Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கூட்டமைப்பை சந்தித்தார் பான் கி மூன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன்இ இன்று மதியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை யாழ். பொது நூலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பான் கீ மூனின் வருகையை அடுத்த அவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெருமளவிலான மக்கள் யாழ். பொது நூலகத்தை சூழவுள்ள பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் ஊடகவியலாளர்கள் நூலகத்தினுள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கூட்டமைப்பினரை சந்தித்த ஐ.நா பொதுச்செயலர் காணாமற் போனவர்களின் உறவினர்கள்மற்றும் வலிவடக்கில்இடம்பெயர்ந்த மக்களை சந்திக்காமல் வெளியேறினார். …

  2. இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கும் வண்ணம் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஊடகங்களின் பிரதிநிதிகளை இன்று சந்தித்த அவர், இளைய சமூகத்துக்கு ஊடகங்கள் பிழையான அர்த்தங்களை வழங்கக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இலங்கையில் தற்போது ஊடக சுதந்திரம் உள்ளது. யாரையும் விமர்சனம் செய்யமுடியும்.எனினும் நல்லிணக்கம் போன்ற விடயங்களை பரிகாசம் செய்யும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது என்று அவர் கோரியுள்ளார். நல்லிணக்கம் என்பது சர்வதேச சூழ்ச்சியின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றது என்றும் இதனால் நாடு பிளவுப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், உண்மையான நல்லிணக்கத்தை பாதிக்கும். …

  3. யாழில் ஆர்ப்பாட்டங்கள் ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன. http…

  4. இலங்கை பல பாடங்களை புகட்டியுள்ளது-பான்கீமூன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பான் கீ மூன் சர்வதேச உறவுகள் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘நிலைபேறான சமாதானம்-நிலை பேறுள்ள அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ இலங்கை எமக்கு பல பாடங்களை புக…

  5. எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க சென்ற தாயை தள்ளிவிட்ட பொலிசார் எதிர்க்கட்சித் தலைவரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்க சென்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயார் ஒருவரை பொலிசார் இழுத்து விட்டத்தில் அவர் நிலத்தில் விழுந்து கதறி அழுதார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்தார். அவ்வேளை யாழ்.பொது நூலகத்திற்கு வெளியே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , இடம்பெயர்ந்த மக்கள் , அரசியல் வாதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை …

  6. கிளிநொச்சியில் நடைபெற்ற விஷ ஊசிப் பரிசோதனையும் இராணுவப் புலனாய்வாளர்களும் விஷ ஊசி தொடர்பான விவகாரத்தினைத் தொடர்ந்து இன்று மாலை கிளிநொச்சி வைத்திய சாலையில் முன்னாள் போராளிகளுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் போது வைத்தியசாலையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இராணுவப்புலனாய்வாளர்களினதும் மற்றும் வேறு பல பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களினதும் நடமாட்டத்தினைத்தினால் பல முன்னாள் போராளிகள் பரிசோதனைகளை மேற்கொள்ளாது திரும்பி உள்ளனர் இன்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கிளிநொச்சியில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட பலர் வசித்து வருகின்ற நிலையில் ஏழுபேர் மட்டுமே பரிசோதனைகளை மேற்கொண்…

  7. யாழ்.மாவட்டத்திற்கு விஐயம் மேற் கொண்ட ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்திற்கு வந்தடைந்துள்ளார். இதேவேளை ஐக்கிய நாடுகள் செயலாளரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஐக்கிய நாடுகள் செயலாளருக்கு பாதுகாப்பு வழங்கும் நிமித்தம் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. மக்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக மக்களை தவிர்த்துக் கொள்வதற்காக ஐ. நா செயலாளர் வட மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு உத்தியோக பூர்வ வாயிலைத் தவிர்த்து பின்வாசல் வழியாக பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தாகும். …

  8.  'தமிழ் மக்களுக்கு பாதகமான எந்த ஒரு தீர்வையும் ஏற்கபோவதில்லை' -சொர்ணகுமார் சொரூபன் 'தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். எமது மக்களை நாம் ஒருபோதும் கைவிடப்போவதில்லை. நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரையில் மக்கள் பொறுமையாக இருக்கும் அதே வேளையில், கொள்கையில் உறுதியுடன் இருக்கவேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அமரர் தர்மலிங்கத்தின் 31ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை (02) தாவடியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இடம்பெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற…

