ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143427 topics in this forum
-
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் மூழ்கி பலியான ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இன்று லண்டனில் நடைபெற்றன. காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN எனும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரின் மத்தியில் இடம்பெற்றன. கடந்த 24ஆம் திகதி கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திரு…
-
- 0 replies
- 591 views
-
-
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நாளை(திங்கட்கிழமை) ஓய்வுபெறப்போகும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ எனும் நூல் நாளை மறுநாள் வெளியிடப்படவுள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் சர்ச்சைக்குரிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண இறுதி யுத்தத்தில் 52 ஆவது படைப்பிரிவுக்குத் தலைமைதாங்கினார். இவரது படைப்பிரிவுடன் நடைபெற்ற இறுதிச் சண்டையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகன் வீரச்சாவடைந்தார் என நம்பப்படுகின்றது. இவரது படைப்பிரிவினராலேயே தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யப்பட்டமை உட்பட பல போர்க்குற்ற மீறல்களுக்குப் பொறுப்பாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நாளை 5ஆம் திகதியுடன் இராணுவத்திலிரு…
-
- 0 replies
- 375 views
-
-
மன்னாரில் ஹெரோயினுடன் இந்தியப்பிரஜை உட்பட அறுவர் கைது! மன்னார் பள்ளிமுனை பகுதியில் 2.24 கிலோ கிராம் ஹெரோயின் கடத்திய ஒரு இந்தியப் பிரஜை மற்றும் அதனுடன் தொடர்புடைய 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று மாலை கடற்படை இரகசியப் பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய வடமேல் கடற்படைப் பிரிவிற்கு சொந்தமான மன்னாரில் அமைந்துள்ள தள கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்தே சந்தேகநபர்கள் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் ஹெரோயின் ஆகியன சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வவுனியா பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கடற்படையி…
-
- 0 replies
- 281 views
-
-
தொடரும் மண் அகழ்வால் யாழில் கரையோர பகுதிகள் பாதிப்பு யாழ்ப்பாணம் உதயபுரம், அரியாலை பகுதிகளில் தொடரும் சட்டவிரோத மண்அகழ்வால் அப்பகுதி கிராமங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இது பற்றி தெரியவருவதாவது யாழ்ப்பாண கரையோர கிராமங்களான உதயபுரம், அரியாலை பகுதிகளில் கடற்கரை மண் அதிகளவில் காணப்படுகின்றது. இப்பிரதேசத்தின் நீர் சிறந்த குடிநீராகவும் காணப்படுகின்றது. இருப்பினும் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுபவர்கள் குறித்த பிரதேசங்களில் தொடர்ந்து மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்;. இதனால் அப் பிரதேசத்து வளம் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. உதயபுரப்பகுதியிலுள்ள…
-
- 0 replies
- 352 views
-
-
அரசியல்வாதிகளை பாதுகாப்பதல்ல பொலிஸாரின் கடமை-ஜனாதிபதி பொலிஸ்துறை என்பது அரசாங்கம் அல்லது அரசியல்வாதிகளை பாதுகாக்கும் நிறுவனம் அல்லவென குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த காலங்களில் இவ்வாறான நிலையே காணப்பட்டதென குறிப்பிட்டார். இலங்கை பொலிஸின் 150ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற பிரதான நிகழ்வில் தலைமையேற்று உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் தமது தேவைகளுக்காக பொலிஸாரை பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில பொலிஸார் அரசியல்வாதிகளுடன் ந…
-
- 0 replies
- 264 views
-
-
மன்னாரில் காணிப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் காணிப் பிரச்சினை தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று நேற்று (சனிக்கிழமை) மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்று ள்ளது மன்னார் மாவட்டத்திற்கு நேற்று (சனிக்கிழமை) காலை விஜயம் செய்த நிலையான அபிவிருத்தி மற்றும் வன விலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட குழுவினர், மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கலந்துரையாடலின் போது, வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குல காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான…
