர்ந்த "புதுமையான" இளைஞர்களின் சமூகபற்று யாழ்.நல்லூர் பின் வீதியில் உள்ள வைமன் வீதி சந்தியில் உள்ள, பாரதியார் சிலைக்கு, பாரதியார் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசேர்ட் அணிந்த இளைஞர்கள் , ஞாயிற்றுக்கிழமை மாலை மலர் மாலை அனுவித்து, விளகேற்றி, அஞ்சலி செலுத்தினர். அத்துடன் நினைவு தினத்தை முன்னிட்டு, வீதியால் சென்றவர்களுக்கு, இலவசமாக மரக் கன்றுகளையும் வழங்கி வைத்தனர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் 1882-ம் ஆண்டு சின்னசாமி ஐயருக்கும் இலட்சுமி அம்மாளுக்கும் எட்டயபுரத்தில் பிறந்தார். தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனை…
-
- 1 reply
- 503 views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக உட்பட விசேட தூதுக் குழுவொன்று அமெரிக்கா செல்கிறது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்மாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். …
-
- 0 replies
- 436 views
-
-
மாவீரர் துயிலுமில்லங்களை புனித இடங்களாக பேணவேண்டும்-சாந்தினி எம்.பி கோரிக்கை மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேறிவரும் நிலையில் அவை புனித இடங்களாக மாற்றப்பட்டு பேணப்படவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி சிறிஸ்கந்தராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒவ்வொரு மாவீரர் துயிலம் இல்லங்களிலும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை புதைக்கவில்லை விதைத்து விட்டு சென்றோம் எனவே பிள்ளைகளை விதைத்த இடங்களை புனித இடங்களாக மாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவில் வன்னிவிளான்குளம் மாவீர் துயிலம் இல்லம் விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஏனைய இடங்…
-
- 0 replies
- 240 views
-
-
மூச்சு ஆய்வு சோதனைக்கு விமானிகள் இணக்கம் விமானிகளிடம் மூச்சு ஆய்வு சோதனையை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸும் எயார்லைன்ஸ் விமானிகள் பேரவையும் இணங்கியுள்ளன. எனினும் இந்த சோதனையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ளாமல், ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் பயிற்றப்பட்ட மருத்துவ பணியாளர்கள் மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த சோதனைகள், தளப்பாதுகாப்பு முகாமையாளரின் கண்காணிப்பில் விமானக்கட்டுப்பாட்டு நிலையத்தில் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த சோதனைகளின்போது விமானி ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக தெரியவந்தால், அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து மேலும் ஒரு மூச்சு ஆ…
-
- 4 replies
- 458 views
-
-
இலங்கை பயங்கரவாத இனப்படுகொலை அரசானது சுவிஸின் சூரிச் Bulach நகரத்தில் நடாத்திக்கொண்டிருக்கும் Sri Lanka t food and culturel festival நிகழ்வை புறக்கணித்து சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தியுள்ளனர். தமிழின அழிப்பை மூடி மறைத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்து கொள்வதற்காக இலங்கையின் செல்வாக்கை பெருக்குவோம் என்ற நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாத அரசானது சர்வதேச ரீதியில் இப்படியான நிகழ்வுகளை நடாத்துவதன் மூலமாக இச் செயற்திட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. இச் செயற்திட்டமானது வெள்ளோட்டத்திலேயே சுவிஸ் தமிழர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 15.30 மணியளவில் அகவணக்கத்…
-
- 3 replies
- 552 views
-
-
எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர். ஆனால் உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம். தற்போது அவர் மெத்தப் படித்த மேலாவித் தனத்தினால் அரசியலமைப்பை எழுதுகின்றாராம். அரசியலமைப்பை யாரும் எழுத முடியாது அரசியலமைப்பு நாடாளுமன்றிலே ஆக்கப்படல் வேண்டும். அதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை விடுத்து புள்ளி இடுவதற்காக அரசியலமைப்பை உருவாக்க முடியாது. என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர…
-
- 10 replies
- 841 views
-
-
சேர்.பொன்.இராமநாதனை முதலில் விழித்த பிரதமர் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனத்தில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சேர்.பொன்னம்பலம் இராமநாதனுக்கு முதலில் விழித்ததோடு ஐ.தே.க கடந்த காலத்தில் தவறுகளை இழைத்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது சம்மேளனம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது அங்கு உரையாற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 1915ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது அரசியல் தலைவர்கள் கொல்ப்பட்டார்கள். ஆனால் அந்த சந்தர்ப்த்தில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் துணிந்து செயற்பட்டதால் பல விளைவுகளை தவிர்க்க முடிந்தது. ஒரு தமிழ்த் தலைவர் இவ்வாற…
-
- 5 replies
- 726 views
-