  9. படையினரை ஏற்றிவந்த பேருந்தில் கஞ்சா மீட்பு மொனராகலயில் இருந்து மாத்தறை ஊருமுத்த ரஜ்ஜீருபண்டார தேவாலயத்தி ற்கு சிவில் பாதுகாப்பு படையினரை ஏற்றிவந்த பஸ் வண்டியில் இருந்து ஒரு தொகை கஞ்சாவுடன் சிவில் பாதுகாப்பு படையினர் இருவரை அகுரஸ்ஸ பொலி ஸார் கைது செய்துள்ளனர். இந்த தேவாலயத்தில் நீண்ட வருடங்களாக அபிவிருத்தி வேலைகளில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மொனராகல பிரதேசத்தைச் சேர்ந்த 20 படையினரை ஏற்றிவந்த பஸ் வண்டி அகுரஸ்ஸ ஊறுமுத்த பிரதேசத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ள ப்பட்டுள்ளது. அத…

  10. வடக்கு கிழக்கில் இராணுவம் குறைக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டும்-ஐ.நா பொதுச்செயலர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு நிலையான சமாதானம் தொடர்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘இன, மத, அரசியல் கருத்துகள், உட்பட்ட வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தையும், மனித உரிமையின் மதிப்பினை…

  11. நல்லிணக்க எண்ணக்கருவை ஏளனம் செய்யக்கூடாது: ஊடகங்களுக்கு ஜனாதிபதி அறிவுரை நல்லிணக்கம் என்பது நாட்டைப் பிரிக்கின்ற ஒரு சூழ்ச்சித்திட்டமல்ல எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதனைக் குறைத்து மதிப்பிடாது அதிலுள்ள முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுப்பது எல்லோருடையமும் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை (02) முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார். நல்லிணக்கம் என்பது நாட்டைப் பிரிக்கும் ஒரு சர்வதேச சூழ்ச்சியாகும் என ஒரு செய்திப் பத்திரிகையில் இன்று பிரசுரிக்கப்பட்டிருந்த ஒரு கட…

  12. கனகராயன்குளத்தில் இராணுவம் வைத்த புத்தசிலை உடைப்பு! தமிழினப் பற்றாளர்கள் என்ற அமைப்பு உரிமை கோரியது! வன்னியின் கனகராயன்குளத்தில் சைவ ஆலயம் ஒன்றின் அருகே அமைக்கப்பட்ட புத்தர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தின் குறிசுட்ட குளத்தின் அருகே உள்ள அம்மன் ஆலயம் ஒன்றில் இலங்கை இராணுவத்தால் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் குறித்த புத்தர் சிலை உடைத்து தகர்கப்பட்டுள்ளது. இதேவேளை, கனகராயன்குளத்தில் உள்ள தமிழ் மக்களின் குடியிருப்பு வீதியின் பாரம்பரிய பெயரொன்று இராணுவ அதிகாரி ஒருவரின் சிங்களப் பெயருக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் அதனையும் குறித்த அமைப்பு அண்மையில் தாக்கியிருந்தது. சி…

  13. வருடாந்த நல்லூர் உற்சவம் நல்லூர் கந்தசுவாமி வெகு சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வியாபாரிகளுடன் முண்யடித்துக்கொண்டு இராணுவத்தினரும் கடைகள் போட்டு வியாபாரம் நடாத்தி வருகின்றனர். யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்தபோதும் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொதுமக்களின் நிகழ்வுகளிலும் இராணுவத்தினரின் தலையீடு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட வாழ்வை நடாத்துவதற்கே பெரும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும்போது, இராணுவமும் சிறுசிறு வர்த்தக நிலையங்களை அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலில் ஈடுபடுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். http://thuliyam.com/?p=39698

    • 8 replies
    • 993 views
  14. இராணுவத்தினரால் பிடித்துவைக்கப்பட்டுள்ள காணிகள், விடுவிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இதன்போதே இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்தினரின் அளவை குறைப்பதன் மூலம், நம்பிக்கையை கட்டியெழுப்பமுடியும். அத்துடன் பதற்றத்தையும் தணிக்கமுடியும் என்றும் பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார். சமாதானம் தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், போர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கை பல விடயங்களை செய்துமுடித்துள்ளது. …

  15. கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை புகைப்படம் எடுக்கும் புலனாய்வாளர்கள் யாழில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை அச்சுறுத்தும் வகையில் தமது கைத்தொலைபேசி புகைப்படம் எடுத்து வருகின்றனர். அனுப்புக Home, Srilankan News http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135510/language/ta-IN/article.aspx