-
- 0 replies
- 299 views
-
-
வலிவடக்கு மீள்குடியமர்வுக்கு அரசுக்கு மூன்று மாத கால அவகாசம் தவறின் அத்துமீறிய மீள்குடியேற்றம் வலிவடக்கில் தமது சொந்த நிலங்களில் மக்களை மீள்குடியேற அனுமதிக்காவிடின் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அவர்கள் மீள்குடியேறுவார்கள் என வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்றையதினம் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் வலிவடக்கு மீள்குடியேற்ற ஒன்றியமும் இணைந்து யாழ்பாடி விருந்தினர் விடுதியில் செய்தியாளர் சந்திப்பை நடாத்திய வேளையே மேற்கண்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வலிவடக்கு மீள்குடியேற்ற மக்கள் ஒன…
-
- 0 replies
- 355 views
-
-
போர்க்குற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய ஐ.நா. செயலர் இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கா மல் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நழுவினார். இலங்கைக்கான பயணத்தின் முடிவில் நேற்றுமாலை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கொழும்பில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தார். தனது இலங்கை பயணம் தொடர்பாக சுமார் 8 நிமிடங்கள் பான் கீ மூன் விளக்கிக் கூறினார். இதையடுத்து, அவரிடம் கேள்வி களை எழுப்புவதற்கு ஊடகவியலாளர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. 12 நிமிடங்கள் மாத்திரமே, செய்தியாளர்களுக்கு கேள்விகளை எழுப்ப சந்தர்ப்…
-
- 3 replies
- 526 views
-
-
இந்திய மீனவர் குறித்த யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக வரும் இந்திய மீனவர்களுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதிப் பத்திரம் வழங்குவதற்காக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் விடுக்கப்பட்ட யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இந்த தகவலை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர உறுதிசெய்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக அனுமதிக்கக்கூடாது என்ற முடிவில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனத் தெரிவித்திருக்கும் அமைசச்ர் மஹிந்த அமரவீர, அவ்வாறு சட்டவி…
-
- 3 replies
- 488 views
-
-
கொழும்பிலிருந்து கே.கே.எஸ் வந்த புகையிரதம் விபத்து கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற புகையிரதம் தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது புகையிரதத்தின் கட்டுப்பாட்டு கருவி(பிரேக்) செயலிழந்தமையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகளை புகையிரத திணைக்களம் ஆரம்பித்துள்ளது. http://onlineuthayan.com/news/17102
-
- 10 replies
- 1.2k views
-
-
மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் விடயம், அரசியல் கைதிகள் விடுதலை மற்றும்பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகள் தொடர்பாக ஐ.நா சபை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும்என செயலாளர் நாயகம் பான்கி மூன் உறுதியளித்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்புதெரிவித்துள்ளது. இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர்நாயகம் பான்கி மூன் யாழ்.பொது நூலகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்இரா.சம்பந்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்தகலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுமந்திரன் கருத்து தெரி…
-
- 6 replies
- 498 views
-
-
வடக்கில் எதிர்பார்த்த அளவிற்கு போராட்டங்கள் இல்லை-என்கிறார் ஜனாதிபதி வடக்கில் பான் கீ மூனின் வருகையை முன்னிட்டு பாரியளவில் போராட்டங்கள் நடக்குமென நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த அளவுக்கு போராட்டங்கள் நடக்கவில்லை. சின்னச் சின்னப் போராட்டங்களே நடைபெற்றிருக்கின்றன. ஆனாலும் போராட்டம் நடத்தியவர்களது கோரிக்கையில் நியாயம் இருக்கின்றது. அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இங்கு கேள்வியெழுப்பிய ஊட…
-
- 5 replies
- 626 views
-
-
கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்த தீர்மானம் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரை இலங்கைக்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல தயாராக இருந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் ஜேர்மனிக்கு செல்ல முற்பட்ட போது பூனே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்களுடன் குறித்த சந்தேகநபர் தொடர்புபட்டிருப்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபரின் பெயர் சுதன் சுப்பய்யா என்பதுடன்,…
-
- 1 reply
- 486 views
-
-
நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதியேன் -சம்பந்தன் .அதிகாரங்களை பகிரும் போதும், நாடு பிளவுபடாது என்பதை உறுதிப்படுத்தும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரி வித்தார். மாத்தறை கூட்டுறவு துறைசார் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படாமல் இருக்க நட வடிக்கைககள் மேற்கொள்ளப்பட வேண்டும் . …
-
- 27 replies
- 1.9k views
-
-
கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்ப சொன்னவர்கள். பின்னர் ஆறு நிமிடம் ஒதுக்கினார்கள். ஐ.நா செயலாருக்கு கைலாகு மட்டும் கொடுத்து வழியனுப்புங்கள் என முன்னதாக கோரியவர்கள் பின்னர் எங்கள் மனவருத்தத்தை புரிந்து கொண்டு ஆறு நிமிடங்கள் மாத்திரம் ஒதுக்கி தந்தார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் யாழ்.பொது நூலகத்தில் வடமாகாண முதலமைச்சர் , மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வடமாகாண முதலமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்ப…
-
- 7 replies
- 1.3k views
-
-
சந்திரிகா அம்மையாரின் தீர்வுப் பொதியை எரித்து இனவாதத்தைக் கக்கி அதற்கு வித்திட்டவர் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். மாவடி இந்து இளைஞர் மன்றக் கலைவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து இங்கு கருத்துரைத்த சரவணபவன், 2000ஆம் ஆண்டளவில், நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து, அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா தீர்வுப் பொதியை முன்வைத்திருந்தார். இதனை அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த்தது. எதிர்த்தது மாத்திர மல்ல அதனை தீ மூட்டி எரித்தனர். அவர்கள் இனவாதத் த…
-
- 0 replies
- 389 views
-
-
பிரதமருக்கும் நிஸா பிஸ்வாலுக்கும் இடையில் சந்திப்பு இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வைத்து இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு வாழ் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135545/la…
-
- 1 reply
- 722 views
-
-
யாழ்.மத்தியுஸ் வீதியிலுள்ள குளத்தில் கொட்டப்படும் கழிவுகளால் நோய்த்தொற்று அபாயம் யாழ்ப்பாணம் மத்தியுஸ் வீதியில் அமைந்துள்ள குளக்கரையில் கொட்டப்படும் கழிவுகளால் அருகிலுள்ள வணக்கஸ்தலம், பாடசாலை என்பன பாதிக்கப்பட்டுள்ளதுடன் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குளக்கரையில் அதிகளவான குப்பைகள் கொட்டப்படுவதையும் கொட்டப்படும் குப்பைகள் தேங்கியிருப்பதையும் காணமுடிகின்றது. குளத்து நீரில் கழிவுகள் மிதப்பதால் துர்நாற்றம் வீசிவருகின்றது. குளத்திற்கு அருகாமையில் புனித பற்றிரிசியன் கல்லூரியும் புனித மரியன்னை தேவாலயமும் காணப்படுகின்றன. இந்நிலையில் குளம் கவனிப்பாரற்று கிடப்பதால்…
-
- 0 replies
- 336 views
-
-
ஜனாதிபதிக்கு இன்று 65 ஆவது பிறந்ததினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தனது 65 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார். 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி கம்பஹா யாகொடவில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் சிறு வயதிலேயே பொலனறுவைக்கு குடிபெயந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 17 ஆவது வயதில் ஸ்ரீலங்க சுதந்திரக் கட்சியின் அரசியல் பயணத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். சுதந்திரக் கட்சிக்குள் அவரை அழைத்து வந்த அன்றைய பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லீலாரத்ன விஜேசிங்க, பொலனறுவை மாவட்ட சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் செயலாளராக மைத்திரிபால சிறிசேனவை நியமனம் செய்திருந்…
-
- 0 replies
- 347 views
-