  16. சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணைமனு நிராகரிப்பு -வா.கிருஸ்ணா கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி நிராகரித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில்; நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான சிவநேசதுரை உட்பட 04 பேர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு விளக்கமறியல் வழங…

  17. 90 இலங்கை அகதிகள் தாயகம் திரும்புகின்றனர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதி ப்படுத்தலுடனும், ஒருங்கிணைப்புடனும் 90 இலங்கை தமிழ் அகதிகள், இந்தி யாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர். சுயவிருப்பின் பேரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் திருச்சியிலிருந்தும், 15 குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் சென்னையிலிருந்து செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இவர்களில் 45 ஆண்களும் 45 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என சிறைச்சாலைகள் மற…

  18. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இருபத்து மூன்று நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24ஆம் நாளாகிய நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றதுடன், தீர்த்தோற்சவத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. இந்நிலையில், மணல் சிற்ப கலைஞர் ஒருவர் இன்று நல்லூர் ஆலய முன்றலில் நல்லூர் கந்தனை பிரமாண்டமான முறையில் வடிவமைத்திருந்தார். இதனை இங்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tami…

  19. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் போர்க்குற்றச் செயல்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென வட மாகாணசபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அண்மையில் களனி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சந்திரிக்கா ஆட்சிக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு எதிராக போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. சந்திரிக்கா 1983ம் ஆண்டு ஜூலை கலவரம் தொடர்பில் விசாரணை நடத்திய போதிலும் அதனுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த மக்கள் சந்திப்பில் காணாமல் போன ஊடகவியலாளர் பிரகித் என்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந…

  20. மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது – அமெரிக்கா மனித உரிமை விவகாரங்களில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனநாயக உரிமை, நல்லிணக்கம், சட்டம் ஒழுங்கு மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவற்றில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசப் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் பொருளாதார வளர்ச்சியும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று பிணைந்து செல்ல முடியும் என்பதனை இலங்கை உலக நாடுகளுக்கு எடுத்தியம்பும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்…

  21. இன்று யாழ்வரும் மூன் முத்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடுவார் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் – கீ – மூன் இன்று யாழ்ப்பாணத்தி;ற்கு வருகை தந்து இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமை யிலான வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவினர் ஆகியோரை சந்தித்து கலந்து ரையாடவுள்ளார். கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி நோக்கிச் செல்லும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் – கீ – மூன் 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தைச் வந்தடைவார். அதனைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு யாழ்.பொதுநூலகத்தில் தமி ழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் ஐ.நா செய…

  22. வாயில் ஒட்டிய பிளாஸ்டரை கழற்றிய போது சுலைமானின் நாக்கு தொங்கியது வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது.அதனையடுத்தே அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்ற விடயத்தை, கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி - கொத்தலாவல ஒழுங்கையிலுள்ள அவரது வீட்டுக்…

  23. மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஐ.நா.செயலருக்கு விளக்கினார் ஜனாதிபதி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், நில உரிமையாளர்களின் காணிகள் விடுவிப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்கள் என்பன தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ-மூனுக்கு விளக்கம ளித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூன் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார். குறித்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள …

  24. நல்லூரில் வேட்டி,சேட்டுடன் வந்த யாழ்ப்பாண தமிழ் பக்தை நல்லூர் கந்தனின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை இலட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது. இதன்போது நல்லூர் ஆலயச் சூழலில் பெண் ஓருவர் வேட்டி சேட்டுடன் வருகை தந்துள்ளார். தமிழரின் பாரம்பரிய கலாசாரப்படி வேட்டி கட்டும் பழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. நேற்றைய தினம் பெண் ஒருவர் ஆலயத்திற்கு வேட்டி சேட்டுடன் வந்துள்ளார். தமிழ் பெண் ஒருவர் வேட்டி சேட்டுடன் வந்தமை பக்தர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன காலத்தில் நாகரிகம் என்னும் போர்வையில் ஜீன்சை அணிந்து செல்லும் பெண்கள் வேட்டி சட்டைக்கு மாறியமை மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்…

  25. ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய சிறுவனுக்கு கிடைத்தது அதிஷ்டம் ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய சிறுவனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த சிறுவனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது. "இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும். ஜனாதிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.