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் உள்ள தீவுகளுக்கு மிக விரைவில் பாதுகாப்பான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். வர்த்தக கப்பல் செயலகத்தின் உப அலுவலகம் ஒன்றை ஊர்காவற்துறையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதற்கு முன்னர், ஊர்காவற்துறையில் இருந்து புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு ஆகியவற்றுக்கு பாதுகாப்பான படகுச் சேவைகள் இல்லை. தற்போதைய அரசாங்கம் நாட்டில் அனைத்து பிரதேசங்களையும் ஒரே அளவில் அபிவிருத்தி செய்யும். கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன் சுமையில் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அனைத்து தடைகளுக்கு மத்தியிலும் தற்போதைய அரசாங்கம் …
-
- 0 replies
- 368 views
-
-
இன்றுள்ள 160 தேர்தல் தொகுதிகளை 140 ஆக குறைத்து, விகிதாசார ஆசனங்கள் என 93 ஆசனங்களை வழங்கி, வெற்றி பெறும் கட்சிக்கான ஸ்திரத்தன்மை போனஸ் என்றும் வேறு தேவைகளுக்கான போனஸ் என்றும் 7 மேலதிக ஆசனங்களையும் ஒதுக்கி மொத்த பாராளுமன்ற உறுப்பினர் தொகையை 240 ஆக அமைக்கும் புதிய தேர்தல் முறைமையை ஏற்றுகொள்ளும்படியும் பல்-அங்கத்தவர் தொகுதிகளை எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை கட்சிகள் மீது அழுத்தம் செலுத்துகின்றன. இந்நிலைமை பற்றி முதன்முறையாக நான் பகிரங்கமாக இன்று சொல்கிறேன். தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் ஒப்பீட்டளவில் தென்னிலங்கை சிறுபான்மை கட்சிகள் எதிர்நோக்கும் அளவில் சவால்களை எதிர்கொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசியலமைப்பு பேரவையின் வழிகாட்டல…
-
- 0 replies
- 535 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள், வடக்கு முதல்வர்க.வி.விக்னேஸ்வரனை இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துக்கலந்துரையாடியுள்ளார். யாழ் பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது வடக்குமுதல்வர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களுடன் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள். http://www.tamilwin.com/politics/01/116240
-
- 11 replies
- 1.1k views
-
-
வலிவடக்கில் மீள்குடியேறிய மக்களையும் சந்தித்தார் ஐ.நா.பொதுச்செயலர் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து அண்மையில் மீள்குடியேறிய பிரதேசத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நேரில் சென்று பார்வையிட்டு ள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீமூன் இன்று யாழ். குடாநாட்டிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், வட மாகாண முதலமைச்சரையும், அமைச்சர்களையும் சந்தித்து அவர் கலந்துரையாடியிருந்தார். அதன்பின் வலி வடக்கு உயர்பாதுகாப்பு வல…
-
- 5 replies
- 581 views
-
-
`போர்க்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்' இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்தார். தனது மூன்று நாள் இலங்கைப் பயணத்தின் முடிவில், வெள்ளிக்கிழமை இரவு கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய மூன் இக் கருத்தைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு தான் மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய அவர், கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தான் விஜயம் செய்தபோது இருந்த நிலைக்கும் தற்போதுள்ள நிலைக்கும் பெருத்த மாற்றம் இருப்பதாகவும், பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். "தற்போது, பல்வேறு முன்…
-
- 3 replies
- 367 views
-
-
கூட்டமைப்பை சந்தித்தார் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன்இ இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ். பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பான் கீ மூனின் வருகையை அடுத்த அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருமளவிலான மக்கள் யாழ். பொது நூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஊடகவியலாளர்கள் நூலகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டமைப்பினரை சந்தித்த ஐ.நா பொதுச்செயலர் காணாமற் போனவர்களின் உறவினர்கள்மற்றும் வலிவடக்கில்இடம்பெயர்ந்த மக்களை சந்திக்காமல் வெளியேறினார். …
-
- 5 replies
- 585 views
-